Tuesday 30 July 2013

Story-76 பணம்=உயிர்?



பணம்=உயிர்?

சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி வளாகம், கலந்தாய்வு தினம். கலந்தாய்வுக்கு பெற்றோர்களுடன் வந்தவர்கள் அனைவரும் பதைபதைப்பில் இருக்கின்றனர். அவர்களுள் நமது கதை நாயகன் ஷ்யாமும் ஒருவன். ஷ்யாம் - மருத்துவராக ஆசைப்படும் துடிப்புமிக்க, சமுதாய நலனில் அக்கறை கொண்டதோர் இளைஞன். அப்பா - தியாகராஜன் , நேர்மையான அரசு ஊழியர்; அம்மா - சிவகாமி, வீட்டை நிர்வகிப்பவர். தனது முறைக்காகக் காத்திருந்த நேரத்தில், தான் இந்த இடத்தில் நிற்பதற்காகக் கடந்து வந்த பாதையை நினைவு கூறுகிறான்.


+2
தேர்வு முடிவுகள் வெளியான நேரம்.  அப்பா அம்மா நான் 1156 மார்க் எடுத்து பாஸ் ஆகிட்டேன்...............
எவ்வளவு கட்-ஆப் டா. 198.25 பா . நல்ல மார்க் டா தங்கம் இரு பாயாசம் செஞ்சு கொண்டு வரேன். அம்மானா அம்மாதான்.அப்பா நான் மெடிக்கல் கவுன்சிலிங்கு அப்ளை பண்ணிருக்கேன்பா . சரி டா இன்ஜினியரிங் கவுன்சிலிங்க் அப்ளை பண்ணிருக்கியா. இல்ல பா. ஏன்டா அப்ளை பண்ணுடா. எதுக்குபா. ஒரு வேள மெடிக்கல் கெடைக்கலனா என்ன பண்ணுறதுடா அதுக்கு தான் சொல்றேன் எதுக்கும் அப்ளை பண்ணிவை டா . சரிப்பா அப்ளை பண்றேன்.டேய் ஷ்யாம் இங்க வா டா. என்னப்பா. மெடிக்கல் படிக்க நிறைய செலவாகும்ல. ஆமாம்பா ஆனா கவர்மண்ட் காலேஜ்ல படிச்சா கம்மிய தான்பா செலவாகும் என் மார்க்குக்கு கவர்மண்ட் காலேஜ் கிடைச்சுரும்பா. சரி டா கவர்மண்ட் காலேஜ்ல கிடைச்சா தான் டா அப்பாவால பீஸ் கட்ட முடியும் இல்லாட்டி நீ இன்ஜினியரிங் தான்டா படிக்கணும் சரியா. சரிப்பா , என்றான் ஷ்யாம் வருத்தத்துடன்.

எப்படியோ அப்பாவும் அம்மாவும் கூட்டிட்டு வந்துட்டாங்க கவுன்சிலிங்க்கு, உண்மைதானா என்று தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டான். ஆனால் ஷ்யாமின் துரதிர்ஷ்டம் அவனுக்கு கவர்மண்ட்  காலேஜ் கிடைக்கவில்லை . வேறு வழி இன்றி இன்ஜினியரிங் கவுன்சிலிங் சென்றான். இன்ஜினியரிங்கில் அவன் 199.25 கட்-ஆப் வைத்திருந்தான். கவர்மண்ட்டின் அண்ணா பல்கலைகழகத்திலேயே மெக்கானிக்கல் பிரிவில் இடம் கிடைத்தது.  வீட்டு நிலைமையை மனதில் கொண்டு நன்றாகப் படித்தான். வளாகத் தேர்விலேயே நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தது. 

ஷ்யாம்.......... என்னம்மா????  இந்த போட்டோவ பாருடா.  யாரும்மா இது ? உனக்கு புடிச்சுருகாடா? ம்ம்ம் பாக்க நல்லா இருக்கா மா. இந்த பொண்ண தான் உனக்கு பாத்துருக்கோம்டா உனக்கு புடிச்சுருக்கா?? அம்மா அது வந்து..... என்னடா இழுக்குற என்னடா எதாச்சு லவ்வாடா?? ம்ம்ம்ம் ஆமாம் மா......, என்றான் ஷ்யாம் தலையைக் குனிந்து கொண்டே. என்னடா சொல்ற.. ஆமாம் மா என் கூட வேல பாக்குற ஷ்யாமாவும் நானும்  லவ் பண்றோம் மா நீ தான் மா அப்பா கிட்ட சொல்லி சேர்த்து வைக்கணும் ப்ளிஸ் மா. டேய்ய் உங்க அப்பா ஒத்துப்பாறா டா எனக்கு பயமா இருக்குடா.. ப்ளிஸ் மா. சரி டா பேசிப் பாக்றேன். அம்மானா அம்மா தான்.... சிவகாமி அம்மாவின் முயற்சியால் இரண்டு குடும்பத்தின் சம்மதத்தோடு ஷ்யாம்-ஷ்யாமா தம்பதி ஆகினர்..

ஷ்யாம்-ஷ்யாமாவின் அன்புக்குப் பரிசாய் இரட்டையர்களான சத்யன்,சத்யா பிறந்தனர். நாட்கள் ஓடியது. சத்யன்,சத்யா பள்ளிக்குச் செல்லத் தொடங்கினர். இருவரின் குறும்புகளாலும் வீடே அமர்க்களப்பட்டது. சத்யனும் சத்யாவும் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது சத்யாவுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்து கொண்டிருந்தது. ஷ்யாமுடன் பள்ளியில் படித்து, தற்போது டாக்டராகி தனியாக கிளினிக் வைத்திருக்கும் குமாரிடம் காட்டினார்கள். ஸ்கேன் மற்றும் இதர டெஸ்ட் அனைத்தும் எடுத்து  மாத்திரை எழுதிக் கொடுத்தார் குமார். பின்னரும் காய்ச்சல் வந்து கொண்டே இருந்தது. ஷ்யாமும் ஷ்யாமாவும் வேலைக்கு சென்றதால் குழந்தைகள் பாட்டி தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்தது. வயது முதிர்ச்சியின் காரணமாக அவர்களாலும் குழந்தைகளை சரிவரக் கவனிக்க முடியவில்லை.

டாக்டரை மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே திடீரென்று ஒரு நாள் சத்யா பள்ளியில் வகுப்பறையிலேயே இறந்து விட்டாள் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி வந்தது. வீடே சோகமயமானது; மயான அமைதி கொண்டது. பிரேதப் பரிசோதனையில் மாற்று மருந்து கொடுக்கப் பட்டதால் தான் குழந்தை இறந்தது என்பது தெரிய வந்தது. ஷ்யாம் மிகுந்த கோவத்துக்கு ஆளானான். நண்பர்களிடம் விசாரித்ததில்குமார் காசு கொடுத்து மானேஜ்மன்ட் கோட்டாவில் மருத்துவம் படித்தான் என்பதும் மருத்துவராக வேண்டும் என்கின்ற எண்ணமோ பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமோ இல்லாமல் பணத்துக்காகவும் புகழுக்காகவும்  படித்தான் என்பது தெரிய வந்தது. ஷ்யாம் தன்னைத்தானே நொந்து கொண்டான். தான் தீர விசாரித்திருந்தால் இப்படி  நேர்ந்திருக்காதே என்று மிகவும் வருந்தினான். நேரம் ஆக ஆக தன்னால் மருத்துவம் படிக்க முடியாமல் போனதை எண்ணி வருந்தினான். வருத்தம் கோவமானது. கோவம்  ஆனது. வெறியுடன் சென்று குமாரை கழுத்தை நெறித்தே கொன்று விட்டான். 

பதினெட்டு வருட சிறை தண்டனைக்குப் பிறகு ஷ்யாமை அழைத்துச் செல்ல, ஷ்யாமின் மகன், டாக்டர் சத்யன் வந்தான்.

மருத்துவம் மனித உயிர் சார்ந்தது. அதில் பணம் விளையாடினால் வாழ்க்கை????
பணத்தால் பட்டத்தை வாங்க இயலும் ஆனால் உயிரை ????

மருத்துவம் உயிர் சார்ந்த தொழில்; மனிதன் இயந்திரமோ எந்திரனோ அல்ல..

No comments:

Post a Comment