புன்னகை
"இன்னும் ஒரு மணி
நேரதுல ஊருக்கு போயிரலாம்! சார்" டிரைவர் சொன்னான், களைப்பு நீங்கி ஒரு புத்துணர்சியை உணர்தேன்.
ஐந்து வருட
இடைவெளிக்கு அப்புறம் ஊருக்கு போகிறேன், பதினைந்து வருடத்தில் அயல் தேசத்தில் அவர்களுக்கு உழைத்து, அவர்களின் ஜோக்குக்கு சிரித்து, அடிபணிந்து சம்பாதித்தது போதும் என்று
திரும்புகிறேன்.
ஊரின் எல்லையில்
செந்தில் காரில் அமர்ந்திருந்தான், அவனை சுற்றி ஒரு
கூட்டம் நின்றுயிருந்தது, முருகவேல் சாரின்
பையன், அவனிடம் நின்று பேசலாம்
என்று நினைத்தேன். எப்படியும் கண்டிப்பாக முருகவேல் சாரின் வீட்டுக்கு போகத்தான்
போகிறோம் அங்கு பேசிக்கலாம் என்று நினைத்து அமைதியாக வந்துவிட்டேன்.
முருகவேல் சார்
எங்க ஊர் மேல்நிலை பள்ளியின் வேதியியல் ஆசிரியர். மாணவர்களின் அன்பிற்க்கு உடைய
சில ஆசிரியர்களிள் ஒருவர். சொந்த ஊரிலே வேலை, சொத்துக்கு பஞ்சம் கிடையாது, பல வசதியில்லா மாணவர்களுக்கு அவங்க கேட்காமலே
பீஸ் கட்டுவாரு. அதனால ஊருக்குள்ள பயங்கர செல்வாக்கு.
எனக்கு பி.இ எங்க
படிக்க, என்ன கோர்ஸ்
படிக்கனும் போன்றவைக்கு அவரு தான் அபிப்பிராயம் சொன்னாரு, வெளிநாட்டுக்கு போக பாஸ்போர்ட்டுக்கு அப்ளை
பண்ணப்ப லோக்கல் ஸ்டேஷன்ல அவரு தான் சிபாரிசு பண்ணாரு.
நான் ஊரை விட்டு
போன போது செல்போன் வசதி இந்த அளவுக்கு இல்ல, அதனாலஅவர் வீட்டுக்கு தான் போன் பண்ணி
அம்மாகிட்ட பேசுவேன், அப்ப அவரோடையும்
சில வார்த்தைகள் பேசியதுதான், அப்புறம் என்க
வீட்டுக்கே போனும், பின்னாடியே
செல்போனும் வந்ததாலே, அவரோடு பேசுறது
கம்மியாயிடுச்சு.
வாசலில் அம்மா,
அப்பா நிற்ப்பது கார்
திரும்புறப்ப தெருஞ்சுச்சு.அம்மாவை ஆசை தீர அனைத்து கொண்டு உள்ளே போனேன்.
"சரிய்யா!சீக்கிரம் குளிச்சுட்டு வா சாப்பிடுவ, நீ வந்துருக்கிறேனு தெரிஞ்சா எல்லாரும்
வந்துருவாங்க, அப்புறம் நேரம்
கிடைக்காது".
குளித்து
சாப்பிட்டுட்டு வந்த எல்லோர்க்கும் கொண்டு வந்த பொருளை கொடுத்து முடிக்கும்
போது மதியத்துக்கு மேல் ஆகியிருந்தது.
அம்மாவிடம்
"சரிம்மா நான் முருகவேல் வாத்தியார் வீட்டுக்டு போய்ட்டு வந்துடுறேன்"
சொல்லி முடிக்கும் போது அப்பா கோவமாக எந்திருச்சு வாச கதவ தாண்டும் போது
நின்று நக்கலாக சிரிச்சிட்டு போனாரு.
"அது ஒரு பெரிய
கணக்கு, சில
வருடங்களுக்கு முன் அப்பாவோட அண்ணன் எங்க பெரியப்பா பஞ்சாயத்து தேர்தல்ல
நின்னாரு. முருகவேல் சார் ஊரிலே மதிப்பான ஆளுங்கறதால, அவருக்கிட்ட அப்பாவும், பெரியப்பாவும் போய் ஆதரவு கேட்டாங்க, ஆனா முருகவேல் சார், பெரியப்பாகிட்ட நீங்க பிராந்திகடை
வச்சுயிருக்கறதால இந்த ஊரிலே நிறைய பேர் குடிச்சு கெட்டு போறாங்க, நீங்க கடையை மூடிட்டு வாங்க மக்கள்கிட்ட ஓட்டு
போட சொல்றேன்",என்று சொல்ல அது
பிரச்சனையாகி, எங்க பெரியப்பா
தேர்தல்ல தோத்திட்டார். அப்பயிருந்து வீட்டு ஆம்பிளைங்க பேசறதில்ல, ஆனா பொம்பளைங்க, பசங்க பேசுவாங்க எந்த தடையும் இல்ல.
சரி! அந்த கோவம்
இன்னும் தீரலனு நினைச்சு கிள்ம்பினேன்.
மூணாவது தெருவில்
தான் சார் வீடு, வேகமாக நடந்தேன்,
வழியிலே கூட படிச்ச
குமாரும் சேர்ந்திட்டான், அவன் ஊரிலே
விவசாயம் பார்க்கிறான், பேசிக்கிட்டே
சார் வீட்டு வாசலிலே நுழைய போனேன்.
பாய்ஞ்சு தடுத்த
குமாரு, பக்கத்லே இருந்த
பிரமாண்ட பங்களாவை காட்டி "இப்ப சார் அங்க தான் இருக்கிறார், செந்தில் இந்த பங்களாவை கட்டிக்கிட்டு, குடும்பத்தோட அங்க போயிட்டாங்க"
கூட்டிக்கிட்டு போனான்.
காலையிலே ஊர்
எல்லையிலே பார்த்த பாதி கூட்டம் அங்க நின்னுக்கிட்டு இருந்தது. நாங்க கேட்டுகிட்டே
போனவுடனே, ஒரு கிடா மீசை
வேகமாக வந்து "யார் நீங்க என்ன வேணும்" அதிகாரமாக கேட்டுச்சு. குமாரு
தான் " இல்ல நாங்க செந்தில் அண்ணன பார்க்க வந்தோம், அவரு கூட படிச்சவங்க!". "சரி! சரி!
இருங்க கேட்டுட்டு வரேன்" என்று கிடா மீசை நகர்ந்தது. நான் அதிர்ச்சியுடன்
அவனை திரும்பி பார்த்தேன். "என்னடா! கூட படிச்சவனை அண்ணேங்கிற? சார பார்க்க வந்துட்டு செந்தில பார்க்க
வந்தோம்னு சொல்ற?" வேகமாக என்னை
அடக்கினான், "மாப்ளே! இப்ப
செந்திலண்ணே லெவலே வேற அவர பழைய மாதிரி எல்லாம் கூப்பிட முடியாது, கொஞ்சம் அடக்கி வாசி".
நான் இன்னும்
திகைத்து போய் அவனை பார்த்தேன். செந்தில் எங்களோட சேர்ந்து படித்தாலும் எங்களோட
ஊர் சுத்தமாட்டான், நாங்க ஏரியிலே
மீன் பிடிக்கும் போது, அவர் பித்தாகரசு
தியரம் படிச்சுக்கிட்டு இருப்பான். வாத்தியான் பையன் மக்குனு பெயரெடுக்க
கூடாதுன்னு சாரும் அவங்கிட்ட கொஞ்சம் கடுமையாக இருப்பார். ஒரே ஸ்கூல்னாலும்
சாரோட வண்டியில் வராம, எங்களோட
சேர்ந்து நடந்துதான் வருவான். இப்ப அண்ணன் சொன்ன குமாரு அவ்ன் பயங்கரமாக கேலி
பண்ணுவான், அதுக்கு கோவ
படாம சிரிச்சுக்கிட்டே வருவான்.
"அண்ணன் வர
சொல்றார்" கிடா மீசை கூப்பிட்டான். உள்ளே நுழைந்தோம். எங்களை பார்த்தவுடன்
"வா குமாரு எப்படி இருக்க! அட சிவா! நீ எப்ப வெளிநாட்டுலருந்து வந்த?",
"காலைல தான் அண்ணே!
என்றேன். குமார் என்னை வியப்புடன் பார்த்தான்.
அதன் பின்
செந்தில் பேசிய எதுவும் என் காதில் விழவில்லை ஆள் அந்தளவிற்க்கு மாறி
போயிருந்தான், நான் மண்டைய
மட்டும் ஆட்டினேன். "சரி! அப்பா உள்ளே தான் இருக்காரு போய் பாருங்க"
சொல்லிவிட்டு அருகில் அமர்ந்து இருந்தவர்களுடன் வேறு ஏதோ பேச திரும்பிவிட்டான்.
உள்ளே போகும்
போது குமார் "இப்ப நீயே அண்ணன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்ட பாரு! இப்ப இவன்
ஆட்சிதான் நடக்குது சார் இப்பயெல்லாம் வீட்டை தாண்டுவதில்லை. இவரும் அவன எந்த
கேள்வியும் கேட்கிறதில்லை, அவனும் இவருக்கு
மரியாதையில் குறைவைப்பதில்லை".
சார் கட்டிலிலே
படுத்திருந்தார், ஆள்யிளைத்து
போய் இருந்தார். எங்கள் நிழல் பார்த்து எழுந்து உட்கார்ந்தார், அடையாளம் கண்டுகொண்டு இனிமையாக புன்னகைத்தார்.
மெளனமாக அவர் அருகில் அமர்ந்தேன், என் வேலை
குடும்பம் பற்றி நிறைய கேட்டார். வாங்கிய பொருளை அவரிடம் வற்புறுத்தி
கொடுத்துவிட்டு கிளம்பும் போது, மறுபடியும் அதே
புன்னகை. என்னையறியாமல் கண்ணீர் வந்தது.
சிறிது
நேரத்திற்க்கு பிறகு "செந்தில பார்த்தியா? பேசினியா? தலையசைத்தேன், என் கண்ணை பார்த்தார் பிறகு தலை குனிந்து
கொண்டு, "எல்லாம் மாறி
போச்சு, நீ
போனதுக்கப்புறம் தலைமையாசிரியரிடம் சண்ட போட்டு வேலை போச்சு, மழையில்லாம விவசாயத்திலும் ஒண்ணும்
வருமானமில்லை, ஆனா
கேட்டவங்களுக்கு இல்லைனு சொல்ல முடியல, கெள்வுரவம் தடுத்திடுச்சு, எல்லா சொத்தும்
கைய விட்டு போற் மாதிரியாச்சு, ஆனா செந்தில்
கெட்டிகாரன் புதுசா தொழில ஆரம்பிச்சு எல்லாத்தையும் காப்பாத்திட்டான், புதுசாவும் நிறைய வாங்கிட்டான்".
மெள்னமானார்.
"ஆனா என்ன
எந்தயிடத்தில் உட்கார்ந்துகிட்டு உங்க பெரியப்பா கிட்ட சாராய கடையை மூடித்தான்
ஆகனும்னு சண்டை போட்டேனோ அந்த இடத்தில் இப்ப இவனே பார் நடத்திறான், நல்ல வேளை அரசாங்கம் இப்ப கடைய நடத்துது,
இல்லைனா இவன் என் பேருல
ஆரம்பிச்சுருப்பான்." என்றார் வறண்ட குரலில்.
மேலும் உட்கார
முடியாமல் சட்டென்று எழுந்து வெளியே வந்தேன், புறா கூண்டு தலையில் இடித்தது, ஆனால் அந்த ஆரவாரத்திலும் புறா அமைதியாக
இருந்தது, திரும்பி சாரை
பார்த்தேன், புன்னகைத்தார்,
பல விசயங்களை சொன்னது.
புறா கூண்டுயில்
அமைதியாக இருந்தது.
No comments:
Post a Comment