Thursday, 31 July 2014

Story 111: நிராகரிப்பு(த்)தா



நிராகரிப்பு(த்)தா
                             
ஒரு வார்த்தையை பற்றிய கதையாய் இது இருக்கலாம். என்ன வார்த்தை அது..... இதோ இதை எழுதத் தொடங்கிவிட்டேன். இன்னும் அந்த வார்த்தையை யோசிக்க முடியவில்லை. ஒருவேளை இந்த கொடுமை முடிவதற்குள் அந்த வார்த்தை வெளிப்படும் என என் வீட்டு வாசற்படியில் காவல் காக்கும் காகம் கரைகிறது. அந்த வார்த்தை
நான் என் தாயின் வயிற்றில் பசியுடன் இருக்கும் போது அவளைத் திட்ட பயன்படுத்திய வார்த்தையாக இருக்கலாம். அதை என் தந்தை அவர் தாயை பார்த்து திட்டிய நியாபகம்.
கோவிலுக்கு ஒரு வரம் கேட்டுச்சென்று பின் திரும்புகையில் காணாமல் போன ஒரு செருப்பை பார்த்துக்கொண்டு மாற்றான் செருப்பை போடும்போது நமக்கு கடவுள் தந்த வரத்தை அந்த செருப்பு சாபமாய் மாறி அழிப்பது தெரியாமல் இந்த புது செருப்பு தந்த திருடனை தீபம் ஏற்றாமல் வார்த்தையால் வழிபடும் போது வெளிப்படும் வார்த்தையாக இருக்கலாம்.
முத்தம் தர நெருங்கும் தன் காதலனின் பற்பசை பயன்படுத்தா பற்களை பொறுத்துக்கொண்ட இவள், கழிவிறக்கம் செய்யா இவள் வயிறு அவன் ஆண்குறியை ஏதும் செய்யாமல் போக இதை மறைந்திருந்து பார்த்த ஒருவன் சுய இன்பம் கொள்ளும் போது நினைத்துப்பார்க்கும் வார்த்தையாக இருக்கலாம்.
ஒருதலைக்காதலியிடம் இரண்டு மூன்று வார்த்தைகள் மட்டும் பேசிய நிலையில் அவள் தாயின் அழகால் கவரப்பட்டு காதல் மாறுதலை சந்தித்த போது அவள் தந்தையின் அழகும் கவர அவள் தாயிடம் பேச மறந்த அந்த இரண்டு மூன்று வார்த்தைகள். அவள் தந்தையிடமும் சொல்ல நினைத்த அதே வார்த்தைகளாக கூட இருக்கலாம்.
குழந்தை பெற வழி இல்லாதவன் தன் மனைவியை குறைகூறும்போது அவள் வேறு வழியில் குழந்தை பெற்றுக்கொள்ள மார்தட்டிக்கொள்ளும் போது அவன் தந்தைக்கு வரும் சந்தேகத்தை தீர்க்க உதவும் வார்த்தயாக அது இருக்கலாம்.
என் கற்பனையை கரந்து கொண்டிருக்கும் இச்சிறுகதையின் தலைப்பாய் மாறப்போகும் வார்த்தையாய் கூட இருக்கலாம்.
இப்படி எல்லா இடத்திலும் இருக்க வேண்டிய வார்த்தையை நான் என் சுய நலத்திற்காக பல இடங்களில் தேடி இருக்கிறேன்.
காலண்டரை தூக்கில் இட்ட காரணத்தால் தினமும் இறந்து கொண்டிருக்கும் நாட்களுக்கு பின்னால்....
நடந்து வரும் வழியில் தவறுதலாய் மிதித்த எருது சாணத்தை துடைக்க கால்கள் ஏங்கும் இடத்தில்....
கிம் கி டுக்கின்  மொபியஸ்பார்த்த பாதிப்பில் பஸ்ஸில் செல்லும் போது பயணச்சீட்டு வாங்காமல் விலைமாதுவிடம் இருந்து வரும் சமிக்கைகளை மனதில் ஒலி வடிவமாய் மாற்றப்போகும் இடத்தில்...
கூட்டல் பெருக்கல் கணக்குகளை எளிதில் போடும் மூளையிடம் அணிக்கோவை கணிதம் கொண்டு ஆட்டிப்படைக்க முயற்சி செய்யும் போது பிரபல நடிகையின் குளியல்அறை காட்சிகளாய் அந்த அணிக்கோவை மாறும் இடத்தில்....
மெல்லிசையை ரசிக்க வைத்த காதலி ரசனை கெட்டு வேறு ஒருவனுடன் செல்லும் போது அவளுடன் ரசித்த அதே பாடல் வேறு ஒருவனுக்காக ஒலிக்கும் இடத்தில்...
ரயில் தண்டவாளத்தில் சிதறிக்கிடக்கும் மூளைகளை ரயில் படியில் அமர்ந்து பார்க்கும் போது வரும் வாந்திக்கு முன்னால் அவன் இறந்த காரணம் என்ன என நியாபகம் வரும் இடத்தில்....
கதை இங்கே முடிகிறது...
யேவ்...! இது என்ன கதையா..?இத்த படிக்கனும்னு நாம ரெண்டு ஜட்ஜு வேற...!
இல்ல பா... இதுல யேதோ சொல்ல வர்றான் பா...
எத்த சொல்ல வர்றான்னு சொல்ற..?
அவன் சொல்ல வந்த வார்த்தை இன்னாவா பா இருக்கும்..?
ம்ம்ம்ம்ம்ம்.........’த்த்த்த்தா
ஆமா பா ... இப்போதா கதை பஸ்ட் ஆப் தம்மாதுண்டு புரியிது...செகண்ட் ஆப் இன்னா பா?அது எந்த இடமா இருக்கும்...?
அத்தா .... இந்த இடம் தான்....
கதைநிராகரிப்புபகுதிக்குள் பறந்தது...!  

No comments:

Post a Comment