தண்டனை
மனைவி சுதாவை அழைத்துகொண்டு மருத்துவமனைய
விட்டு வெளியே வந்தேன் பிரசவத்திற்க்கு
இன்னும் நான்கு மாதங்கள்தான் இருக்கின்றது, இன்னும்
எவ்வளவு செலவு ஆகும் என்று
தெரியவில்லை, கடன் வேறு அதிகமாக
உள்ளது காதல் திருமணம் செய்ததால்
நானே அனைத்து செலவுகளையும் செய்யவேண்டும் சில
மாதங்களாகவே நான்
என் கடையை திறப்பதில்லை
கடை இருக்கும் இடத்தின் உரிமையாளருக்கு அதாவது மேரியின் தந்தைக்கு
நான் செய்த காரியம் எப்போது
வேண்டுமானலும் தெரிய வரலாம் அப்புறம்
என்ன நடக்கும்
என்று கற்பனை செய்ய முடியவில்லை.
கல்யாணத்திற்க்கு
பிறகு கட்டுபாடுடனும் ஒழுக்கத்துடனும் இருந்திருக்க வேண்டும் ஆனால் நான் இனிமையாக
சென்று கொண்டிருந்த வாழ்க்கையை வெகுசுலபமாக கெடுத்துவிட்டேன் அதை நினக்கும்போதே மனம்
அஞ்சுகிறது இப்போதே
ஊரைவிட்டு ஒடிவிடலாம் என நினைத்தால் மனைவி
ஒத்துக்கொள்ள மறுக்கிறாள் என்
நிலமையைவிட மேரியின் நிலை மிக பரிதாபமாக
உள்ளது எப்போழுது என்ன செய்து கொள்வாள்
என தெரியவில்லை முன்பு
அவள் எவ்வளவு உற்சாகமாக இருப்பாள்
இப்போது கூனி குறுகி நடந்து
செல்கிறாள் அவளின் எதிர்காலத்தை நினைத்தால்
நான் தற்க்கொலை செய்து கொண்டு சாகலாம்
என தோன்றுகிறது என் இனிமையான வாழ்க்கையை
என் விளையாட்டுத்தனத்தால் நானே அழித்துக்கொண்டேன்.
ஊரில் உள்ள எல்லா நல்லவர்களின்
போன்களிலும் இப்போது நானும் மேரியும்
உறவுகொள்ளும் படம்தான் பரபரப்பாக ஒடுகிறது, மேரி
மைனர் பெண்ணாக இருந்தாலும் இருவரும்
விருப்பப்பட்டுதான் உறவு கொண்டோம் இது காதல் இல்லை
என இருவரும் உணர்ந்து இருந்தோம் நான்தான்
விளையாட்டுத் தனமாய் இருவரும் உறவு
கொள்வதை செல்போனில் படம் பிடித்தேன் அப்போழுதே
மேரி வேண்டாம் வேண்டாம் என தடுத்தாள்
நான்தான் அவளை
கட்டாயப்படுத்தி படம் பிடித்தேன் பிறகு
அழித்து விடலாம் என நினைத்தேன். எனோ
பிறகு அதனை அழிக்க மறந்துவிட்டேன்
ஒருநாள் கிணற்றில் நண்பர்களுடன் குளிக்கும்போது நண்பர்கள்
என் போனை எடுத்து தற்செயலாக
அந்த விடியோவை பார்த்துவிட்டனர் பின்னர் எனக்கு தெரியாமல்
அவர்கள் அதனை தங்கள் போனில்
எற்றி கொண்டனர் பிறகு
ஒவ்வொரு போனாக
அந்த விடியோ மாறி
கடைசியில் நெட்டிலும் விட்டுவிட்டனர்.
விடியோ
குறித்து மேரி குடும்பத்திற்க்கு மட்டும்
இன்னும் தெரியவில்லை மத்தபடி ஊரில்
அத்தனை உள்ள ஆம்பிள்ளையும் கூச்சமில்லாமல்
விடியோவை போனில்
வைத்துக்கொண்டு பார்க்கிறார்கள் மேரியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார்கள்
மேரியோ வெளியே நடமாடவே அஞ்சுகிறாள்.
மேரியின் தந்தைக்கு மட்டும் இது தெரிந்தால் என்ன செய்வார் என்று
தெரியவில்லை நான் என்னைப் பொருத்தவரை
எந்த ஒரு தண்டனையும் ஏற்று
கொள்ளத் தயாரக் இருக்கிறேன்
ஆனால் நான் என் குடும்பத்தையும்
எனக்குப் பிறக்கப் போகும் குழந்தையயும் நினைத்தால்
மனம் குடைகிறது.
எனக்கு
மேரியின் தந்தை
நம்பரில் இருந்து பல
முறை போன் வருகிறது
என்னை கடைக்கு வர சொல்லுகிறார்
வாடகை விசயமாக பேசஎனகூறுகிறார் . நான்
பயத்தின் காரணமாக போகவில்லை இதோ இப்போது ஒரு
புதிய நம்பரிலிருந்து போன்
கால் வருகிறது மேரிதான் பேசுகிறாள் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்க்கு வர சொல்லுகிறாள் நான்
அங்கு சென்றேன் ஆனால் அங்கு மேரியின்
உறவினர்கள் இருந்தனர் அவர்கள் வேகமாக ஓடி
வந்து என்னை பிடித்துகொண்டனர்
நான் கதற கதற என்
கையை இழுத்து அறிவாளால் நருக்கிறார்கள் நான் இதோ
என் இரத்தத்தை பார்த்துகொண்டே மயங்குகிறேன். எனக்கான தண்டனை கிடைத்து
விட்டது.
No comments:
Post a Comment