Tuesday, 9 July 2013

Story-2 காவல்துறையும் விடுமுறையும்

காவல்துறையும் விடுமுறையும் 
பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்லும் களிப்பில் பிரபுவும் , அஜையும்  , அப்பா வின் வருகை நோக்கி ரயில் பயணத்தை எண்ணியும் ஆர்வமாக காணப்பட்டனர் அவர்களின் அம்மா வும்  துணி மணிகளையும் , பயணத்திற்கு தேவையான உணவு களையும்  தயார்  செய்துகொண்டு இருந்தார்கள் . 

மக்கள் நல திட்டத்தின் விழாவிற்கு முதல்வரின் வருகை நோக்கி காத்து  கொண்டு இருந்தார் இளங்கோ . ஆனால் அவரின் நினைப்பு முழுவதும் பொங்கல் விழாவிற்கு பசங்களை ஊருக்கு அழைத்து செல்வதில்லையே இருந்தது .

பிற்பகலில் நிறைவு பெறவேண்டிய நிகழ்ச்சி , என்  ஆட்சியுள் மக்கள் சந்தோசமாக இருகின்றனர் ஏமாற்றம் அளிக்காத அரசு என்று இரவு 11 மணிக்கு நிறைபெற்றது . சோர்வுடன் ஓரு  மணிக்கு இளங்கோ வீடு திரும்பினர் , அழைப்பு மணியின் ஓசை கேட்டதும் அஜய் தூக்கத்தில் இருந்து ஓடி போய் கதவை திறந்தான் , போங்கப்பா உங்க கூட நான் சண்டை ரயில் ல போலாம்னு ஆசை யா இருந்தேன் என்று சொல்ல , இளங்கோ அடுத்த வருஷம் நம்ப பொங்கலுக்கு 5 நாட்கள் போவோம் இந்த வருஷம் நம்ப வீட்ல இருப்போம் என்று  சமாதானம் கூற பிரபு அப்பா சூழ்நிலை புரிந்துகொண்டு அப்பா வங்கி கொண்ட பலகாரத்தை திங்க தொடங்கினான் , அவன் அம்மாவோ விடுஞ்சு தின்னு என்று கூற பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டார் இளங்கோ . 

சரி நேரம் ஆகுது படுப்போம்  , சட்டை எல்லாம் உப்பு பூத்து இருக்கு மாத்துங்க சாப்பாடு எடுத்து வைக்குறேன் சாப்டலாம் என்று அம்மா கூறினாள்  .  நாளைக்கு 6 மணிக்கு எல்லாம் போகணும் டிரஸ் ரெடி யா இருக்கா ??. அயன் பணியாச்சு  பட்டன் மட்டும் போடணும் என்று இளங்கோக்கு  அவள் பதில் கூர  உடனே அஜய் அம்மா நான் பட்டன் போடுறேன் என்று கூறி காக்கி சட்டைக்கு பட்டன் பூட்டி ஹங்கர் ல மாட்டினான் .

அப்பா நானும் நாளைக்கு உங்கள மாதிரி போலீஸ் ஆகி Bulletல போவேன் பா !!!!  அதற்கு இளங்கோ , நீ கலெக்டர் அகனும் பா  அதுக்கு நல்ல  படிக்கணும்  சரியா ,  கலெக்டர் ஆனா தான் நம்ப ஊருகே பெருமை,  நீ  எந்த ஊருக்கு போறியோ அந்த ஊர்ல போலீஸ் லாம் பண்டோஸ் க்கு  வருவாங்க பொங்கல் க்கு எல்லாம் நம்ப flightலேயே ஊருக்கு போலாம் என்று கூற 

அஜய் - நீங்க கலெக்டர்  ராகி   இருந்த நம்ப பொங்கல் க்கு போய் இருக்கலாம்ல  !!!! ஏன் பா போலீஸ் ஆனிங்க தாத்தா  பேச்ச நீங்க கேட்க மடிங்கலா  ???

No comments:

Post a Comment