Thursday 18 July 2013

Story-48 பரவசம்



பரவசம்
-Ravi Selladurai
அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தான் பாலகுமாரன். நின்று கொண்டே நாலு இட்லியை உள்ள தள்ளிகொண்டிருந்தான் . அம்மா எதோ சொல்லவந்தாள் , அவன் அதை கண்டு கொள்ளவில்லை .
“அம்மா... கொஞ்சம் தண்ணி கொண்டா...”
“மேசை மேல சொம்புல இருக்கு பாரு“
அவன் அரைசொம்பு தண்ணியை குடித்து  விட்டு இட்லி தட்டிலேயே கையை கழுவினான் .  ஒரு ஷூவை எடுத்து பாலிஷ் செய்துவிட்டு இன்னொருண்டையும் கையில் எடுத்தான். 
“பாலா... ஐயாயிரம் இருந்தா கொடுடா ,நம்ம ரம்யாவுக்கு பொறந்த நாளு வருதுடா ..புது டிரஸ் எடுக்கணும் ,அவ ஸ்கூல் பிரண்ட்ஸ்களுக்கு கேக்கு வாங்கி கொடுக்கானுமான்டா ..”
“அதுக்கென்ன இப்போ.. காலையிலேயும் உயிரே எடுக்க ஆரம்பிச்சுடுவிங்களே...ஆமா இதனை வருசமா பொறந்த நாளு கொண்டாடிக்கிட்டுதான்  இருந்திங்களா ..இப்ப மட்டும் என்ன புதுசா “ . கொஞ்சம் கோபத்தோடு கேட்டான் பாலா .
அம்மா எதோ பேச வந்தாள் , “இல்லடா ..அது ..” அவன் பாதியிலேயே இடை மறித்து , எனக்கு ஆபிஸ் லேட்டாயிடுச்சுமா இப்ப பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்க எனக்கு நேரமில்லை “ சொல்லிவிட்டு விடு விடுவென்று போக ஆரம்பித்தான் .
இப்படிதான் பாலா வேலைக்கு போக ஆரம்பித்த இந்த ஆறு மாதத்தில் ,ஏதாவது கேட்டு கொண்டே இருப்பாள் அம்மா.அவனும் எரிந்து விழுந்து கொண்டே இருப்பான் . நல்ல கம்பெனியில் நாப்பதாயிரம் சம்பளமாம், நல்ல வேலை. அம்மா எல்லோரிடமும் சொல்லி சொல்லி சந்தோஷ பட்டிருப்பாள். அந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் ,பட்ட கஷ்டமெல்லாம் இனி போயிடும், அவள் ஒவ்வொருவரிடமும் சொல்லி சந்தோஷ பட்டுகொண்டாள் .  ஆனால் பாலா அப்படியில்லை , கொஞ்சம் கொஞ்சம் மாற்றம் தெரிந்தது .
முதல் மாதம் அம்மாவுக்கு டிரஸ், தங்கை ரம்யாவுக்கு டிரஸ் , அப்பாவுக்கு வேட்டி என்று அசதினான் , மீதி பணத்தை அப்படியே அம்மாவிடம் கொடுத்தான் . ஏற்கனவே பல ஆயிரம் கடன் இருந்ததால் ஒரே நாளில் எல்லாம் பட்டுவாடா செய்ய வேண்டியதாகிவிட்டது . அம்மா சந்தோஷபட்டுகொண்டாள் . இன்னும் நாலஞ்சு மாசத்திலே எல்லா கடனும் முடிஞ்சுடும் .முக்கால்வாசி கடன் பாலாவை படிக்க வைத்தது தான் . மறுநாள் அம்மா ஒரு ஐநூறு இருந்தா கொடு என்றான் ,அவள் நூறு ரூபாயை எடுத்து நீட்டினாள் .  பாலாவுக்கு எரிச்சலாயும் கோபமாயும் வந்தது.
“என்னம்மா நூறு ரூபாதான் கொடுக்கிற ?”
“ஆமான்டா ..நேத்தைகே எல்லா பணமும் கடனடக்க கொடுத்துட்டேன் “
“ஆபிஸ் போற எனக்கு ஆயிரம் செலவு இருக்கும்,கொஞ்சம் கூடவா எடுத்து வச்சிகல..”
நூறு ரூபாயிக்கு மேல் என்ன செலவு இருக்கும் என்று அவளுக்கு புரியவில்லை . கடன்காரங்க புடுங்கி எடுத்தால் உடனே அத கொடுத்து செட்டில் பண்ணிடுவோம் என்று கொடுத்து முடித்திருந்தாள் .
“கொஞ்சம் பார்த்து செலவு பண்ணுடா ...”  என்றாள். அவன் எதுவும் சொல்லாமல்  வெடுக்கென்று வெளியே போனான். அம்மாவுக்கு என்னோவே போலிருந்தது . இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த ரம்யா ,”விடும்மா.. அவன பத்தி தான் தெரியுமே” என்றாள். ஆனாலும் அம்மா சமாதனம் ஆகவில்லை ,அவள் மனுதுகுள்ளேயே புளுங்கி கொண்டிருந்தாள் .
ஆனால் அடுத்த மாசமே பாதி சம்பளம் தான் கொடுத்தான் ,மீதியை அவனே வைத்துகொண்டான்.
“என்னடா நிறைய கடனிருக்கு ,இப்படியே போன ஒரு வருஷம் ரெண்டு வருஷம் ஆகுமேடா கடன அடைக்க” என்றாள் .
“நானா கடன் வாங்கி படிக்க வைக்க சொன்னேன். ஏன் இப்படி பிச்சி எடுகுறிங்க”.
அம்மாவுக்கு என்னோவோ போல் ஆனது . அவன் போன பின்பு ரம்யாதான் அம்மாவை சமாதான படுத்தினாள் . அம்மாவும் புதுசா சம்பாதிக்க ஆரம்பிசுருக்கான்,நிறைய செலவு இருக்கும் என்று மனசை தேற்றிக்கொண்டாள். ஆனால் பாலா இதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. அடுத்த மாசமே புது பைக் இறக்கினான். லேப்டாப் வாங்கினான் .இன்டர்நெட் கனெக்சன் எடுத்தான் .போன் வாங்கினான் ,வீட்டுக்கு வந்த உடனே இப்போதெல்லாம் இன்டர்நெட்டில் உக்கார ஆரம்பித்தான் .
இப்போதெல்லாம் அம்மா கொஞ்சம் தயங்கி தயங்கி தான் எதுவும் கேட்பாள் , அவனும் ஆயிரமோ ரெண்டாயிரமோ தான் கையில் கொடுப்பான் , அதுவும் ஆயிரம் கேள்வி கேட்பான் .
இவன் வேலைக்கே சென்ற உடனே அம்மாவும் தையல் மிசினுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்தாள் . கடந்த ஆறு மாதமா எதுவும் தைப்பதில்லை. ஆனால் அவன் அப்பாவோ இன்னும் வேலையை விட வில்லை ,டீ கடையில் வேலை .வீட்டிற்கு வர தினமும் லேட்டாயிடும் . அவர் பாலாவிடம் எதுவும் பணம் கேட்பதுமில்லை. அவர் சம்பாதிப்பதும் கடன் அடைக்கவே போயிடும். 
இன்னைக்கு கூட கொஞ்சம் தயங்கி தயங்கி தான் கேட்டாள் , அவனோ ரம்யாவின் பிறந்த நாளை சட்டை செய்யவில்லை ,எடுத்தெரிந்து பேசிவிட்டு ஆபிசுக்கு புறபட்டான் .
ஆபிஸ் வந்த உடனே பேஸ்புக் திறந்து அறசீற்றத்தின் வாசகவட்டத்தில் நுழைந்தான் . இன்பாக்சை திறந்து பார்த்தான் ,அவன் எதிர்பார்த்தது போல் அவனுக்கு எதுவும் பதில் கடிதம் வரவில்லை .        
யார் இந்த அறசீற்றம் என்ற அறிமுகம் இன்றைய இளைஞ்ர்களுக்கு தேவை இல்லை. அந்த அளவு அவர் புகழ் பெற்றவர் . எல்லாரையும் போல அவனும் பயந்து பயந்து அந்த மாதிரி கதைகளை படித்து வந்தான் சின்ன வயதில். சரோஜாதேவியிலிருந்து மருதம் ,பார்வதம் என்று மறைத்து மறைத்து படிக்க பிடிக்கும் கதைகளை மறைக்காமலயே படிக்கலாம் என்று அவன் நண்பன் அறசீற்றத்தின் கதைகளை அறிமுக படுத்தி வைத்தான் . அவருடைய வசீகர நடையும் அற்புதமான கதை அமைப்புகளும் அவனை அப்படியே கட்டிபோட்டது . அன்றிலிந்து அவர்க்கு ரசிகனாகி போனான் . நிச்சயமாக அறசீற்றம் ஒரு அற்புதமான எழுத்தாளர் என்று நினைத்து கொள்வான் . நண்பர்களிடமும் அவர் புகழ் பாடாத நாளே இல்லை .
அவன் நினைத்து போல் இன்றும் அறசீற்றத்திடம் இருந்து பதில் வரவில்லை . படு ஏமாற்றமாக இருந்தது . இன்று நாள் முழுவதும் அவனுக்கு நரகமாக சென்றது . வீட்டிற்கு புறபட்டான்.
தெரு முனையில் ரம்யா குடங்களை வைத்து கொண்டு தண்ணீருக்கு னென்று கொண்டிருந்தாள் , எப்போதும் அம்மா தானே தண்ணி பிடிக்க வருவாள் , ஏதும் வேலையாக இருப்பாள் என்று நினைத்துக்கொண்டான் .   வீட்டிற்குள் நுழையும் போதே கவனித்தான், உள்ளே கொண்டு போட்டிருந்த தையல் மெசினை  அம்மா மீண்டும் வெளியே எடுத்து வந்து போட்டு எதோ தைத்து கொண்டிருந்தாள் . அவன் வீட்டிற்கு வந்த உடனே நேரே சென்று இன்டர்நெட்டில் உர்கார்ந்தான். மீண்டும் இன்பாக்ஸ் திறந்து பார்த்தான் .  ஏமாற்றமாக இருந்தது . டர்ர்.. டர்ர்ர்.. என்று  தையல்மெசின் சத்தம் வேறு அவனுக்கு எரிச்சல் ஏற்படுத்தியது .
தாய்லாந்தில் புகழ் பெற்ற பப் ஓன்றில் எழுத்தாளர் அறசீற்றம் லேப்டாப்பை உயரமான மேசையில் வைத்து எதோ டைப் செய்து கொண்டிருந்தார் . அருகில் மக்கில் பீர் நுரை பொங்கி கொண்டு இருந்தது . அப்போது அந்த பெண் அறசீற்றத்தின் அருகில் வந்தாள், அப்சரஸ் மாதிரி இருந்தாள், திமிறிகொண்டிருந்த கொங்கைகள் ஒவ்வொருவர் கைகளையும் வா வா என்று அழைப்பு விடுத்தது.  “எனக்கு இன்று பிறந்த நாள்” கொஞ்சம் குரலில் ஆங்கிலத்தில் கூறினாள். அவளை இழுத்து அணைத்துக் கொண்டார் அறசீற்றம்.அவளது கொங்கைகளுக்கு நடுவே கரன்சிகளை சொருகினார். அப்படியே அருகிலே இருந்த லேப்டாப்பில் ஒரு கையால் என்டர் கீயை தட்டினார் . இன்னொரு கை எங்கே இருந்தது என்று அந்த பெண் இடுப்பை மட்டும் நெளிந்ததில் தெரிந்தது. என்னுடைய வாசகர் பாலாவுக்கு பதில் அனுப்பினேன் என்று  அந்த அழகி அப்சரஸியிடம் சொல்லி விட்டு அப்படியே லேப்டாப்பை மூடிவைத்தார் . உதடுகள் “ஹாப்பி பர்த்டே மை சுவீட் ஹார்ட் “ என்று சத்தமாக சொன்னது. கண்கள் லேசாக சொருகி பரவச நிலைக்கு போய்க்கொண்டிருந்தது . இப்பொழுது இரண்டு கைகளும் வேலையை ஆரம்பிக்க தயாரயின .
அதே நேரத்தில் இங்கே ,மீண்டும் இன்பாக்சை ரெப்ரெஷ் செய்த பாலாவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது , அவனுக்கு சந்தோசத்திற்கு அளவே இல்லை . ஆமாம் அவன் எதிர் பார்த்த பதில் வந்திருந்தது . மீண்டும் ஒருமுறை படித்தான். “பாலா ..நீங்கள் அனுப்பிய 15000 கிடைத்தது .நன்றி. இப்படிக்கு அறசீற்றம்”
அப்படியே லேப்டாப்பை மூடிவைத்தான். உதடுகள் “தேங்க்ஸ் காட் “ என்று சத்தமாக சொன்னது . கண்கள் லேசாக சொருகி பரவச நிலைக்கு போய்க்கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் இரண்டு கைகளையும் நெஞ்சில் வைத்து நிம்மதியாக தூங்கிபோனான் . டர்ர்.. டர்ர்ர்.. என்று  தையல்மெசின் சத்தம் கேட்டுக்கொண்டே தான் இருந்தது, ஆனால் அது அவனது தூக்கத்தை கெடுக்கவில்லை.

No comments:

Post a Comment