லாஓசி
விழிப்பு எப்பொழுது வருகிறதென அறிய
இயல்வதில்லை எவ்வளவு முனைந்தாலும். நினைவுகளின் ஏதோ சிக்கலில் இருந்து
விடுபடுகையில் தான் விழித்துவிட்டேன் என்ற பிரக்னையே எழுகிறது. எழும்ப மனமில்லாமல்
படுக்கையறை ஜன்னல் வழி ஓசைகளை அவதானித்தபடி நேரம் கடத்தினாலும் மனம் அமைதியாய்
இருப்பதில்லை, தன்னிச்சையாக என்னவெல்லாம்
செய்யலாம் என பட்டியலிட தொடங்கியது.
“பால்காரன நிறுத்திட்டு நானே கடைக்கு போய்
பால் வாங்கிட்டு வரலாம், காலைல நடந்தா உடம்புக்கு
நல்லதுனு சொல்றாங்க. இல்லனா எதிர்மாடி தாத்தாவோட jogging போலாம்.
வந்து குளிச்சிட்டு பாப்புவ ஸ்கூல்ல கொண்டு போய் விட்டா அண்ணி ஆபீஸ்
சீக்கிரம் போவாங்க. அம்மா கரண்ட் பில் கட்டனும்னு சொன்னாங்க,
EB ஆபீஸ் போயிட்டு வரலாம். ரேஷனும் வாங்கி வைச்சா அம்மாவ
கைலையே பிடிக்க முடியாது. அதெல்லாம் இல்லனாகூட தோச்ச துணிய மாடிக்கு கொண்டு போய்
காயவாது போடலாம்.
சாப்பிட்டு காலேஜ் படிக்க ஹாஸ்டல்
போறதுக்கு முன்னாடி பரன்ல போட்ட பெட்டிய ஏறி எடுத்தா farewell போட்டோலாம் இருக்கும். ஸ்கேன் பண்ணி facebookல மல்லிகாவ tag பண்ணா, அதையே
சாக்கா வைச்சி இன்னிக்கு fullஆ chat பண்ணலாம்.
பழைய football ஷூ கூட
அதுலதான் இருக்கும். கைலாசபுரம் கிளப் மேட்சுக்காக வீட்ல அடம்பிடிச்சு
வாங்குனது. Footballனதும் தான் நியாபகம் வருது, அடுத்த வாரம் கூட ஏதோ டோர்ணமெண்ட் இருக்குனு விவேக் சொன்னான், கிரவுண்ட் போய் பிராக்டிஸ் பண்ணலாம் பசங்க கூட. போனவாட்டி
டோர்ணமெண்ட்க்கு சென்னை போறப்ப மெரினா போனது. மணல்ல நடந்து,
அலைல நின்னு.... குளிச்சு செம ஆட்டம் அன்னிக்கு.
பப்பு பைக் ஓட்ட கத்துக்கனும்னு வேற
சொல்றான். நான் தான் முதல்ல சைக்கிள் ஓட்ட கத்துக்கோ அப்பதான் பைக் நல்லா ஓட்ட
முடியும்னு சொல்லி இருகேன். அவனுக்கு சைக்கிள் ஓட்ட கத்து கொடுக்கலாம். உச்சி
பிள்ளையார் கோவில் போய் கூட ரொம்ப நாள் ஆகுது. படி ஏறி மேல போனா இறங்க மனசே வராது.
போன வருஷம் மேல இருந்து திருச்சிய எடுத்த போட்டோக்கு 200+ லைக். trichytrekkers மூலமா
சதுரகிரி, கோத்தகிரி போனப்ப
எடுத்த போட்டோக்கும் செம ரெஸ்பான்ஸ். அடுத்த வாரம் தலமலைக்கு treck இருக்கு, போலாம். மலைல
தங்குறது தனி experience. அந்த அமைதி,
தனிமை, இயற்கை நரகத்துல இருந்து விடுதலை, மலை மேலனு இல்ல மலை ஏறுறதும். ஒவ்வொரு கல்லுல பாதம் வைக்றப்பையும்
வழுக்குமோன்ற பயம், சிலப்ப துணிஞ்சு என்னதான் ஆகபோதுனு கால்
வைக்றப்ப...! ஒவ்வொரு treckகும் புது ஜனனம்! treckக்கு பைக்லையே போகலாம். நினைச்ச இடத்துல நிறுத்தி சாப்பிட்டு, பல கிலோமீட்டர் டிரைவிங்கும் செம experience. நேரம்
கிடைச்சா நடுவுல ஏதாவது கிராமத்துல நிறுத்தி சுத்தி பார்த்து வயல்வரப்புனு சேத்துல
நடந்து கிணறு இல்ல ஏரில குளிக்கலாம். கூடவே இனிமே வண்டி ஒட்டுறப்ப மொபைல்ல
எடுக்காம எதிர வர வண்டிய கவனிச்சு ஓட்டலாம். என்ன பண்ணா என்ன
போன கால் வரவா போது?!
No comments:
Post a Comment