Friday, 12 July 2013

Story-35 தீடீர்னு ஒரு நாள்

தீடீர்னு ஒரு நாள்....!


மூணு வாரத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாங்க என் அப்பா அம்மா புனே வரேன்னு... bachelors ரூமுக்கு பேரெண்ட்ஸ் வரது அரசியல்வாதி வீட்டுக்கு இன்கம் டாக்ஸ் ரைட் வரா மாதிரி.... ஆச ஆசையாய் சேர்த்துவச்சு கோட்ட கட்டின பீர் பாட்டேல் எல்லாம் தூக்கி போடணும்.... ஒரு சிகரட் துண்டு கூட தப்பி தவறி கண்ணுல பட்டுட கூடாது... சாமி படம் ஒன்னு வாங்கி மாட்டனும்... ரூம் ஸ்ப்ரே அடிக்கணும்... எல்லாத்துக்கும் மேல பாத்ரூம கழுவி சுத்தமா வைக்கணும்.....

"டெட் லைன் நெருகிடுச்சு பாய்ஸ்...  நாளைக்கு காலைல நாலு மணிக்கு வரதா இருந்த ஆபீசர்ஸ்.... ட்ரைன் லேட் ஆனதால 8 மணிக்கு தான் வராங்க.... சோ வி ஹாவ் சம் பிரீதிங் டைம் ... கெட் ரெடி.. பாக் அப்...."

போர்வைக்குள் மல்லாந்து கிடந்தவர்களை தட்டி எழுப்பி.. தூசி தட்ட ஆரம்பித்த பொழுது.. கட்டிலுக்கு அடியில் தரையோடு தரையாய் ஒட்டி போன ஜாக்கி..... பல மதங்களுக்கு முன்னால் காணாமல் போன ரூம் கி... என்று பல புதை பொருட்கள் கிடைக்க ஆரம்பித்தது..... பல ஆயிரக்கணக்கான கரப்பான் பூச்சிகள் விழித்து எழ.... நாங்கள் அதை ஒவ்வொன்றாய் செருப்பில் அடித்து முடியாமல் பாதி காலியான ஹிட்டை எடுக்க...அதில் இருந்து சில நூறு கிளம்பியது...!!!! பின்னர் பிரபா யூஸ் பண்ணும் துபாய் பாடிஸ்ப்ரேவை பிரயோகித்து ஒருவாறு சில நூறை வெற்றி கண்டோம்.

கிரிக்கெட் பால் ஒன்று நாங்கள் கண்டெடுத்த புதைபொருட்களில் ஒன்றாய் வந்து சேர கிளறிய குப்பைகளை பாதியில் விட்டு விட்டு கிரிக்கெட் ஆட முடிவேடுத்துவிட்டார்கள். நான் எவ்வளவோ கெஞ்சியும் என்னை பொருட்படுத்தாமல் அவர்கள் சென்றுவிட வீடு கிட்ட தட்ட குப்பை லாரி அக்சிடென்ட் ஆன இடம் போல் காட்சி அளித்தது...துபாய் சென்டும்.... பல மாதங்களுக்கு முன் நீதிராஜன் செஞ்சு மறந்த பாயாசம் பாய்சன் ஆனது தெரியாமல் திறந்ததால் வந்த ஒரு வித பாதாள சாக்கடை வாடையும் ரூமில் பரவி இருந்தது.... தெரு நாய்களும் பக்கத்து வீட்டு ஆண்டியும் வந்துவிடாமல் இருக்க கதவை சாற்றி விட்டேன்..!!!!

முகத்தில் துண்டை கட்டி கொண்டு.... டிவி-இல் சன் மியூசிக் வைத்துவிட்டு ஆரம்பித்தேன்.... கிச்சென் ஜன்னலில் ஏகப்பட்ட கயிறு கட்டபட்டிருந்தது... பார்க்கவே பயங்கரமாய்.... கத்தியை கண்டுபிடித்து அறுத்தேன்....

 டம டம டம என்று பலமாய் யாரோ கதவை தட்டினார்கள்.... யாராய் இருந்தாலும் அப்படி யென்ன அவசரம் கடுப்பாய் போய் கதவை திறந்தேன்.. இல்ல.. இல்ல... லேசாய் தாழ்பாளை தான் அவிழ்திருப்பேன் படார் என்று யாரோ என்னை தள்ளி விட்டு உள்ளே வந்தார்கள்.

விழுந்த அதே அதிர்ச்சியில் கண் விழித்தேன்... சுற்றி முற்றி பார்த்தேன்...
"என்ன பெட்ரூம்ல வாஷ் பாஸின்..இருக்கு..."
நான் கிடந்தது பாத்ரூமில்....(யார்டயும் சொல்லிடாதீங்க...!!!)
எப்படி...?! ஒரு வேல விஷ வாயு தாக்கிடுச்சா....?!
புரியாமல் எழுந்த போது.. கிட்செனில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டது....
"டேய்....."
பதிலில்லை......
"பிரபா....?!"
"........."
"நீதி....?!"
"ஹரி..குண்டா நீயா....?!"
அதற்குள் நடந்து கிட்செனுக்கே வந்துவிட்டேன்... யாருமில்லை...!!!
டிவி ஓடிகொண்டிருந்தது......

 "ஹ...!!!....ஹிந்தி பாட்டு..."

சென்னையில மே மாசத்துல பனி பொழியிரதும் ஒண்ணுதான்.. எங்க வீட்ல ஹிந்தி சேனல் ஓடுறதும் ஒண்ணுதான்....அதான் இவ்வளவு அதிர்ச்சி..!!

இந்த ஹரி பயலா தான் இருக்கும்.... ஹிந்தி பொண்ணுகள கரெக்ட் பண்ண இந்த வேல.... "டேய்.... பேபி உன் வேல தானே இது....?"

ரீமோட்டை தேடினேன்...காணவில்லை...பீரோ மேல்..டிவி டேபிள்...கட்டில்..பெட்ஷீட்டுக்கு அடியில்.. எங்கேயும் இல்லை..!!! கடைசியில் கட்டிலுக்கு அடியில்...சமந்தமே இல்லாத மூளையில் இருந்தது....கையை விட்டு எடுக்க ட்ரை பண்ணேன்... ஹ்ம்ம்... கையில் அகப்படவில்லை.... துலாவினேன்.. காணோம்...மீண்டும் குனிந்து பார்கையில்..அது இருந்த இடத்தை விட்டு சற்று நகர்திருந்தது...!!!!

கட்டிலை நகர்த்தி.. ரீமோட்டை எடுத்தேன்.சேனல்லை மாற்ற ட்ரை பண்ணேன்.. மாறவில்லை....பல விடா முயற்சிக்கு பிறகு.... சன் மியூசிக்....!!!
திரும்பயில் மீண்டு ஹிந்தி சேனலுக்கு மாறி விட்டது.....!!!

ரீமோட்டை எடுத்து மீண்டும் சன் மியூசிக் மாற்றினேன்...மீண்டும் ஹிந்தி சேனல் மாறியது.....SM/HC/SM/HC மாறி கொண்டே இருந்தது... கடுப்பாகி டிவி யை ஆப் செய்துவிட்டேன்.

வீட்டில் யாரோ இருக்கிறார்கள்....தேடினேன்..வீடு முழுக்க...யாரோ என் பின்னால் வருவது போல் இருந்தது.... சட்டேன்று திரும்பயில்... என் கண் முன்னே..மங்கலாய்.....பயங்கரமாய்.... பயந்து தடுமாறி.... கிழே விழுந்து..அருகில் இருந்த ராக்கில் துழாவி.. கையில் கிடைத்த கத்தியை எடுத்தேன்...!!!
"டேய் யாருடா அது... கொன்னுருவே.... தைரியம் இருந்தா முன்னால வாடா.." கத்தியை சுழற்றிக்கொண்டே.. "முஞ்சில பூரான் விட்டுருவேன்.....!!!!"

ஒத்த கையில் கத்தியை பிடித்துக்கொண்டு..இன்னொரு கையில் துன்ணூறு டப்பாவை பிரித்து பட்டையிட்டுக்கொண்டேன்..... பிள்ளையாரை பார்த்துக் கும்பிட்டேன்....அய்யய்யோ பிள்ளையாருக்கு தும்பிக்கைய காணோம்....!!

"ஐயோ...கணபதி பப்பா..!!!  தும்பிக்கை எங்க....?!"

என் கால்களை யாரோ இழுத்தது போல் இருந்தது....தடுமாறி கிழே விழுந்தேன்... யாரோ மேலே ஏறி குதித்தார்கள்....
"டேய் யாரு டா அது......"
அலறி அடித்து வீட்டை விட்டு ஓடினேன்..... படிக்கட்டில் ஓடும் பொழுது எதிரே ஹரி வந்தான்.. ஹை வோல்டஜ் பதட்டத்தில் அவனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் நான் பலமாய் மூச்சு வாங்க....
ஆச்சி சாம்பார் பொடி விளம்பரத்தில் வருவது போல் நல்லா மோப்பம் பிடித்து கேட்டான்.
"மச்சான் வாசன தூக்குது... என்ன பிரியாணியா....!!!!"

கதவு டம் என்று சாத்தியது, கதவோரத்தில் வெளியில் இருந்த பிளாஸ்டிக் பாக்குகள் பறந்தது.

                                                    *******

நான் ஹரியிடம் நடந்ததை சொன்னேன்.. அவன் நம்பவில்லை... பிரபாவும் வந்து விட்டான்..... நான் சொல்வதை கேக்காமல் என்னை இழுத்துக்கொண்டு சென்றார்கள்... பஸ் ஏற மறுக்கும் குழந்தை போல போராடினேன்...
"டேய்... மாடு மாறி யாரோ என் மேல ஜிங் ஜிங்குன்னு குதிச்சாங்கடா... இன்னும் வலிக்குது.. ப்ளீஸ் டா..!!!"

"யே... எரும மாடு.... இப்படி நடுங்குற.. வெக்கமா இல்ல... இந்த வீட்ல தானே 4 மாசமா இருக்கோம்... இப்ப நீ வரல.. இப்படி அழுது உச்சா போய்டேனு கிழவிட்ட (கார்ட்டூன் கிழவிங்க... ஏன் ஆளு....)மாட்டிவிற்றுவேன்...." என்றான் பிரபா.

"யார்ட்ட வேணா சொல்லு... நா வரல.." பிய்த்துக்கொண்டு ஓடிவிட்டேன்.

புனே வந்த 8 மாசத்துல 10 வீடு மாறிட்டோம்.... வேண்டா பொண்டாட்டி கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம்ங்க்ரா மாதிரி நாங்க என்ன பண்ணாலும் nuisance  அக்கிடுவனுங்க.... நைட் ஆபீஸ்ல இருந்து லேட்டா வந்து லைட் போட்டதுக்கு.. நைட் எல்லாம் கூத்தடிக்ராங்கனு பக்கத்துக்கு வீட்டு பொண்ணோட அப்பா கம்ப்ளைன்ட் பன்னி எங்கள காலி பன்னார்.

பொதுவா புதுசா கட்டிகிட்டு இருக்குற சொசைட்டில ஈசியா வீடு கெடக்கும்.. ஆனா கொஞ்சம் பாமிலி வந்தோன நைட் ஏழு மணிக்கு ஒரு பத்து பேரு வந்து கதவ தட்டி சொசைடில bachelors நாட் allowed .... நாளைக்கு எட்டு மணிக்குள்ள காலி பண்ணிடுங்க.. இல்ல போலீஸ் கேஸ் ஆயிடும்னு மிரட்டுவாங்க.

புது வீடு பக்கலாம்னாலும் bachelorsக்கு கஷ்டம்.... இந்த மாறி சூழ்நிலையில் தான் நாங்க இந்த வீட்ட வந்து பார்த்தோம்..... fully furnished.. டிவி...வாஷிங் மெச்சின்.... பெரிய சோபா... ரெண்டு டபுள் காட் அதுவும் அடிமாட்டு ரெண்டுக்கு.

"மச்சான் தெய்வத்தா நேர்ல பாத்துருக்கியா.. வா நா காட்டுறேன்" என்று கூறி தான் நான் என் வீட்டு ஓனரை என் நண்பர்களுக்கு அறிமுக படுத்தினேன்.

இப்போ தானே புரியுது... தெய்வம் நின்று கொல்லும்னு  ...!!!!

அவர்கள் ரெண்டு பேரும் பயந்து ஓடி வருவதை எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன்.... ரொம்ப நேரம் ஆகியும் வரவில்லை... ஒருவேளை மேலே... அய்யய்யோ அப்படியெல்லாம் ஆகியிருக்க கூடாது..... மேலே போகவும் பயமாய் இருந்தது.. போகாமலும் இருக்க முடியவில்லை... பயந்து பயந்து மேலே போனேன்.

கதவை மெதுவாய் திறந்து.. உள்ளே எட்டி பார்த்தேன்... உள்ளே அவர்கள் ஜாலியாய் டிவி பார்த்துகொண்டிருந்தார்கள்... தமிழ் படம் ...!!! ஒன்னும் நடக்கவில்லையா....!!! ஹரி சைஷ பார்த்து பயந்துடுச்சோ..!!!

அவர்கள் காலை பார்த்தேன் அவர்கள் தான்...கதவு தானாக சாற்றி கொள்ளாதபடி லாக் போட்டு விட்டு உள்ளே போனேன்.

"டேய்..வாங்கடா.. அண்ணாமலை வீட்டுக்கு போய்டுவோம்..."
அடுப்படியில் மீண்டும் சத்தம் கேட்டது....!!

"ஹே.. சந்தீப் சிங் சுப் கரோ..." என்றான் பிரபா

"இவ்ளோ நேரம் சும்மா தான் இருந்தான் நீ வந்தோன தான் துள்றான்... உன்ன தான் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு போல....!!"

மீண்டும் அந்த அமானுஷ்ய சத்தம் கேட்டது.. அவர்களும் பயந்து தான் போனார்கள்... ஆனால் கடிகொள்ளவில்லை.

"டேய் சந்தீப் கோப பட்றான் போலருக்கு.... ஹிந்தி பாட்டு வை..."
ஹரி ஹிந்தி சேனல் வைத்தான்.
ஒரு 5 நிமிஷம் ரொம்ப போர் அடித்தது... ஹரி வேற சானெல் மாற்றினான்...

டம்மென்று ஒரு சத்தம்... ஹரி charil இருந்து தோம்மென்று கிழே விழுந்தான்... அவ்ளோ பெரிய பாடி.. அசைக்ரத்துகே பல நியூட்டன் போர்ஸ் தேவை.. விழுந்துருக்குன்னா செம அடி போல....
கண்ணில் நீருடன்.. தலையை பிடித்துக்கொண்டு எழுந்தான்....
"டேய் சந்தீப் @#$!...! நீ என்ன பருப்பா.... பேய்னா பயந்துடுவோமா....இவ்ளோ நேரம் புரியாம நாங்க பத்தொம்ல...!! வேற சேனலும் ஹிந்தி தானே போட்டேன்...!! ஏன்டா அடிச்ச..!! எனக்கு ஹிந்தில தெரிஞ்சது நாலே நாலு வார்த்த அதுவும்...."

அந்த நான்கு அமுத சொற்களை அவன் உதிர்க்க... லைட் மின்னி மின்னி ஏறிய ஆரம்பித்தது....சுற்றி இருந்த குப்பைகள் பறக்க ஆரம்பித்தது....

"கிர்ர்ர்...ர்ர்ர்....ர்ர்"
என்று ஒரு சத்தம் கொஞ்சம் தொலைவில் கேட்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சம்மாக பக்கம் வந்தது....
"சந்தீப் காண்டாய்ட்டாண்டா..." என்றவுடன்
கரண்ட் கட் ஆனது..... கும்மென்று இருட்டு... மாயன அமைதி....!!!
 நாங்கள் மூணு பேரும் ஒருவரை ஒருவர் பிடித்துகொண்டு பக்கம்பக்கமாக நின்றோம்...பிரபா lighter எடுத்து பற்ற வைத்தான்.....நான்கவதாக ஒரு உருவம் எங்களுடன் நின்றது.

                                                    *******

நடுத் தெருவில் குளிரில் விறைத்து போய் நின்றுகொண்டிருந்தோம்... போன் பர்ஸ் எல்லாம் வீட்டினுள் தான் இருந்தது.... ஒனெர் வீடு நாலு தெரு தள்ளிதான்... போனோம்... எங்களுக்கு ஹிந்தி தெரியாது கொஞ்சம் புரியும்.. அவருக்கு இங்கிலீஷ் தெரியாது... பேசினோம்...!!!
ஒனெர்  எங்களை பார்த்தவுடன் போலி சிரிப்புடன்

"எப்படி இருக்கீங்க... வீடு நல்லருக்கா....?"

"நல்லா செஞ்சுவுட்டுட்டு கேள்வி கேக்குது பாரு..." என்றான் பிரபா

"பையா.. வீட்ல பேய் இருக்குது பையா....!!" என்றேன் நான்

"க்யா ...?"

"பேய்....!பேய்....பேய்ய்ய்ய்ய் பையா....  பேய்ய்ய்ய்ய்..!!!"

"நெய்...நெய்... யூ கேன் பெ  நெக்ஸ்ட் month...!!!"

"ஓ தலேல அண்டாவ கவுக்க..."

"பையா பேய்...!ஹ்ம்ம் ghost பையா.... பூதோ பையா பூதம்..!!! இங்க பாருங்க இவன மாறி " ஹரியை இழுத்து

"டேய் நாக்க வெளில நீட்டி காமிடா...!!"
செய்தான்...அவர் முகம் மாறியது....

"பூத்...?!"

ஒரு வித மிரட்சியுடன் கேட்டார்.....

"ஹரே பாப்ரே....!!"

ஹரியிடம் ஏதோ ஹிந்தியில் பேசினார்... அவன் என்னிடம் திரும்பி

"ரூம்ல ஏதாவது கயிறு கட்டி இருந்ததா... அவுத்தியா" எனக்கேட்டான்
இல்லவே இல்லை என்று சத்தியம் செய்தேன்.
இருவரும் கொஞ்சம் நேரம் பேசி தினறினார்கள் பின்னர் ஹரி சொன்னது...

"அந்த வீட்ல ஏற்கனவே பிராப்லெம் இருந்துச்சாம் ...."

"தெரிஞ்சே விட்டானாடா..."

அவனிடம் சண்டைக்கு போனோம்... அவன் வீட்ட வேணா காலி பண்ணிடுங்க.. என்னோட இன்னொரு வீடு இருக்கு.. நீங்க காசே தரவேணாம்.. இத வெளில யார்டயும் சொல்லாதீங்க என்று ஒரு ஆபர் வைத்தான்... நல்லாத்தான் இருந்தது..... சரி என்று ஒருவாறு முடிவெடுத்து கெழம்பயில் அவன் மறுபடியும் சொன்னான்...

 "காலி பண்ணுங்க.. அதுக்கு தெரியாம காலிபன்னுங்க ....!!!"

"எப்படிடா.. எப்படி..அதுக்கு தெரியாம காலி பண்றது..." எனக் கேட்டான் பிரபா.

"அடி மாட்டு விலைக்கு வரும்போதே நினச்சேன்... ஏதாவது உள்குத்து இருக்கும்னு..."

"குத்து செமையா வலிக்குதேடா.. வீங்கின முஞ்சியை துடைத்துக் கொண்டான் ஹரி.

"நம்ம தெய்வம் இப்படி பண்ணும் நினைக்கலடா.."என்றேன் நான்.

"நீதானே இந்த வீட்ட பாத்த... நீதானே அந்த டேஷ தெய்வம்ன... என்னது தெயவத்த நேர்ல பாத்துருக்கியா மச்சான்.. வா நா கட்டுறேன்....." 
நான் அவர்களிடம் சொன்னது போலவே சொல்லி என்னை அடிக்க வந்தார்கள்.....

"டேய் மச மசனு நிக்காம போய் சாமான்லா பேக் பண்ணுங்க...நா போய் வண்டி கூட்டிட்டு வரேன்" என்று நழுவினேன்.

"எங்க தம்பி ஓடுற.. வா பேய்ய நேர்ல பாத்துருக்கியா.. வா நா காட்டுறேன்..." என்னை இழுத்துக்கொண்டு போனார்கள்.

போகிறவழியில் மான்சி ஹோட்டலுக்கு சாப்பிட வந்த அண்ணாமலையை ஒன்னும் கூறாமல் அடிமை ஆக்கி கூட்டிச்சென்றோம்.

"அண்ணே நீங்க போய்.. உங்க கையால வீட்ட தொரங்கன்னே...." என்றேன்

"போங்கண்ணே..." என்றான் பிரபா

"என்னடா அண்ணே மேல தம்பிகளுக்கு பாசம் வழியுது.. என்ன மாட்டரு ..."

"போங்கண்ணே...!!"

போய் கதவின் மீது கைவைத்தார்.... கதவு தானாக திறந்தது.... உள்ளே போனவர் ...

"டேய்.." என்று கத்தினார்... அலறி அடித்து மூவரும் ஓடினோம்...

"டேய்...உங்க ரூமாட இது..இவ்ளோ கிளீனா இருக்கு.... இதுக்கு தான் என்ன முதல்ல வர சொன்னீங்களா..."அப்பாவியாய் கேட்டார்.

எல்லா குப்பைகளும் நீக்கப்பட்டு ரூம் பளிச்சென்று புது வீடு போல் இருந்தது.... டிவியில் தமிழ் பாட்டு...

ஆடி போன .... ஆவணி.....
நீ...ஆள மயக்கும் தாவணி....!!!

"சந்தீப்புக்கு மேட்டர் தெரிஞ்சிருச்சு..."என்றான் ஹரி...

"ஐஸ் வைக்க பாக்குறான்...." என்றான் பிரபா

"டேய் ஆங்கிலம் உபயோகிக்காத.... பனி கட்டி வைக்க பாக்குறானு சொல்லு..."என்றேன்.

"நண்பர்களே நமக்கு இருப்பது 5 நிமிடங்கள் தான்...அதற்கு மேல் சந்தீப் அவர்கள் அதிரடியில் இறங்கிவிடுவார்.... வாயு வேகமாக உங்கள் சாமான்களை சேகரித்து விரையவும்..... "என்றான் பிரபா

"டேய் இங்கிலீஷ்...." என்றான் ஹரி

"இதுல என்னடா இங்கிலீஷ்..."

"சந்தீப்....."

"ஸ்ஸ்ஸ்.. தமிழ்லையும் அதாண்டா....இப்போ நீ கிளம்பலா.... " உதைக்க போனான் பிரபா

"என்னடா இங்க என்ன உங்க PL வந்துட்டார... ஆபீஸ்ல பேசி பேசி இங்கயும் சுத்த தமிழ்ல பேசுறீங்க...." எனக்கேட்டார் அண்ணாமலை.

"முதல்ல இவருக்கு தெரியாம பாத்துக்கணும்" என்றேன் நான்.

அவசர அவசரமாக கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்துபோட்டு கொண்டிருக்கையில் 

"டம்மென்று...."    கதவை சாத்தும் சத்தம் கேட்டது.... ஹாலிற்கு விரைந்தோம்... டிவி பார்த்துக்கொண்டிருந்த அண்ணாமலை கதவை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

எங்களுக்கு புரிந்தது.... நாங்கள் பேசுவது புரியலைனாலும்.. செய்வதை வைத்து கண்டுபுடிதுவிட்டான் சந்தீப்...

"டேய் போய் கதவ திற..." யென பிரபாவிடம் சொன்னேன்.

"டேய் நீ போ..."என்றான் ஹரியிடம்.

அவன் அண்ணாமலையை பார்த்தான்... "என்னடா  யாரவது போங்கடா.. கதவு காத்துக்கு தா சாத்திஇருக்கு..." ஹரி கதவை திறந்தான்.. திறந்தது...எங்கள் மூவர் முகத்திலும் சந்தோஷ புன்னகை....

ஹரி சற்று நகர..மீண்டும் கதவு டமால்என்று சாத்தியது....

ஹரி  கதவை இழுத்தான்... சிறிது திறந்து மீண்டும் மூடியது... நாங்கள் இருவரும் போய் அவனுடன் இழுத்தோம் ... நாங்கள் இந்த பக்கம் இழுக்க... அந்த பக்கம் யாரோ இழுக்க...tug of war போல் இருந்தது.....

இத்தனை ரணகளத்திலும்.. அண்ணாமலை எங்களை ஒரு புன்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்...
"டேய்... என்ன fun பண்ண்றீங்கள...."

"ஹெல்ப் பண்ணுங்கண்ணே..." என்று கேட்டவுடன்  எழுந்தார்.. "எல்லாம் தள்ளு...!!" மூவரும் அவருக்கு வழி விட்டோம்... ஜிம்மெல்லாம் போய் செம்மையா இருப்பார்....

கதவை இழுத்தார்..... லேசாக திறந்தது... விட்டவுடன் மீண்டும் மூடிக்கொண்டது...

"டேய் யாரோ நம்ப பய தான் அந்த பக்கம் இருந்து விளையாடுறான்...."

கதவில் இருந்த பீப் ஹோல் வழியாக பார்த்தார்.... என்னத்த பாத்தாருன்னு தெரில.... அடுத்த செகண்ட்.... கரண்ட் கம்பியை பிடித்தது போல செம vibration.... நாக்கு தள்ளி... ஹால்லை நான்கு முறை வலம் வந்து.... கிழே விழுந்தார்... அவர் கை கதவை நோக்கி நீண்டிருந்தது....!!!!

அண்ணன் அவர்களை எழுப்பவே மூன்று மணி நேரம் ஆகிவிட்டது.... அவர் எழுந்தவுடன் நாங்கள் ஒன்றும் விளக்கவில்லை... அவரே புரிந்துகொண்டார்....
"என்ன ஏண்டா மட்டிவிட்டீங்க...." தலையில் கைவைத்து உட்க்கார்ந்து விட்டார்.

சிலமணி நேரம் கழித்து சொர்க்க வாசலின் கதவு தானாக திறந்தது.... ஒன்னும் வேணாம் விட்டா போதும் என்று தலை தெறிக்க ஓடினோம்....

"அண்ணே இந்த பக்கம்... இந்த பக்கம்..."

"ஆள விடுங்கடா சாமி... இனிமே உங்க சகவாசமே வேணாம்...." எங்களை மதிக்காமல் ஓடினார்.

தெரு முனையில் கூட நிற்கவில்லை.. ஓடினோம் ஓடினோம் ஓடிக்கொண்டே இருந்தோம்.... வழியில் ஒரு கால் டாக்ஸி வந்தது.... நிப்பாட்டி ஏறிகொண்டோம்.. முன்னால் ஓடிக்கொண்டிருந்த அண்ணாமலையையும் ஏற்றி கொண்டோம்....

"எங்க போகணும்" என்று டிரைவர் கேட்டான்

"சென்னை பையா.. சென்னை..."

"ஆமாட... இனி இந்த புனேவே வேனோம்..." என்று ஹரி சொன்ன பொழுது....

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... னு ஒரு சத்தம் லோ பிட்ச்சில் கேட்டது....!!!

காரில் இருந்த FM தானாக சுவிட்ச் ஆன் ஆகியது..... ஹிந்தி பாடல்.... நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து "சந்தீப் சிங்...!!!" என்று கோரஷாக சொல்ல....

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... சத்தம்  ஹை பிட்ச்சில்....!!!!


                                                    *******

No comments:

Post a Comment