Sunday 22 June 2014

Story 23: Small winter

“Small winter”

மூத்தவளிடம், தங்கையை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்படி அவள் தாய் மரியா சொன்னதை லட்சியம் செய்யாமல், தன் தங்கை மதினாவைத் தாண்டி வெளிக்கதவை திறந்து ஓடிச் சென்றாள் மார்த்தா. மதினாவும் கையிலிருந்த ஸ்ட்ராபெரி பழங்களுடன் மார்த்தவைப் பின்தொடர்ந்து சென்றாள். நதியோரத்து மர நிழலில் முன்னமே அவர்களின் நண்பர்கள் குழுவாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். மார்த்தா அவர்களண்டையில் வந்ததும் மதினாவும் சில நொடிகளில் வந்து சேர்ந்தாள். ரயிலின் முதல் பெட்டிக்கும் கடைசிப் பெட்டிக்குமான தூர வித்தியாசம்தான் இருவருக்கும். ஆனால் "இன்றைக்கும் மார்த்தாதான் முதல்ல வந்தாள்ன்னு" மொத்த நண்பர்களும் கரங்களைத்தட்டி உற்சாகப்படுத்தினார்கள். மதினாவும் அதை எப்படி எடுத்துக் கொள்வதென்று தெரியாமல் புன்னகையுடன் கைதட்டினாள்.

6 முதல் 16 வயது நிரம்பியவர்களைக்கொண்ட பதிமூன்று நண்பர்களாலான குழுவது. குழுவின் உற்சாகப் பிணைப்பால் பெற்றோர்களும் இவர்களைப் பற்றி நிம்மதிகொண்டிருந்தார்கள். மார்த்தா தனக்கொத்த சம வயதுடைய ஆங்ஸ்டனிடம்தான் அதிக தோழமை உணர்வோடு பழகுவாள். அதிகத் தோழமை உணர்வென்பது வரைமுறையில்லாத நெருக்கம். ஆங்ஸ்டன் அருகில் அமர்வதும் அவன் உடைகளைப்பற்றியும், சிகையலங்காரம் பற்றியும் பொதுவில் பெருமையுடன் பேசிக்கொள்வாள். மதினாவுக்கும் ஆங்ஸ்டனைப் பிடிக்குமென்றாலும், பிடிப்பதற்கான காரணம் குழு ஆளுமை. எந்தக் குழந்தைக்கு எதிராகவும் கடுஞ் சொற்களை எறியமாட்டான்.  குழு மூத்தவன் என்பதற்கான தனித்தன்மை ஆங்ஸ்டனிடம் மிளிரும்.

தினமும் இவர்கள் இருவரும் மற்றும் குழு நண்பர்களும் அந்த நதிக்கரைக்கு வந்து விளையாடுவதும் பசி வந்ததும் வீட்டுக்குச் செல்வதுமாக பொழுது கழிந்துகொண்டிருந்தது. அதிக இரைச்சலில்லாமல் மேற்கிலிருந்து கிழக்காகப் பாயும் அகலமான நதியது. கரையோரத்தில் நாவல் மரங்களும், ஒலிவ மரங்களும், ஆல மரங்களும் அடர்ந்து, கீழ் கூடி மேல் விரிந்திருந்ததால் வௌவால்களும், காட்டுப் பறவைகளும் கூச்சலிடும் சப்தம் நதியோட்டத்தை விட பெரிதாகக் கேட்டுக்கொண்டிருக்கும். மண்ணிற்குப் பாதுகாப்பாக அடர் பச்சை நிற புற்களும், காய்ந்தும் காயாத சருகுகளும், மேல்விரிப்பாக பனிச் சீவல்கள் பொழிந்து பரவியிருந்தது. குளிர்காலத்திலிருந்து வசந்தகாலத்திற்கு நகரும் மத்தியில், இந்த நதிக்கரைச் சூழல் குழந்தைகளுக்கென்று பிரத்தியேகமான விளையாட்டுக் கூடமாக மாறியிருந்தது. நதியிலிருந்து நீர் அள்ளிக்கொண்டுவந்து பிள்ளைகள் தங்கள் நாய் குட்டிகளுக்கு இறைப்பார்கள். ஆங்ஸ்டன் மீன் பிடித்துத் தருவான். தூண்டிலில் துடித்துக்கொண்டிருக்கும் மீனை வெளியில் எடுப்பதற்கு குழந்தைகள் முயற்சி செய்யும். சட சடவென துடித்துக் குலுங்கும் உடலைக் கண்டதும் சிறுமிகள் கூச்சலிட்டுக்கொண்டு பயந்து ஓடிவிடுவார்கள். ஆண் பிள்ளைகள் மீனைத் தொடாமல் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

இடது உள்ளங்கையில் கொத்தாகப் பொத்தி, தலையை இரண்டு விரல்களால் நெருக்கிப் பிடித்து வலது கையால் தொண்டைக்குள் சிக்கியிருக்கும் தூண்டில் முள்ளை பின்னோக்கிப் பிய்த்து இழுத்து கையில் உள்ள மீனை தரையில் விசிரியடிப்பதில் மார்த்தா தேர்ச்சி பெற்றவள். பறப்பதும், பூமியை அடைய முயற்சிப்பதுமாக துடிக்கும் மீனைக் கண்டு பிள்ளைகள் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள். ஆங்ஸ்டன் தூண்டிலிடுகிரான் என்பதற்காகவே மார்த்தா இப்படி மீனை எடுத்து விசிரியடித்து குழந்தைகளின் கவன ஈர்ப்பைப் பெற பயிற்சி எடுத்திருக்கிறாள். பிறகு "மார்த்தா அக்காவும் ஆங்ஸ்டனண்ணாவும் சேர்ந்தால் தங்களுக்கு மீன் வேடிக்கைக் காட்டுவார்கள்" என்று குழந்தைகள் பேசுவதை மார்த்தா பெருமையோடு கேட்டுக்கொள்வாள். இரவில் "இருவரும் சேர்ந்து" என்று மட்டும், அந்த வார்த்தை அவளுக்குள் தங்கி  நீண்டநேரம் அதை அசை போட்டுக்கொண்டிருப்பாள்.

தன் அக்கா அப்படி மீனை தைரியமாக தூண்டிலிலிருந்து எடுக்க பழக்கப்பட்டிருந்தாலும் மதினாவுக்கு அது பாவம் எனப் பட்டது. அக்காவிடம் இது பற்றி சொன்னாலும் ஏற்க மாட்டாள். இதுவரை மதினா சொல்லிய எதையுமே மார்த்தா கேட்டுக்கொண்டதில்லை. அதற்கு பதிலுரைப்பதுமில்லை. எல்லோரும் விட்டுச் சென்ற இறந்த மீனை மதினா எடுத்துக்கொள்வாள். அதன் தொண்டையிலிருந்து வழிந்திருக்கும் இரத்தத்தை ஒரு விரலால் துடைத்து கண்கள் வெளுத்திருக்கும் மீனுடன் சென்று நதிக்கரையில் அமர்ந்துகொள்வாள். சிறிது நீரைக் கைகளில் அள்ளி மீனைக் கழுவி இறந்த மீனுடன் ஓடிச்சென்று தனது பெரிய பூனைக்கு உணவளித்துவிடுவாள். மீனைக் கவ்விக் கொண்ட பூனையைப் பார்த்து கலங்கி நிற்ப்பாள்.

அந்தி சாயும் வேளையில் ஒருநாள் மீனுடன் ஓடும் மாதினாவை ஆங்ஸ்டன் கண்டுகொண்டான். அடுத்தநாள் எல்லா குழந்தைகளும் வீடு திரும்பும்போது மதினாவிடம் அதுபற்றிக் கேட்டான். ஆங்ஸ்டனின் கைகளைப் பற்றிக்கொண்டு "இது மாதிரி மீனைக் கொன்று நாம் விளையாடுவதில் தனக்கு விருப்பமில்லையென்றும், அந்தச் சிறிய உயிர் சாகும் தருவாயில் பூமிக்கும், வானத்திற்கும் துள்ளித் துடிப்பதை தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லையென்றும் கண்ணீருடன் ஆங்ஸ்டனிடம் சொன்னாள்"
ஆங்ஸ்டனுக்கும் தன் தவறை உணர்த்திய மதினாவின் சொற்கள் மீது மரியாதை வந்தது. "இதை உயிர்ப் பலியாக யாருமே உணரவில்லை மதினா, எல்லாவற்றையுமே விளையாட்டாக நாம் செய்துகொண்டிருக்கும் பருவம் மாறிவிட்டதை உன் பேச்சிலிருந்து புரிந்து கொள்கிறேன்" என்றான். இனி தான் ஒரு நாளும் மீன்களை வதைப்பதில்லை என்று அவளுக்கு நன்றி கூறினான். மதினாவுக்கு அன்றைய கனவில் தானும் ஆங்ஸ்டனும் நதிக்கரையில் அமர்ந்து மீன்களுக்கு உணவளிப்பதுபோல காட்சிகள் தோன்றியது. ஆங்ஸ்டன் தன்னைவிட அதிகமாக மீன்களுக்கு  உணவூட்டியது போன்றும், விசேஷமாக சில மீன்கள் தங்களது நன்றியை  ஆங்ஸ்டனிடம் தெரிவித்தது போன்றும் தொடர்ச்சியாக காட்சிகள் நீண்டது. மறுபுறம் படுத்திருந்த மார்த்தா கனவில் சிரித்துக்கொண்டிருந்தாள்.

மறுநாள் நண்பர்கள் கூடலில் நாவல் மரத்துக் குச்சியை இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு "தான் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதாகவும், விருப்பமுள்ளவர்கள் ஏறிக்கொள்ளுங்கள்என்று சொல்லிக்கொண்டே 8 வயது நிரம்பிய லூசியாவை தூக்கிக்கொண்டு மரத்தைச் சுற்றி கீங்...கீங் என்று ஒலியெழுப்பி ஓடிக்கொண்டிருந்தான் ஜெனே. ஆங்ஸ்டனிடம் குழந்தைகள் அனைவரும் மீன் பிடித்துத் தருமாறு முறையிட்டார்கள். மதினாவிடமும் "அக்கா நீங்கள் மீனை லாவகமாக எடுப்பதற்கு கற்றுக் கொடுங்கள்" என்று கூறினார்கள்.

ஆங்ஸ்டன் தனக்குப் பிடித்தமான 6 வயது சில்வியாவை கைகளில் தூக்கிக்கொண்டான். அவளிடம் "இனி தான் ஒருநாளும் விளையாட்டாக மீன் பிடிப்பதில்லை என்றும், அதையே நம் நண்பர்கள் அனைவரும் செய்வோம் என்றும் கூறினான். வட்டமாக நின்றிருந்த குழுவிலிருந்து உள் வட்டத்திற்கு வந்து காரணம் கேட்டாள் மார்த்தா. உன் தங்கை நேற்று மாலை உயிர்வதை பற்றி என்னுடன் பேசியது தனக்கு நியாயமாகப்பட்டதாகச் சொன்னான். குழு கலையும்போது மார்த்தா ஆங்ஸ்டனை சிறிதுநேரம் தன்னுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டாள். முதல் முறையாக ஆங்ஸ்டனுடன் மனம்விட்டுப் பேசினாள். தன் காதலைச் சொன்னாள். அவனை இறுகக் கட்டிக்கொண்டாள். அவன் மேலாடைக் குள்ளாக தன் கைகளைச் செலுத்தி மார்பைப் பற்றினாள். நதிநீர் இடம்பெயரும் சப்தமும், கூடடைந்த பறவைகளின் கொஞ்சல் ஒலிகளும் அந்தியின் அழகை மேலும் கிளர்சியாக்கியது. ஆங்ஸ்டன் மார்த்தாவின் நெற்றியில் முத்தமிட்டான். மார்த்தா கண்களை மூடிக்கொண்டு தனது வலது கையை அவன் தொடைகளுக்கிடையில் கொண்டு சென்று அழுத்தமாகத் தடவினாள். மதுவருந்திய தனது தாய், பின்னிரவில் வீட்டுக்கு வரும் தனது தந்தையிடம் இதுமாதிரி நடந்து கொள்வதை பலமுறை பார்த்திருக்கிறாள். அவர்கள் செய்வதை பார்க்கவேண்டியே அவளும் பல இரவுகள் விழித்துக்கொண்டிருந்திருக்கிறாள். சில நாட்கள் அவள் தாய் முன்னமே உறங்கியதைக்கண்டு தன் தந்தையைப் போலவே அவளும் கோபத்துடன் உறங்கச் சென்றிருக்கிறாள்.

ஆங்ஸ்டனும், மார்த்தாவும் தங்கள் தலைக்கு மேலே அங்குமிங்கும் பறந்து திரியும் வௌவால்களால் திகைத்துப் பிரிந்து மீண்டும் நெருக்கமாகக் கட்டிக்கொண்டார்கள். நதிப் படுகையில் குடியிருக்கும் தவளைகளின் சப்தம் மாறி மாறி எதிரொலித்தது. ஆங்ஸ்டன் கைகளின் மூர்க்கத்தால் மார்த்தவுக்கு உடம்பெல்லாம் வலித்தது. உண்மையில் கூடல் இத்தனை வலி கொண்டது என்று அவள் எண்ணியிருக்கவில்லை. தொடையிடுக்கில் ஆங்ஸ்டன் இயங்க ஆரம்பித்ததும் தலையைத் தூக்கி கதறி அழ ஆரம்பித்தாள். மார்த்தாவின் சிறிய உதடுகளை தனது பருத்த விரல்களால் பொத்திக்கொண்டு மார்த்தா...மார்த்தா...மார்த்தா...மார்த்தா என்று அவள் பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே துரிதமாக இயங்கினான். அது அவளுக்கு திருப்திதந்து, வலிகளைக் கடந்து உணர்சிகளை உணர்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. தலையைக் கீழிறக்கி ஆங்ஸ்டனைப் பார்த்து அவன் இயக்கத்தை வரவேற்று சன்னமாக சிரிக்க ஆரம்பித்ததும் ஆங்ஸ்டன் அவளை அணைத்துக்கொண்டு புற்தரையில் சரிந்தான்.

உறக்கம் பிடிக்காமல் தன்னைப் பற்றியும் தன் நல்ல கருத்துக்களைப் பற்றியும் ஆங்ஸ்டன், நண்பர்களுடன் பொதுவில் சொன்னது பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தாள் மதினா. தன் தந்தையை விடவும் மிகச் சிறந்த ஆண்மகனாக ஆங்ஸ்டன் அவள் மனதில் உருவகம் அடையத் தொடங்கியிருந்தான்.

புணர்ச்சி முடிந்த பின்னிரவில் மார்த்தா வலியில் முனங்கினாள். எழுந்து உட்கார்ந்துகொண்டாள். மீண்டும் படுத்தாள். எழுந்து சென்று அன்றைக்கும் அவர்கள் தாய் - தந்தையர் கூடுவதை வேடிக்கைப்பார்த்தாள். அவள் தொடையிடுக்கில் வலி முற்றிலுமாகக் குறைந்து மீண்டும் அவள் கூடலுக்குத் தாயார்படுத்தப்பட்டிருப்பதை எண்ணி குதுகலமடைந்தாள்.

குளிர்காலம் முடிய இன்னும் இரண்டு நாட்கள்தான் இருந்தது. குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் செல்லவேண்டும். அது பற்றி எந்த பிரக்ஞையுமில்லாமல் இல்லாமல் இத்தனை நாள் விடுமுறையைக் கொண்டாடியிருக்கிறார்கள். ஆங்ஸ்டன் மேல் படிப்பிற்கு வேறு இடத்திற்கு நகரப் போகிறான். மார்த்தாவும் மதினாவும் அதே ஊரில்தான் இன்னும் சிலகாலம் படிக்க வேண்டியிருக்கிறது. குழுவில் அந்த ஊரில் தொடர்ந்து கல்விக்காக வசிக்கப்போவது ஆறு பேர்தான்.

மறுநாள் நதிக்கரையோரம் பகலைக் கடந்தும், பசியெடுத்தும் நண்பர்கள் யாரும் சாப்பிடக் கிளம்பவில்லை. குழுவாக அமர்ந்து பிரியப்போகிறோம் என்ற துயரத்துடன் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தார்கள். சில்வியாவை ஆங்ஸ்டன் தனது மடியில் வைத்திருந்தான். அவளுக்கு விஷயம் பெரிதாகப் புரியவில்லையென்றாலும் ஹென்றி அழுவதைப் பார்த்து அவளும் ஏங்கி ஏங்கி அழுது வடிந்துகொண்டிருந்தாள். பார்க்கரும், ரைம்போவும் மார்த்தாவின் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டார்கள். தெரேசாவும், சகரியாவும் மதினாவின் மடியில் படுத்திருந்தார்கள்.

மார்த்தாவும், மதினாவும் ஆங்ஸ்டனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். மதினாவுக்கு ஆங்ஸ்டனிடம் பிரியத்தை சொல்வதை விட தன் மனதிற்குள்ளே அவனை காதலிப்பதுதான் பிடித்திருந்தது. அது பற்றி எதுவும் அவனிடம் சொல்லிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

மார்த்தாளுக்கோ எல்லோருக்கும் பொதுவில் ஆங்ஸ்டனே தங்கள் காதல் பற்றி சொல்லவேண்டும். அதுமுதல் நண்பர்கள் அனைவரும் தங்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்வதோடு, சிறிதாக பொறாமை பட்டுக்கொண்டாலும் நான்றாக இருக்கும் என்று எண்ணினாள்.

சிறிது நேரத்தில் ஆங்ஸ்டன், நண்பர்கள் அனைவரும் அடுத்த வருடம் தாங்கள் சந்திக்கும் போது ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து பேசுமாறு அவர்கள் மனநிலையை மாற்றிவிட்டிருந்தான்.  பெல்லாதான் கார் ஓட்டப் பயிற்சி பெற்று விடுவேனென்றும், உங்கள் அனைவரையும் நகர எல்லையத் தாண்டியிருக்கும் கேளிக்கை விடுதியொன்றுக்கு அழைத்துச் செல்வேன்என்றும் கூறினாள். சில்வியாதான் இனி சுகர்கேண்டிகளுக்காக அழுது ஆர்ப்பாட்டம் பண்ணமாட்டேன்என்று மழலைக் குரலில் சொன்னாள். எல்லோரும் சிரித்து விட்டார்கள். ஜெனேஇந்தக் குச்சிக்குப் பதிலாக அடுத்த வருடம் தன்னிடம் நிஜமான இருசக்கர வாகனம் இருக்குமென்று உறுதியுடன் சொன்னான்”. ஆங்ஸ்டன் அவனுக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தான். குழு கலைந்ததும்  மதினாவை அழைத்தாள் மார்த்தா. நாம் இருவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருக்கலாம் என்று மீண்டும் அவர்களிருவர் மட்டும் நதிக்கரைக்கு அருகில் சென்று அமர்ந்துகொண்டார்கள்.

மதினா நதியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று அலறிக்கொண்டு அவளைப் பிடித்து நதியில் தள்ளினாள் மார்த்தா. அலறல் சத்தத்தில் பறவைகள் எல்லா திசைகளிலும் சிதறிப் பறந்து. நீரோட்டத்தின் போக்கில் இருமுறை மூழ்கி, இருமுறை மேலெழும்பி, நதிநீர் இழுத்துச் செல்லும் மதினாவைத் தன் கண்களிலிலிருந்து மறையும்வரை பார்த்துக்கொண்டேயிருந்தாள் மார்த்தா. தான் செய்தது சரி என்றாலும் அதை விளக்குவதற்கு பொருத்தமான சாக்கு கிடைக்காமல் குற்ற உணர்ச்சியில் பீடிக்கப்பட்டு நதியோட்டத்தையே வெறித்துக்கொண்டிருந்தாள். உறக்கத்தில் மதினா ஆங்ஸ்டனின் பெயர் சொல்லி பிதற்றிக்கொண்டிருந்ததாலும், தனக்குப் பிடித்த மீன் பிடிக்கும் வேலையை செய்யவிடாமல் ஆங்ஸ்டனைத் தடுத்ததாலும் மதினாவுக்கு இந்த தண்டனை சரிதான் என்று திருப்திபட்டுக்கொண்டாள். அங்கிருந்து கிளம்பி நகர வீதிக்குள் நுழையும்போது ஸ்ட்ராபெரி பழங்களை விற்றுக்கொண்டிருக்கும் கிழவன் எதிரில் வந்துகொண்டிருந்தான். அவனை கவனிக்காதாவாறு ஓடிச் சென்று தனது வீட்டையடைந்து விடலாம் என்று கால்களை விரைவுபடுத்தத் தொடங்கினாள். அதற்குள் மார்த்தாளின் அருகில் வந்துவிட்ட கிழவன் வசந்தகாலம் தொடங்கப்போவதற்கான வாழ்த்துக்களை அவளிடம் தெரிவித்துவிட்டு அவளைக் கடந்து சென்றான். தலையிலும், தோள்களிலும் பொழிந்திருந்த பனிச் சீவல்களை துடைத்துக்கொண்டு வீட்டில் என்ன காரணம் சொல்லலாம் என்பதை யூகிக்க முடியாமல் மனதால் அலைக்கழிந்து கொண்டே வீடடைந்தாள். கால் விரல்களால் பூமியை அழுந்தத் தள்ளி, முகத்தைத் துடைத்துக்கொண்டு மெதுவாக முகப்பை நோக்கி நகர்ந்தாள். வாசலில் நின்ற பூனை மெல்லிய குரலெழுப்பி வீட்டினுள் சென்று மறைந்தது.

அன்றைக்கு அவள் தாய் மாலையில் இருந்தே நிறைய குடித்து எழும்ப முடியாமல் சோபாவுக்கு அருகில் தரையில் கால்களை அகலப் பரப்பி உறங்கிவிட்டிருந்தாள். மீதம் இருந்த பிராந்திக் குடுவையைக் கடந்து மார்த்தா தன் அறைக்குச் சென்று கம்பளியால் உடலைச் சுற்றி ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு கேள்விகளுடன் வரும் தனது தாயை எப்படி எதிர்கொள்வதென்று தெரியாமல் உறங்கிப்போனாள்.

காலையில் விழித்தபோது விருந்துக்குச் செல்வது போல மிடுக்கான உடையணிந்து, கௌரவமான சிகையலங்காரத்துடன், கையுறைகள் அணிந்து நிம்மதியாக அவளருகில் உறங்கிக்கொண்டிருந்தாள் மதினா.


No comments:

Post a Comment