Friday, 26 July 2013

Story-64 கருவறைகருவறை

"சுசீலா நீதான் போய் ஒரு டாக்டரை பார்க்க கூடாதா".


"நா என்னம்மா பண்றது நானும் இப்பபோலாம் அப்ப போலாமுனு, இரண்டு வருடம் போச்சு".


"மாப்பிள்ளையை கேட்டுப் பாத்தியா".


"இல்லமா, அவரும் இதபத்தி எதுவுமே பேசல  டாக்டரை போய் பார்த்து அவர் பாட்டுக்கு இனிமே குழந்தையே பொறக்காதுன்னு சொல்லிட்டார்னா".


"சீ, முதல்லப் போய் வாய்யக் கழுவு".


'இல்லமா எனக்கும் அப்படி ஒரு சந்தேகம் இருக்கு. அவர்கிட்ட எந்த குறையும்மில்ல என்கிட்டதான்னு"


"என்னா அப்படி சொல்லிட்ட, எனக்கு பதினேழு வயசுல கல்யாணம் ஆச்சு அடுத்த வருசமே உங்க அக்கா பொறந்தா, அதுக்கு அடுத்த வருசமே நீ பொறந்த, நம்ம குலம் விர்த்தி.  அத விடு உங்க அக்காவ பாரு. அவளுக்கு கல்யாணம் ஆயி ஒரு வருசத்தல சரண் பொறந்தான், நம்ம வீட்டல யாருக்கும் அந்த பிரச்சனைக் கிடையாது".


"சரிமா இந்த வாட்டி அதுக்கு ஒரு முடிவு பண்ணுவோம்".


சுசீலாவுக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருசம் ஆகியும் குழந்தைப் பெறக்கவில்லை. சுசீலாவுக்கு அப்பா கிடையாது.  சுசீலா பொறந்த வருஷத்தில் அவர் இறந்து போய்விட்டார்.  சுசீலா அம்மா வழி தாத்தா வசதியாகயிருந்தினால் அவர்கள் சில கஷ்டங்களுடன் கரை சேர்ந்தனர்.  சுசீலாவின் அப்பா இறந்ததிலிருந்து அவள் அம்மா படாத கஷ்டமே கிடையாது.  சுசீலாவின் அம்மாவை இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்து கொள்ள அவள் மாமா தயாரகயிருந்தார்.  ஆனால் சுசீலாவின் அம்மா ஒத்துக் கொள்ளவில்லை.  அது தனது குழந்தைகளை பாதித்து விடும் என்று எண்ணினாள்.

சுசீலாவுக்கு கல்யாணம் செய்து முடித்தவுடன் தனது வாழ்வில் எல்லா கடமைகளும் முடிந்து விட்டது என்று எண்ணியிருந்த அவள், தனது மகளுக்கு குழந்தை பாக்கியமில்லை என்ற கவலை அவள் மனதை உறுத்தியது.  சுசீலாவின் கணவன் சேகர். இந்தியன் பேங்கில் கேசியராக வேலைப்பார்க்கிறான்.  இது நாள் வரையும் அவன் சுசீலாவிடம் குழந்தை விஷயத்தை பற்றி எதுவுமே கேட்டதில்லை.  அதுவே சுசீலா பெரும் பாரமாக இருந்தது.  ஒரு வேளை தன் கணவனுக்கு குறையிருக்குமோ என்ற சந்தேகம் சுசீலாவிடம் இருந்தது.

"சுசீலா"

  
"என்னம்மா"


"டாக்டர் செண்பகமுனு உறையூரில் இருக்காங்களே அவங்க ரொம்ப ராசியானவங்களாம். நீ போய் அவங்கள பார்த்துட்டு வந்துடேன்".


"பார்க்கலாம்மா"


"பார்க்கலாமன்று சொல்லாத, நம்ப பக்கத்து வீட்டு கனகா மகளுக்கு இப்படி இருந்துச்சாம்.  அந்த டாக்டர் போய் பார்த்து இப்ப இரண்டு குழந்தையிருக்கு".


"சரிமா அவர்தான் வெள்ளிகிழமை மெட்ராஸ்லிருந்து வராரே நானும் அவரும்போய் பார்த்து விட்டு வர்றோம்".

    
வெள்ளிக்கிழமை சுசிலாவின் கணவன் சேகர் சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்து சேர்ந்தான்.  நல்ல உயரம், அதற்கு தகுந்த உடம்பு, செவத்த நிறம்.

"வாங்க மாப்பிள்ளை, பிரயாணம்மலா சுகமா இருந்துச்சா" என்று சுசீலாவின் அம்மா நலம் விசாரித்தாள்.


"அதல்லாம் நல்லாயிருந்துச்சு அத்த"


"சுசீலா எங்க"


"அவ கோயிலுக்கு போயிருக்கா இப்ப வந்துடுவா, நீங்க வாங்க. காபி போடட்டுமா?


 "இல்ல இப்பதா குடிச்சுட்டு வந்தேன்"


 "என்ன மாப்பிள்ளை சுசீலா டாக்டர் விசயமா ஏதாவது சொன்னாளா"


 "ஆமா சொன்னா, அதுக்கு தான் ஒரு வாரம் லீவு போட்டு வந்தேன்".


 "மாப்பிள்ளை ஒரு வாட்டி அப்படியே சமயபுரம் போய்ட்டு வந்துடுங்க".

    
  "சரி அத்த".


சனிக்கிழமை காலை பத்து மணிக்கு டாக்டரை பார்க்க சுசீலாவும் அவள் கணவனும் சென்றனர்.  செண்பகம் MBBS, M.D என்ற போர்டை தாண்டி உள்ளே சென்றனர்.  அங்க சிறு இரச்சலாக இருந்தது.  ஐந்து பெண்கள் சுசீலாவுக்கு முன் இருந்தனர்.  அதில் இரண்டு பேர் கர்பிணிகள். அதை பார்த்த சுசீலாவுக்கு சிறிது பொறாமையாக இருந்தது. அரை மணிநேரம் காத்திருந்தப் பிறகு ஒரு பதினெட்டு வயது பெண், டாக்டர் அறையிலிருந்து வெளியே வந்தாள்.

 "சுசீலா சேகர் யாரு".

    
"நா தான்" என்று சுசீலா பதில் அளித்தான். சுசீலாவும் அவள் கணவனும் மெல்ல உள்ளே சென்றனர்.


 "வணக்கம்" டாக்டர்".


"குட்மானிங்".


டாக்டருக்கு ஒரு அம்பதிலிருந்து அம்பத்தைந்து வயதுயிருக்கலாம்.  சிறிது நேர மௌனத்திற்கு பிறகு

"சொல்லுங்க என்னப்பிரச்சனை"


 உடனே சுசீலா பேச ஆரம்பித்தாள்." டாக்டர் கல்யாணம் ஆயி இரண்டு வருசமா குழந்தையில்ல".  


'சரி உங்க வயசு என்ன', என்று டாக்டர் கேட்டார்.


"எனக்கு 24 அவருக்கு 30 ".


"இப்பதான் முதல்ல டாக்டர்கிட்ட வரிங்கலா இல்ல இதுக்கு முன்னாடி".


"இல்ல டாக்டர், இதான் முதல் தடவ".


"சரி நீங்க வாங்க' என்று சுசீலாவை அழைத்து இரத்த அழுத்தம் போன்ற வழக்கமாக செய்யும்  டெஸ்டை செய்தார்.  அவள் கனவனையும் அழைத்து அதே பரிசோதனையை செய்தார்".


"சரி நீங்க கொஞ்சம் வெளியே இருங்க என்று சேகரை டாக்டர் வெளியே அனுப்பினார்".


"சொல்லுங்க, நார்மல் செக்ஸ்ல எந்த பிரச்சனையும் இல்லையே".


"அதல்லாமயில்ல டாக்டர் நார்மல்".

    
"நார்மலா ஒரு வாரத்துக்கு எத்தனை வாட்டி வச்சுக்குவீங்க".


"நாலு அல்லது ஐந்து வாட்டி" என்று ஒரு வித வெக்கத்தோடு சுசீலா பதில் அளித்தாள்.மேலும் சில கேள்விகள் கேட்டார்.


"சரிம்மா சில டெஸ்ட்  எழுதி தரரேன் அததெல்லாம் முதல்ல எடுத்துட்டு வாங்க.  இங்கேயே லேப் இருக்கு.  ஒரு மணிநேரம் வெயிட் பண்ணினா ரிசல்ட் கொடுத்துடுவாங்க".


"சரிங்க. என்று சுசீலா பதில் அளித்தாள்".


"சரி நீங்க போய்ட்டு அவர்ர உள்ளே அனுப்புங்க".


"சரிங்க" என்று சொல்லிவிட்டு சுசீலா வெளியே சென்றாள்.


"சேகர் உள்ளே வந்தார்.  சுசீலாவிடம் கேட்ட அதே கேள்விகளை சேகரிடமும் கேட்கப்பட்டது.  கிட்டத்தட்ட இருவரின் பதிலும் ஒத்து போனது.  சேகருக்கும்  சில டெஸ்ட்கள் எழுதி தரப்பட்டது.  இருவரும் ஒருவித பயத்துடன் ரிஸல்ட்டை எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். தன்னிடம் குறையிருக்குமோ என்ற பயம் இருவரிடமும் இருந்தது.


"வாங்க போய் ஏதாவது சாப்பிட்டு வரலாம்".


"வேணா, ஒரு வழியா எல்லாத்தையும் முடிச்சுட்டு போயிடலாம்".

    
"அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரிஸல்ட் வந்தது".


சுசீலா சேகர் உள்ளே வாங்க என்று மீண்டும் அதே பெண் அழைத்தாள். இருவரும் உள்ளே சென்றனர்.  டாக்டர் இருவரையும் உட்கார சொன்னார்.  இருவருமே டாக்டரின் முகத்தை ஆவலுடன் பார்த்து கொண்டுயிருந்தனர்.

"உங்க ரிசல்ட் பார்த்தேன். சேகருக்கு எந்த பிராப்ளமும் இல்லை உங்களுக்கு தான் கர்பப்பையில் பிரச்சனை.  அதனால் உங்களால் குழந்தையை பெத்துக்க முடியாது" என்று ஒரு இடியை சுசீலாவின் மனதில் இறக்கினார்.  சுசீலாவுக்கு உடனே கண்கலங்கி கண்ணீர் வழிந்தது.  அவளாள்  பேச முடியவில்லை.  சேகர் அவளை சமதானம் படுத்தினார்.


"ஏன்?" என்று சுசீலா கேட்ட கேள்விக்கு ஏகப்பட்ட மருத்துவ விளக்கம் அளித்தார் டாக்டர்.


"இங்க பாருங்க சுசீலா, என்னோட கீளினிக்கு வர பத்துப் பேர்ல இரண்டு மூணு பேருக்கு இந்த மாதிரி பிராபளம் இருக்கு.  இது உங்க தப்பில்லை" என்று  டாக்டர் சமதானம் படுத்தினார்.   இதை அனைத்தையும் சேகர் அமைதியாக பார்த்து கொண்டு இருந்தார். உங்களுக்கு குழந்தை கிடைக்கிறதுக்கு வேறு வழிகள் இருக்கு. நீங்க தத்து எடுத்துக்கலாம்..". உடனே சேகர் வழி மரித்து.


"டாக்டர் டெஸ்ட்டியூப் பேபி என்றான்".


"அவங்க கர்ப்பபையில கோளாறுயிருக்கிறதால அவங்களா அத செய்ய முடியாது" என்று சொன்ன உடன் சுசீலாவுக்கு மேலும் கண்ணீர் வழிந்தது.


"ஆனா ஒரு வழியிருக்குது" என்று டாக்டர் சொன்னவுடன் சுசீலா அழுகையை நிறுத்திவிட்டு டாக்டரை பார்த்தாள்.


"சேகருக்கு எந்த பிரச்சனையும் இல்லாதனால அவரோட உயிர் அணுவை எடுத்து இன்னொரு பெண்னோட கருமுட்டைகளை சேர்த்து அவங்க கர்ப்பபையில் வளர வைக்கலாம்.  இந்த மாதிரி செய்றவங்களுக்கு வாடகை தாயினு சொல்லுவாங்க.  அது கிட்ட தட்ட உங்க குழந்தை மாதிரிதான் ஆனா இதுக்கு ரொம்ப பணம் செலவாகும்.  ஏன்னா, இதுக்கு நீங்க பேப்பர்ல விளம்பரம் கொடுக்கனும்.  அவங்களொட மருந்து செலவு நீங்கத்தான் பார்த்துகனும் என்று சொல்ல சொல்ல சுசீலா நம்பிக்கை இழந்தாள்.  ஆனா இந்த மாதிரி நடக்குது.  இதனால மனசை  விட்டுராதீங்க.  முயற்சி பண்ணா முடியாதது எதுவுமே இல்லை.  வேணா உங்க சொந்தகாரவங்க யாரையாவது கேட்டு பாருங்களேன்" என்று டாக்டர் சொன்ன உடனே சுசீலாவுக்கு தனது அக்கா ஞாபகம் வந்து.  அவளது கணவனின் குணமும் ஞாபகம் வந்தது.  உடனே அந்த முயற்சியை கைவிட்டாள். டாக்டர் தனது உரையை முடித்தார்.


 "சரி டாக்டர் அப்ப நாங்க வர்றோம்" என்று இருவருமே எழுந்தனர்.


 "மனசை விட்டுடாதீங்க " என்று டாக்டர் நம்பிக்கை தெரிவித்து வழி அனுப்பினார்.


"வெளியே வந்த இருவருமே மௌனமாக நடந்தனர்".


 "ஏங்க நா ஒன்று கேட்பே இல்லைனு சொல்ல கூடாது ".


"சொல்லு".


"நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும்".


"இன்னொரு வாட்டி இப்படி பேசுன அடிச்சு பல்ல உடச்சுடுவேன்" என்றும் பார்க்காத கோப முகத்துடன் சேகரை பார்த்தாள்.


வீட்டுக்கு வந்த சுசீலா தன் தாயிடம் நடந்ததை கூறினாள்.  இருவரும் வெகுநேரம் அழுதனர்.

"ஒரு பாவமும் செய்யாத என் பிள்ளைக்கா இப்படி நடக்கணும்" என்று சொல்லி சுசீலாவின் அம்மா கதறினாள்.


சுசீலாவுக்கும் அவள் தாய்க்கும் தத்து எடுப்பதில் உடன் பாடுயில்லை. அதற்கு பல காரணங்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்ன காரணத்தை சேகர்ரால் ஏத்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் அவர்கள் விருப்பத்தை மிறி அவனால் செயல்பட முடியவில்லை.

 இப்படியே மூன்று மாதங்கள் ஒடின.  சேகர் மன உறுதியுடன் பேப்பரில் விளம்பரம் கொடுத்தான்.  அதை பார்த்து இரண்டு பேர் முன் வந்தனர்.  ஆனால் அவர்கள் கேட்ட பணத்தை சேகர் தனது பேங்க்கில் கொள்ளை அடித்ததால் தான் தர முடியும்.  கிட்டத்தட்ட இருவருமே அந்த நம்பிக்கையை இழந்தனர். சுசீலா ஆறு மாதம் கழித்து மீண்டும் திருச்சிக்கு தன் தாயை பார்க்க வந்தாள்.


"என்ன சுசீலா யாராவுது விளம்பரம் பார்த்துட்டு வந்தாங்களா என்று சுசீலாவின் அம்மா கேட்டாள்.  


"எங்கம்மா யாரும் வரல்ல".


"அது வேணாம்னு விட்டுட்டோம்" என்று ஒருவித விரக்தியுடன் பதில் சொன்னாள்.


"சுசீலா நா ஒன்னு சொல்லுவேன் தப்பா எடுத்துக்க கூடாது" 


"சொல்லுமா"


"நா வேன்னா ஒனக்கு ஒரு குழந்தையை பெத்து கொடுக்கிறேன்" என்று சுசீலாவின் தாய் சொன்னாள்.


"என்னது!!" என்று ஒருவித அதிர்ச்சியுடன் சுசீலா பார்த்தாள்.


"என்னம்மா இததெல்லாம் நடக்கிற காரியமா".


"என்னால முடியும் அதுக்கு ஏன் உடம்புல சக்தியிருக்கு."


"அப்படியே முடிஞ்சாலும் ஊர் என்னமா பேசும்".


"போடி இந்த ஊர்ல எதத்தான் ஏத்துக்குது, நம்ம கஷ்டப்பட்டப்போ இந்த ஊர் என்ன செஞ்ச்சு உங்கப்பா இறந்தப்போ எவ்வளவோபேர் என் பேர்ல்ல ஆசை பட்டாங்களே தவற யாரும் அனுதாபப்படல. நாலு பேர் என்ன சொல்லுவாங்கன்னு பார்த்தா நம்மால வாழ முடியாது.  நீ கேட்டப்ப இந்த ஊர்லயிருந்து யார் வந்தாங்க.  உன்ன மலடினுதான் சொன்னாங்க.  எவளோ பெத்து தரப்போற குழந்தையை உங்க அம்மா பெத்து தரா. இது எனக்கு தப்பா தெரியல, நீ கேட்டப்போ யாரும் ஒத்துக்கல இனிமேலும் யாரும் ஒத்துக்க மாட்டாங்க. இந்த ஊர்ல கஷ்ட்டமாயிருந்தா வேற ஊர்ல போய் பெத்து தர்ரேன்" என்று பல உதாரணங்கள் சொல்லி எப்படியொ சுசீலாவை சம்மதிக்க வைத்தாள்.


"வா போய் டாக்டரை பார்க்கலாம் என்று தன் சொன்னதுக்கு அரை மனதோடு சுசீலா ஒத்து கொண்டாள்.  இருவரும் டாக்டரை பார்க்க கிளம்பினர். டாக்டர் இதைக்கேட்டு பெரிதும் ஆச்சரியப்பட்டார்.  


"என் மருத்துவ வாழ்க்கையில் இப்படி நடந்ததேயில்லை.  நம்ம தமிழ்நாட்டில் இப்படி முற்போக்கு சிந்தனையுடன் பெண்களும் இருக்காங்களா" என்று சொல்லி இருவரையும் புகழ்ந்து தள்ளினார்.  சுசீலாவின் அம்மாவை டாக்டர் பரிசோதித்து அவள் குழந்தை பெற தகுதியானவள் என்று கூறினார். சேகர் இந்த விஷயத்தை முதல்ல மறுத்தாலும் பிறகு ஒத்துக் கொண்டான். திருச்யில் இருந்தால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு பதில் சொல்லி மாளாது என்று அவர்கள் ஊட்டிக்கு விட்டை மாற்றிக் கொண்டார்கள்.


  ஒரு வருடம் கழித்து ஒரு அழகான பெண் குழந்தை அவள் தாய்க்கு பிறந்தது.  குழந்தையை பெற்றுக் கொண்டு தன் தாயின் பாதங்களை கண்ணீரால் நனைத்தாள்.


                                                            *****************

No comments:

Post a Comment