புதிய
வாளி
- Sivaraman Sankar
இன்று எனது கல்லூரி உணவு விடுதியில் புதிய வாளி வந்துள்ளது.
நான் உணவு விடுதிக்குள் நுழையும்போது ஒரெ கூச்சல் சத்தம். அங்கும் இங்கும்
பார்த்தேன், யாரையும் காணவில்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. தேடிப்பார்க்கயில்
கை கழுவும் இடத்தில் ஒரு புதிய குப்பை வாளியும் (குப்பை என்றால், குப்பை அல்ல நாம்
வீணாக்கும் உணவைக் கொட்டும் வாளி) பழைய வாளியும் சண்டை போட்டுக்கொண்டிருந்தன.
புதிய வாளி பழைய வாளியைப் பார்த்து, “ஏ..! வாளியெ பார்த்தாயா, உன்னை யாரும்
இனி உபயோகப்படுத்தமாட்டார்கள். நீ இனி பழைய பொருள் கடைக்குதான் லாயக்கு” என கூறி
ஏளனம் செய்தது. அதற்கு பழைய வாளி புதிய வாளியைப் பார்த்து மெல்ல சிரித்து, போகப்போக
உனக்கு புரியும் என்றக்கூறியது. புதிய வாளிக்கு ஒன்றும் புரியாமல், என்ன
சொல்கிறாய் என கேட்டது.
அதற்கு பழைய வாளி, “ஐந்தறிவு மிருகம் கூட தனக்கு போதும் என்றால் அதை மற்ற
மிருகம் உண்ணட்டும் என வழி விட்டு சென்று விடுகிறது. ஆனால் இந்த மனிதர்கள் (“விடுதி
மாணவர்கள்”), அப்படி இல்லை. தேவை குறைவானாலும், அதிகமாக வைத்துக்கொண்டு
வீணாக்குபவர்கள். நான் இடத்தை சுத்தம் செய்யும் புனிதமான வேலைக்காக படைக்கப்பட்டேன்,
ஆனால் உண்ணும் உணவின், அருமை தெரியாதவர்களிடம் வந்து மாட்டிக்கொண்டேன். இவர்களிடம்
இருப்பதை நான் “வெட்கமாக” நினைக்கிறேன். அதனால் தான் நானே உடைந்து இந்த விடுதியை
விட்டு செல்கிறேன்” என்றது.
புதிய வாளி என்னை பார்த்தது. எனக்கு புரியவில்லை அது வறுத்தத்தில் பார்க்கிறதா
அல்லது என்னை வசைபாடிக்கொண்டே (திட்டுதல்) பார்க்கிறதா என்று.
வாய் (வாளியின் திறந்த மேல் பகுதி) மட்டுமே உள்ள வாளி கூட நாம் செய்வதன் வலி
அறிந்து நம்மிடம் இருப்பதை அவமானமாக கருதி சென்றுவிட்டது. வாய் மட்டுமின்றி,
வாயில் நாக்கு, அதில் நான்கு நரம்புகளையும் கொண்ட நாம் அந்த நாவால் அனைத்தும் ருசித்து
விட்டு அதிகமாக போட்டுக்கொண்டு விட்டேன், போதும், பிடிக்கவில்லை என கூறி அந்த உணவை
கொட்டிவிட்டு செல்கிறோம். வெட்கமாகவும் அதிக வருத்தமாகவும் உள்ளது. நாம் வீணாக்கும்
ஒவ்வொரு பருக்கை உணவும் தான் அங்கு யாரொ ஒரு பிஞ்சு குழந்தையின் பசிக்கு காரணம். இனியாவது உணவு விடுதிகளில் வாளியை புனிதத்திற்கு
பயன்படுத்துங்கள்.
No comments:
Post a Comment