Tuesday 9 July 2013

Story-1 குழந்தை தொழிலாளன் உருவாக்க படுகிறான்

குழந்தை தொழிலாளன்  உருவாக்க படுகிறான்
பள்ளிக்கூடம் தான் போகிட்டு இருந்தேன்
நல்லா தான் படிச்சுக்கிட்டும் இருந்தேன்
பத்தாவதுல நான் தான் எங்க பள்ளிக்கூடத்தலேயே முதல் மார்க்கு
இதானால என் வாத்தியார் என்னை பாராட்ட.., என் அப்பாவும் அம்மாவும் என்னை சீராட்ட  சந்தோசமா தான் போய்டு இருந்திச்சு எங்க வாழ்கை

இந்த நேரத்துல்ல
கூடா சவகாசம் வச்சு எங்க அப்பா குடிக்க ஆரம்பிக்க குடிச்சிட்டு வந்து எங்க அம்மாவ அடிக்க ஆரம்பிக்க அதை நான் தினமும் தடுக்க ஆரம்பிக்க இப்படி ஆரம்பிச்சு ஆரம்பிச்சே முடிஞ்சு போச்சு எங்க சந்தோஷ வாழ்கை 

எங்க வீட்டுல மூனு வேளை கஞ்சி ஒரு வேளை கஞ்சி ஆச்சு
சில நாள் அந்த ஒரு வேளை கஞ்சி கூட இல்லாம வெறும் வயிரா காஞ்சு போச்சு

இனி
எங்க அப்பாட குடிக்க காசு இல்லை
எங்க அம்மாட கஞ்சி வடிக்க காசு இல்லை

எனவே
புத்தக பையை தூக்கி பரண்ல போட்டேன்
சிலேட் குச்சியை தூக்கி போட்டுட்டு தீ குச்சி செஞ்சேன்

வருஷம் பத்து உருண்டு ஓடி போச்சு
கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தை குட்டியும் ஆகி போச்சு
யூனியன் லீடர் ஆகி என் தரமும் கொஞ்சம் உயர்ந்து போச்சு 

புது மேனேஜர் வரார்னு மாலையோட காத்து இருந்தேன்
கோட் சூட்டுல டிப் டாப்ப இறங்குனவர கொஞ்சம் உத்து பாத்தேன்

"அட , நான் பத்தாவதுல முதல் மார்க் எடுத்தப்ப எனக்கு அடுத்து ரெண்டாவது மார்க் எடுத்த மாரிமுத்து"

No comments:

Post a Comment