Thursday, 11 July 2013

Story-31 லெமூரியா


லெமூரியா

முன் குறிப்பு; மனித இனம் தோன்றியதாய் நம்பப்படும் லெமூரியாவில் மனிதன்(மேல் பரிணாமம்) இனத்திற்கும், நியான்டர்தார்ஸ் (கீழ் பரிணாமம்) இனத்திற்கும் இடையேயான விதி இப்புனைவு கதையின் கரு.

குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில் மிஞ்சிய மனிதன் அழகான உடல்வாகும் 6 அடி உயரமும் கொண்ட உயிரனம்...நியான்டர்தார்ஸ் மனித உடலமைப்பும் குரங்கு முகமும் 9 அடி உயரமும் மூளை வளர்ச்சிக்கம்மியாக இருந்த உயிரினம் ஆதலால் மனித இனமே அடக்கி ஆண்டது அத்தீவினை..

அடிமையாய் கிடந்த உயிரனம் காடுகளின் ஓரங்களுக்கு விரட்டப்பட்டு சமூகத்தின் கடைகோடி அந்தஸ்துடன் உயிர் வாழ்ந்தது...ஒரு வென் மாலைப்பொழுதினில் காட்டில் சுத்தித்திரியும் மலுவா(பெண்) என்ற இளம் வகை நியான்டர்தார்ஸ் காட்டின் அந்தபக்கம் கடற்கரையோரம் உடைந்த தென்னை கட்டைகளும்(நீந்துவதர்காக பயன்படுத்துவது) அதனருகில் ஒரு அழகான மனித இன இளைஞனும்(பிலாச்) சிறுமியும் கிடப்பதை பார்த்து கூக்குரலிட அங்கு வந்த மற்றைய நியான்டர்தார்ஸ் இனத்தவரும் அங்கு என்ன செய்வதென தெரியாமல் கூச்சலிட்டுகொண்டிருந்தன...
இக்கூச்சல் சத்தத்தில் கண்விழித்த இளங்குமரன் இவைகளிடம் வசமாய் மாட்டிக்கொண்டோமென திகைத்தவாரு தன்னருகில் இருக்கும் சிறுமியை பார்கிறான் அச்சிறுமி மரணித்து 2 நிசிகள் ஆயிற்று உடலிலுருந்து வரும் வாசமும் இன்னும் பல நியான்டர்தார்ஸ்களை அங்கு வரவழைக்க அச்சிறுமியின் உடலை சண்டையிட்டு உண்ண ஆரம்பிக்கின்றன....
இதை கண்டு நடுங்கியவன் அங்கிருந்த கற்களைத்தூக்கி எறிந்து நியான்டர்தர்ஸை கூச்சலிட்டு எதிர்கிறான் அவைகளும்  அங்குமிங்கும் கூக்குரலிட்டு ஓடித்திரிகின்ற பின் இவனை நோக்கி வருகின்றன..அங்கிருந்து தப்பிப்பது உறுதியாயினும் இத்துனை நியான்டர்தர்ஸ்களை எதிர்பது சிரமமாகவே உள்ளது. ஆயினும் தப்பித்து அடர்ந்த காட்டினுடே ஓட ஆரம்பிக்கிறான்....
அவனை பின் தொடர்ந்து வந்த ஒவ்வொன்றாக விலகிச்செல்ல மலிவா மட்டும் அவனை பின் தொடர்கிறது அவனுக்கு தெரியாமல்.காட்டின் மையப்பகுதியில் கடும் இருட்டில் கையில் கிடைத்த கீரிப்பழத்தை புசித்தவாரு தங்குவதற்கு குகைத்தேடியே அருகிலுருந்த அகலமான மரத்தடியில் படுத்திருந்தான்...அப்பொழுது அருகில் உள்ள புதரில் சிறு சலசலப்பு கேட்கவே இடுப்பில் வைத்திருந்த கல் கத்தியினை கையிலெடுத்தான்

விளாசமான மயிர் போர்த்திய மார்பும்,9 அடி உயரமும்,பெண்மையின் நளினம் சிறிதுமின்றி சிறு அசைவுகளுடன் அவனை விந்தையாய் பார்த்த மலுவா அவனருகில் வந்தாள்..சிறிது பயத்துடன் அவளை கையில் இருக்கும் கத்தியைகாட்டி விரட்டிக்கொண்டிருந்தான்..அவனருகிலும் போகாமலும் அவனைவிட்டு விலகாமலும் அலைந்துகொண்டிருந்தன மலுவாவின் கால்களும் கைகளும்..
மலுவா அவனை பின் தொடர்ந்த களைப்பு ஆட்கொள்ள கொஞ்சம் மூச்சுமுட்ட ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தாள். கொஞ்சம் அசந்தால் ஒன்றை ஒன்று தின்னும் இரண்டு உயிரனங்களும் பரிணாம கீழ்படிதளுக்கு அப்பால் ஒரு புரிதலுடன் அமைதியாய் ஒன்றை ஒன்று உற்றுநோக்கி ஆசுவாசப்படுகின்றன....
பின் அவன் தன் கையில் வைத்திருக்கும் பழங்களை அதற்கும் போட்டான்..சற்று யோசித்தவாரு அவற்றை உண்டு இருவரும் ஒருவித எச்சரிக்கை உணர்வுடனே அம்மரத்தினடியில் உறங்கிக்கிடந்தனர்....
இதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் மனித இனம் கொஞ்சம் கொஞ்சமாய் நியான்டர்தார்ஸ்களை கொன்று உண்டு வந்தனர்...இங்கே வடகோடியில் மலுவாவும் அவனும் சில பல புரிதலுக்கு பிறகு ஒன்றாக வேட்டையாடி ஒன்றாக விளையாடி ஒருவரையொருவர் புரிந்துகொண்டிருந்தனர்....

மனிதர்களைப்போல் அல்லாமல் அம்மலுவாவிற்கு இனப்பெருக்க காலமென்பது வசந்தகாலத்தின் கடைப்பகுதியிலும் கார்காலத்தின் முதற்பகுதியிலுமாகும்...இங்கு வசந்தம் முடிந்து கார் மேகம் பவனிவர மலுவாவிற்கும் உடலியல் மாற்றம் வந்து கூச்சலிட ஆரம்பித்தாள்...காற்றுபுகும் உடம்பினோட                                                    காதலும் காமமுட்கிப் புக                                          எவ்வகையாயினும் அவ்வகை                                                         ஊடல் களிக்கவே மாற்றம்                                            மனதினும் மறவாத காலம்                                           சேர்க்கும்   மாயவிந்தையினை’’ என்ற
வரிகளுக்கேற்ப இருவருக்கும் ஒருவித உயிரியல் மாற்றமும் நன்றாக இருந்த புரிதலும் அவளை பழக்கப்படுத்திய ஒரு உயிரனமாக கொள்ளாமல் அவளையும் உயிர் பரிமாறும் உடலாய் கண்டான்...மெல்லிய காதலும் உடலியல் மாற்றமும் அவர்களை ஒன்றினைக்க,கருவுற்ற மலுவாவிற்கும் சேர்த்து ஆசையாய் கனிகளும் வேட்டையாடிய மாமிசத்துண்டுகளும் புசிக்க கொடுத்தான். கற்களை உரசி தீ மூட்டி சிறு குச்சிகளைப்போட்டு அவளுக்கு உடல் வெதுவெதுப்பை தந்தான்..வேட்டையாடிய கரடியின் தோலை அவளுக்கு ஆடையாய் போர்த்த அவளை மனிதத்தன்மையுடன் பேன ஆரம்பித்தான்...
கார்கலம் முடியும் தருவாயில் அழகான மனித உடலமைப்புடன் உடலில் ரோமங்கள் நிறைந்த பெண் குழந்தை ஒன்றும் ஆண் குழந்தை ஒன்றும் அடுத்தடுத்து பிறந்தன...அப்பிரசவ வலியில் அவளுடைய கூச்சல் அக்காட்டினை ஆட்டிப்பார்த்தது...இரத்தமும் நீரும் உடலில் தேய்த்த இரு குழந்தைகள் அழுகையுடன் அங்கிருந்தன தாயோ மயக்கநிலையில்...தந்தையோ எதுவும் புரியாமல் அங்குமிங்கும் கண்கள் அலைபாய எதையோ தேடிக்கொண்டு இருக்கிறான்...
வருடங்கள் உருண்டோட அவனும் தன் பிள்ளைகளுக்கு வேட்டையும் பேசுவதற்கும் கற்றுக்கொடுக்க நியான்டர்தார்ஸ் இனம் முழுவதுமாய் அழிந்திருந்தது மிச்சமிஞ்சி தப்பியோடியவர்களும் லீப்போ எறிகல்லின் தாக்கத்தில் அழிந்துவிட்டனர்...
மிஞ்சிய மலுவாவோ மனித இனத்துடன் கலப்பில் புதிய இனத்தை பெற்றெடுக்க அடிமையாயிருந்த இனம் அடியோடு அழிந்தது...
ஒருநாள் வேட்டையில் கடலோரம் மயங்கிய கிடந்த மனிதன் மிலாச்சிடம் கூறியது ‘தஷின கரைபாதே பிதரின நீல இடமயிவ பிந்துவாயி பாவு வசாவிக்கே மவினதாயங்’’ (தெற்கே கடல் அலையின் சீற்றத்தால் பிதரின் பகுதி முழுவதும் நீரில் மூழ்கியது நாமும் வடக்கே செல்லவேண்டும் அப்பொழுது தான் உயிர்தப்ப முடியுமென கூறினான்) பின் அவர்கள் அனைவரும் வடக்கே லங்க முகடு நோக்கி நகர அவர்களை வெயிலும் வறட்சியும் அவர்களை வாட்டி வதைத்தன...நாட்கள் நகர இவர்களும் சோர்வும் கலைப்பும் பிள்ளைகளின் உடலில் பினி சேர்க்க நீண்டு கொண்டே போயின அவர்களின் பயணமும்.....
மிலாச்சிற்கு கதைக்க ஒரு மானுடன் கிட்ட தன் துணையை விட்டு விலக ஆரம்பித்தான். ஒரு சில நாட்களில்  மலுவா தன் பிள்ளைகளிடமிருந்தும் விலக்கப்பட்டாள்...ஆயினும் ஒரு தாயின் பாசம் மட்டும் அவளை அவர்களுடன் ஒட்டியே வைத்தது...
பதின் மூன்று வருட பயணங்களுக்கு பிறகு லங்க மலையினை அடைந்த அவர்களில் மிஞ்சியது மலுவாவும் அவள் பிள்ளைகளும் மட்டுமே..இடையில் வந்த கரடியுடன் சண்டையிட்டு பிலாச் உயிர்துறந்தான்...பின் இவர்களை விட்டு பிரிந்து மலையில் கால் இடறி விழுந்து மடிந்தான் உடன் வந்த மனிதன்...
வெறும் பிள்ளைகளுடன் எதுவும் பேசத்தெரியாமல் மலுவாவும்,தங்களுக்குள் பேசிக்கொண்டு பிள்ளைகளும் புதிய விடியலுகாக கீழ்வானை நோக்கி பார்த்திருந்தனர்...மலுவாவின் முகத்தில் கண்ணீர் வடிந்து மனிதம் பிறந்தது...

No comments:

Post a Comment