Tuesday 9 July 2013

Story-3 டூம்ஸ்டே - Written on 12/19/2012

டூம்ஸ்டே
 
நீங்கள் கவனித்தீர்களா என்று  தெரியவில்லை.
இன்று காலை எழுந்தபோது unusual ஆக வெளிச்சமாக இருந்தது. பொதுவாக இருட்டு நமக்கு திகிலையும் பயத்தையும் ஏற்படுத்தும் ; ஆனால் இந்த வெளிச்சம் ஏற்படுத்திய பயமும், உள் நடுக்கமும் really unbelievable!
இரண்டு நாளில் உலகம் அழியப் போகிறது என்று facebook முதல், 101.5FM வரை,
"நித்தி புகழ்" மதுரை ஆதீனம் முதல் ப்ளோரிடாவின் பாஸ்டர்  வரை  கத்திக்கொண்டிருகின்றார்களே, அதன் முன்னோட்டமோ இன்று.
நேற்று படுக்கப் போகுமுன் அம்மாவிடம் பேசினேன். "ஏம்ப்பா, உலகம் வெள்ளிக்கிழமையோடு முடியப்போகுதாமே... எல்லோரும் ஒரே இடத்துல இருக்கலாமே...இங்க வந்திடக்கூடாதா.." என்று ஆதங்கத்துடன் பேசினார்கள். "அதெல்லாம் ஒன்னுமில்லம்மா ....ஒன்னும் ஆகாது..நீங்க கவலைப்படாதீங்க" என்று நம்பிக்கையுடன் பேசிப் போனை வைத்தேன். அந்த நம்பிக்கை பொய்த்துவிடும் போல இருக்கே.
21 காலை கோர்ட் appearance வேறு இருக்கிறது. கலைஞரின் பராசக்தி வசனத்தை எடுத்து விடலாமா? இல்லை விதியில் சுஜாதா ஆவேசமாக நீதிபதியிடம் பேசுவாரே அது போல பேசலாமா என்ற சிந்தனை வேறு குறுக்கிட்டது.
அப்படி ஒரு வேளை டூம்ஸ்டே வந்தேவிட்டால், இளையராஜா cd யை ஓடவிட்டுவிட்டு, மனைவியையும் பிள்ளையையும் இறுக்க கட்டிப்பிடித்துப் படுத்துக்கவேண்டியதுதான்...என்ன செய்ய முடியும் என்னைப் போன்ற சாமான்யனால்.
வெளிச்சம் அதிகமாக ஆரம்பித்திருந்தது. எங்கள் படுக்கை அறையை அப்படியே நோட்டமிட்டேன். ஒவ்வொரு இடமும் பல ஞாபகங்களை, சிலிர்ப்புகளையும் கொண்டுவந்தது. எல்லாமும் இல்லாமல் போய்விடப்போகிறதா?
என் மனைவியும் செல்ல மகனும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். கண்ணில் நீர் வழிந்ததை துடைக்கத் ோன்றவில்லை. அப்பொழுதுதான் அந்த "வஸ்து" கண்ணில் பட்டது...அதிர்சியில் உறைந்தேன்...oh my God!......
அந்த வஸ்து கடிகாரம்... மணி 7.30 ஆயிடுச்சி... office க்கு லேட் ஆயிடுச்சி....ஓடு...ஓடு......
வெளிச்சத்திற்கான காரணம் தெளிவாய்ப் புரிந்தது...
New Jersey Turn Pike  இல்செல்லும்போது Longines விளம்பர ஐஸ்வர்யா ராய் "ஏன் இன்னைக்கு லேட்" என்றுக் கேட்டது நிஜமா, கற்பனையா என்று சத்தியமாக எனக்குத்  தெரியவில்லை.

No comments:

Post a Comment