Wednesday, 10 July 2013

Story-12 திருட்டுப் பசங்க



திருட்டுப் பசங்க...!!!

"சார் உங்க செல் போன்ன கொஞ்சம் கொடுக்கறீங்களா.."
"ஏன்..?! எதுக்கு..?!"
பழைய சோறு எல்லாம் இல்ல போ போ என்பது போல் விரட்டினார்..,
"சார் என் போன்ன யாரோ திருடிட்டாங்க...ப்ளீஸ்.." என்றேன்
பாவமாய் பார்த்தார்.."என்ன போன்ப்பா தொலைச்ச ....?"
ஆப்பிள் ஐ போன்...அதிர்ச்சியானார்....இது வரைக்கும் கேட்ட எல்லோரும் விட்ட அதே ரியாக்சன்.... அவர் போனில் இருந்து என் போனுக்கு ட்ரை பண்ணேன்...கரன்ட்லி ச்விட்ச்ட்  ஆப் ..!!!
"இனி கிடைக்காதுப்பா ..!!!" (நல்ல வாயி ...)
கடுப்பாகி சைடு  பெவ்மேன்ட்டில் அமர்ந்தேன் ..
நாளைக்கு தீபாவளி ...புக் பண்ண பஸ்சும் போச்சு...40000 ரூபா  போனு போச்சு...ஏன் எனக்கு மட்டும்  இப்படியெல்லாம் நடக்குது..சின்ன வயசுல கூட்டத்துல உன் பொண்டாட்டிய தொலைச்சுட்டு முழிப்ப பாரு என்று என் டியூஷன் வாத்தி திட்டினது சம்பந்தமே இல்லாமல் மண்டைக்குள் நுழைந்து கடுப்பேற்றியது ..( அப்பிடி திட்டினான்...).
போன் தொலைஞ்சதுக்குக்கூட பயம் இல்ல...இப்போ அதோட  விளைவுகள் தான் வயிற்றில் புலியை கரைத்து...,அம்மாவை சமாளிக்கனும்..,அப்பாட்ட  புது போனுக்கு அடி போடணும்..ஆளு....ஹ்ம்ம்ம்... வாழ்க்கைல பல சந்தர்பங்களில் நமக்கு  ஒரு ஆளு இல்லையேனு வருதப்பட்டிருகேன்...அப்படி ஒரு சந்தர்பம் இது...ஆளு இருந்துருந்தா போன் சுடுறமாறி  பாக்கெட்லயா வச்சிருப்பேன்..!!!!
ஏன் நா பாக்கெட்ல வைச்சேன்... கைல வச்சிருக்கலாம்...ஹெட்  செட்  மாட்டி பாட்டு கேட்ருன்துருக்கலாம் ... .. ... .....ன்...?!

"தம்பி நீங்க விருச்சிக ராசியா ...?" எனக் கேட்டார் போன் கொடுத்த தெய்வம்
"ஆமா...!!"
"ஏழ்ற சனி..அதுவும் விரயச் சனி....!!"
"என்னங்க சொல்றீங்க...?!"
"தொட்டதெல்லாம் பொடி பொடியாப் போகும்...,!!"
"பணம் போகும்..,பொருள் போகும்.., வேல பாக்குறியா...!!"
"ஆம் ..மா..!!!" என்றேன்
"அது கூட போகும்...,இது சும்மா டிரைலெர் தா..,"
இருக்க கடுப்புல கோவம் சுல்னு ஏறியது...,
"யோவ் போய்யா ...!!!"
அமைதியாய் என்னை பார்த்தார்..(நெறைய அனுபவம் போல..!!)
"கோபப்பாடதே....!!"என்றார்
"நீ வாயை திறக்காதே....போன் காலுக்கு வேணா இந்த ரெண்டு ரூபா ...!!"
அவனை அசிங்க படுதிவிட்டதை போல என்னை பார்த்தான்... அந்த இரண்டு ரூபாயை கையில் எடுத்து 
"சீக்கிரம உனக்கு பலர் காசு போட்ற நெலமைக்கு வர போற...நா சொல்ற பரிகாரத்த பண்ணு.."
அவன் எண்ணம் புரிந்தது...என்னிடம் இன்னும் காசு பிடுங்க அலையும் சோமாரி...
"எவ்வளவு...?"
"1000 ரூபா தா ...,இந்த சொவ்தேச்ஸ்வரி கோவில்..." பாதியிலேயே அவனை தடுத்து நிறுத்தி...,
"நா அந்த நெலமைக்கு வந்தா பண்ணிக்கறதுக்கு எடுத்து வச்சிக்குறேன் போ ..."
கடுப்பாகி திட்டினான் ..சண்டை...என் முழு கோபத்தையும் அவன் மீது  திணித்தேன் (டியூஷன் வாத்தீ மீது உள்ள கோபத்தையும் ..)
சிலர் எங்களை பிரித்து...போப்பா போ ஊரு போய் சேர்ற வழிய பாரு என்று அப்பொழுது வந்த சேலம் பஸ்சில் ஏற்றி விட்டார்கள்...,
சேலத்துக்கு 5 மணி நேர பயணம்....சேலத்தில் இறங்கையில் உடம்பும் வலித்தது...மனதும் கனத்தது...பாவம் வயசானவன்...சண்டை போட்டிருக்க வேண்டாம்...பொதுவாக நான் சண்டை போட மாட்டேன்..என் நிலைமை தெரிந்தும் அவன் என்னிடம் காசு கறக்க முயன்றான்..திருட்டு பயல்..!!!

சிதம்பரத்துக்கு பஸ் ஒன்று நின்று கொண்டிருந்தது...MGR ரிப்பன் கட் பண்ணி ஓட விட்ட பஸ் போல..."தம்பீ இது இல்ல வேற வண்டி இல்ல.." என்று கண்டக்டர் சொன்னார்...வண்டியில் இடமும் இல்லை...
படிகட்டில் அமர்ந்து பயணம்... உடம்பில் முதுகு என்று ஒரு பார்ட் உள்ளதை முழுமையாக உணர்தேன்... செம வலி... ஒரு 4 மணி நேர பயணத்திற்கு பிறகு.. கண்டக்டரிடம் "இன்னும் எவள்ளவு நேரம் நா..?"
பொறு தம்பி இன்னும் விருத்தாச்சலமே வரல... இன்னும் 2.30 மணி நேரம் ஆகும்..,அப்பிடியே படிக்கட்டில் இருந்து விழுந்து சூசைட் பண்ணிருப்பேன்... வண்டி ஓடுன ஸ்பீடுக்கு லைட்டா ஸ்க்ரசெஸ் தான் விழுந்திருக்கும்... அதற்கு கூட வழி இல்லை...!!

விருதாச்சலம் வந்ததும் வண்டி கொஞ்சம் காலி ஆனது...கடைசி சீட்டுக்கு முன் சீட் ...ஜன்னலோரம் ஒருவன்.. நடுவில் நான்...பக்கத்தில் இன்னொருவன்...மீண்டும் தொடங்கியது முடிவில்லா பயணம்... தீபாவளி நேரம்ல பலர் தண்ணி அடித்திருந்தார்கள்...பலரா சிலரானு தெரில.. என் பக்கத்தில் அமர்திருந்தவன் யப்பா ... முடியல ..!!!

உட்கார இடம் கிடைத்தும் தூங்க முடியல ...போன் துக்கமெல்லாம் பறந்துவிட்டது...தூக்கம் சொக்கியது..தூங்க முடியவில்லை...போக்கிரி பிரக்காஷ்  ராஜ் போல...ஆனால் எனையும் அறியாமல் நான் அயர்ந்து கண் முடிய அந்த விநாடி..,வெயிட்டான ஒரு பொருள் என் காலில் விழுந்தது..ஆ...!!!

தூக்கம் கெட்டுபோய் கடுப்பாகி அதை எடுத்துப்பார்த்தேன் ...செல் போன்...சாம்சங் யெஸ் 3 (ஐ..!!!)..அனைவரும் தூங்கி கொண்டிருந்தார்கள் ..
எனக்குள் ஒரு 2 நிமிட யுத்தம் ..வேண்டாம் வேணும் என்று...கடைசியில்..,நான்  பட்ட கஷ்டம் எதுக்கு மற்றவரையும் பட வைக்கணும்னு.. போய் தொலையுதுனு  மனச கல்லாக்கிட்டு ... 
"யப்பா யார் போன் பா இது...?"(ரொம்ப மெல்லிசான குரலில்...)
யாரும் கேட்கல வச்சிக்குவோம்...பாக்கெட்டில் வைத்த பிறகு..அசிங்கமா இல்ல அந்த கிழவனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் என்றது மனது ...அந்நியன் விக்ரம் போல ரெண்டு பேர் என்னுள் சண்டையிட...இறுதியில் அம்பி ஜெயித்தான்...
"இந்த போன் யார்து ...?" (சத்தமாக..)
இரண்டு முறை கேட்டேன் இரெண்டாவது முறை அருகில் அமர்திருந்த தண்ணி பார்டி மயக்கம் தெளிந்து எழுந்தான்...பாக்கெட்டை செக் பண்ணான்....
"என்து கொடுங்க..." என்று பிடுங்கி கொண்டான்... அவனது பாக்கில் வைத்து பத்திரபடுத்திக்கொண்டான்....
"அண்ணே உங்க போன்னா ..பாத்துனே இப்போ தா நா ஏ போன தொலைச்சேன்..திருட்டுப்பசங்க ஜாஸ்தி...நீ பாட்டுக்கு மப்புல இப்படி கேடந்தேனா எல்லாத்தையும் உருவிடுவானுங்க ...."
"ரொம்ப தேங்க்ஸ் பாஸ்..!"  மீண்டும் சாய்ந்து தூங்கி விட்டான் என்னை மதிக்கவில்லை..அடுத்த ஸ்டாப்பில் இறங்கி விட்டான்..இறங்குவதற்கு முன்பு மீண்டும் தேங்க்ஸ் சொன்னான்... எனக்கா ஏதோ சாதனை செய்த மகிழ்ச்சி ...
மீண்டும் என்னை அறியாமல் தூங்கிவிட்டேன் போலும்...கண்டக்டர் எழுப்பினார் .. "தம்பி எளுந்திரி....எளுந்திரி....!!"
கண்களை துடைத்து விட்டு பார்த்தேன்... இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள்...
"சார் என் போன்ன காணோம் ..நீங்க பாத்திங்களா.."
"என்ன போன்..?"
"சாம்சங் எஸ் 3...!!!"
நான் பதில்சொல்லமுடியாமல் முழித்துக்கொண்டிருந்தேன்..!!!!
(விருச்சிக ராசியா இருப்பாரோ ..!!!)


No comments:

Post a Comment