ச்சீ...!!!
ஹாய்...!!! என் பேரு கெளதம், என்ன பத்தி சொல்றதுக்கு பெருசா ஒன்னும் இல்ல... சராசரி குடிமகன்...கே.எப் மட்டும்.... ஆனா என் காதல பத்தி சொல்ல நிறையா இருக்கு...!!!
நா அவள எப்போ முதல்ல பாத்தேன்னு ஞாபகம் இல்ல... ஒரே டிப்பார்ட்மெண்ட்தான்... ஒரே கிளாஸ் தான்... ஆனா எப்போ கவனிச்சேன்னு ஞாபகம் இருக்கு.... அது ஒரு வெள்ளிகிழம... ஹெச் ஆர் பிரியட். உங்கள பேச வைக்கத்தான் இந்த பிரியடேன்னு சொல்லுவாங்க.... பேச கூடாதுனே டாபிக் தருவாங்க... அன்னிக்கும் இப்படிதான் தல கால் புரியாத டாபிக் 1+1=1....!!! (அப்படினா என்னங்க....?!)
எங்க க்ரூப்ல 6 பேரு...ஒருத்தனுக்கும் எங்க ஆரம்பிகிறதுன்னே தெரியல... முதல்ல அவ தான் பேசினா....
"ஹாய் பிரண்ட்ஸ்.. ஐ ஆம் காவ்யா குமாரசாமி....!!!" (அவ அதுக்கு மேல என்ன பேசினாங்க்றது நமக்கு அவுட் அப் ஸ்கோப் )
அப்போ அப்போதான் அவள கவனிச்சேன்....!!அதற்கு பிறகு சுமார் 10 நிமிடங்கள் கவனித்துக்கொண்டே இருந்தேன்...மேம் என்னை கவனித்து தலையில தட்டி அடுத்து பேச சொல்லும் வரை.என்ன டாபிக் என்றே மறந்து விட்டது..
"ஹ்ம்ம்...ஹா....ஆக்ச்சுவலி ... "
ரொம்ப யோசித்து...
"ஐ வில் கோ வித் காவ்யா ...."என்று ஆரம்பிக்கும் பொழுது
"அதெல்லாம் அனுப்ப முடியாது....!!!" என்று கூட்டத்தில் எவனோ ஒருவன் கத்தினான்.
கிளாஸ் விட்டு வெளியே வரும் பொழுது அவளை நெருங்கினேன்....
"ஹாய்....ரொம்ப சூப்பரா பேசுனீங்க..."
"அப்படியா...."
"ஐயோ...நீங்க பேசுனதுல என்னால வாயே திறக்க முடியல..."
"ஒ...நீயும் நல்லா தான் பேசுனா..." (நா என்ன பேசுனேன்...?!)
"ஹ்ம்ம்ம்ம்"
"ஹ்ம்ம்ம்ம்" (என்ன பேசுவது என்றே தெரியவில்லை)
"பேரு கெளதம்" என்றேன்
புன்னகையை பரிசளித்துச் சென்றாள்.
சிறிது சிறிதாக குட்டிச் சி ரிப்பு... ஹாய்... பாயில் தொடங்கி...அத்த பேரு கமலா... மாமா பேரு குமாரசாமி ... சொந்த ஊரு புதுக்கோட்டை... வளந்தது சென்னை... இருப்பது பாலாஜி நகர் எல்லாம் தெரிந்தும் இன்னும் தெரியவில்லை அவளது செல் நம்பர்..!!
அன்று அவளிடம் சென்றேன்....
"ஹ்ம்ம்...காவ்யா .." இப்போயெல்லாம் அப்படிதான் கூப்புட்றது
"என்ன டா.." இப்போயெல்லாம் அவுங்க அப்படிதான் கூப்புட்றது
"நீ மெசேஜ் பண்ணியா,,,"
"இல்லையே..."
மெசேஜ்-ஐ காமித்தேன்.
"Hai Gautham....dis is kavya ...:-)"
இது எனக்கு நானே நன்பன் செல்லில் இருந்து அனுப்பி கொண்டது தான்.... Gow க்கு பதில் Gau.... இதுகூட அவளுக்கு தெரியாதானு கேக்றீங்களா... தெரியும்... தெரியனும்.... அதுதானே வேணும்....எல்லாம் காதல்...!!!
"இல்லையே இது என் நம்பர் இல்ல டா..."
"அப்படியா எங்க உன் நம்பர் சொல்லு..."
"**********" (உங்களுக்கு சொல்லமாட்டேன்....ஐ )
அவளுக்கு ஒரு மிஸ்டு கால்.."நோட் பண்ணிக்கோ..."
gautham என்று சேவ் செய்தாள்..எல்லாம் மெசேஜ் எபெக்ட்...
நான் சொன்னேன் "அது au இல்ல ow..."
அன்று ப்ரீபீரியட் ஒன்றில் கிளாசில் அனைவரும் ஜோடி ஜோடியாக கேன்டீன் சென்றுவிட்டார்கள்... நான் மட்டும் லாஸ்ட் பெஞ்சில் ஹெட் போன் மாட்டிகொண்டு... பாட்டு கேக்காமல்... அவள்... அவள் நண்பிகளுடன் பேசுவதை கேட்டு ட்ரைனிங் எடுத்துக் கொண்டிருந்தேன்....
அவர்கள் சிரித்து பேசி கொண்டிருந்தார்கள்... எனக்கு காதில் ரத்தம் வந்துவிடும் போலிருந்தது.... எதிர்காலத்தை நினைத்து பயமாய் இருந்தது... தனியா இவள்ட்ட மாட்டின பேசியே கொன்றுவா போல... இன்னிக்கு இதுக்கு மேல தாங்காது... மியூசிக் பிளேயரில் ப்ளே பட்டனை அமுத்த போகும் பொழுது.... அவள் சொன்னது காதில் விழுந்தது....
"ஆமா நா கௌதம லவ் பண்றேன்...."
".....லவ் பண்றேன்!!!!"
"......லவ் பண்றேன்!!!!"
தம் தன தம் தன.... !!!!!!
பாட்டு பாட ஆரம்பித்தது.....!!!
அன்று எவ்வளவோ முயற்சித்தும் அவளுடன் பேச முடியவில்லை....
உங்களுக்கு ஒரு அட்வைஸ் உளுத்தம் பருப்பும், பச்சை மிளகாயும் மட்டும் வாங்க சூப்பர் மார்க்கெட்டுக்கெல்லாம் போகாதீங்க... சேல்ஸ் கேர்ளிடம் கேட்டால்... நேரா போய் லெப்ட் திரும்பு என்கிறாள்.... அடித்து பிடித்து... உளுத்தம் பருப்பை நெருங்குகையில்... ஐயோ இது என்ன கனவா நிஜமா...... காவ்யாஆஆஆ...!!!! நான் இது வரை 2டியில் மட்டுமே பாத்து வந்த காவ்யா இன்று 3டியில்... அதாங்க ஜீன்ஸ் டீ-ஷர்ட்... யம்மா...!!!
"ஆமா நா கௌதம லவ் பண்றேன்...." என்று அவள் சொல்லியது காதில் ரிங்கரமிட்டது.
அவள் என்னை காதலிக்கிறாள் என்று என் நண்பர்களிடம் சொல்லும் பொழுது... அவர்கள் யாரும் நம்பவில்லை.. .நம்பதயாராகவும் இல்லை...!!!
"சான்சே இல்ல... உன்ன போயா..." என்று ஒருவன் அப்பட்டமாக அசிங்கப்படுதினான்.
இன்னொருத்தன் "கரெக்டா சொல்லு கார்த்தின்னு சொன்னாளா கௌதம்ன்னு சொன்னாளா...?" என்றான்
"கனவு மச்சி... கிளாஸ்ல தூங்காதன்னா கேக்ரியா..."
எல்லாம் வைத்தெரிச்சல்... அவர்கள் நம்பாதது இருக்கட்டும் என்னாலையே நம்ப முடியல... பஸ்ல இருந்து காலேஜ் வரைக்கும் எல்லாம் லெப்ட் அவுட் சீட்தான் எனக்கு... எனக்கு போய்... என்ன போய்... சத்தியாமா நான் இன்னும் அந்த அதிர்ச்சில இருந்தே வெளில வரல அதுக்குள்ள 3டி.... ஒரே நாள்ல இவ்வளோ அதிர்ச்சியா ஏழுகுண்டல வாடா....!!!!
போன ஜென்மத்தில உங்களுக்கு நம்பிக்கை இருக்கா... என்ன அவ லவ் பண்ணறேன்னு சொன்னதே என் போன ஜென்ம புண்ணியம்தான்...ஆனா நா இப்போ போட்டு இருக்குற வெளுத்துப்போன டீ-ஷர்டில்.... அந்த காலத்துல எங்க தாத்தா யூஸ் பண்ண பட்டபட்டி அப்படியே கடன்வாங்கி போட்ட மாறி இருக்குற என்னோடஅரை டிராயர்யுடன் அவ பக்கதுல நின்னா... கிளி போன்ற பெண்கள் ஏன் குரங்கு போன்ற ஆண்களை காதலிக்கிறார்கள்ன்னு உள்ளூர் நியூஸ் சேனல்ல சேர் போட்டு பேச ஆரம்புசுடுவாங்க....சோ தள்ளி நிற்பதே சாலச் சிறந்தது...!!!!
சூப்பர் மார்க்கெட்ல ஒளியறதுக்கு சந்து பொந்தா இல்ல...ஒளிந்து நின்றே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் அப்படி ஒன்றும் உயரமில்லை.. மறைந்து விடுகிறாள்... குதித்து குதித்து பார்த்துக்கொண்டிருந்தேன். என் பக்கத்தில் பாஸ்ட் ட்ராக் கண்ணாடியை டீ-ஷர்டில் சொருவிய ஒருவன் முறைத்தபடி நின்று கொண்டிருந்தான். நான் அவனிடம் "மை ஆள்" என்றேன்.
நான் குதிக்கும் பொழுது சட்டேன்று அவள் திரும்ப... தேவையில்லாத ஐ-சின்க் ஏற்பட்டு... அதீத ஹார்மோன் குளறுபடியால்...பேலன்ஸ் இழந்து. .. அந்த பாஸ்ட் ட்ராக்கை பிடித்து பேலன்ஸ் செய் ய...
எரும மாடு போல் இருந்தவன்... என் வெயிட் தாங்காமல் விழுந்து
தொலைத்து விட்டான். ஒரு சில டப்பாக்கள்... சில பாக்கெட்டுக்களோடு ... இதற
சில சாமான்களுடன் நானும் அவனும் தரையில் கிடந்தோம். அவள் அதற்குள் சம்பவ
இடத்திற்கு வந்து விட்டாள்.
அவன் "யூ இடியட்..!!" என்பதை மிக பயங்கர கேட்ட வார்த்தை ஸ்லாங்கில் சொன்னான்.
அவள் "என்னாச்சு...?" எனக்கேட்டாள்
ஒண்ணுமில்லைனு நான் தான் சொன்னேன்... ஆனால் ஒலித்தது அந்த மாட்டின் குரல்.
"எந்திரி" என்று அவனுக்கு கைகுடுத்தாள்.அவன் எழுந்து என்னை முறைத்துவிட்டு சென்றான். என் சிநேக சிரிப்பை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை. அவள் ஏற்றுக்கொண்டு ஒரு ஸ்நேஹா சிரிப்பை உதிர்த்துவிட்டுச் சென்றாள்.
நானும் கையில் சிக்கிய ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டு கவுன்டருக்கு சென்றேன்.அவர்களுக்கு ரெண்டாயரத்து முன்னுத்தி சொச்சம் பில். மூணு ஆயிரம் ருபாய் நோட்டை நீட்டினான். அவள் தர்மசங்கடமாய் என்னை பார்த்தாள் . பின்னர் இருவரும் பல்சரில் ஏறி பறந்தனர். கடைசி வரை அவன் பாஸ்ட் ட்ராக்கை கண்ணில் மாட்டவில்லை.
ஸ்பென்சரில் இரண்டு முக்கிய அசம்பாவிதம் நடந்தது.
நா அவள எப்போ முதல்ல பாத்தேன்னு ஞாபகம் இல்ல... ஒரே டிப்பார்ட்மெண்ட்தான்... ஒரே கிளாஸ் தான்... ஆனா எப்போ கவனிச்சேன்னு ஞாபகம் இருக்கு.... அது ஒரு வெள்ளிகிழம... ஹெச் ஆர் பிரியட். உங்கள பேச வைக்கத்தான் இந்த பிரியடேன்னு சொல்லுவாங்க.... பேச கூடாதுனே டாபிக் தருவாங்க... அன்னிக்கும் இப்படிதான் தல கால் புரியாத டாபிக் 1+1=1....!!! (அப்படினா என்னங்க....?!)
எங்க க்ரூப்ல 6 பேரு...ஒருத்தனுக்கும் எங்க ஆரம்பிகிறதுன்னே தெரியல... முதல்ல அவ தான் பேசினா....
"ஹாய் பிரண்ட்ஸ்.. ஐ ஆம் காவ்யா குமாரசாமி....!!!" (அவ அதுக்கு மேல என்ன பேசினாங்க்றது நமக்கு அவுட் அப் ஸ்கோப் )
அப்போ அப்போதான் அவள கவனிச்சேன்....!!அதற்கு பிறகு சுமார் 10 நிமிடங்கள் கவனித்துக்கொண்டே இருந்தேன்...மேம் என்னை கவனித்து தலையில தட்டி அடுத்து பேச சொல்லும் வரை.என்ன டாபிக் என்றே மறந்து விட்டது..
"ஹ்ம்ம்...ஹா....ஆக்ச்சுவலி ...
ரொம்ப யோசித்து...
"ஐ வில் கோ வித் காவ்யா ...."என்று ஆரம்பிக்கும் பொழுது
"அதெல்லாம் அனுப்ப முடியாது....!!!" என்று கூட்டத்தில் எவனோ ஒருவன் கத்தினான்.
கிளாஸ் விட்டு வெளியே வரும் பொழுது அவளை நெருங்கினேன்....
"ஹாய்....ரொம்ப சூப்பரா பேசுனீங்க..."
"அப்படியா...."
"ஐயோ...நீங்க பேசுனதுல என்னால வாயே திறக்க முடியல..."
"ஒ...நீயும் நல்லா தான் பேசுனா..." (நா என்ன பேசுனேன்...?!)
"ஹ்ம்ம்ம்ம்"
"ஹ்ம்ம்ம்ம்" (என்ன பேசுவது என்றே தெரியவில்லை)
"பேரு கெளதம்" என்றேன்
புன்னகையை பரிசளித்துச் சென்றாள்.
சிறிது சிறிதாக குட்டிச் சி ரிப்பு... ஹாய்... பாயில் தொடங்கி...அத்த பேரு கமலா... மாமா பேரு குமாரசாமி ... சொந்த ஊரு புதுக்கோட்டை... வளந்தது சென்னை... இருப்பது பாலாஜி நகர் எல்லாம் தெரிந்தும் இன்னும் தெரியவில்லை அவளது செல் நம்பர்..!!
அன்று அவளிடம் சென்றேன்....
"ஹ்ம்ம்...காவ்யா .." இப்போயெல்லாம் அப்படிதான் கூப்புட்றது
"என்ன டா.." இப்போயெல்லாம் அவுங்க அப்படிதான் கூப்புட்றது
"நீ மெசேஜ் பண்ணியா,,,"
"இல்லையே..."
மெசேஜ்-ஐ காமித்தேன்.
"Hai Gautham....dis is kavya ...:-)"
இது எனக்கு நானே நன்பன் செல்லில் இருந்து அனுப்பி கொண்டது தான்.... Gow க்கு பதில் Gau.... இதுகூட அவளுக்கு தெரியாதானு கேக்றீங்களா... தெரியும்... தெரியனும்.... அதுதானே வேணும்....எல்லாம் காதல்...!!!
"இல்லையே இது என் நம்பர் இல்ல டா..."
"அப்படியா எங்க உன் நம்பர் சொல்லு..."
"**********" (உங்களுக்கு சொல்லமாட்டேன்....ஐ )
அவளுக்கு ஒரு மிஸ்டு கால்.."நோட் பண்ணிக்கோ..."
gautham என்று சேவ் செய்தாள்..எல்லாம் மெசேஜ் எபெக்ட்...
நான் சொன்னேன் "அது au இல்ல ow..."
அன்று ப்ரீபீரியட் ஒன்றில் கிளாசில் அனைவரும் ஜோடி ஜோடியாக கேன்டீன் சென்றுவிட்டார்கள்... நான் மட்டும் லாஸ்ட் பெஞ்சில் ஹெட் போன் மாட்டிகொண்டு... பாட்டு கேக்காமல்... அவள்... அவள் நண்பிகளுடன் பேசுவதை கேட்டு ட்ரைனிங் எடுத்துக் கொண்டிருந்தேன்....
அவர்கள் சிரித்து பேசி கொண்டிருந்தார்கள்... எனக்கு காதில் ரத்தம் வந்துவிடும் போலிருந்தது.... எதிர்காலத்தை நினைத்து பயமாய் இருந்தது... தனியா இவள்ட்ட மாட்டின பேசியே கொன்றுவா போல... இன்னிக்கு இதுக்கு மேல தாங்காது... மியூசிக் பிளேயரில் ப்ளே பட்டனை அமுத்த போகும் பொழுது.... அவள் சொன்னது காதில் விழுந்தது....
"ஆமா நா கௌதம லவ் பண்றேன்...."
".....லவ் பண்றேன்!!!!"
"......லவ் பண்றேன்!!!!"
தம் தன தம் தன.... !!!!!!
பாட்டு பாட ஆரம்பித்தது.....!!!
அன்று எவ்வளவோ முயற்சித்தும் அவளுடன் பேச முடியவில்லை....
உங்களுக்கு ஒரு அட்வைஸ் உளுத்தம் பருப்பும், பச்சை மிளகாயும் மட்டும் வாங்க சூப்பர் மார்க்கெட்டுக்கெல்லாம் போகாதீங்க... சேல்ஸ் கேர்ளிடம் கேட்டால்... நேரா போய் லெப்ட் திரும்பு என்கிறாள்.... அடித்து பிடித்து... உளுத்தம் பருப்பை நெருங்குகையில்... ஐயோ இது என்ன கனவா நிஜமா...... காவ்யாஆஆஆ...!!!! நான் இது வரை 2டியில் மட்டுமே பாத்து வந்த காவ்யா இன்று 3டியில்... அதாங்க ஜீன்ஸ் டீ-ஷர்ட்... யம்மா...!!!
"ஆமா நா கௌதம லவ் பண்றேன்...." என்று அவள் சொல்லியது காதில் ரிங்கரமிட்டது.
அவள் என்னை காதலிக்கிறாள் என்று என் நண்பர்களிடம் சொல்லும் பொழுது... அவர்கள் யாரும் நம்பவில்லை.. .நம்பதயாராகவும் இல்லை...!!!
"சான்சே இல்ல... உன்ன போயா..." என்று ஒருவன் அப்பட்டமாக அசிங்கப்படுதினான்.
இன்னொருத்தன் "கரெக்டா சொல்லு கார்த்தின்னு சொன்னாளா கௌதம்ன்னு சொன்னாளா...?" என்றான்
"கனவு மச்சி... கிளாஸ்ல தூங்காதன்னா கேக்ரியா..."
எல்லாம் வைத்தெரிச்சல்... அவர்கள் நம்பாதது இருக்கட்டும் என்னாலையே நம்ப முடியல... பஸ்ல இருந்து காலேஜ் வரைக்கும் எல்லாம் லெப்ட் அவுட் சீட்தான் எனக்கு... எனக்கு போய்... என்ன போய்... சத்தியாமா நான் இன்னும் அந்த அதிர்ச்சில இருந்தே வெளில வரல அதுக்குள்ள 3டி.... ஒரே நாள்ல இவ்வளோ அதிர்ச்சியா ஏழுகுண்டல வாடா....!!!!
போன ஜென்மத்தில உங்களுக்கு நம்பிக்கை இருக்கா... என்ன அவ லவ் பண்ணறேன்னு சொன்னதே என் போன ஜென்ம புண்ணியம்தான்...ஆனா நா இப்போ போட்டு இருக்குற வெளுத்துப்போன டீ-ஷர்டில்.... அந்த காலத்துல எங்க தாத்தா யூஸ் பண்ண பட்டபட்டி அப்படியே கடன்வாங்கி போட்ட மாறி இருக்குற என்னோடஅரை டிராயர்யுடன் அவ பக்கதுல நின்னா... கிளி போன்ற பெண்கள் ஏன் குரங்கு போன்ற ஆண்களை காதலிக்கிறார்கள்ன்னு உள்ளூர் நியூஸ் சேனல்ல சேர் போட்டு பேச ஆரம்புசுடுவாங்க....சோ தள்ளி நிற்பதே சாலச் சிறந்தது...!!!!
சூப்பர் மார்க்கெட்ல ஒளியறதுக்கு சந்து பொந்தா இல்ல...ஒளிந்து நின்றே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் அப்படி ஒன்றும் உயரமில்லை.. மறைந்து விடுகிறாள்... குதித்து குதித்து பார்த்துக்கொண்டிருந்தேன். என் பக்கத்தில் பாஸ்ட் ட்ராக் கண்ணாடியை டீ-ஷர்டில் சொருவிய ஒருவன் முறைத்தபடி நின்று கொண்டிருந்தான். நான் அவனிடம் "மை ஆள்" என்றேன்.
நான் குதிக்கும் பொழுது சட்டேன்று அவள் திரும்ப... தேவையில்லாத ஐ-சின்க் ஏற்பட்டு... அதீத ஹார்மோன் குளறுபடியால்...பேலன்ஸ் இழந்து.
அவன் "யூ இடியட்..!!" என்பதை மிக பயங்கர கேட்ட வார்த்தை ஸ்லாங்கில் சொன்னான்.
அவள் "என்னாச்சு...?" எனக்கேட்டாள்
ஒண்ணுமில்லைனு நான் தான் சொன்னேன்... ஆனால் ஒலித்தது அந்த மாட்டின் குரல்.
"எந்திரி" என்று அவனுக்கு கைகுடுத்தாள்.அவன் எழுந்து என்னை முறைத்துவிட்டு சென்றான். என் சிநேக சிரிப்பை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை. அவள் ஏற்றுக்கொண்டு ஒரு ஸ்நேஹா சிரிப்பை உதிர்த்துவிட்டுச் சென்றாள்.
நானும் கையில் சிக்கிய ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டு கவுன்டருக்கு சென்றேன்.அவர்களுக்கு ரெண்டாயரத்து முன்னுத்தி சொச்சம் பில். மூணு ஆயிரம் ருபாய் நோட்டை நீட்டினான். அவள் தர்மசங்கடமாய் என்னை பார்த்தாள் . பின்னர் இருவரும் பல்சரில் ஏறி பறந்தனர். கடைசி வரை அவன் பாஸ்ட் ட்ராக்கை கண்ணில் மாட்டவில்லை.
ஸ்பென்சரில் இரண்டு முக்கிய அசம்பாவிதம் நடந்தது.
- ஒன்று அவள் என்னை பார்த்துவிட்டது.
- மற்றொன்று 100 ருபாய் வைத்துக்கொண்டு 320ரூபாய்க்கு அரைகுறை ஆடையில் பெண் படம் போட்ட வஜ்ரா சக்தி என்ற ஒரு பொருளை வாங்கியது...!! (பில் போட்டுவிட்டார்கள்.... சின்ன டப்பாக்கு என்னா விலை....!!)
அவனிடம் ரொம்ப உரிமை கொண்டாடுகிறாள் யாரா இருக்கும்...?!
அடுத்த நாள் அவளை வெளியிலேயே நிறுத்தினேன்...
"காவ்யா...(இந்த பேர இதுக்கு மேல செல்லமா சுருக்க முடியல...சுருக்குனா நல்லாயில்ல) நேத்து உன்கூட வந்தது யாரு...?"
"எங்கண்ணன்.." ஒரே வார்த்தையில் நேற்று தொலைத்த தூக்கத்தை அர்த்தமற்றதாக்கிவிட்டாள்.
"ரொம்ப சந்தோசம்.... நீ யாராவது லவ் பண்ணறியா...?'
அவள் முகத்தில் லேசாய் வெட்கம்... பிளஸ் போனசாக ஒரு புன்சிரிப்பு....
காலால் பூமியில் வட்டமிட்டு...விரல்களை உதட்டில் வைத்து....
"ஆமா " என்றால் (ஆமா நா கௌதம லவ் பண்றேன்....அதே பாணியில்)
இப்பொழுது என் முகத்திலும் டிட்டோ வெட்கம்... புன்சிரிப்பு...
"யாரு...?!" (ஸ்லாங் நீங்களே முடிவு பண்ணிகோங்க...)
"கெளதம்..!!" என்றாள் என்ன என்னிடமே என்னை பற்றியே யாரிடமோ சொல்வது போல் சொல்கிறாளே...இனியும் பொறுமை இல்லை....
"யாரு கெளதம்னா... நா... நான் தானே....?!"
அப்பொழுது அவள் முகத்தில் வந்த அந்த ரியாக்சனை
பார்த்திருந்தால்.... நீங்கள் என்னிடம் கேட்பீர்கள் ... "நீ இன்னுமா உயிரோட
இருக்க....?"
அதை அவளே ஒரே வார்த்தையில் கூறினாள் "ச்சீ...!!!"
"கெளதம் தான் ஆனா ow இல்ல au...!!!"
பி.கு. : ஆமா இன்னும் நான் உயிரோடதான் இருக்கேன்.....!!!!
No comments:
Post a Comment