Wednesday, 31 July 2013

Story-94 ஈவா



ஈவா
வக்கீல் நோட்டிஸ் வந்தவுடன் அம்மா பதறினாள்.என்னடி இது விவாகரத்துனு போட்டுருக்கு நீ லீவுக்குதான் வந்திருக்கேன்னு பார்த்தா இதென்னடி கூத்து வெளிய தெரிஞ்சா வெக்கக் கேடு மாப்பிள்ளைய கூப்பிட்டு நாங்க பேசுறோம் டீ இதுவரைக்கும் சண்டை சச்சரவுண்ணு எதுவும் வந்ததில்ல அப்புறம் ஏண்டி இப்படி கோர்ட்டுக்கு போற முடிவு எனக்கு பேசக்கூட முடியலஒரே மூச்சில் பேசி விட்டு படபடப்பாக அமர்ந்தாள்.மின் விசிறியைப்போட்டு விட்டேன்.
அது அப்படிதாம்மா பெருசா சண்ட போட்டாதான் பிரியனும்னு யார் சொன்னா சின்ன சண்டை கருத்துவேறுபாடு கூடபோதும்மாஃப்பாரின்லா குறட்ட விடற கணவனை விவாகரத்து பன்றாங்க ,இங்க எவ்வள்வு பிரச்சனைன்னாலும் பேசி தீர்த்துக்கலாம்னு சொல்றீங்க.
அம்மா சமாதானமடையவில்லை.பூஜை அறைக்கு சென்று அத்தனை சாமிகளையும் கும்பிட்டாள்.அழுது புலம்பினாள்.அவளை அப்படிப் பார்க்கவே பிடிக்கவில்லை.நான் சொன்ன சமாதானங்களைக்கேட்பதாயில்லை .அப்பாகிட்ட இன்னும் சொல்லவயே என ஃப்போனை கையிலெடுத்தவளைத் திட்டினேன்.வெளியபோன மனுஷன் வீட்டுக்கு வரட்டும்னு பேசேம்மா ஏன் இப்படி டென்ஷனாக்க கிளம்பற….என்றதும் எல்லாம் தெரிஞ்சவமாதிரி பேசு வாழத்தெரியாம இருக்கியேடி அழுதாள்.
அம்மா ப்ளீஸ் லிமிட் அழுது என்ன ஆகப்போகுது அமைதியா பேசுமா கொஞ்சம் சத்தமாகவே கத்திவிட்டேன்.அம்மா மனசு நிகழ்காலத்திற்குள் இல்லை என்பதை அவள் கண்கள் உணர்த்தின.
மாலை அப்பா வீடுதிரும்பினார் வந்ததும் வராததுமாக அம்மா ஆரம்பித்தாள்.இப்போதே மாப்பிளைய பார்த்து பேசனும் கைல கால்ல விழுந்தாவது இவங்களுக்கு நல்லது செய்யனும் மாப்பிள்ளைக்கு எடுத்து சொல்ல யாருமில்ல நாம சொன்னாதான் கொஞ்சமாவது புரியும் என்றாள்.
தொட்டிகளில் அம்மா வளர்த்த துளசிச் செடி வெங்காயத்தாள் மிளகாய் செடிகளை பிய்த்து கையில் தூக்கிக்கொண்டு வந்தான் குட்டி மனோஜ்.அம்மாவின் அறியாமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது.இதுவரை பிரச்சனை என எதையும் பேசியதில்லை அவளுக்கு திடீரென கேள்விப்பட்டால் இப்படித்தான் இருக்கும்.அப்பா அம்மாவிடம் மங்கா நம்ம மகளுக்கு எல்லாம் தெரியும் டீ அவளுக்கு உலகம் தெரியும் அவ முடிவுபண்ணினா சரியாதானிருக்கும்  அப்பா பேசப்பேச அம்மா தலையிலடித்துக்கொண்டு அழுதாள்.உங்களாலதா இவ இப்படிபோயிட்டா என்ற வழக்கமான புலம்பல்.
அடுத்த நாள் வழக்குமன்றம் செல்ல வேண்டியிருக்கிறது.ரமேஷீக்கு பாங்கில் கடந்த ஆண்டு மாறுதல் கிடைத்ததால் தான் பிரிந்திருக்கிறோம் என்பது எல்லாரும் நம்பும் உண்மை இதற்குமேல் ஒன்றாக இருந்து முட்டிக்க வேண்டாமென இரண்டுபேரும் முடிவு செய்தோம்.பிரிந்திருந்தாலும் இனி ஒருநாளும் சேர்ந்து வாழமுடியாதென முடிவானது.சமரசமாக பிரிவதாக வழக்குமன்றத்தை நாடினோம்.சிலமுறை எங்களை இணைத்து வைக்க கோர்ட் முயன்றது.வக்கீலும் தெரிந்தவர் தான்.அங்கு ரமேஷ் பேசியவைதான் மிக அதிகமாக பாதித்தது.
நான் பரபரப்பான பத்திரப்பதிவு அலுவலக வேலை ம்னோஜீக்கு தேவையானதை கவனிப்பது வீட்டுவேலை இப்படியிருக்க.வீட்டு வேலைகளில் பையனை தயார் செய்வதில் உதவுகிற ரமேஷ் மொத்தமாக சில மாதங்களில் விலகிவிட்டார்.ஏதும் உதவி என கேட்டாலும் கடித்துத்துப்ப ஆரம்பித்தார்.ஆபிஸ் டென்ஷன்னு தான் கொஞ்சம் மனசு விட்டு பாசுங்கன்னு கேட்டாலோ நானா வேற எதப்பத்தி பேசினாலோ எல்லாத்துக்கும் கோவம் சண்டையை வலிய வரவழைப்பது என மாறிப்போனான்.
இன்னொரு பொம்பளையோட சகவாசம் கிடச்சா பழசு அத்தன கசந்திடுமா என்ன? நினைக்கும் போதே அருவருப்பாக இருந்தது ஷோபனா உடன் பணியாற்றியவள்.விவாகரத்து வாங்கிக்கொண்டு இந்த பிரான்ஞ்ச் வந்தவள்.ரமேஷீக்கும் அவளுக்கும் பற்றிக்கொண்டது முதலில் தெரியவில்லை.ஆபிசில் அரசல் புரசலாக பேசிக்கொண்டபின் தான் என் காதுக்கு வந்தது. விஷயத்த ஓபனா பேசற தைரியம் கூட இல்லாம நான் கேக்கும்போது வாயைத்திறக்காம கல்லுமாதிரியிருந்தான். எவ்வளவு பேசினேன்.இதெல்லாம் விட்டுடுங்க சரிவராது.இதுவர ஏதோ பண்ணிட்டிங்க போகட்டும்னு. எல்லாத்தையும் கேட்டிட்டிருந்தவன்.அடுத்த நாள் அவனுக்கு நான் ஏற்றவள் இல்லனு பேச ஆரம்பித்தான்.அதோடு அவனுக்கும் எனக்கும் எல்லாம் முடிந்தது.மகனை என்னோடு வைத்துக்கொள்ளலாம் என கோர்ட் சொல்லிவிட்டது.அலுவலம் முடிந்து மனோஜ் கூட விளையாடி தூங்க வைத்துவிட்டு முகநூலில் கொஞ்சம் இருந்துவிட்டு வருவது ஆறுதலாக இருந்தது.
2
எளிமையாகத்தான் அறிமுகமானோம் முகநூலில்.அவளது மிக விரிந்த கண்கள் பேசும்போது கூடக்கூட பேசியது.இத்தனை நெருக்கமாவோம் என ஒருபோதும் நினைக்கவில்லை.வாசனை திரவியங்கள் அதிகம் புழங்குகிற ஊருக்கு சொந்தக்காரி ,இங்கு நான் மிக சீரியஸாக  என் வாலில் எழுதிக்கொண்டிருப்பேன்.அவளோ இன்பாக்ஸில் எடக்கு மடக்கா விமர்சிப்பாள்.புரட்சிக்கு பெயர்போன நாட்டிலிருந்து இங்கு நாங்கள் பேசுகிற உரிமையை நையாண்டி செய்யாதே எனத் தொடங்கி கடுமையாக கிழித்தேன்.அன்றிலிருந்து அவளது விளையாட்டுத்தனம் மறைந்தது.
அவளது புகைப்படம் தாங்கிய மாத இதழுக்காக சில லகரங்களில் பணம் வாங்கியிருந்தாலும் புகைப்படத்தின் ஒற்றைப் பிரதியைக் கூட கையில் வைத்திருக்காதவள்.இலக்கிய வனாந்தரத்தின் அத்தனை உயிர்ப்புகளையும் அறியத்துடிக்கிறாள்.இரண்டு நாட்டின் கலாச்சாரம் குறித்தும் மரியாதையோடு விமர்சிப்பவள்.இதோ இன்று காலை உருகி உருகி அழைக்கிறாள் அவளது தேசத்திற்கு.உடனடியாக என்னைப்பார்க்க விரும்புகிறாள்.பயண செலவை அவளது நண்பன் ஒருவன் கவனித்துக் கொள்வான்.போய்வருவதற்கான அத்தனை செலவையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்.உன் வருகையைத்தவிர இந்த நொடி வேறெதுவும் பிரதானமில்லை பட்டு இப்படி தினந்தினம் அழைப்பின் காற்று நுகரச்செய்த சுகந்தங்களில் அன்பின் முடிச்சு வலுவாகிக் கொண்டே இருந்தது.அணுவுலைக்கு எதிரான குரல்கொடுப்பின் போது என்னைக்காட்டிலும் என் செயல்பாடுகள் எப்படியிருக்கவேண்டுமென அரசியல் பேசுவாள்.எனது கதை பிரசுரமாகும் முன் அவளது பார்வைக்கு செல்லும்.யாரும் கண்டுபிடிக்கமுடியாத ஆயிரத்து ஒன்றாவது கோணத்தைக் கண்டுபிடித்து பேசுவாள்.
வா  நீ மூன்றுமாத சுற்றுலாவிசாவில் வந்தால் மீண்டும் உன் தேசம் செல்லத் தோன்றாது.கட்டற்ற சுதந்திரத்தின் ஜ்வாலையை இங்கே அறிவாய்.உணரவும் முயன்றுபார்.உன் கடவுளால் காட்ட முடியாததை உனக்கு என்னால் காட்டமுடியும் . அன்பு
அவளது தினசரி அழைப்புகளுக்கு இடையில் அவள் என்னை முழுமையாக கவர்ந்தாள்.உனது அழைப்பை ஏற்கிறேன்.நான் பங்குபெறும் வகையிலான நிகழ்ச்சிகள் இருந்தால் விவரங்கள் அனுப்பு.அந்த நாட்களில் அங்கிருப்பேன்.அவளது உற்சாகத்திற்கு அளவில்லை.எனக்கும் அங்கு செல்வதின் மீதான பேராவல் .
அங்கு சென்று இறங்கியது முதல் இதோ மீண்டும் விமானமேறுகிற இந்த நொடிவரை ஒவ்வொரு நொடியும் புத்தம்புதிதாக இருந்தது.உரிமையின் எல்லா திசைகளிலுமான பயணம் .அதன் மீதான உடனடி விசாரணைகளை மனம் நிகழ்த்த அதற்கு பதில் சொல்வது பெரும் அவஸ்த்தையாய் இருந்தது.
3
மொழிபெயர்ப்புப் பணிக்கு ஆள்தேவையென அழைப்பு வந்திருக்கிறது.அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டேன்.அவர்களும் உன் விருப்பம் என்று சொல்லிவிட்டார்கள்.அம்மா அவ்வப்போது கண்ணைக்கசக்கிக் கொண்டு என் வாழ்க்கை போனதாக பயப்படுகிறாள்.அவளுக்கு புரியும் விதமாக எப்படி பேசினாலும் இப்போது புரியாது.அவளுக்கு இன்னும் கொஞ்சம் காலம் போனால் மெல்ல புரியும்.அதுவரை பொறுத்துதான் இருக்க வேண்டும்.
மனோஜை அனுப்ப அப்பாவிற்கு விருப்பமில்லை.அவளுடைய பணிகளுக்கு இடையூறாகி விடுவான் என நம்பினார்.அவருக்கு என்னோடு குழந்தை இருக்கவேண்டும் என்பதை விளக்கமாக சொல்லிவிட்டு கிளம்பினேன்.
என் அன்பு ஈவா விமானநிலையத்திற்கு வந்திருந்தாள்.பாஞ்சோர் என சொல்லிக்கொண்டே வணங்கி மனோஜை வாங்கிக் கொள்ள முயற்சி செய்தாள் .மனோஜ் பிடிவாதம் பிடிக்கத்தொடங்கினான்.
என்னைத்தழுவி உதடுகளில் முத்தம் பதித்தாள்.நாங்கள் வருவதை முன்னிட்டு அவளுடைய வீடு முழுமையாக  தயார் செய்யப்பட்டிருந்தது.மனோஜ்,ஈவா ,நான் அத்தனை உயிராகக் கலந்திருந்தோம்,மனோஜ் க்கு ஈவாவை மிகவும் பிடித்துவிட்டது.இப்போதுதான் வந்தது போல இருக்கிறது.30 நாட்கள் ஓடிவிட்டது.இதற்குள் ஈவாவும் நானும் மிகநெருங்கி இருந்தோம்.என்னைப்பற்றி அவளுக்கு நிறைய தெரிந்திருந்தது.எப்படியென ஆச்சர்யமாக இருந்தபோதுதான் அவளது கடந்த காலத்தை முழுமையாக தெரிந்து கொண்டேன்.அவளது தோற்றம் ,உருவம்,குரல் எல்லாம் புத்தம்புதிதாக மாறியிருக்கும் உண்மையை அறிந்தேன்.அப்பாவிற்கும் அம்மாவிற்கும் எனக்கும் ஈவாவிற்கும் உள்ள அன்பை விளக்கினேன்.இந்த முறை அம்மா வேகமாக குரல் எடுத்து அழுதாள்.நாட்டுல நடக்காததெல்லாம் சொல்றியேடீ .பொம்பளையா மாறினவ கூட வாழப்போரயா? இதெல்லாம் சரிவராது என்றாள்.அப்பா எப்போதும் போல உற்சாகமாக இல்லை.உனக்கு சரின்னு பட்டா செய்மான்னு விட்டுட்டார்.ஈவாவிற்கு என்னை முழுமையாகத்தெரியும் என்னை இளம்பிராயத்தில் அருகிருந்து பார்த்திருக்கிறாள்.என் பள்ளியில் என்னோடு படித்தவள்.அன்று அவள் ஆணாக இருந்தாள்.என் உயிர் நண்பன் காலம் எங்களை சந்திக்க விடாமல் செய்தது.கல்லூரிக்காலத்தில் அவளுக்கு ஏற்பட்ட மாற்றமும் உள்ளூரில் இருக்கமுடியாமல் நகரம் நோக்கி ஓடியதும் அங்கிருந்து எல்லை தாண்டி ஓடியதுமாக இங்குவந்து சேர்ந்திருக்கிறாள்.முழுக்கவும் சிகிச்சை எடுத்து பெண்ணாக மாறியிருக்கிறாள்.ஆணின் மனதும் பெண்ணின் மனதும் நெருக்கமாக அறியக்கற்ற அருண் என்கிற ஈவாவோடு சேர்ந்து பாரிஸில் வாழ்கிறேன்.மனோஜ்க்கு இரண்டு தாய்கள். வாழ்க்கையில் நானே எதிர்பார்க்காத ஒரு கோணத்திற்கு நகர்ந்திருக்கிறேன்.இயற்கையின் எல்லா சுவாரஸ்யங்களும் மனிதர்களிடமுமிருக்கின்றன.அன்பு அத்தனை வலுவாக பிணைத்துக்கொண்டது.

Story-93 லாஓசி



லாஓசி 
விழிப்பு எப்பொழுது வருகிறதென அறிய இயல்வதில்லை எவ்வளவு முனைந்தாலும். நினைவுகளின் ஏதோ சிக்கலில் இருந்து விடுபடுகையில் தான் விழித்துவிட்டேன் என்ற பிரக்னையே எழுகிறது. எழும்ப மனமில்லாமல் படுக்கையறை ஜன்னல் வழி ஓசைகளை அவதானித்தபடி நேரம் கடத்தினாலும் மனம் அமைதியாய் இருப்பதில்லை, தன்னிச்சையாக என்னவெல்லாம் செய்யலாம் என பட்டியலிட தொடங்கியது.
“பால்காரன நிறுத்திட்டு நானே கடைக்கு போய் பால் வாங்கிட்டு வரலாம், காலைல நடந்தா உடம்புக்கு நல்லதுனு சொல்றாங்க. இல்லனா எதிர்மாடி தாத்தாவோட jogging போலாம். வந்து குளிச்சிட்டு பாப்புவ ஸ்கூல்ல கொண்டு போய் விட்டா அண்ணி ஆபீஸ் சீக்கிரம் போவாங்க. அம்மா கரண்ட் பில் கட்டனும்னு சொன்னாங்க, EB ஆபீஸ் போயிட்டு வரலாம். ரேஷனும் வாங்கி வைச்சா அம்மாவ கைலையே பிடிக்க முடியாது. அதெல்லாம் இல்லனாகூட தோச்ச துணிய மாடிக்கு கொண்டு போய் காயவாது போடலாம்.
சாப்பிட்டு காலேஜ் படிக்க ஹாஸ்டல் போறதுக்கு முன்னாடி பரன்ல போட்ட பெட்டிய ஏறி எடுத்தா farewell போட்டோலாம் இருக்கும். ஸ்கேன் பண்ணி facebookல மல்லிகாவ tag பண்ணா, அதையே சாக்கா வைச்சி இன்னிக்கு fullchat பண்ணலாம். பழைய football ஷூ கூட  அதுலதான் இருக்கும். கைலாசபுரம் கிளப் மேட்சுக்காக வீட்ல அடம்பிடிச்சு வாங்குனது. Footballனதும் தான் நியாபகம் வருது, அடுத்த வாரம் கூட ஏதோ டோர்ணமெண்ட் இருக்குனு விவேக் சொன்னான், கிரவுண்ட் போய் பிராக்டிஸ் பண்ணலாம் பசங்க கூட. போனவாட்டி டோர்ணமெண்ட்க்கு சென்னை போறப்ப மெரினா போனது. மணல்ல நடந்து, அலைல நின்னு.... குளிச்சு செம ஆட்டம் அன்னிக்கு.
பப்பு பைக் ஓட்ட கத்துக்கனும்னு வேற சொல்றான். நான் தான் முதல்ல சைக்கிள் ஓட்ட கத்துக்கோ அப்பதான் பைக் நல்லா ஓட்ட முடியும்னு சொல்லி இருகேன். அவனுக்கு சைக்கிள் ஓட்ட கத்து கொடுக்கலாம். உச்சி பிள்ளையார் கோவில் போய் கூட ரொம்ப நாள் ஆகுது. படி ஏறி மேல போனா இறங்க மனசே வராது. போன வருஷம் மேல இருந்து திருச்சிய எடுத்த போட்டோக்கு 200+ லைக். trichytrekkers மூலமா சதுரகிரி, கோத்தகிரி போனப்ப எடுத்த போட்டோக்கும் செம ரெஸ்பான்ஸ். அடுத்த வாரம் தலமலைக்கு treck இருக்கு, போலாம். மலைல தங்குறது தனி experience. அந்த அமைதி, தனிமை, இயற்கை நரகத்துல இருந்து விடுதலை, மலை மேலனு இல்ல மலை ஏறுறதும். ஒவ்வொரு கல்லுல பாதம் வைக்றப்பையும் வழுக்குமோன்ற பயம், சிலப்ப துணிஞ்சு என்னதான் ஆகபோதுனு கால் வைக்றப்ப...! ஒவ்வொரு treckகும் புது ஜனனம்! treckக்கு பைக்லையே போகலாம். நினைச்ச இடத்துல நிறுத்தி சாப்பிட்டு, பல கிலோமீட்டர் டிரைவிங்கும் செம experience. நேரம் கிடைச்சா நடுவுல ஏதாவது கிராமத்துல நிறுத்தி சுத்தி பார்த்து வயல்வரப்புனு சேத்துல நடந்து கிணறு இல்ல ஏரில குளிக்கலாம். கூடவே இனிமே வண்டி ஒட்டுறப்ப மொபைல்ல எடுக்காம எதிர வர வண்டிய கவனிச்சு ஓட்டலாம். என்ன பண்ணா என்ன போன கால் வரவா போது?!

Story-92 இந்தோனேசிய தேவதை



இந்தோனேசிய தேவதை:                               
1.
புரளி பேசுவதில்,ஊர் மக்களுக்கு என்றைக்கும் குறை இருந்ததில்லை. நெருப்பில்லாமல் புகையுமா ?, பெரிய குடும்பத்துக்கென, துர்சம்பவங்கள் தொரடந்து நடந்தேறின.
பெரிய குடும்பம் என்றால் அளவில் பெரியத்ல்ல, இரண்டு ஆண்களுக்கு இடையே ஒரு பெண் குழந்தை என அந்த காலதிலே அளவான குடும்பம் அமைத்திருந்தார் பெரியவர் சோமனாதர் , மிகுந்த அறிவாளி, சித்தாந்தம், முற்போக்கு சிந்தனை பேசுவதில் வல்லவர், ஆகையாலே தான் அவர் நாட்டாமை ஆனார் என்றால் இல்லை, அது பரம்பரை வாயிலாக கிடைத்த மகுடம்.
பின்னே, அவர்கள் என்ன சாதாரன குடும்பமா, ராஜ வம்சம், ஆண்ட சாதி, அதனால் தான் தன் பெண்னுக்கு மாப்பிளை தேடுவதில் அதிக சிரமம் இருக்கவில்லை, குடும்பத்தில் இருந்த குழப்பங்களை எல்லாம் பரவாயில்லை சரி சரி என்றார்கள், காரணம் சாதி, இப்படி ஆகப்பெருந்தன்மை மிக்கவர்களும் வரதச்சனையை விட்டு விட மாட்டோம் என்றார்கள், அது ஏதோ குடும்ப கௌரவமாமே, தன் வீட்டுக்கு வரப்போகும் மருமகள் நகை,நட்டு இல்லாமல் வந்தால் அவமானமாகி விடுமாம், சொத்தில் பாதி, பெயர் வைத்து வளர்த்த பெண்னுக்கும், மீதி பெயரே தெரியாத நோய்க்கும் என தீர்ந்து போனது.
சோமநாதருக்கு அந்த பெயர் தெரியாதா  நோய் மட்டும் இல்லை என்றால் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது, அதன் பெயரை கண்டுபிடித்து விடத்தான், எத்தனை மருத்துவர்கள் எத்தனை பரிசோதனைகள் ஒன்றுக்கும் மடியவில்லை, பிராய்ச்சிதமாக பெரியமகன் ஒரு செவிலியையிடம் மடிந்து விட்டான், இருவரும் சேர்ந்து மாரத்தானுக்கு ஓடிப்பழகினார்கள் போல, எங்கே ஓடினார்கள்  என்றே தெரியவில்லை,
ஆண்டுகள் பல கடந்து விட்டன. இப்போதைக்கு ஆண் வாரிசு என்றால் அது இளைய மகன் ஜெயப்பிரகாசம் (ஜெ.பி) தான், ஏதோ 12 ஆம் வகுப்பு வரை படிதிருந்தான், அதற்க்கு மேல் படிக்க  வீட்டில் வசதி இல்லை. ஜெ.பி யிடம் “நீ ஜில்லா கலெக்டர வருவட”  என சொல்லுவார் சமூக அறிவியல் ஆசிரியர், பின்னே தமிழ், சமூக அறிவியல் பாடங்கள் மட்டும் விரும்பி படிப்பவன் வேறு என்னவாக முடியும், தமிழ் படிக்கையில், செய்யுளும் கூட பொருள் அறிந்து படிப்பவன், தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிளின் மீதும் அவனுக்கு பிரியம் தான். மொழிப்பாடம் மட்டும் பயின்று என்ன பிரயோஜனம் மொத்த கூட்டலில் மதிப்பெண்  குறைந்து விட்டது அதுவரை படிப்பிர்க்கு உதவி வந்த டிரஸ்டுகளும் சலுகைகளை நிருத்திக்கொண்டன, சிரிது காலத்திற்க்கு வெட்டி முட்டாள் போல ஊர் சுற்றி கொண்டிருந்தான்  எதாச்சும் பன்னனும், என தோன்றவே வெளி நாடு போவதென முடிவெடுத்தான்.
2. ஆரம்பதில் அவன் சென்றது சிங்கப்பூரில் துறைமுகம் கட்டும் பனிக்குத் தான், ஊரிலிருந்து சொன்ன வாக்குரிதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை, தன் உணவுக்கே வழி இல்லை, பகுதி நேரமாக ஒர் ஆஸ்திரேலிய கப்பலிலும் வேலை கிடைத்து, அப்படியே கொஞ்ச நாள் கடந்தது, இங்கேயே இருந்தால் ஒன்றும் பிழைக்க முடியாது என்பதால் அவன் வேலை பார்த்த அதே கப்பலில் கொஞ்சம் பனம் கொடுத்து ஆஸ்த்திரேலியா செல்ல அனுமதி பெற்றிருந்தான், உயர் அதிகாரி யாருக்கும் தெரியாது, தவறுதலாக மாட்டிக்கொண்டாலும் பணம் பெற்றவர்களை காட்டிகொடுக்க கூடாது என முன்னரே பேசிக்கொண்டது தான், அசம்பாவிதங்கள் ஜெ.பி யின் குடும்ப நண்பன் ஆயிற்ரே, அதுவும் நடந்தேறி விட்டது. ஜெ.பி இந்தோநேசியாவில் தரையிறக்கப்பட்டான், அங்கே யாரையும் தெரியாது, எதுவும் தெரியாது தெருத் தெருவாக பிச்சைக்காரனை போல வேலை தேடி அலைந்தான், இப்படி நாடோடிகளாக அலைபவர்கள் நிச்சயம் ஹென்றியுடம் தான் சென்று சேறுவார்கள், அவர் எதோ பிஸ்க்கட் கம்பெனி நடத்தி வருகிறார் அது உலக பிரசித்தி, ஜெ.பி யும் அதில் சேர்ந்து கொண்டான் ஒர் அடிமட்ட தொழிலாலியாக.
3.
ஒர் காலத்தில் ஹென்றியும் கூட நாடோடியாக அலைந்தவர் தான், அவர் குடும்பம் ஆதிவாசிகள் இனத்தை சார்ந்தது, காடு காடாக அலைந்து தம் கால்களாலே உலகத்தை அளப்பவர்கள், தமக்கு நினைவு தெரிந்தே, இலை தலை உடுத்திக்கொண்டு,  வேட்டைக்கென மேற்க்கொண்ட பயணம் நங்கு நினைவிருக்கிறது, இன்றைய மக்கள் சொல்வதை போல, தாம் இன்னவகை குடிகள், தாம் பேசுவது என்ன மொழி என்றெல்லாம் எதுவும் தெரியாது. பசியென்றால் வேட்டை, கலைப்பு என்றால் தூக்கம், உல்லாசம் என்றால் கடற்கரை காற்று அவ்வளவே.
அச்சமயம் ஏதோ ஒர் காட்டு விலங்கு இவர்கள் கூட்டத்தை விரட்டியிருக்கிரது, ஒவ்வொருவரும் மிரண்டு ஓட, இவர் மட்டும் தனியே தொலைக்கப்பட்டிருக்கிரார், பிறகு எங்கெங்கோ அலைந்து திரிந்து, கடைசியாக இந் நாகரிகமடைந்த மனிதர்களிடையே சிக்கிக்கொண்டார்.
இவர்கள் செய்வதை போல தனித்த வேலை எதுவும் செய்ய தெரியாது, தன் கால் போன போக்கில், கண் கானும் மனிதர்கள் எதேனும் வேலை செய்ய சிரமப்படுகிரார்கள் என்றால், அவர்களுக்கு உதவியாய் இருப்பான், அவர்களும் காசு கொடுப்பாகள். காசு கிடைத்தாலே பிஸ்க்கட் தான் ஏனோ பிஸ்க்கட் மீது அலாதி பிரியம் ஏற்ப்பட்டு போனது ,
சிறிது நாள் கடந்து இவர்களின் இயல்பு, மொழி என அனைத்தையும் நங்கு அறிந்து கொண்டார், உற்ப்பத்தி செய்யும் இடத்திற்கே சென்று விட்டால், நிறைய பிஸ்க்கட் கிடைக்கும் என நினைத்து, ஒரு பிஸ்க்கட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார் அங்கேயும் காசு கொடுத்தால் தான் பிஸ்க்கட் என்றிருந்தது, ஏமாற்றம் தான் , பிறகு தானே தொழிற்சாலை தொடங்க முடிவு செய்தார், தீவிர முயற்ச்சி, உழைப்பு,
ஹென்றி ஒரு அடிமுட்டாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, வெற்றி பெறுதலுக்கும் அறிவாளித்தனதுக்கும் எந்த சம்பந்தமும் கிடயாது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் களித்து இதோ இன்று அவரின்  கையில் ஒரு தொழிற்சாலை,எந்த ஒரு வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்றாள், அது அவரின் மனைவி, அவரும் வேறொரு நாடோடி இனத்தை சேர்ந்தவர், இறுவருமே இனம், மொழி தெரியாதவர்கள், அவர்களுக்குள் அன்பு மேலோங்குவதற்க்கு எந்த தடையுமில்லையே. அதன் அன்பு காரணமாய் அழகியதொரு மகளும் பெற்ரிருந்தார்கள்,அவள் தேஸஸ் ஒளிமயமானவள்,தேவதை, தொழிற்ச்சாலைக்கு இனையாய் அவளும் வளர்ந்து விட்டாள், ஹென்றியிடம்  பெயர் கூட தெரியாத  தன் இனம் குறித்து தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தார் , தாய் மொழி கொண்டவர்கள் உயர்வானவர்கள் என்று கருதினார், கலாச்சாரம் பிடித்தவராய், நாகரிகமாய் நடக்க விரும்பியவராய் இருந்தார், தன் மகளையும் மொழி மற்றும் கலாச்சாரம் படிக்கச் செய்தார், அப்பாவும், மகளும் தொழிற்சாலையில் சேர்ந்து கொண்டால் ஒரே கலாட்ட தான், விதவிதமாய் மொழி பேசுபவர்களிடம் தம் மொழிப்பெறுமைகளை பேசச்சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பார்கள், பெரிய தொழிற்ச்சாலை, முழுக்க இயந்திர மயம், யாருக்கும் வேலை இருக்கவில்லை ஆனாலும் நிறையபேரை வேலைக்கு அமர்த்தி சம்பளம் கொடுக்க ஹென்ரிக்கு விருப்பம், ஜெ.பி க்கு தொழிற்சாலையின் சுற்றம் வித்யாசமாய் இருந்தது, ஒரு வேலையும் இல்லாத போதும், பிஸ்க்கடில் புதிது புதிதாய் டிசைன் செய்வதிலே ஒவ்வொருவரும் ஆர்வம் காட்டினார்கள், ஜெ.பி அதில் வித்யாசமாக பலவேறு மொழி கற்பதில் ஆர்வம் செலுத்தினான், அவன் மட்டும் குறிப்பாக அனைவறாலும் கவனிக்கப்பட்டான், மெல்ல ஹென்றியுடனும் பழக்கம் ஏற்ப்பட்டது, தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரம், முன்னரே அறிந்தவனே, அதன் பொருட்டு ஜெ.பி யால் கவரப்பட்டார், மெல்ல அவன் பதவியும் உயர்ந்து கொண்டே போனது, ஜெ.பி யிடம் தன் மகளுக்கு தமிழ் பயிற்றுவிக்க சொன்னார் ஹென்றி. பொதுவாகவே தமிழ் கற்றுக்கொள்ள கொஞ்சம் சிரமம் தான், அதுவும் ஜெ.பி போல் ஒரு இலக்கியவாதியிடம் தமிழ் கற்றுக்கொள்ள, அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது, இதுவே போதுமல்லவா, அவர்களிடையே காதல் பூக்க வேறெதுவும் சிறப்பு காரணங்கள் தேவையில்லை, ஜெ.பி ரொம்பவும் நல்ல பையன், தொழிற்சாலையயும் நங்கு கவனித்து கொள்கிறான், தன் மகளுக்கும் பொறுத்தமானவனாய் இருக்கிறான், தன் மகள், காலாச்சாரமிகுந்த இந்திய நாட்டின் மருமகள் என்பதில் ஹென்றிக்கு பெருமையே, பெண் வீட்டாரின் அனுமதியோடு பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். நாட்கள் சில கடந்தன, கல்யாணம் முடிந்த நாள் முதலே, இந்தியாவை பார்க்க வேண்டுமென அடம்பிடித்து வருகிறாள் தேஸஸ், வெரும் சாதி மாற்றியே ஒப்புக்கொள்ள மாட்டார்கள் இவளோ நாடு, மொழியென எல்லாமும் மாறியவள், இதனால் என்ன நடக்கும், பெரியவர்கள் ஒன்று சேர்ந்து பஞ்சாயத்து கூட்டுவார்கள், கத்துவார்கள், கொஞ்ச நாளுக்கு யாரிடமும் மூச்சு,பேச்சு இருக்காது, இது மாதிரியெல்லாம் நடக்கும் நிலையை எதனையோ முறை சொல்லியும் தேஸஸ் கேட்க்கும் படி இல்லை, அவளுக்கு இந்தியாவை பார்த்தே ஆக வேண்டும்.

4.
விமானம் தன் ரெக்கைகளை விரித்து பறக்க தயார், தேஸஸுக்கோ ஒரே துள்ளல், ஜெ.பி யின் கடைக்கோடி கிராமத்தையும் அடைந்து விட்டார்கள், தம்பதியினரை வாசலிலே காக்க வைத்து, விட்டுக்கதவுகள் பலமாக அடைக்கப்பட்டது, அத்தனையும் ஜெ,பி யின் சொந்த, பந்தங்கள், தேஸஸ் இந்தியாவைப் பார்த்தால், தான் படித்து போல் இல்லாதது கண்டு மிரண்டால், விமானம் புறப்பட தயாரானது, இந்தியா வேண்டாம் என, தன் ரெக்கைகளை விரித்து பறந்தது இந்தோநேசிய தேவதை.

Story-91 குற்றவாளிகள்



குற்றவாளிகள்....


இரண்டு எழுத்தாளர்கள்.தென் இந்தியாவின்,ஏன் இந்தியாவே தங்கள் பின்னால் தான் நடை போடுகிறது என்ற நினைப்பு இருவருக்குமே.
ஆனால் இருவருமே இந்த சமூகம் தங்களை மதிக்க வில்லை என்று புலம்பி தள்ளுவார்கள். 

ஒருவர் திரு மோகன ஜெய்..மற்றொருவர் திரு.ரவிதேஜா 

இருவருமே ஒரே மாதிரியான அரசாங்க வேலை பார்த்தவர்கள்.தவிர 30 வருடத்திருக்கு மேல் எழுதிக்கொண்டிருப்பவர்கள்.
ஆரம்பத்தில் நண்பர்களாக பழகினர் இருவரும்.புகழ் போதை ஏற ஏற இருவருக்கும் நட்பில் விரிசல் விழ ஆரம்பித்தது.
விரிசல் மெல்ல மெல்ல மலையளவு ஆகி இருவரும் ஒருவருக்கு ஒருவர் இணையத்தில் தூற்றி கொள்ள ஆரம்பித்தனர்.


(
யாரோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் நம் காதில் விழ வில்லை) 


இருவருக்குமே தொண்டர் அடிப்பொடிகள் ஒரு சில பேர் இருந்தனர்.இவர்கள் இணையத்தில் அடித்துக்கொவதை விட
விசிலடிச்சான் குஞ்சுகள் அடித்துக்கொள்வது பயங்கர வேடிக்கையாக இருக்கும்...படிக்கும் மற்றவர்களுக்கும் நன்றாக பொழுது போகும்.
இருவரும் அங்க போகணும்,இங்க போகனும்ன்னு பதிவு போட்டா போதும்.ஜெய் ஆட்கள் ரவியை இது ஒரு கேடா
என்று கிண்டல் அடிப்பதும்,,ரவி ஆட்கள் ஜெய்ஐ கிடல் அடிப்பதும்.இணையத்தில் ரத்த ஆறு ஓடுவது போல தோணும்


(
யாரோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.இப்போதும் நம் காதில் விழ வில்லை) 

இப்படி எல்லா நாளும் மிக பெரிய காமெடியா இணையத்தில் இருப்பவர்களுக்கு பொழுது போக்காய்
சென்று கொண்டிருந்த போது முகபுத்தகத்தில் இருவருக்குமே வாசகர் வட்டம் ஆரம்பிக்க பட்டது.

இந்த இரண்டு பேரின் நடவடிக்கை,எழுத்தால் எரிச்சல் அடைந்த பலர் ஒன்று கூடி
விமாசகர் வட்டம் ஆரம்பித்தனர்.

இந்த இரண்டு எழுத்தாளர்களின் ஆதரவாளர்கள் சந்தித்துக்கொண்டால் அங்கு அடிதடி ரகளைதான்.ரசிகர்கள் இவ்வாறு அடித்துக்கொள்வது
இணையத்தில் பரவி பிறகு நாளிதழ்களில் பரவி,பின் டிவி மீடியாக்களில் செய்தி வர ஆரம்பித்தது.

(
யாரோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.இப்போதும் நம் காதில் விழ வில்லை)



ரசிகர்களின் இந்த வெறித்தனமான ஆர்வத்தை இருவருமே கண்டிக்கவில்லை.மாறாக இருவருமே
ஒருவரி ஒருவர் மேலும் தூற்ற ஆரம்பித்தனர்.இவர்கள் இங்கு இணையத்தில் அடித்துக்கொல்லுவதை கண்ட மற்ற வாசகர்கள்
அப்படி என்னதான் இருவரும் எழுதுகிறார்கள் என்று பொதுமக்களும் அவர்களின் நூல்களை தேடி வாங்கி படிக்க ஆரம்பித்தனர்.நல்ல விற்பனை...
இருவரும் சொந்த வீடு,ஆடம்பர வாழ்க்கை என்று மாற தொடங்கினர்.ஆனால் இருவரின் ரசிக குஞ்சுகள் தான் பாவம்

ஓடி ஓடி உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் பாதியை இவர்களுக்காகவே செலவு செய்ய ஆரம்பித்தனர்.


(
யாரோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.இப்போதும் நம் காதில் விழ வில்லை) 


இருவருக்கும் நல்ல வருமானம். இப்போது எல்லாம் அடிக்கடி இருவரும் சுற்றுலா கிளம்பிவிடுகின்றனர்.
இந்த உலகத்தில் பார்க்காத இடமே இருக்க கூடாதுன்னு இருவரும் மாறி மாறி டூர் கிளம்பிவிடுவார்கள்.
இவர்கள் உலகம் சுற்ற வாசக வட்ட குஞ்சுகள் தீயா வேலை செய்வார்கள்.

ஆனால் பதிவில்,கட்டுரைகளில் இருவரும் விளிம்பு நிலை மனிதர்களாகவும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாகவும்
சொல்லி புலம்புவார்கள்.வீட்டில் வெள்ளி தட்டில் சாப்பிட்டுக்கொண்டே.கிட்டத்தட்ட இருவரின் செய்திகள் இன்று வராதா
அனைவரும் ஏங்க ஆரம்பித்து விட்டனர்.பத்தாததற்க்கு மீடியாக்கள் வேறு எண்ணை ஊற்றியது.இந்த இருவருக்குள் யார் பெரியவர் என்ற
சண்டையை ஐநா சபையாலும் தீர்க்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு சென்று விட்டது.


யாரோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் இப்போது குரல் மிக லேசாக கேக்க தொடங்குகிறது.வாருங்கள் நெருங்கி போய் கேப்போம்..


"-----------------------------------------"

"------------------------------------------------------------"

"________________________________________"

"________________________________________________"

"________________________________________________________"

"_________________________________________________________________"

"__________________________________________________________________________"


மோகன ஜெய்::"எப்படியா எல்லாம் நல்ல படியா போய்கிட்டு இருக்குல்ல "

ரவி தேஜா :: "ஆமா ஜெய் அருமையா போக்கிட்டு இருக்கு."நாம இரண்டு பேரும் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டோம்.
                         
இப்ப எப்படி வாழுறோம்?எல்லாம் நாம் போட்ட திட்டம்தான்.இதை இப்படியே மெய்டன் பண்ணுவோம்.
                         
ஆனா ஒன்னு நாம இறந்தாலும் சரி நமக்கு பின்னாடி வர சந்ததியினருக்கு கூட நம்மளோட இந்த ரகசிய திட்டம் தெரிய கூடாது.
                         
அப்பத்தான் நம்ம பசங்களும் வர ராயல்டில இப்படி சுகமா ஆடம்பரமா வாழமுடியும்."




                            
   ""சியர்ஸ்....சியர்ஸ்...""