Tuesday 23 July 2013

Story-59 ஓர் இரவு



ஓர் இரவு                     

சாரல் மழை. இரவை முத்தமிட்டுகொண்டு மழை பெய்து கொண்டிருந்தது.

சரியாக இரவு 9.10 மணி இருக்கும்.
வைகை ஆற்றங்கரை சாலையில் ஆள் அரவமில்லாமல் மழையை ரசித்தபடி நனைந்துகொண்டு தன் இருச்சக்கர வாகனத்தில் குமரன் தன் அலுவலக வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தான்.

ஆற்றங்கரை ஓர சாலை என்பதால் ஆள் நடமாட்டம் சற்று குறைவாகவே இருந்தது. நல்ல மழை வேறு? கேட்கவா வேண்டும்.
புதியதாக போடப்பட்ட சாலை வண்டியின் வேகத்திற்கு ஈடுகொடுத்துக்கொண்டிருந்தது. சற்றும் எதிர்பாராத விதமாக வண்டியின் பின் சக்கரம் சுழல்வதற்கு திணர ஆரம்பித்தது.

வெளிச்சம் குறைவாக இருந்த காரணத்தால் வெளிச்சமிருக்கும் இடம்நோக்கி தன் வாகனத்தை செலுத்தினான் குமரன். நேரே ஒரு மின் கம்பம் தென்பட்டது. வண்டியை நிறுத்தி பின்புறம் பார்த்தான். பின் சக்கரத்தை ஆணி பதம் பார்த்திருந்தது. பஞ்சர்…..
மின் கம்பத்தின் அருகில் தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தினான்.

கும்மிருட்டு, அமைதி. ஆற்றங்கரை ஆளில்லா சாலை.
உதவிக்கு யாரும் வர வாய்ப்பில்லை. ஒரு அடிகூட நகரமுடியா நிலை. மின்கம்ப வெளிச்சம் மட்டுமே சற்று அவனுக்கு ஆருதல் தந்தது.

சிறிது நேரம் கடந்தது; மயான நிசப்தம்; தூரத்தில் ஒரு வெளிச்சம். ஏதோ வாகனம் வருவதுபோல் இருந்தது.

எதிர் வரும் வாகனத்தின் வெளிச்சம் மஞ்சள் நிறத்தில் அவன் கண்ணை உரசிக்கொண்டு அவனது பார்வையை விழுங்கியது.

வாகனம் அருகே வந்தது. ஒரு பெண் ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு வந்தாள். அவள் முகம் சரியாகக் இவனுக்கு புலப்படவில்லை. அவள் முகத்தை உற்று பார்ப்பதற்கும், மின்விளக்கு ஒளி அமர்ந்து போவதற்கும் சரியாக இருந்தது.

அப்பொழுதுதான் தன் தொலைபேசி ஞாபகம் வந்தது அவனுக்கு. தொலைபேசியில் இருக்கும் டார்ச்சை அந்த வாகனத்தின் மீது அடிப்பதுபோல் அந்த பெண்ணின் மீது செலுத்தினான்.
அதற்குள் ஸ்கூட்டி அருகில் வந்து நின்றது.
’’அடடா! என்ன ஒரு அழகு..யாரு இவ?’ – குமரனுக்குள் மைண்ட் வாய்ஸ் ஒலித்தது.

எக்ஸ்க்யூஸ் மீ.! என்னை அந்த பஸ் ஸ்டாப்-ல ட்ராப் பண்ன முடியுமா.?” பல் இளித்தான் குமரன்.

நிற்க.

சாலையோர டீக்கடை.

இரண்டு பேர் டீக்கடையில் டீ அருந்திக்கொண்டு தங்க நிலவரம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கிரீ…..ச்சென பயங்கர சத்ததுடன், டீக்கடையின் நேரெதிரே ஒரு கார் மீது ஒரு ஸ்கூட்டி மோதி விபத்துக்குள்ளாகிறது

கூட்டம் கூடுகிறது. இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே .இறந்து போகிறாள். இருசக்கர வாகனத்தின் அருகில் கைபேசி சிணுங்குகிறதுயாரும் அட்டெண்ட் செய்யாமல்.


குமரன் இல்லத்தில் அவனது தாயார் மீனாட்சியம்மாளின் புலம்பல் வீட்டின் ஏதோ ஒரு மூலையில் கேட்கிறது.

இவ்வளவு நேரமாகியும் இந்த பய இன்னமும் வீட்டுக்கு வரல. வரட்டும்..அவனுக்கு நல்ல செமத்தியா இருக்கு இன்னைக்கு

காலிங்பெல் அடிக்கிறது.

கதவை மீனாட்சியம்மாள் திறக்கிறாள். வாசலில் குமரன்

ஏண்டா? ஒரு போன் பண்ணமாட்டியா? இவ்வளவு நேரமா?.

அதான்! வந்துட்டேன்ல!”

டே!  வெள்ளிக்கிழமை உனக்கு பெண் பார்க்க போறோம். சாயங்காலம் 7.30 மணிக்கு வந்துடு. இல்லாட்டி அன்னைக்கு நீ வேலைக்கு போக வேணாம். இன்னைக்கு மாதிரி லேட்டா வந்து தொலைக்காத

சரி!சரி! எத்தனை தடவை சொல்லுவம்மா. வெள்ளிக்கிழமை பாதிநாள் லீவ் சொல்லிட்டேன்-மா.”

சரி! வா சாப்பிடு!……….

நான் சாப்பிட்டுடேன். நீ சாப்பிடுஎன்று தூங்க செல்கிறான் குமரன்.

சாப்பிட்டு முடித்து அவன் தூக்கத்திற்கு செல்கிறான். தூக்கம் குமரனை யதார்த்ததிலிருந்து கனவுச்சாலைக்கு அழைத்துச் செல்கிறது ஸ்கூட்டி பெண்ணுடன்.

விடியலை வீருகொண்டு சேவல் எழுப்புகிறது
டிவி முன்பு குமரன் அமர்ந்து அன்றைய தினசரி பத்திரிக்கை ஓன்றை படித்துக் கொண்டிருக்கிறான். பத்திரிக்கை முழுக்க ஒரே விபத்து செய்தியாக நிரம்பி வழிகிறது.
பத்திரிக்கையை மூடி வைக்கிறான்.

நேற்று நடந்தது குமரனுக்கு ஞாபகம் வருகிறது. ஸ்கூட்டி பெண் தனது வாகனத்தில் தன்னை ஏற்றிகொண்டு அருகில் இருக்கும் பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டது அவன் நினைவில் அடிக்கடி வந்து போகிறது. ”அந்த முகம்அழகு முகம், தேவதை..” என மனதுக்குள் கோட்டையை கட்டுகிறான் குமரன்.

வெளியே சென்று தன் இரு சக்கர வாகனத்தை பார்க்கிறான். தன் வண்டியை பாண்டியிடம் விட்டுவிட்டு வந்தது நினைவிற்கு வருகிறது.

அன்றைக்கு ஆடிட் இருப்பதால், அவசர அவசரமாக அம்மாவின் ஸ்கூட்டியை எடுத்துகொண்டு அலுவலகத்திற்கு கிளம்புகிறான் குமரன்.

அலுவலக பதிவேட்டில் கையெழுத்திட்டவுடன் செல்போனை சட்டையில் தேடுகிறான் குமரன். செல்போன் இல்லை.

அலுவலக தொலைபேசியிலிருந்து தனது அம்மாவின் செல்போனுக்கு அழைக்கிறான் குமரன்.

அம்மா! என் செல்போனை பாத்தியா? வீட்டில இருக்கானு பாரு?”

இரு தம்பி! நான் பார்க்கிறேன்……….ம்ம்ம் இங்க இல்லயேடா தம்பி! வேற எங்கயும் வச்சுட்டையா?.

சரிம்மா நான் பார்த்துக்கிறேன்

தம்பி! மறந்துட்டேன்டா! நம்ம கல்யாண புரோக்கர் பொண்ணோட போட்டோ கொடுத்தாரு உன்கிட்ட காட்ட சொல்லி. வந்து பாக்குறியா?

நீ பாத்துட்டேல. விடுமா! பாத்துக்குறேன் என தொலைபேசியை அணைக்கிறான் குமரன்.


மீண்டும் அலுவலக தொலைபேசி சிணுங்குகிறது.

கீரீங்கிரீங்

ஹலோ! குமரன் ஹியர்!”

டேய்! குமரா! பஞ்சர் பாத்தாச்சு! வண்டியை வீட்ல வச்சிட்டேன் மாப்ள! எங்கடா உன் மொபைல்?” கத்தினான் மெக்கானிக் பாண்டி.

தெரியல மச்சான்! எங்கயோ வச்சுட்டேன்! காணோம். அப்புறம் கூப்பிடுறேண்டா!” என்று ரிசீவரை வைத்தான் குமரன்.


அலுவல் முடிந்து வீடு நோக்கி அதே ஆற்றங்கரை சாலையில் அம்மாவின் ஸ்கூட்டியை செலுத்துகிறான் குமரன். நேற்று நடந்த சம்பவமும், அப்பெண்னின் முகமும் மறுபடியும் மறுபடியும் இவனை துரத்துகிறது.

சரியாக இரவு 8.30 மணி.

அதே! மின் கம்பம் தெரிகிறது தூரத்தில்.  யாரோ? ஒரு பெண் நின்றுகொண்டிருப்பது தெரிகிறது. குமரனுக்கு லேசாக வியர்க்கிறது. அதே பெண். அதே தேவதை.

குமரன் தனக்கு எங்கோ? மச்சமிருப்பதாக உள்ளுக்குள் நினைத்துகொண்டான். அதே பெண்ணை  வழியில் பார்த்ததும் இவனுக்குள் ஏதோ? செய்தது. தனது இரு சக்கர வாகனத்தை அருகே சென்று நிறுத்துகிறான்.

என்ன இங்க நிக்கிறீங்க? ரொம்ப தேங்க்ஸ்.
எதுக்கு?
நேத்து ட்ராப் பண்ணுனதுக்கு. அவசரத்தில் உங்க பேர கூட கேக்கல, உங்க பேர் என்ன?” என படபடத்தான்.

என்னோட பேர் திவ்யா..”

“.என் பெயர் குமரன். ஏன் இங்க நிக்கிறீங்க

எனக்கு உங்க பேர் தெரியும். உங்களுக்காகத்தான் வெயிட் பண்றேன்

எனக்காகவா!” குமரன் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் படபடத்தன.

என் பேர் தெரியுமா? எப்படி?”

நீங்க தானே நேத்து சொன்னீங்க! இந்தாங்க உங்க செல்போன். நீங்க மறந்து என் வண்டியிலயே விட்டுட்டு போயிட்டீங்க!”

! சொன்னேனா?”

என்னை பஸ் ஸ்டாப்-ல ட்ராப் பண்னுறீங்களா

! ஷ்யூர்!” – வானில் மிதந்தான் குமரன். இதை அவன் எதிர்பார்க்கவேயில்லை.
மைண்ட் வாய்ஸ் கண்ணா லட்டு திண்ண ஆசையாஎன்றது.

பஸ் ஸ்டாப்பில் திவ்யாவை இறக்கிவிட மனமில்லாமல்
இனி அடுத்து நாம் எப்ப பார்க்கலாம்

தினமும் வருவேன். நானே உங்களை தேடி வருவேன்சிறு புன்னகையுடன் சொல்லிகொண்டே செல்கிறாள் அவள். அவள் நடையழகை பார்த்து தன்னை மறக்கிறான் குமரன். தூரத்தில் எங்கோ? அவத்த பையா சிவத்த பையாகேட்கிறது.


குமரன் தனது வீட்டினுள் நுழைகிறான்.

நுழைந்தவுடன் இந்தா! இந்த டேபிள்-ல இருக்கிற போட்டோவ பாருடா!” என அவசரப் படுத்தினாள் மீனாட்சியம்மாள்.

குமரன் தன் மனதுக்குள் பொண்ணாவது கிண்ணாவது. நாங்கெல்லாம் லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணுவோம்என ஸ்கூட்டி பெண்ணை நினைத்துகொண்டான்.

மீனாட்சியம்மாள் விடாமல் தம்பி அந்த பொண்ணுக்கு உன்னை பிடிச்சு போச்சுடா!… உன் போட்டோவ பாத்திருக்கு……..இந்தா அவ போட்டோ! எப்பிடியிருக்கானு சொல்லு?”

இல்லம்மா……அதான் நேரில் பார்க்கப் போறோம்ல……அப்புறம் எதுக்கு?” என குளிக்க சென்றான் குமரன்.

காலிங் பெல் அடிக்கிறது.
யாரு!”

அம்மா! என்னை புரோக்கர் தண்டபாணி அனுப்பி வச்சார்.…..ஒரு சின்ன தகவல் சொல்லச் சொன்னார்”.

என்ன விசயம். சொல்லுங்க

இல்லம்மாநீங்க பார்க்க இருந்த பொண்ணு நேத்து நடந்த ஆக்ஸிடண்ட்-ல இறந்து போச்சும்மா. புரோக்கர் சொல்லச் சொன்னாரும்மா. அதான் வந்தேன்

மீனாட்சியம்மாள் கண்ணில் கண்ணீர் வந்தது.

குமரன் சற்று வருத்தப்பட்டாலும், திவ்யாவை மனதில் நினைத்து தன்னை தேற்றிக்கொண்டான்.

தம்பி பாவம்டா! அந்த பொண்ணு. நீ! எதையும் மனசில வைச்சுகாதடா!
நல்லவேளை அந்த போட்டவ நீ பாக்கல. அந்தபோட்டோவை
என்கிட்டயே கொடு. அத நீ பாக்கக் கூடாதுடா. அல்ப ஆயுசுல போயிட்டாடா! பாவம்.”

சரிம்மா? நான் பாக்கல.”

மறுநாள்…..காலை முழுவதும் திவ்யா நினைவுகளுடன் கழிந்தது குமரனுக்கு.

மாலை 8.30 மணி. குமரனின் செல்போன் சிணுங்குகிறது.

ஹலோ! குமரன். திவ்யா பேசுறேன்

சொல்லுங்க திவ்யா! நானே உங்கள பாக்கனும்னு நினைச்சேன்,? எங்க இருக்கீங்க.”

அதே இடம். உங்களுக்காக காத்திருக்கிறேன்

குமரனுக்குள் சந்தேகம் வருகிறது! ’எதுக்கு அவ அங்கயே வரச் சொல்றா?
சரி பாத்துக்கலாம்

அன்று இரவும் அதே! இடத்தில் இருவரும் சந்திக்கிறார்கள். இருவருக்குள்ளும் காதல் தீ பற்றி வளர்கிறது.

மீனாட்சியம்மாள் தன் வீட்டில் அன்றைய செய்தித்தாளை படித்து கொண்டே மகனுக்காக காத்திருக்கிறாள்.

அதில் ஒரு கண்ணீர் அஞ்சலி செய்தி
எங்களை மீளாத் துயரில் விட்டுவிட்டு சென்ற எங்கள் மகள் திவ்யா(25 வயது)–விற்கு கண்ணீர் அஞ்சலி- இரங்கலுடன் குடும்பத்தார்


குமரனும் திவ்யா இறந்தது தெரியாமல் அவளையே உயிருக்கு உயிராய் காதலித்து கொண்டிருக்கிறான்.

No comments:

Post a Comment