பெரிய பண்ணாடி
ஊரில் இருக்கும்
பெரிய மனிதர்களில் பண்ணாடியும் ஒருவர். இவருக்கு உடன் பிறந்த தம்பி ஒருத்தர் உண்டு அதனால் இவரைப் பெரிய பண்ணாடி
என்று தான் அழைப்பர். பெரிய பண்ணாடி எச்சைக்கையில்
காக்கை ஓட்டாதவர் தான், அவருக்கு ஒத்துழைக்காத வரை. அவரின் இச்சைக்கு ஒத்துழைத்தால்
அவ்வப்போது அள்ளிக் கொடுப்பார், சில சமயம் கிள்ளியும் கொடுப்பார்.
பெரிய பண்ணாடி வீட்டில் நிறைய வேலைக்காரர்கள்
உண்டு. வீடு சுத்தம் செய்ய, கழனியில் மாடுகளை மேய்க்க, கழுவ, பால் பீச்ச என்று
எல்லாத்துக்கும் ஆட்கள் தான் வீட்டுப் பெண்களுக்கு அதட்டுவதும் வேலை வாங்குவதும் தான் அவர்கள் வேலை.
பண்ணாடி எப்பவும்
தன் வீட்டு வேலைக்குவருவர்களை, அவரின் மனதை கொள்ளை கொள்பவர்களை
வீழ்த்துவதை வாடிக்கையாக வைத்திருந்தார். வீழ்த்தியவர்களை ஊரை ஒட்டிய மாங்காத்தோப்புக்குள் மாங்காயோடு, மாங்காயாகச் சாப்பிட அழைப்பார். மாங்காத்தோட்டம் என்றாலே பண்ணாடியின்
நண்பர்கள் நக்கலாகச் சிரிப்பார்கள். பண்ணாடியின் மாங்கத்தோப்பில் உள்ள
கிணற்றடியில் எப்பவும் கயித்துக் கட்டிலும், சிறிய சாலையும் இருக்கும் இது தான்
பண்ணாடியின் பூலோக சொர்க்கம்.
பண்ணாடியின் தோட்டத்தைக் கவனிக்கும் சின்னகந்தன் தன்
மனைவி அம்சா உடன் அதே ஊரில் புறம்போக்கில் வாழ்ந்து வந்தான். சின்னகந்தன் வேலைக்குப் பண்ணாடி வீட்டுக்குத்தான் போய்கிட்டு இருந்தான், நமக்கு இரண்டு புள்ளைங்க வயசுக்கு வந்துட்டாங்க இனி நீ காட்டு வேலைக்குப்
போகவேண்டாம் வீட்டு வேலைக்குப் போ என்றவன், பண்ணாடியிடம் கேட்டுட்டு நாளைல இருந்து உன்னையும்
வேலைக்குப் கூட்டிட்டுப் போறேன் என்று
நம்பிக்கையாகச் சொன்னான்.
ஊரின்
இளவட்டங்களுக்க எப்போதும் சின்னகந்தனின் பொஞ்சாதி அம்சாவைப்பற்றியான பேச்சு கொஞ்சத் தூக்கலாக இருக்கும். அம்சா தண்ணி எடுக்க ஆத்துக்கும் போகும் போதும், டீ குடிக்க சாலைக்கடைக்கு போகும் போதும், ஊரில் ஏகப்பட்ட ரசிகர்கள் அவளுக்கு.
அம்சா அம்புட்டுக் கலரா? என்றால், சத்தியமாக இல்லை என்று தான் சொல்வார்கள். மாநிறம் என்று கூடச் சொல்ல இயலாத
கருப்புத்தான் அம்சா, ஆனால் மூக்கும், முழியும், வெற்றிலைப் போட்டாச் சிவக்கும் சிகப்பு இதழ்கள் எனப் பார்ப்பவர்கள் அள்ளி அணைக்கும் என்னத்தை
வழுக்கட்டாயமாக மனதிற்குள் திணிக்கும் உடல் அமைப்புதான் அம்சா.
32 வயது தான் ஆனாலும் உடலில் எங்கும் மடிப்புப் போடாத உடல்வாகுவோடு தான்
இருந்தாள், அவளின் குட்டித்தொப்பையைக் காணக் கோடிக்கண்கள் பத்தாது. இது போதுமல்லவா? அம்சாவை வீழ்த்தக் காத்திருக்கும் கண்களுக்கு?.
சின்னகந்தன் பண்ணாடியிடம் சொல்லி வீட்டைத் துடைக்கும்
சுப்பாத்தவின் புள்ள, குட்டிப் போட வந்திருக்கிறாள் அதனால 3 மாத விடுப்பில் போய்விட்டாள், அந்த இடம் இப்ப நம்ம அம்சாவுக்குக் கிடைத்ததும். வாரம் 300 ரூபாய்ச் சம்பளத்தில் வேலைக்குச் சேர்த்துட்டாங்க.
எண்ணெய் வழியும்
தலையுடன், வளிச்சுச் சீவிகிட்டு முத நாள்
வேலைக்குச் சென்றாள். அப்போது எல்லாம் பண்ணைக்குத் தெரியவில்லை இந்த அம்சா. எப்போதும் போல வேலைக்குப் போய் வருபவளைச் சின்னகந்தன் பண்ணாடியிடம்
பேச்சுக் கொடுக்காதே , பார்த்து நடந்துக்க என்று அடிக்கடி சொல்வான்.
ஆத்துக்குத் தண்ணி எடுக்கச் சென்ற அம்சாவைப் பார்த்தப்
பெரிய பண்ணாடி அட இது நம்ம வீட்டில் தான் இருக்கா? என்று மனதில் திட்டம் போட துவங்கியவர்.
அடுத்த நாளே வேட்டைக்குத் தயாரானார். தினமும் ஒவ்வொரு
அம்பாக வீசத் தொடங்கினார். அம்சாவுக்கு முதலில் பயங்கரக் கோபம் வந்தாலும், ஒவ்வொரு முறையும் நைசாப் பேசித் தள்ளி வருவதில் சமர்த்திசாளியாக இருந்தாள்.
எத்தனை நாள் தான் அம்பையே விடுவது என்று
வில்லைத்தூக்கிப்போட்டப் பண்ணாடி, மாட்டுக்குத்
தவிடு இருக்கும் அறையைச் சுத்தம் செய்யப் போகும் நேரத்திற்குக் காத்திருந்தார், சரியாக அங்கே சென்றதும் அள்ளி அணைத்து, பின் கழுத்தை இதழால் பதம் பார்த்தவரை, வேகமாகத் தள்ளி விட்டு இந்த வேலை எங்கிட்ட வெச்சிக்காதீங்க? மான, மருவாதி எல்லாம் கெட்டுப்போய்டும் என்று எகிறியவளிடம் இருந்து வேர்க்க விறுவிறுக்க
வந்தவர், கொஞ்சநாள் அவள் முகத்தைப் பார்க்கவே ரொம்ப யோசித்தார்.
இந்த விசயத்தைச் சின்னகந்தனிடம் சொன்னாள் அம்சா. அடுத்த
நாள் ஊரில் உள்ள இன்னொரு பெரிய மனிதனிடம் சொல்லலாம் என யோசித்தவனைக் கருப்பன் உசுப்பி விட்டான், போலீசில் புகார்ச் செய்யலாம் என்று 12ம் நெம்பர்ப் பஸ் ஏரிச் சித்தோடு போலீஸ் ஸ்டேசனுக்குப் போனவன் எப்படிப் புகார்
அளிப்பது என்று தெரியாமல் நிற்க, பெரிய பண்ணாடி
அங்கிருந்த அதிகாரிகளிடம் சகசமாகப் பேசி விட்டு வெளியே வந்தார். இதைப்பார்த்தச் சின்னக் கந்தன் நடுங்க
ஆரம்பித்தான். இங்க சொன்ன நம்பப் பப்பு வேகாது. இல்லாதப்பட்டவன் இருக்கப்பட்டவனை எதிர்ப்பது ரொம்பக் கடினம் என்று தன் இயலாமையை அம்சாவிடம்
சொன்னான்.
இதவிட்ட நமக்கு யாரும் வேலையும் தரமாட்டாங்க, இப்படியே சிக்காம காலம் தள்ளிக்க வேண்டியது தான் என்று முடிவெடுத்த அம்சா
விடுய்யா, நான் பார்த்துக்கிறேன் என்றாள்.
எப்போதும் போல
வேலைக்குப் போனவள் எஜமானி அம்மாகிட்ட நல்லா பழகிகிட்ட இவர் நம்மைச் சீண்டுவதை விட்டுவிடுவார் என எஜமானி அம்மா சொல்லாத வேலையையும் செய்யத்
துவங்கினாள்.
மாங்காத்தோப்பிற்குந் சென்று கொண்டு இருந்தவர் பதின்மவயது
பொண்ணு ஒன்னு வருவதைக் பார்த்தவர் யார் என்ன வென்று விசாரித்தார் அம்சா பொண்ணு என்பதை அறிந்தவர் நிறையக் பழங்கள் கொடுத்து நன்றாகக் பேசி அனுப்பி
வைத்தார்.
அடுத்த நாள் கொல்லைப்புறத்தில் சுடுதண்ணின் காய
வைக்கச் சென்ற அம்சாவிடம் உம் பொண்ணு நேற்று மாங்காய்க் கொண்டு வந்தாளா நான் தான் கொடுத்தேன் மாங்காத் தோப்புக்கு வந்து மாங்காய்ச் சாப்பிடாமப்
போன எப்படின்னுக் கொடுத்து விட்டேன் என்று நடந்தது போலவே பொய்யை உதிர்த்தார்.
அம்சா அழுகையை அடக்கிக் கொண்டு வீட்டிற்கு
வந்து விசாரித்தாள் அவர் சொன்னது உண்மையல்ல என்பதை அறிந்தாள், மகளே ரொம்பத்
தங்கமானவர் எப்ப வேண்டுமானாலும் மாந்தோப்புக்கு வா வந்து பழம் பறிச்சுக்க என்றார் என்றாள்.
அடுத்து வேலைக்குச் சென்ற நாட்களில் சின்ன
மாங்காயை விட எனக்குப் பெரிய மாங்காதான் பிடிசசிருக்கு என்று நாசூக்காகப் சொல்லிச் சொல்லியே, கரைப்பார்க் கரைச்சக் கல்லும் கரையும் என்பதைப் போலக் கரைக்க
ஆரம்பித்தார் அம்சாவை.
சில நாட்களில் போகிற போக்கில் அம்சா நாசூக்கா
உதிர்த்தாள் முதன் முதலாகப் பண்ணாடியிடம் பெரிய மாங்கா இன்னிக்குச் சாயங்கலாம்
மாந்தோப்புக்கு வரலாம்ன்னு முடிவு செய்திருக்கு என்று..
பண்ணாடிக்குச்
சந்தோசம் தாங்கல அவரின் மனது வானத்துக்கும், பூமிக்கும் எகிறி எகிறிக் குதித்தது.
சாயங்காலம் தலைக்குக் குளித்து, பூ, பொட்டு என அம்சமாக இருந்தாள் அம்சா மனதை கல்லாக்கிகொண்டு, குடும்பத்தையும், புள்ளைங்க படிப்பையும் மனதில் கொண்டு புறப்பட்டாள் மாந்தோப்பிற்கு...
No comments:
Post a Comment