Tuesday 30 July 2013

Story-74 ஸ்மோக் பாக்ஸ்



ஸ்மோக்  பாக்ஸ்
ஒரு  வழியாக  திருமணம்  நிச்சயமாகி  விட்டது.  கண்ணனுக்கு  இருப்பு  கொள்ளவில்லை. வகுப்பில்  பாடம்   நடத்துவதில்  மனம்  லயிக்கவில்லை. மெயிலுக்கு  வந்திருந்த  அந்த  ஜெபெக்  பைல்  மனக்கண்ணிலேயே  நிற்கிறது.  என்ட்ரோபி   எந்த்தால்பி  ஏன் ? நியூட்டனின்   மூன்றாம்  விதியை கேட்டால்  கூட   திறு திறுவன  முழிக்க  வாய்ப்புள்ளது. ஏதோ  சந்தேகம் கேட்கும் ஒரு  சில  மணவர்களும்,  இதுக்கு  என்னமோ  ஆகிடுச்சிஎன்று  அடங்க்கிவிட்டார்கள். 
               இன்னும்  ஒரு  வாரம்தான் கல்யாணத்திற்கு . விவஸ்த்தை  கெட்ட  டீனிடம்  இரண்டு வாரத்திற்கு  விடுப்பு  கேட்டபோது  ம் ம்எஞ்சாய்….  காமஸூத்ரா  வேணூம்னா   வீட்டுக்கு  வாங்க….  எனக்கு  பாருங்க  இன்னக்கி  வரைக்கும்  ரொம்ப  யூஸ்புல்லா  இருக்கு…..” என்றார் .   ( அவருக்கு  வயது   56.)
                பொங்கி   நிற்கும்  இந்த  வெட்கச்  சிரிப்பை  அடக்கமுடியவில்லை. அதிலும்  யாரைப் பார்த்தாலும்  வெட்கம்  வருகிறது. போதாக்குறைக்கு  பக்கது  வீட்டில்  இருக்கும்  மாணவக்கண்மணி  ஒருத்தி  மத்த  மாணவக்கண்மணிகளிடையே  கல்யாண  செய்தியை தம்பட்டம்  அடித்துவிட்டாள். அன்று  வகுப்புக்குள்  நுழைந்தபோது  கோரஸ் பாட்டு வேறு.  இந்த  தர்மசங்கட  சூழ்நிலையெல்லாம்  கடந்து  வீட்டிற்கு  போனால்…..
சித்தி  நின்றாள்  வாசலில்  இதோ  மாப்பிள்ள  வந்தாச்சு……   வாங்க  மாப்பிள்ள  சார்
வீடு  நிறைய  உறவு  குவிந்திருந்த்து.  மாமா, அத்தை, அம்மாச்சி, அப்பாயி, பெரியப்பா, அக்கா, அண்ணி…..    இவர்களுக்கிடையில்   சுந்தர்  அமர்ந்திருந்தான்.  கல்லூரி  நட்புக்குத்தான்  முற்றுப்புள்ளி  இல்லையே….. “வாடா  சுந்தர்   எப்டி  இருக்க…..”   அப்பாடி  ஆறுதலுக்கு  ஒருத்தன்  வந்தான்.  ஏன்  எல்லோரும்  இப்படி  பார்க்கிறார்கள் என்றிருந்தது  கண்ணனுக்கு. இவ்விடத்தை  விட்டு  உடனடியாக  தப்பியாக  வேண்டும்.
  வாடா  சுந்தர்  சின்னதா ஒரு வாக்  போய்ட்டு  வருவோம்”….      
     இருவரும்  வீடு  விட்டு  நகர்ந்து  வழக்கமாக  அமர்ந்து  கதைக்கும்   நெடுஞ்சாலை  நோக்கி  நடந்தார்கள். தனியார்  பேருந்து   ஒன்று  பா......ம்  என தேவையில்லாமல்  கலவரப்படுத்தியபடிச்  சென்றது. இருவரும்  ஹைவே  அடைந்து  நான்கு  வழிச்சாலையில்   ஒரு  ஓரத்தில் அமரும்  வரை  வாய் தீறக்கவில்லை.  
சுந்தருக்கு  காதல்  திருமணம். கல்லூரி  நாட்களில்  அவளுக்காக  பயோ  டெக்  கட்டிட  வாயிலிலேயே  தவம்  கிடந்தவன். அவளுக்காக  கையருத்துக்  கொண்டு  மருத்துவமனையில்  கிடந்த  போது  குறுந்தகவலில்  காதல்  சொன்னாள்  திவ்யா.
“திவ்யா  எப்டி  இருக்கா”
 “ம்  நல்லா  இருக்கா, கல்யணத்தண்ணக்கி  வந்துருவா...  ஆமா  பொண்ணு  எப்டிடா  அழகா?....   பேசுணியா?”
ஏதோ  இருட்டுக்குள்  அசைவது  தெரிந்தது.  
“மச்சி    அங்க  பாரு  அதென்ன  ரெட்  கலர்ல  வெளிச்சம்.....”
“அத  விடுடா..... பேசுனியா  போண்ணுகிட்ட....  எப்டி  இருக்கா?”    கண்ணை  உருட்டினான். ம்ம்ம்ம்ம்  அந்த  சிரிப்பு வேறு. சுந்தருக்கு  கல்லூரி நாட்களில்  மற்றொரு  பெயர்  உண்டு. ‘செக்ஸ்  டாக்டர்  சுந்தர்’ என  அடைமொழியுடன்  அழைக்கப்பட்டான். கண்ணனும்  சுந்தருடன்  சேர்ந்து   “பலதும்”  பேசியுள்ளான். ஆனால்  இப்பொழுது   பேச  என்னவோ  போல்   இருந்த்து.
“அது  என்னனு  பாத்துட்டு  வருவோம்டா  வாயேன்”  பேச்சை  திசை திருப்ப  வேறு வழியே  இல்லை.
“அச்சொ  சரி வா” 
இருவரும்  சாலையின்  நான்கு  வழிகளையும்   கடந்து  இருட்டுக்குள்  நடந்தார்கள்.  பூச்சி  பொட்டு  இருக்கப்போகுதுடா  என்றபடி  சுந்தர்  நடந்தான்.பையனுக்கு  பேய் பயம்  ஜாஸ்த்தி.சற்று  முன்பு  சிவப்பு   நிறத்தில்  ஒளிர்ந்தது  மஞ்சள்  நிறத்திற்கு  மாறியது.  அருகில்  சென்ற  போது   கருப்பானது.
“டேய்  எனக்கு என்னவோ  சரியா படல.....  வா  போய்டுவோம்....  தொடாதடா   அத....அங்க  பாருடா  என்னவோ அசையுது”  உண்மையில்  ஏதோ  ஒன்று  அசையவில்லை  ஓடியது. “அங்க பாருடா என்னவோ ஓடுதுடா”  
கண்ணன்  அதற்குள்  கையில்  எடுத்துவிட்டான்.ஏதோ  கிரிக்கெட்  பால்  அளவிலான  பவள மோதிரம் போலிருந்த்து.  “புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....” என  புகை கக்கத்துவங்கியது அது.  சுந்தருக்கு  பயம்  பற்றிக்கொண்டது.  “வாடா   போய்டுவோம்   வெடிக்கபோகுதுடா” . 
இதுவரை  அது  வெடிக்கக்  கூடும்  என்ற  எண்ணம்  கண்ணனுக்கு  எழவில்லை. கீழே  போட்டுவிட்டு  இருவரும்  இருட்டுக்குள்  ஓட்டமெடுத்தார்கள். 

“டேய்  நில்லுடா....  அது  வெடிக்கல.......”
அட்றினளின்  எகிற  “பரவால்ல  வா”
 இருவரும் வீடு நோக்கி  நடந்தார்கள். “என்ன  கருமமோ”
“இதோ  பார்  இங்க  ஒரு  கருமம்  கிடக்கு”
திரும்பும்  வழியில் சுமார்  இருபது  இடங்களில்  புகைந்து  கொண்டு  அவர்கள்  பார்த்த  ஏதோ  ஒன்று  கிடந்தது.

  காலை  ஆறு  மணி . இன்றுதான்  திருமணம்.  கண்ணன்  டீக்கடை   நோக்கி நடந்து  கொண்டிருந்தான். முதல்  நாள் அறையில்  படுத்திருந்த போது  காதில்  விழுந்தது   ஹாலில்  வாசிக்கப்படும்  செய்தி.....   வேகமாக   ஹாலுகுச் சென்றபோது  சுந்தர்   நியூஸ்  பார்த்துக்  கொண்டிருந்தான்.... “........உலகின்  பல  இடங்க்களிலும்  இன்று  காலை  கண்டெடுக்கப்பட்ட  உருண்டை  வடிவிலான  புகை கக்கும்  உலோகத்திற்கு   ஸ்மோக்  பாக்ஸ்  என  பெயரிடப் பட்டுள்ளது. அமெரிக்கா  ரஷ்யா  ஜெர்மனி   இந்தியா  உள்ளிட்ட  பல  நாடுகளிலிலும்  ஸ்மோக்  பாக்ஸ் பற்றிய ஆய்வு  நடந்து  வருகிறது.இது  பற்றிய  விரிவான  அறிக்கை  நாளை  வெளியிடப்படும்  என்று  எதிர்பார்க்கப்  படுகிறது.சென்னையில் மட்டும்  சுமார்  2000  ஸ்மோக்  பாக்ஸ்  கண்டெடுக்கப்பட்டுள்ளது” பின்பு  அவர்கள்  முதல் நாள்  பார்த்தது  போன்ற  ஒன்று  ப்ளோரிடா  மாகாணத்தில்  கண்டெடுக்கப்பட்டதாக  காட்டப்பட்ட்து. 
                             அந்த  ஸ்மோக் பாக்ஸ்  கண்ணனை ராத்திரி  முழுவதும்  தூக்கமில்லாமல்  அடித்துவிட்டது. காலையில்  எழுந்தவுடன்  நியூஸ் பார்க்கலாம்  என்றால்  பாழாய்போன  கரென்ட்  இல்லை. என்னவென்று தெரிந்தேயாக  வேண்டும்  என்ற நிலை. இல்லையெனில்  மண்டை  வெடித்துவிடும்.
          நியூஸ் பேப்பரை  பிரித்த  போது  முதல் பக்கத்திலேயே........ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்  என  கண்கள்  ஓடின.  வேகமாக  வீடு திரும்பினான்.
“டேய்  சுந்தர்......  நாம  பார்தமே  ஸ்மோக்  பாக்ஸ்......  அது ஏதோ உலகத்துலயே  இல்லாத  எலமென்ட்டாம்........அத  எலெமென்ட்ல  கூட  சேக்க  முடியல……….அதோட  எலெக்ட்ரான்  ப்ரோட்டான்  கவுண்ட்   மாறிகிட்டே  இருக்காம்......  அது  விட்டுச்சே  ஒரு  கேஸ்  அதுவும்  நம்ம  அட்மாஸ்பியர்ல  கிடையாதாம்........ஆனா இப்ப  நம்ம  அட்மாஸ்பியர்ல  ஆக்ஸிஜன்  நைட்ரஜணோட  இதுவும்  ஒண்ணா எங்க பார்த்தாலும் இருக்காம்”
“நிறுத்து  ப்ரொபஸரே.....ரொம்ப  ஸயன்ஸ்  பிக்ஷன்  ரொம்ப  படிக்கிரியோ?.......அது உலகத்துல இருந்தா என்ன  இல்லாட்டி என்ன?   உனக்கு  இந்நக்கி இதுவர  நீ  உலகத்துலயே  உணர்ந்திராத ஓர் உணர்வு   அவெய்ட்டிங்க்.....  போய்  குளி......மறக்காம   ராத்திரி  ஒரு தடவ  குளிச்சுடு”  மீண்டும்  ம்ம்ம்ம்ம்ம்  சிரிப்பு.
..................
        சுந்தர்   துரு துரு வென  ஓடி வந்தான்.
“டேய்  கண்ணா  நேத்து  ராத்திரி  எப்டிடா?”  ப்க்கெக்க்க் என்று  சிரித்தான் சுந்தர்.
கண்ணன்    கையில்  இருக்கும்  டீயை  வெறித்து பார்த்தபடி  அமர்ந்திருந்தான்......
“ஓ  ப்ர்ஸ்ட் டைம்  அப்டி இப்டிதான்  இருக்கும்....  போக போக  சரி  ஆகிடும்...  நான்  குளிச்சுட்டு  வந்துர்றேன்   இரு” சென்றுவிட்டான்.
கண்ணன்  டீயை விட்டு  கண்களை  நகர்த்தவே இல்லை.
...............
சுந்தர்   ஊருக்கு  கிளம்பிக் கொண்டிருந்தான்.
“சுந்தர்......  உன்  கிட்ட  ஒண்ணு  சொல்லணுன்டா.........”
“சொல்றா...” தயக்கத்தை பார்த்துவிட்டு “சும்மா  சொல்றா” என்றான்
“ஆக்சுவலா  அந்நக்கி  ஒன்னுமே  நடக்கலடா........  அவ  வந்தா....  பேசுணோம்....  எனக்கு  ஒன்னுமே  தோணலடா.......”
“என்னடா  சொல்ற”
“நானும்  அவள.......எனக்கு  ஒன்னுமே  தோணலடா........ அப்புறம்....”என்று  மீண்டும்  தயங்கினான்.
“எங்கிட்ட ஏன்டா தங்குற  சொல்றா”
“சொல்லிற்றேன்....  என் மண்டைய  உடச்சுகிட்டே  இருக்கு.... அந்நக்கி  நியூஸ் பேப்பர்ல படிச்சுட்டு  வந்து  உங்கிட்ட  சொன்னேனே... அதுக்கு  அப்புறம்  ஸ்மோக்பாக்ஸ்  பத்தி  எதுவுமே  வெளியாகல....அந்த  புகைய  ஸுவாஸிச்சா  என்ன  ஆகும்னு  கூட  தெரியல.......”
“அதுக்கு  என்னடா எப்ப?”
“இல்ல.....  அந்த  புகைய  ஸுவாஸிச்சதனாலதான்  எனக்கு  என்னவோ  ஆச்சுனு  தோணுதுடா......  அதனாலதான்டா  எனக்கு  ஒண்ணுமெ  தோண மாட்டேங்குதுனு  நினைக்கிறேன்..... நாம  ஸ்மோக்  பாக்ஸ பார்த்தமே  அந்நய்லேர்ந்தே  எனக்கு  ஒண்ணுமே  தோணலடா......”   
 “அட  லூஸு.....  அப்டிலாம்  எதுவும் இல்ல......லூஸாடா நீ  எங்கிட்ட  உளர்ணாப்ல  உன்  மனைவிகிட்ட  எதுவும்  உளரி  வைக்காத.... சரி  தோ பார்  நான்  ஊருக்குப் போய்ட்டு நல்ல  டாக்டரா  பார்த்துட்டு  சொல்றேன்.....  நீ  கிளம்பி  வா.....எல்லாம்  சரி  ஆயிடும்......  என்ன  சரியா  குழப்பிக்காத”  
இப்பொழுது  சொல்வதா  வேண்டாமா  என்று  யோசித்தான் சுந்தர்  “டேய்  ப்ரொபஸ்ரே…….திவ்யா  காலைல  போன்  பண்ணாடா….. நான்  அப்பா  ஆகப்  போறேன்டா 
“ஏஏஏஏஏஏஏஏய்.....  கை குடு கை குடு  கங்க்ராட்ஸ்  மச்சி”
..................                
அன்றிலிருந்து  எட்டு  மாதம்  கழித்து, சுந்தருக்கு  குழந்தை பிறந்தது.உலகின்  கடைசி  பிரசவம்.  உலகின்  கடைசி  குழந்தை.  
ஆறறிவு  கொண்ட  மனித  இனம்  அழியத்  துவங்கியது.
உலகம்  கடைசி  மனிதனை  சுமக்கப்  போகும்   காலத்தை  நோக்கி
சுழன்று  கொண்டிருந்தது.
…………...

No comments:

Post a Comment