இந்தோனேசிய தேவதை:
1.
புரளி பேசுவதில்,ஊர் மக்களுக்கு என்றைக்கும் குறை இருந்ததில்லை. நெருப்பில்லாமல்
புகையுமா ?, பெரிய குடும்பத்துக்கென, துர்சம்பவங்கள் தொரடந்து நடந்தேறின.
பெரிய குடும்பம் என்றால் அளவில் பெரியத்ல்ல, இரண்டு ஆண்களுக்கு இடையே ஒரு பெண்
குழந்தை என அந்த காலதிலே அளவான குடும்பம் அமைத்திருந்தார் பெரியவர் சோமனாதர் , மிகுந்த அறிவாளி,
சித்தாந்தம், முற்போக்கு சிந்தனை பேசுவதில் வல்லவர்,
ஆகையாலே தான் அவர் நாட்டாமை ஆனார் என்றால் இல்லை, அது பரம்பரை
வாயிலாக கிடைத்த மகுடம்.
பின்னே, அவர்கள் என்ன சாதாரன குடும்பமா, ராஜ வம்சம், ஆண்ட சாதி, அதனால்
தான் தன் பெண்னுக்கு மாப்பிளை தேடுவதில் அதிக சிரமம் இருக்கவில்லை, குடும்பத்தில் இருந்த குழப்பங்களை எல்லாம் பரவாயில்லை சரி சரி என்றார்கள்,
காரணம் சாதி, இப்படி ஆகப்பெருந்தன்மை மிக்கவர்களும்
வரதச்சனையை விட்டு விட மாட்டோம் என்றார்கள், அது ஏதோ குடும்ப
கௌரவமாமே, தன் வீட்டுக்கு வரப்போகும் மருமகள் நகை,நட்டு இல்லாமல் வந்தால் அவமானமாகி விடுமாம், சொத்தில்
பாதி, பெயர் வைத்து வளர்த்த பெண்னுக்கும், மீதி பெயரே தெரியாத நோய்க்கும் என தீர்ந்து போனது.
சோமநாதருக்கு அந்த பெயர் தெரியாதா நோய்
மட்டும் இல்லை என்றால் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது, அதன் பெயரை கண்டுபிடித்து
விடத்தான், எத்தனை மருத்துவர்கள் எத்தனை பரிசோதனைகள் ஒன்றுக்கும் மடியவில்லை, பிராய்ச்சிதமாக
பெரியமகன் ஒரு செவிலியையிடம் மடிந்து விட்டான், இருவரும் சேர்ந்து மாரத்தானுக்கு ஓடிப்பழகினார்கள்
போல, எங்கே ஓடினார்கள் என்றே தெரியவில்லை,
ஆண்டுகள் பல கடந்து விட்டன. இப்போதைக்கு ஆண் வாரிசு என்றால் அது இளைய மகன் ஜெயப்பிரகாசம்
(ஜெ.பி) தான், ஏதோ 12 ஆம் வகுப்பு வரை படிதிருந்தான்,
அதற்க்கு மேல் படிக்க வீட்டில் வசதி இல்லை.
ஜெ.பி யிடம் “நீ ஜில்லா கலெக்டர வருவட” என
சொல்லுவார் சமூக அறிவியல் ஆசிரியர், பின்னே தமிழ், சமூக அறிவியல் பாடங்கள் மட்டும்
விரும்பி படிப்பவன் வேறு என்னவாக முடியும், தமிழ் படிக்கையில், செய்யுளும் கூட பொருள்
அறிந்து படிப்பவன், தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிளின் மீதும் அவனுக்கு பிரியம் தான்.
மொழிப்பாடம் மட்டும் பயின்று என்ன பிரயோஜனம் மொத்த கூட்டலில் மதிப்பெண் குறைந்து விட்டது அதுவரை படிப்பிர்க்கு உதவி வந்த
டிரஸ்டுகளும் சலுகைகளை நிருத்திக்கொண்டன, சிரிது காலத்திற்க்கு வெட்டி முட்டாள் போல
ஊர் சுற்றி கொண்டிருந்தான் எதாச்சும் பன்னனும்,
என தோன்றவே வெளி நாடு போவதென முடிவெடுத்தான்.
2. ஆரம்பதில் அவன் சென்றது சிங்கப்பூரில் துறைமுகம் கட்டும் பனிக்குத் தான், ஊரிலிருந்து
சொன்ன வாக்குரிதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை, தன் உணவுக்கே வழி இல்லை, பகுதி நேரமாக
ஒர் ஆஸ்திரேலிய கப்பலிலும் வேலை கிடைத்து, அப்படியே கொஞ்ச நாள் கடந்தது, இங்கேயே இருந்தால்
ஒன்றும் பிழைக்க முடியாது என்பதால் அவன் வேலை பார்த்த அதே கப்பலில் கொஞ்சம் பனம் கொடுத்து
ஆஸ்த்திரேலியா செல்ல அனுமதி பெற்றிருந்தான், உயர் அதிகாரி யாருக்கும் தெரியாது, தவறுதலாக
மாட்டிக்கொண்டாலும் பணம் பெற்றவர்களை காட்டிகொடுக்க கூடாது என முன்னரே பேசிக்கொண்டது
தான், அசம்பாவிதங்கள் ஜெ.பி யின் குடும்ப நண்பன் ஆயிற்ரே, அதுவும் நடந்தேறி விட்டது.
ஜெ.பி இந்தோநேசியாவில் தரையிறக்கப்பட்டான், அங்கே யாரையும் தெரியாது, எதுவும் தெரியாது
தெருத் தெருவாக பிச்சைக்காரனை போல வேலை தேடி அலைந்தான், இப்படி நாடோடிகளாக அலைபவர்கள்
நிச்சயம் ஹென்றியுடம் தான் சென்று சேறுவார்கள், அவர் எதோ பிஸ்க்கட் கம்பெனி நடத்தி
வருகிறார் அது உலக பிரசித்தி, ஜெ.பி யும் அதில் சேர்ந்து கொண்டான் ஒர் அடிமட்ட தொழிலாலியாக.
3.
ஒர் காலத்தில் ஹென்றியும் கூட நாடோடியாக அலைந்தவர் தான், அவர் குடும்பம் ஆதிவாசிகள்
இனத்தை சார்ந்தது, காடு காடாக அலைந்து தம் கால்களாலே உலகத்தை அளப்பவர்கள், தமக்கு நினைவு
தெரிந்தே, இலை தலை உடுத்திக்கொண்டு, வேட்டைக்கென
மேற்க்கொண்ட பயணம் நங்கு நினைவிருக்கிறது, இன்றைய மக்கள் சொல்வதை போல, தாம் இன்னவகை
குடிகள், தாம் பேசுவது என்ன மொழி என்றெல்லாம் எதுவும் தெரியாது. பசியென்றால் வேட்டை,
கலைப்பு என்றால் தூக்கம், உல்லாசம் என்றால் கடற்கரை காற்று அவ்வளவே.
அச்சமயம் ஏதோ ஒர் காட்டு விலங்கு இவர்கள் கூட்டத்தை விரட்டியிருக்கிரது, ஒவ்வொருவரும்
மிரண்டு ஓட, இவர் மட்டும் தனியே தொலைக்கப்பட்டிருக்கிரார், பிறகு எங்கெங்கோ அலைந்து
திரிந்து, கடைசியாக இந் நாகரிகமடைந்த மனிதர்களிடையே சிக்கிக்கொண்டார்.
இவர்கள் செய்வதை போல தனித்த வேலை எதுவும் செய்ய தெரியாது, தன் கால் போன போக்கில்,
கண் கானும் மனிதர்கள் எதேனும் வேலை செய்ய சிரமப்படுகிரார்கள் என்றால், அவர்களுக்கு
உதவியாய் இருப்பான், அவர்களும் காசு கொடுப்பாகள். காசு கிடைத்தாலே பிஸ்க்கட் தான் ஏனோ
பிஸ்க்கட் மீது அலாதி பிரியம் ஏற்ப்பட்டு போனது ,
சிறிது நாள் கடந்து இவர்களின் இயல்பு, மொழி என அனைத்தையும் நங்கு அறிந்து கொண்டார்,
உற்ப்பத்தி செய்யும் இடத்திற்கே சென்று விட்டால், நிறைய பிஸ்க்கட் கிடைக்கும் என நினைத்து,
ஒரு பிஸ்க்கட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார் அங்கேயும் காசு கொடுத்தால் தான் பிஸ்க்கட்
என்றிருந்தது, ஏமாற்றம் தான் , பிறகு தானே தொழிற்சாலை தொடங்க முடிவு செய்தார், தீவிர
முயற்ச்சி, உழைப்பு,
ஹென்றி ஒரு அடிமுட்டாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, வெற்றி பெறுதலுக்கும்
அறிவாளித்தனதுக்கும் எந்த சம்பந்தமும் கிடயாது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் களித்து இதோ
இன்று அவரின் கையில் ஒரு தொழிற்சாலை,எந்த ஒரு
வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்றாள், அது அவரின் மனைவி, அவரும் வேறொரு
நாடோடி இனத்தை சேர்ந்தவர், இறுவருமே இனம், மொழி தெரியாதவர்கள், அவர்களுக்குள் அன்பு
மேலோங்குவதற்க்கு எந்த தடையுமில்லையே. அதன் அன்பு காரணமாய் அழகியதொரு மகளும் பெற்ரிருந்தார்கள்,அவள்
தேஸஸ் ஒளிமயமானவள்,தேவதை, தொழிற்ச்சாலைக்கு இனையாய் அவளும் வளர்ந்து விட்டாள், ஹென்றியிடம் பெயர் கூட தெரியாத தன் இனம் குறித்து தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தார்
, தாய் மொழி கொண்டவர்கள் உயர்வானவர்கள் என்று கருதினார், கலாச்சாரம் பிடித்தவராய்,
நாகரிகமாய் நடக்க விரும்பியவராய் இருந்தார், தன் மகளையும் மொழி மற்றும் கலாச்சாரம்
படிக்கச் செய்தார், அப்பாவும், மகளும் தொழிற்சாலையில் சேர்ந்து கொண்டால் ஒரே கலாட்ட
தான், விதவிதமாய் மொழி பேசுபவர்களிடம் தம் மொழிப்பெறுமைகளை பேசச்சொல்லி கேட்டுக்கொண்டே
இருப்பார்கள், பெரிய தொழிற்ச்சாலை, முழுக்க இயந்திர மயம், யாருக்கும் வேலை இருக்கவில்லை
ஆனாலும் நிறையபேரை வேலைக்கு அமர்த்தி சம்பளம் கொடுக்க ஹென்ரிக்கு விருப்பம், ஜெ.பி க்கு தொழிற்சாலையின் சுற்றம்
வித்யாசமாய் இருந்தது, ஒரு வேலையும் இல்லாத போதும், பிஸ்க்கடில் புதிது புதிதாய் டிசைன்
செய்வதிலே ஒவ்வொருவரும் ஆர்வம் காட்டினார்கள், ஜெ.பி அதில் வித்யாசமாக பலவேறு மொழி
கற்பதில் ஆர்வம் செலுத்தினான், அவன் மட்டும் குறிப்பாக அனைவறாலும் கவனிக்கப்பட்டான்,
மெல்ல ஹென்றியுடனும் பழக்கம் ஏற்ப்பட்டது, தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரம், முன்னரே
அறிந்தவனே, அதன் பொருட்டு ஜெ.பி யால் கவரப்பட்டார், மெல்ல அவன் பதவியும் உயர்ந்து கொண்டே
போனது, ஜெ.பி யிடம் தன் மகளுக்கு தமிழ் பயிற்றுவிக்க சொன்னார் ஹென்றி. பொதுவாகவே தமிழ்
கற்றுக்கொள்ள கொஞ்சம் சிரமம் தான், அதுவும் ஜெ.பி போல் ஒரு இலக்கியவாதியிடம் தமிழ்
கற்றுக்கொள்ள, அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது, இதுவே போதுமல்லவா, அவர்களிடையே காதல்
பூக்க வேறெதுவும் சிறப்பு காரணங்கள் தேவையில்லை, ஜெ.பி ரொம்பவும் நல்ல பையன், தொழிற்சாலையயும்
நங்கு கவனித்து கொள்கிறான், தன் மகளுக்கும் பொறுத்தமானவனாய் இருக்கிறான், தன் மகள்,
காலாச்சாரமிகுந்த இந்திய நாட்டின் மருமகள் என்பதில் ஹென்றிக்கு பெருமையே, பெண் வீட்டாரின்
அனுமதியோடு பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். நாட்கள் சில கடந்தன, கல்யாணம் முடிந்த
நாள் முதலே, இந்தியாவை பார்க்க வேண்டுமென அடம்பிடித்து வருகிறாள் தேஸஸ், வெரும் சாதி
மாற்றியே ஒப்புக்கொள்ள மாட்டார்கள் இவளோ நாடு, மொழியென எல்லாமும் மாறியவள், இதனால்
என்ன நடக்கும், பெரியவர்கள் ஒன்று சேர்ந்து பஞ்சாயத்து கூட்டுவார்கள், கத்துவார்கள்,
கொஞ்ச நாளுக்கு யாரிடமும் மூச்சு,பேச்சு இருக்காது, இது மாதிரியெல்லாம் நடக்கும் நிலையை
எதனையோ முறை சொல்லியும் தேஸஸ் கேட்க்கும் படி இல்லை, அவளுக்கு இந்தியாவை பார்த்தே ஆக
வேண்டும்.
4.
விமானம் தன் ரெக்கைகளை விரித்து பறக்க தயார், தேஸஸுக்கோ
ஒரே துள்ளல், ஜெ.பி யின் கடைக்கோடி கிராமத்தையும் அடைந்து விட்டார்கள், தம்பதியினரை
வாசலிலே காக்க வைத்து, விட்டுக்கதவுகள் பலமாக அடைக்கப்பட்டது, அத்தனையும் ஜெ,பி யின்
சொந்த, பந்தங்கள், தேஸஸ் இந்தியாவைப் பார்த்தால், தான் படித்து போல் இல்லாதது கண்டு
மிரண்டால், விமானம் புறப்பட தயாரானது, இந்தியா வேண்டாம் என, தன் ரெக்கைகளை விரித்து
பறந்தது இந்தோநேசிய தேவதை.
No comments:
Post a Comment