Monday 29 July 2013

Story-72 பால்ய கால வடுக்கள்



பால்ய  கால  வடுக்கள்


எல்லையற்ற  இந்தப்  பிரபஞ்சத்தில்  தனது  தேசம்  இழந்து  போனதற்காகக்  கவலைப்படும்  மன்னனின்   கவலைக்கும்  உடைந்த  பொம்மைக்காக  வருத்தப்படும்   குழந்தைக்கும்  அதிகம்  வித்தியாசமில்லை       -மார்க்  ட்வைன்

அம்மா  தனக்கே  உரிய   ரகசியக்  குரலெடுத்துக்  கிசுகிசுத்தாள்  டேய்  இன்னும்  கெளம்பாம  என்னடா  பண்ற.  உன்  மடில வச்சுதான்  காது  குத்தணும்…. ஏன்டா  அப்டி  பாக்குறஇருந்தாப்ல  இருந்து  உனக்கு  ஏதாவது  வந்துறுமே  ஒழுங்கா  கெளம்பு….”
யம்மா  எனக்கு  வயித்து  வலி  அந்த  வலினு  பொய்  சொல்ல  வக்காத….  நீங்க  முன்னாடி  போங்க  நான்  வந்துர்றேன்
“ ஒழுங்கா  வந்து  சேர்ற  வழியப்  பாரு   முந்தானையை  வெடுக்கென்று  எடுத்து  சொருகிக்கொண்டு   கிளம்பிவிட்டாள்   அம்மா .  மொத்த  சொந்தமும்  வந்துருப்பா  என்று  விட்டு  அடுத்த  பதினைந்து  நிமிட்த்திற்குள்   வேனேறிப்  புரப்பட்ட்து….  நந்து  எப்பொழுது  செயினை  அவிழ்த்துவிடுவான்  எனக்  காத்திருந்த்து.
இவன்தான்  பிடித்து  வந்தான்  நந்துவை. குளுப்பாட்டி  நடுவீட்டில்  வைக்க  அவளைத்  தவிர  எல்லோரும்  ஒத்துக்  கொண்டார்கள்.  அவளுக்கும்  இவனுக்கும்  எப்போதும்  எதிலும்  முரண்தான். பாம்பு  கீரி  பகைமை  கூட  பரவாயில்லை. என்றோ  தொடங்கிய  பகைமை  இன்று  இவனை   வீட்டிலேயே  கட்டிப்  போட்டிருக்கிறது.
நான்  ஏன்  போக வேண்டும்  அவ  குழந்த  காது  குத்துக்கு  நான்  எதுக்கு…. என்ன  கொஞ்ச  பாடா  படித்திருக்கா…. என்  டினோசர்…… ஆமாம்  என்  டினோஸர்
டினோஸர்:         
ஒரு  வாரம்  ஆனது  அந்த  டினோசரைச்  செய்ய.  அப்பாவிடம்  கெஞ்சி  கொஞ்சி  சார்ட்  அட்டை   வாங்கி, கறும்பச்சை  நிறம்  பூசி,வெட்டி  ஒட்டி, கைகளில்  கம் பிசு பிசுக்க,  அம்மா  சாப்டுகிட்டே  ஒட்டுடா  என்று சோறூட்ட  உருவானது  அந்த  டினோசர்.  ஏறக்குறைய  டினோசர்  போலவே  இருந்தது.
இவன்  அதை  கையில்  பிடித்து  சுற்றி  சுற்றி அழகுபார்த்துக்  கொண்டிருந்த  போதுதான்  வீட்டுக்குள்  நுழைந்தாள்  அவள். பள்ளி  முடிந்து   வீடு  திரும்பியவள்   நாக்கு  நமநமக்க  டேய்  சீனு  தெற்கு  வீதிக்கு  போய்  பஜ்ஜி  வாங்கிட்டு  வாடா  நீ  தேன்  முட்டாய்  வாங்கிக்க  என்றாள்.

கனவுக்கு  உருவம்  கொடுக்க  முனைந்திருந்தவன்   காதில்  பஜ்ஜி  கோரிக்கையோ   தேன்  முட்டாய்  லஞ்சமோ  அதைத்   தொடர்ந்த  அம்மா  அக்கா  வாக்குவாதமோ  விழவில்லை.
அவன்  கண்களில்  டினோஸர்  இறங்கி  நிற்கும்  முற்றம்  முழுவதும்  மரங்கள்  அடர்ந்த  காடாக  மாறிவிட்டிருந்தது. அம்மாவின்  மளிகை  ஜாமான்  எழுதும்  பேனா, அப்பா  விட்டெறிந்த   பால்  பாயின்ட், இவனுடைய  பென்சில்கள்  யாவும்  மனித  உருவமெடுத்தன.  
அட்டை  டினோஸர்  துரத்த  பேனா  மனிதர்கள்  ஓட,  டினோஸர்  மனிதர்கள்   என   யாவருக்கும்  இவனே  எச்சில்  தெரிக்க  டப்பிங்  கொடுத்தான்.
அப்பொழுதுதான்  அந்த  அசம்பாவிதம்  நடந்தேறியது. டினோஸர்  கடைசியாக  ஓடிக்கொண்டுருந்தவனை  நசுக்க  தன்  கால்களை  தூக்கியது.
என்ன  இது!  டினோஸர்  கால்  மனிதக்  கால்  போலுள்ளதே!  சப்! இவனுக்கு  என்ன  நடக்கிறது  என்று  விளங்குவதற்குள்  அக்காவின்  பாதத்தில்  கறுப்பு  ஸ்கெட்சால்  தீட்டப்பட்ட  கண்கள்  பிதுங்க  நசுங்கிவிட்ட்து.
மொத்த  தெருவுக்கும்  கேட்டிருக்கும்  இவனுடைய  வீறிட்ட  அலறல். அம்மா  என்னவோ  ஏதோ  என்று  கையில்  குழம்புக்கரண்டியுடன்  ஓடி  வந்தாள்.
கோபம்  தலைகேற  வாம்பைர்  போல்  கத்திக்  கொண்டு அக்காவைத்  தாக்க  பாய்ந்தான் .
டேய்!   வயசுபுள்ளய….”என்றபடி  கையிலிருந்த  குழம்புக்  கரண்டியால்  இவன் மண்டையில்  ஒன்று  போட்டால்  அம்மா.  அதர்மம்  பக்கம்  அம்மாவும்  சாய்ந்து  விட்ட்து  கண்டு  அம்மா  நீயுமா  பார்வை  பார்த்துவிட்டு,  கரண்டியடி  பொறுக்காமல், எச்சில்  வடிய………எல்லாம்  ஒரு  பஜ்ஜிக்காகவா?  
பூ:     பால்  பாட்டில், பழைய துண்டு, குட்டி  தலையணை,  நாய்  பொம்மை,  பொசு பொசு  கரடி, அப்பாவின்  சட்டை,  அம்மாவின்  காட்டன்   சேலை, இப்படி  ஏதோ  ஒன்றை  தன்  ஆத்ம  நண்பர்களாக்கிக்  கொள்கின்றன.
அவை  ஏன்  எதனால்  தேர்ந்தெடுக்கப்  படுகின்றன என்பது  யாருக்கும் தெரியாது.
இவன்  அப்படி  தேர்ந்தெடுத்துக்  கொண்ட்து  பூ  போட்ட  போர்வை  ஒன்றை. அதை  ‘பூ’  என்றே  அழைத்தான். அப்படி  அழைக்க  அவனுக்கு  யாரும்  சொல்லித்தரவுமில்லை. கோ ஆப்டெக்ஸில்  அம்மா  இடை விட்டுத்  தாவி  பிடித்துக்  கொண்டானாம்  ‘பூ’ வை. அன்று  முதல்  பூ  இல்லாமல்  தூக்கமில்லை.  கல்யாணம்  காட்சிலக்கு  கிளம்பும்  போதுகூட  அப்பா  சொல்வார்  “சீனுவோட பூவ  எடுத்து  வச்சுக்க... இல்லன்னா  பய  தூங்கமாட்டான்”
அது  ஏதோ  ஒரு  மதியம். இவன்  ஏதோ  சொல்ல  அக்காவும்  ஏதோ  சொல்ல  பற்றிக்கொண்ட்து  சண்டை.  அடிக்க  வந்தவளிடம்  இருந்து தப்பி  தன்  குட்டி  பிஸ்டலை  எடுத்து  பொட்டென்று  அவள்  நெற்றியை  நோக்கிச்  சுட்டான்.  வலித்திருக்க  வேண்டும். வலியில்  கத்தினாள். ‘இரு இரு’  என்று  ரூமுக்குள்  நுழைது  தாழிட்டுக்  கொண்டாள்.
“இங்க  வாடா”  இவன்  வீட்டுக்கு  வெளி  சென்று  ஜன்னல்  வெளியாகப்  பார்த்தான்.   பீரோவைத்  திறந்தாள். இவன்   பார்த்துக்  கொண்டிருக்கும்  போதே  பூ  இரண்டாகக்  கிழிக்கப்பட்டது. 
அம்மா  அப்பா  என்று  மாற்றி  மாற்றி  சமாதானப்படுத்தியும் இவன் அழுகை  ஓயவில்லை.
“என்னடா ரொம்பதான்  அழற. அதான்   தச்சு   தரன்னு  சொல்றேன்ல”என்றாள்  அம்மா.
ஏனோ  குழந்தையின்  அழுகைக்கான  காரணம்  பெரியவர்களுக்கு தேவையற்றதாகவே  படுகிறது.
வாழ்க்கை  முழுவதும் மாறாத  வடுக்களை  உருவாக்கும்  காயங்கள்  பால்யத்தில்தான்  மனதில்  தைக்கப்படுகிறது.
                                பால்யத்தில் விழுந்த வடுவை  நினைவு  மெதுவாகக் குத்தி  ரனமாக்கிக்க கொண்டிருந்த்து.நந்து உய்ங் என்று  சிணுங்கத்துவங்கியது. அம்மாவிடமிருந்து  பத்து  மிஸ்டு கால்  வந்து விட்டது.

மனம்  புலம்பத்  துவங்கியது,
‘நான்  என்ன  செய்து  கொண்டிருக்கிறேன்! வடுக்கள்  ஒவ்வொன்றாக  தேடிப்பிடித்து  ரணமாக்கிக்  கொண்டு... இந்த  வடுக்கள்  பதிய நானா காரணம்?  இவை நடந்து  இருவது  வருடங்களுக்கு  மேலாகிவிட்டது. இப்பொழுது  என் அக்காவிற்கு மணமாகி  இரண்டு  பிள்ளைகள் ஆகிவிட்டது. எனக்கு பெண்  பார்த்துக்  கொண்டிருக்கிறார்கள். இன்னும்  ஏன்  மறக்கவில்லை  இந்த  பால்ய  கால  வடுக்கள்!’
அவனால்  வீட்டை  விட்டு  நகர  முடியவில்லை.மனதின் வடுக்கள்  ரனமாகி  வலித்தது.சட்டையை  கழற்றி  மாட்டிவிட்டு  மெத்தையில்  பொத்தென்று  விழுந்து  உறங்கிப்போனான் .                                             
கோயிலில்  எல்லாம்  தயாராக  இருந்தது. மாமன்  வர  வேண்டியதுதான்  காது  குத்த  வேண்டியதுதான்.
                                                                                        

No comments:

Post a Comment