Wednesday 31 July 2013

Story-91 குற்றவாளிகள்



குற்றவாளிகள்....


இரண்டு எழுத்தாளர்கள்.தென் இந்தியாவின்,ஏன் இந்தியாவே தங்கள் பின்னால் தான் நடை போடுகிறது என்ற நினைப்பு இருவருக்குமே.
ஆனால் இருவருமே இந்த சமூகம் தங்களை மதிக்க வில்லை என்று புலம்பி தள்ளுவார்கள். 

ஒருவர் திரு மோகன ஜெய்..மற்றொருவர் திரு.ரவிதேஜா 

இருவருமே ஒரே மாதிரியான அரசாங்க வேலை பார்த்தவர்கள்.தவிர 30 வருடத்திருக்கு மேல் எழுதிக்கொண்டிருப்பவர்கள்.
ஆரம்பத்தில் நண்பர்களாக பழகினர் இருவரும்.புகழ் போதை ஏற ஏற இருவருக்கும் நட்பில் விரிசல் விழ ஆரம்பித்தது.
விரிசல் மெல்ல மெல்ல மலையளவு ஆகி இருவரும் ஒருவருக்கு ஒருவர் இணையத்தில் தூற்றி கொள்ள ஆரம்பித்தனர்.


(
யாரோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் நம் காதில் விழ வில்லை) 


இருவருக்குமே தொண்டர் அடிப்பொடிகள் ஒரு சில பேர் இருந்தனர்.இவர்கள் இணையத்தில் அடித்துக்கொவதை விட
விசிலடிச்சான் குஞ்சுகள் அடித்துக்கொள்வது பயங்கர வேடிக்கையாக இருக்கும்...படிக்கும் மற்றவர்களுக்கும் நன்றாக பொழுது போகும்.
இருவரும் அங்க போகணும்,இங்க போகனும்ன்னு பதிவு போட்டா போதும்.ஜெய் ஆட்கள் ரவியை இது ஒரு கேடா
என்று கிண்டல் அடிப்பதும்,,ரவி ஆட்கள் ஜெய்ஐ கிடல் அடிப்பதும்.இணையத்தில் ரத்த ஆறு ஓடுவது போல தோணும்


(
யாரோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.இப்போதும் நம் காதில் விழ வில்லை) 

இப்படி எல்லா நாளும் மிக பெரிய காமெடியா இணையத்தில் இருப்பவர்களுக்கு பொழுது போக்காய்
சென்று கொண்டிருந்த போது முகபுத்தகத்தில் இருவருக்குமே வாசகர் வட்டம் ஆரம்பிக்க பட்டது.

இந்த இரண்டு பேரின் நடவடிக்கை,எழுத்தால் எரிச்சல் அடைந்த பலர் ஒன்று கூடி
விமாசகர் வட்டம் ஆரம்பித்தனர்.

இந்த இரண்டு எழுத்தாளர்களின் ஆதரவாளர்கள் சந்தித்துக்கொண்டால் அங்கு அடிதடி ரகளைதான்.ரசிகர்கள் இவ்வாறு அடித்துக்கொள்வது
இணையத்தில் பரவி பிறகு நாளிதழ்களில் பரவி,பின் டிவி மீடியாக்களில் செய்தி வர ஆரம்பித்தது.

(
யாரோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.இப்போதும் நம் காதில் விழ வில்லை)



ரசிகர்களின் இந்த வெறித்தனமான ஆர்வத்தை இருவருமே கண்டிக்கவில்லை.மாறாக இருவருமே
ஒருவரி ஒருவர் மேலும் தூற்ற ஆரம்பித்தனர்.இவர்கள் இங்கு இணையத்தில் அடித்துக்கொல்லுவதை கண்ட மற்ற வாசகர்கள்
அப்படி என்னதான் இருவரும் எழுதுகிறார்கள் என்று பொதுமக்களும் அவர்களின் நூல்களை தேடி வாங்கி படிக்க ஆரம்பித்தனர்.நல்ல விற்பனை...
இருவரும் சொந்த வீடு,ஆடம்பர வாழ்க்கை என்று மாற தொடங்கினர்.ஆனால் இருவரின் ரசிக குஞ்சுகள் தான் பாவம்

ஓடி ஓடி உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் பாதியை இவர்களுக்காகவே செலவு செய்ய ஆரம்பித்தனர்.


(
யாரோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.இப்போதும் நம் காதில் விழ வில்லை) 


இருவருக்கும் நல்ல வருமானம். இப்போது எல்லாம் அடிக்கடி இருவரும் சுற்றுலா கிளம்பிவிடுகின்றனர்.
இந்த உலகத்தில் பார்க்காத இடமே இருக்க கூடாதுன்னு இருவரும் மாறி மாறி டூர் கிளம்பிவிடுவார்கள்.
இவர்கள் உலகம் சுற்ற வாசக வட்ட குஞ்சுகள் தீயா வேலை செய்வார்கள்.

ஆனால் பதிவில்,கட்டுரைகளில் இருவரும் விளிம்பு நிலை மனிதர்களாகவும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாகவும்
சொல்லி புலம்புவார்கள்.வீட்டில் வெள்ளி தட்டில் சாப்பிட்டுக்கொண்டே.கிட்டத்தட்ட இருவரின் செய்திகள் இன்று வராதா
அனைவரும் ஏங்க ஆரம்பித்து விட்டனர்.பத்தாததற்க்கு மீடியாக்கள் வேறு எண்ணை ஊற்றியது.இந்த இருவருக்குள் யார் பெரியவர் என்ற
சண்டையை ஐநா சபையாலும் தீர்க்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு சென்று விட்டது.


யாரோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் இப்போது குரல் மிக லேசாக கேக்க தொடங்குகிறது.வாருங்கள் நெருங்கி போய் கேப்போம்..


"-----------------------------------------"

"------------------------------------------------------------"

"________________________________________"

"________________________________________________"

"________________________________________________________"

"_________________________________________________________________"

"__________________________________________________________________________"


மோகன ஜெய்::"எப்படியா எல்லாம் நல்ல படியா போய்கிட்டு இருக்குல்ல "

ரவி தேஜா :: "ஆமா ஜெய் அருமையா போக்கிட்டு இருக்கு."நாம இரண்டு பேரும் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டோம்.
                         
இப்ப எப்படி வாழுறோம்?எல்லாம் நாம் போட்ட திட்டம்தான்.இதை இப்படியே மெய்டன் பண்ணுவோம்.
                         
ஆனா ஒன்னு நாம இறந்தாலும் சரி நமக்கு பின்னாடி வர சந்ததியினருக்கு கூட நம்மளோட இந்த ரகசிய திட்டம் தெரிய கூடாது.
                         
அப்பத்தான் நம்ம பசங்களும் வர ராயல்டில இப்படி சுகமா ஆடம்பரமா வாழமுடியும்."




                            
   ""சியர்ஸ்....சியர்ஸ்...""

No comments:

Post a Comment