Saturday 27 July 2013

Story-67 டிஜிட்டல் பேனர்



டிஜிட்டல் பேனர்
-கோபிச்சண்முகம்
ஆறுமுகம் தன்னோட கடை திறக்கிற பணிகள்ல மும்முரமா இருந்தான்.   கடைக்கு கட்ட வேண்டிய அட்வான்ஸ் பணத்தை உறவினர் ஒருவரிடம் கேட்டிருந்தான்

மூனு மாசத்துக்குள்ள கொடுத்திடனும்டா ஏதோபுள்ள தொழில்பண்ண கேக்கிறயேன்னுதான் வேற எங்கயோ வாங்கி தரேன்னு சொல்லி இருக்கார் உங்கசித்தப்பா

என்று சொன்னார்கள் அந்த பின்பு உள்ளே போய் போனில் பேசிவிட்டு வந்து

பேங்க்குக்கு வர சொல்றார் சித்தப்பா அங்க அவங்க பிரண்டு வந்திருக்காராம் வாங்கி தருவாறு

பேங்க்குக்கு சென்றவுடன்  சித்தப்பா வெளியே காத்திருக்க சொன்னார் .சிறிது நேரத்தில் சித்தப்பாவின் நண்பர் கொண்டு வந்து  கொடுத்தார் நூற்றுக்கு ஐந்து ரூபாய் வட்டி மாதம் சரியாக பத்தாம் தேதிக்கு முன்னால் வட்டி வந்து விடவேண்டும் என்றும் மூன்று மாதத்தில் மொத்த பணத்தையும் கொடுத்துவிடவேண்டும் என்றும் சொல்லி அனுப்பினார்

அன்று இரவே கொடுத்தாகிவிட்டது அட்வான்ஸ் தொகையை .கடையின் இடம் ஒரு பிளாட்டர் மற்றும் ஒரு கணினியை வைக்க போது மானதாகவே இருந்தது.ஆனாலும் அதிக வாடகையென்று அப்பா சொன்னார்  இருந்தாலும் முக்கிய வீதி கொஞ்சம் வளர்ந்த பிறகு வேறு இடம் பார்த்துக் கொள்ளலாம் என்பது ஆறுமுகத்தின் எண்ணம்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே நன்றாக படம் வரைவான் பெரிய ஓவியனாக வரவேண்டும் என்பது அவன் கனவு. பத்தாம் வகுப்பு  படிக்கும்போது வீட்டில் மிகவும் கடன் பிரச்சனைகள் அதனால் தொடர்ந்து படிக்கவில்லை என கூறிவிட்டான். எவ்வளவோ போராடிப் பார்த்தார்  அப்பா பிடிவாதமாய் நின்றான்.

டிஜிட்டல் பேனர்கள் அறிமுகமாகி வளர்ந்து கொண்டிருந்தது அப்போது அதில் நல்ல வருமானம் . தெரிந்த நண்பரின் மூலமாக டிஜிட்டல் பேனர் செய்யும் ஒருவரிடம் கொண்டுபோய் விட்டார் 

 ஏறக்குறைய எட்டு  வருடங்கள் அங்கே இருந்தான் இப்போது அவரிடம் நான்கு பேர் வேலை செய்கிறார்கள், ஒன்றிரண்டு பேர் தனியாக சென்று கடை வைத்து விட்டார்கள் ஆனால் ஆறுமுகத்தின் ஏழ்மையால் அங்கேயே இருந்தான் .

 இப்போது ஆறுமுகத்தின் முதலாளி செல்வ செழிப்போடு இருக்கிறார் ஆரம்ப காலத்திலிருந்து தனக்காக உழைத்த ஆறுமுகத்திற்கு  கடனாக ஒரு லட்சரூபாய்  கொடுத்து தனியாக கடை வைத்துக் கொள்ள சொல்லியிருக்கிறார். சீக்கிரத்தில் கொடுத்துவிடவேண்டும் மென்பதும் கட்டளை.

நண்பன் ஒருவன் எலக்ட்ரிசனாக இருந்தான் அவனுக்குபோன் செய்துசெய்து அழுத்துபோய்விட்டது இரண்டு நாட்களாக முன்னாடியே சாவியை வாங்கி சுத்தம் செய்து பிளாட்டரும்  கம்யூட்டரும் வைத்துவிட்டார்கள் உள்ளே .அவை பிட் செய்யப்படாமல் இருக்கிறது சுவற்றில் பிளக்பாக்ஸ் அடித்து தரவேண்டும் அவனிடம் கடந்த வாரத்திலேயே சொல்லி ஆகிவிட்டது.சரியாக இரண்டு நாள் முன்னதாக வந்து முடித்து தருகிறேன் என்று சொல்லியிருந்தான்.

இண்டர்னெட் கனெக்‌ஷனுக்காக பி.எஸ்.என்.எல் ஆபீஸ் போயிருந்தான்  அவர்கள் புகைப்படசான்றும் இருப்பிடசான்றும் வேண்டுமென்றார்கள் அதோடு வாடகை கடையென்றால் அதற்கு ரெண்டல் அக்ரிமெண்ட் காபியும்  வேண்டும் என்றார்கள் அதனால் நாளை வந்து அப்ளிகேசனை பில் பண்ணி தருவதாக சொல்லி விட்டு  கட்டண விவரங்களை மட்டும் கேட்டுக்கொண்டுடான்.

 பிராட்பேண்டுக்கும் இண்டர்நெட் கனெக்சனுக்கும்,  போனுக்கும் டெபாசிட்டாக ஆயிரத்து ஐநூறு ரூபாயும் அதோடு இன்ஸ்டாலேசன் சார்ஜ் என 1000 ரூபாயும் வரும் என்றார்கள். மாதக் கட்டணம் தொள்ளாயிரம் + வரி என்றால் எல்லாம் சரி ஆனால் ஒரு டெலிபோன் வொயரை பக்கத்து கம்பத்திலிருந்து எடுத்து வந்து கனெக்‌ஷன் கொடுக்க ஆயிரம் ரூபாயா என்று தோன்றியது

போனுக்கு டெபாசிட்டாக கட்ட வேண்டிய ஆயித்து ஐநூறு,  பூஜை செலவுகள், சாமி படம், விளக்கு என  நீண்ட பட்டியல் ஒன்று இருப்பது நினைவுக்கு வந்தது ஒரு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயாவது தேவைப்படும்.

பரிமளா அக்காவின் நியாபகம் வந்தது. பெரியப்பாவின் மகள்  வெளியூரில்தான் கட்டிக் கொடுத்தார்கள் இங்கேயே வந்து விட்டார்கள். ஆறுமுகத்தின் மீது பாசம் கொண்டவள் . அக்காவிடம் பணம் கடனாக கேட்டு பார்க்கலாமா என்று தோன்றியது .

பரிமளா அக்காவின் வீட்டு வாசலில் நின்று  அழைத்தான்

உள்ளே வாடா பர்மிசன் எல்லாம் கேட்டிட்டு நிக்கிற

 தண்ணீர் கொடுத்துவிட்டு

இருடா டீ போட்டுட்டு வரேன்

வேண்டாம்கா இப்போ தான் சாப்டேன்

டேய் பரவாயில்ல குடிடா ஒன்னும் ஆகாது

      உள்ளே சென்று டீ போட்டுக்கொண்டே

கடை திறக்கிற வேல யெல்லாம் எப்படிடா போகுது

      ஆம் போகுது அக்கா மாமா எங்க

      அவரு கடைல இருக்கார்டா நானும் போகனும் சாப்பாடு செஞ்சிட்டு எடுத்திட்டு போகாலாம்னு வந்தேன்

      இந்தாடா     டீ டம்ளர் கொடுத்துவிட்டு அவளும் குடித்தாள்

 அக்கா….”

சொல்லுடா என்ன

இல்ல பூஜை செலவுக்கும்  போன்  டெபாசிட் கட்டவும் ஒரு 2500 ரூபாய் வேனும் மாமாகிட்ட கொஞ்சம் வாங்கி தாயேன் அப்புறமா தரேன்

எங்கடா உங்க மாமாவே நிறைய பிரச்சனைல இருக்கார். கரண்ட் சரியா இல்லாததால துணிங்கள சரியா தைக்க முடியல  பெங்களூர்க்கு வேலைக்கு போகலாம்னு இருக்கார்

இல்லக்கா மத்ததுக் கெல்லாம் சரி பன்னிட்டேன் இதுக்கு மட்டும் தான் குறையுது

எப்படா வேணும்

ஞாயித்துக் கிழமை கிடைச்சாக்கூட போதும்,போனுக்கு டெபாசிட் திங்கக் கிழமை கட்டிட்டு கூட கனெக்‌ஷன் வாங்கிக்கலாம் மத்த பூஜைக்கு தேவையானதெல்லாம் ஞாயித்துக்கிழமையே வாங்கி வெச்சாதான்  திங்கக் கிழமை கடை திறக்க முடியும் .அன்னைக்குதான் நாள் நல்லாயிருக்காம் அமாவாசை பூஜை பண்ணிடலாம்னு நல்லா வரும்னு பிசினஸ்னு சொல்றாங்க அதான்.

சரிடா நான் எங்கயாவது பைனான்ஸ் வாங்கி தரேன் ஞாயிற்று கிழமை வாரம் வாரம் சரியா கட்டின்னும்

சரிக்கா அத மூவாயிரமா வாங்கி கொடுத்திடேன் ஏன்னா அதுல வட்டி போக 2250 தான் வரும் பத்தாது

சரிடா

நான் கிளம்புறேன்கா மாமாவும் நீயும்  திங்கக்கிழமை வந்திடுங்க

சரிடா பார்த்துப்போ

மின்சாரம் சரியாய் இருப்பதில்லை அடிக்கடி கட் ஆகிறது ஒரு நாளைக்கு ஆறுமணி நேரம் இருந்தாலே அதிகம் கடனையெல்லாம் அடைத்துவிட்டு சீக்கிரமாக ஒரு யூ.பி.எஸ் வாங்கிவிட வேண்டும் இல்லையென்றால் ரொம்ப கடினம் என்று நினைத்துக் கொண்டே தூங்கிவிட்டான்



      சனிக்கிழமை காலை எலக்ட்ரிசனுக்கு போன் செய்தான்

எங்கடா போன எத்தனமுறை போன் பன்றது

ஊருக்கு போயிட்டன்  இன்னைக்கு மெசினெல்லாம் மாட்டிடலாம்

ம் சரிடா

அவனை அழைத்துக் கொண்டுபோய் அனைத்து வேலைகளும் முடித்தாகிவிட்டது சனிக்கிழமையே . பரிமளா அக்காவும் சொன்னபடி ஞாயிற்று கிழமை காலை அழைத்துக்கொண்டு போய் வாங்கி கொடுத்து விட்டாள்.

திங்கள்கிழமை காலை எல்லாரும் வந்துவிட்டார்கள் முதலாளி மட்டும் தாமதமாக வருவதாய் சொல்லி இருந்தார் .சித்தப்பா தன்னால் வர முடியாது என்று சித்தியை அனுப்பி இருந்தார் , பரிமளா அக்காவும் மாமாவும் வந்துவிட்டார்கள் பூஜை எல்லாம் முடிந்தபின்பு வந்துவிட்டு செல்லும் போது அவரது ரெகுலர் கஸ்டமர் ஒருவரது டிஜிட்டல் பேனர் ஆர்டரை ஆறுமுகத்திடம் கொடுத்து செய்து கொடுக்கச் சென்னார் முதலாளி.

ஆறுமுகத்திற்கு சந்தோசமாக இருந்தது அனைத்து கடனையும் அடைத்து ஒரு வருடத்திற்குள் இடமொன்று வாங்கி வீடு கட்டிவிட வேண்டுமென்றெல்லாம்  கனவு கண்டான் .

ஆறு மாதங்கள் சென்றன மின் தடை அப்படியே தான் இருந்தது. அதனால் சரிவர ஆர்டர்களை சொன்ன நேரத்தில் செய்துதரமுடியவில்லை. அடுத்த மாதமே  அரசானை ஒன்று வந்தது சாலையில் அநாவசியமாக விளம்பர பேனர்கள் வைக்க கூடாதென்றும் அப்படி வைக்க வேண்டுமென்றால்  கலெக்டரிடம் அனுமதி வாங்க வேண்டுமென்றும் .அனுமதி வாங்கி பேனர் வைக்க வேண்டியிருந்ததால் அதிகமானோர் மற்ற வழிகளை மேற்கொண்டார்கள் விளம்பரங்களுக்கு . ஆர்டர்கள் குறைந்து கொண்டே வந்தது வாடகையும் மின் கட்டணமும் கட்டுவதே கடினமாக இருந்தது.

 கல்யாண சீசன், பள்ளி கல்லூரி சேர்க்கை சீசன் , எலெக்‌ஷன் சீசன் என  சீசன்களை பார்க்கும் தொழிலாக மாறிவிட்டது டிஜிட்டல் பேனர் தொழிலும்.

 இரண்டு வருடம் ஆகியிருந்தது கடை  திறந்து. இன்னமும் வட்டி மட்டுமே கட்டிக் கொண்டிருக்கிறான் கடன்கள் அப்படியேதான் இருந்தது.என்றாவது ஒரு நாள் அனைத்து கடன்களையும் அடைத்து வீட்டை கட்டலாம்  என்ற கனவுகளோடு உழைத்துக் கொண்டிருக்கிறான் ஆறுமுகம்..,

No comments:

Post a Comment