Wednesday 10 July 2013

Story-27 Pepper அதிகமா ஒரு half boil

Pepper அதிகமா ஒரு half boil
"செப்டம்பர் மாதம் .. அக்டோபர் மாதம் ... வாழ்வின் துன்பத்தை தொலைத்துவிட்டோம் " ரஹ்மான் இசையில் சோனி w810i மொபைல் அலற.
மறுமுனையில் "நீ காற்று , நான் மரம் என்ன சொன்னாலும் தலை ஆட்டுவேன் " என்று வைரமுத்து காதல் பாடுகிறார்.
இருமுனையிலும்  பாடல்  நிற்க, கால் அட்டென் ஆகிறது   

அவன்: ஹலோ.. ஏய்  sorry !!

அவள்: "73 Missed call... போன் அட்டென் பண்ணாம அப்படி என்ன வேலை?" 

"சின்ன மீட்டிங், திடிர்னு mobileல deskலையே விட்டுட்டேன் "

"பொய் சொல்லாத" 

"என் எதையுமே நம்ப மாட்டேன்கற?" 

"நீ தான் நிறைய பொய் சொல்ல ஆரம்பிச்சுட்ட " 

"இப்ப ஏன் கத்துற , எதுக்கு போன் பண்ண அத சொல்லு " 

"IBM conference - registration last date அத சொல்ல தான்... நியாபகம்
இருக்கா?"

"அதுக்கு ,snooze on பண்ண அலாரம் மாதிரி 70 தடவை கால் அடிபியா?" 

"70 தடவை கால் அடிச்ச, இப்ப தான் அட்டென் பண்ணற .."

"ஒரு applicationக்கு ஏண்டி இவ்ளோ பிரச்சனை பண்ற ? ஒரு msgல அனுப்பி
இருக்கலாம்ல "

"பொய் சொல்லாத , ஒரு msg கூட பாக்கல  நீ??  ச்ச !!"

 கால் கட்டாக , அவளின் சூடு மொபைல்இன் காதில் மிச்சம் இருந்தது .. ஏனோ புத்தி திரும்ப கால் பண்ணாமல்,மெசேஜ் படிக்கச் தூண்டியது .. ஷார்ப் ஆறு மணிக்கே முதல் மெசேஜ் வந்திருந்திருக்கிறது "பொறுக்கி .. கால் அட்டென் பண்ணாம எங்க டா போய்ட்ட ?"

அடுத்த ரெண்டு நிமிசத்துல "டேய் ! மொபைல கைலையே வச்சுக்கிட்டு reply பண்ண மாட்டேன்குரியா ?". ஆறேகால் தாண்டி  முன்றாவது மெசேஜ் "ப்ளீஸ் டா செல்லம், வோய் நாட் ரிப்லைங் , எதுனா கோவமா ??" இனி அவள் தான் கோபம்
அடைந்திருப்பாள் என்பதை உண்ணர்ந்து .. ஆறரை மணி போல் வந்திருந்த  messagai திறக்க "think yo re busy பிஸி , conferenceku apply  பண்ணிடு "

 அடுத்த மெசேஜ் ஏழரை மணி தாண்டி வந்திருந்திருக்கிறது.. "இன்னும் busyஆ  ம்ம்ம் .ஒரு ரிப்ளை, ஒரு கால் பண்ண எவ்ளோ நேரம் ஆகும்? " அவளின் கோபம் உணர்ந்தும், சிறிதும் சலனமில்லாமல் , அடுத்த மெசேஜ் எட்டு மணிக்கு வந்திருக்கு என்பதை நோட்டமிட்டு படிக்கிறான் "டேய் ரொம்ப பண்ணாதடா , எங்க இருக்கனு சொல்லு அட்லீஸ்ட் , ராஜீவ் கூட போயிருக்கியா ?"

தொடர்ந்து " wy no reply, ச்ச! நான் இவ்ளோ சொல்லியும் நீ மாற மாட்டேன்கிரில?"
"முன்ன மாதிரி இல்ல நீ , ரொம்பவே மாறிட்ட , நல்லாவே தெரியுது.. இங்க ஒருத்தீ இருக்குற நினைப்பு இருந்தா இப்படி சுத்துவியா? உன்கிட்ட இதெல்லாம் பேசுறதே தப்பு , bye"  இந்த bye க்கு அப்புறமே 32 மெசேஜ்.  ஆறரை மணிக்கு ஆரம்பித்த பொருமலும் , ஏழரை மணிக்கு பின் தொடங்கிய அழுகையும் , முழூ காப்பியமாக 32 அகராதியாக வந்துள்ளது.. மித்தம் படிக்க விருப்பம் இல்லாமல் ரெட் பட்டன் அழுத்தி பாக்கெட்டில் போட , சிறு வினாடிகளில் " செப்டெம்பர் மாதம் , அக்டோபர் மாதம், வாழ்வின் துன்பத்தை தொலைத்துவிட்டோம்..." என கதற தொடங்குகிறது.  

கால் எடுத்த நொடியே "கால் கட் ஆனா திரும்ப ஒரு கால் கூட பண்ண முடியல உனக்கு , atleast ஒரு sorryகூட அனுப்ப முடியலைல உன்னக்கு ?" என்று கொதிக்கிறாள்.
"அப்படி இல்ல.... உன் மெசேஜ் தான் படிச்சிட்டு இருந்தேன். ஹலோ ஒரு நிமிஷம்   Battery low, I'll call you later"
"உன்னக்கு என்கிட்ட  பேச விருப்பமில்லனு சொல்லு bye.. வச்சுடறேன்"

கால் கட் ஆனபின் , உரக்க சொல்கிறான்  " தம்பி , Pepper அதிகமா ஒரு half boil "

No comments:

Post a Comment