Sunday 28 July 2013

Story-69 ஒரு school class room



MY (மை) PEN 
by Rufus Auxilia
ஒரு school class room
empty black board
Black board க்கு மேல சிரிச்சிட்டே இருக்கும் காந்தி தாத்தா
நெறைய students இருக்காங்க . இங்க தான் இருக்கான் சரண் . அதோ அந்த second bench பாருங்க. உயரமா, நெத்தில கூட பெரிய மச்சம் இருக்கே..... அவனே தான். அவன் நாலாவது படிக்கிறான் சொன்ன யாரும் நம்ப மாட்டாங்க...  but நாம அவன் ID card பார்த்து confirm பண்ணிக்கலாம்.
இது தான் அவன் மனத்தில் இப்போது ஓடி கொண்டிருக்கிறது…………..
.." சே என்ன ஒரு அழகான ink pen... dad's gift ... போன வருசம் " star of the year " award வாங்குனத்துக்கு....
blue colour, golden nib... wow.. என்று எழுதி பார்த்தான்... சே, எவ்ளோ நல்லா எழுதுது. 3 rd படிக்கும்போதே ஸ்கூல் ink pen allow பண்ணி இருக்கணும்... இனேர்ம் நெறைய ink pens இருந்திருக்கும். என்று கையால் உருட்டி கொண்டே பின்னாடி திரும்பி விஜயை பார்த்தான்.. ,
            விஜய் இன்னும் காமிக்கவே இல்ல!!!!
விஜய் அவசர அவசரமாக எதையோ எழுதி கொண்டிருக்க
trrrrrrrrrrrrrrrrrrriiiiiiiiiiiiiiiiiiiinnnnnnnnnnnnnnnnnnnngggggggggggggggg.
Students, tie your papers pls, u have only five more mins!!!! - science Miss Nancy.
vijay திரும்பி பார்க்காத சோகத்தல அப்படியே டெஸ்க் மேல சாய்ந்த அவன் கண்களில் பெரிய ஏமாற்றம்.
மறுபடியும்
Trrrrrrrrrrrrrrrrrriiiiiiiiiiiiiiiiiiiinnnnnnnnnnnnnnnnnnnggggggggggggggggggggggg.
எல்லோரும் answer sheet கொடுத்து விட்டு வெளியே வந்தனர்....
விஜய் காக வெளியில் நின்று கொண்டிருந்தான்....
டேய் ... இங்க பாரு புது பேனா அப்பா வாங்கி குடுத்தாங்க!!! என்று-  கண்களில் பெருமையும் ஆர்வமும்....
ஆனா அலட்சியமாய் தான் பதில் வந்தது... விஜய் கிட்ட இருந்து
அது ok…….Exam எப்படி பண்ண????
லீவ்ல என்ன டா ப்ளான்????
Summer camp polama???
கண்ணீர் முட்டி கொண்டு வந்தது....
வேகமாக ஓடினான்.... corridor,  entrance, play ground தாண்டி அம்மா நின்னுட்டு இருக்காங்க....
அம்மா....Ink pen super!!!! Semmaiya இருக்கு... விஜய் கிட்ட கூட காமிச்சேன்.... என்று சொன்னான் மூச்சு வாங்கியபடியே!!!
First car la ஏறு….வீட்டுக்கு போலாம்!!
Exam எப்படி பண்ண?  - அம்மா
மா, எனக்கு ஒரு Gold colour pen, Gold Colour nib!!! Pen வேணும்!!! – சரண்!!
Ok!! கண்டிப்பா!!!....
வீடு வரைக்கும் Ink pen பற்றியே பேசி கொண்டு வந்தான்...
அதற்கெல்லாம் அம்மா "ம் " கொட்டி கொண்டே வந்தார்கள்!!
வீட்டிற்குள் நுழைந்ததும், தாத்தா..... என்று கத்தி கொண்டே ஓடினான்....
தாத்தா!!! தாத்தா!!! என்று குட்டி பையன் ஜீவாவும் சேர்ந்து கொண்டான்!!!! தாத்தா கண்ணில் வாடர் ஃபால்ஸ்:):)
ரெண்டு பேரையும் மடியில் வைத்து கொண்டு, சரி சரி.. பர்த்டேக்கு என்ன கிப்ட் வேணும்!!!! ஜீவா தாத்தா எனக்கு பென்சில் பாக்ஸ்!!! அம்மா வாங்கி குடுத்த மாதிரியே ரெட் கலர் !!!! என்றான் வேகமாக...............
சரண் முறைத்து கொண்டே...எனக்கு தான் பர்த்டே !! தாத்தா எனக்கு இங்க் பேனா வேணும்!!!!!!!!!!!!!!!!!!!! என்றான் நீட்டி முழக்கிய படி...
கண்டிப்பா வாங்கி தரேன்!!!- தாத்தா...
ரூமில் ஏதோ பேப்பர் உடன் இருக்க அம்மா ஏட்டி பார்த்தாள்.!!!  
என்ன எழுதிட்டு இருக்க சரண்?????
அம்மா அம்மா உங்க saree கலர் நேம் என்ன???
magenta... ஏன்???
இல்ல மா.. என்று சொல்லி விட்டு இப்டி எழுதினான்!!!!
மே- ஜான் - தா..... கலர் இங்க் பேனா!!!!!!
இப்படியே... தாத்தா கண்ணாடி கேஸ் கவர் கலர், பாட்டி blouse கலர், அப்பா கார் கலர், தம்பி ஸ்கூல் bag கலர் என எழுதி லிஸ்ட் ரெடீ!!!!
இப்படியே அந்த பேனா உடன் குளிக்க போய், சாப்பிட போய், டீவீ பார்த்து, தூங்கும் போதும் பாதியில் எழுந்து இருக்குதா என்று பார்த்து சரண் வாழ்க்கையே இங்க் பேனாவாகி போனது
காலையில் எழுந்து கண்ணை மூடி கொண்டே கையால் துழாவி பார்த்தான்!!!!

இங்க் பேனா வைத்த இடத்தில் இல்லை!!!!!

அழுகை முட்டி கொண்டு வந்தது!!! அம்மா என்று அழுது கொண்டே வெளியில் வந்தான்!!! அங்கு ஜீவா அந்த இங்க் பேனாவை வைத்து கொண்டு ஏதோ கிறுக்கி கொண்டு இருந்தான்!!!

மூக்கு புடைக்க..... கண்கள் சிவக்க.... டே... ஜீஜீஜீ வாவா... என்று ஓடி போய் அவன் கையில் இருந்து பேனாவை பிடுங்க!!! அது கை தவறி எங்கோ போய் விழுந்தது!!!
!@(#&(!$T**(!$P)!#{I!)_)*#!(&@!)^#*
கண நேரம்!!!!!!!
ஒரு புயல் வந்து போன அமைதி!!!
அப்போது தான் அந்த சத்தம்!!!!
அழுகை சத்தம்
ஆமாம்!!! இந்த களேபரத்தில்!!! ஜீவா கீழ விழுந்து அடி பட்டு... நெத்திஇல் இருந்து ரத்தம் வர!!! அப்போது அவன் சத்தமிட்டு அழ தொடங்கி இருந்தான்!!!
எல்லாரும் ஜீவா வை தூக்கி கொண்டு ஹாஸ்பிடல் செல்ல!!!
சரண் மட்டும் உடைந்து போன பேனாவை வைத்து கொண்டு அழுது அழுது தூங்கி போய் இருந்தான்..... கண்கள் எரிச்சலோடு!!! பேச்சு சத்தம் கேக்க மெதுவாக கண்களை திறந்து பார்த்தான்.....

அங்கு ஜீவா... அழாத டா!! ஸாரீ!! இந்த என் பென்சில் பாக்ஸ் வச்சிக்கோ!!! என்று நீட்டினான்!!!
ben 10 படம் போட்டு அட்டக்ககாசமாய் இருந்தது!!!
இது யாரு வாங்கி குடுத்தா உனக்கு???? என்று பென்சில் பாக்ஸ் திறந்து பார்த்து கொண்டே!!!

அம்மா!! போன வருசம்!! ஸ்டொரி telling ப்ரைஸ் வாங்குனத்துக்கு!!! என்று சொல்லி விட்டு... புயல் சின்னம் கரையை கடந்தது!!!!!


இப்போது சரண் கையில் ஒரு பாக்ஸ் மறு கையில் அதே லிஸ்ட்
ஆனால் அதில் இப்படி எழுதி  கொண்டு இருந்தான்!

1.      Meganta color ink pen     pencil box
2.      Purple Color  ink pen     pencil box
3.      Red color ink pen
4.      Blue color ink pen
5.      Pink color ink pen
6.      Green color ink pen

No comments:

Post a Comment