Thursday, 25 July 2013

Story-61 கதை கதையாம்



  கதை கதையாம்……………’

பேஸ்புக்கு ,டுவிட்டர்,ப்ளாக் ,வீட்டுச்சுவர்,மேத்ஸ் டெஸ்ட் நோட்,பஸ் டிக்கெட்,பெரிய சைஸ் உள்ளங்கை,என எது கிடைத்தாலும் இலக்கியம் எழுதிவிடுவான்.இப்படித்தான் ஒரு நாள் நாவல் எழுத யோசித்துக் கொண்டிருந்தான்.
அளவான உயரம்….,வளையாத நீளம்…..ரெண்டு தென்னை மரம்..கொலை கொலையா இளநீரும் தொங்க வேண்டும்என்று அவன் மனதில் தீர்மானித்த மின்னல் நொடியிலேயேடொய்ங்ங்டொய்ங்ங்என்று இரண்டு தென்னை மரங்கள் கடற்கரையில் முளைத்தன.( கேணி அருகிலில்லை,பட்தென்னங்கீற்றுமிளநீரும்…….).
தனது  நாவலின் கதைக்களம் கடற்கரை என்றும்,நாயகன் ஒரு மீனவன் என்று முன்னமே தீர்மானித்திருந்தான். ‘டேய்! உனக்கு கடல் ராசா பாட்டு ரொம்ப புடிச்சிப் போச்சு.அந்த பாதிப்பு தான் உன்ன மீனவக் கதை எழுதவைத்திருக்கிறதுஎன்று மனதின் மற்றொரு மூலை மின்னல் வேகத்தில் ஒரு எஸ்.எம்.எஸ் தட்டியது.’ஆமாம்ல!!!’ என்று மெல்லியதாய் ஒரு ஆச்சர்யப் பட்டுக் கொண்டான்.
சரி.இப்போ கதை.
நம்ம நாயகன் அப்புடியே கடலையொட்டி மெதுவாக நடந்து வருகிறான்..கையில் என்ன வைத்திருக்கிறான்???...ஸ்ர்ஃப் போர்டு? மீன்வலை? மீன்? முத்து??.....கொம்பன் சுறா?.சரி அது அப்புறம்….
முதல்ல அவனுக்கு பேரு வெக்கனுமே!!
கவுதம்’…. ..மனதின் மறுமூலை படீரென ஆட்சேபித்தது.மீனவனுக்கு இப்ப்டித் தான், ஸ்டைலிஸா பேர் வைப்பாங்களா? ஏன் ! மார்க் ஸூக்கர்பெர்க்குன்னு வைக்குறதுதான…???
சூசை.ஓக்கே! .
சூசை நாட் ஓக்கே!!! (நெறைய தமிழ்ப் படம் பாத்து கெட்டுப் போயிருக்கடா! டோமர்)
சரி .பேரும் அப்புறம் வெச்சுக்கலாம்.
இப்ப கதை
மீனவன் நடுக்கடல்ல மாட்டிக்குறான்எப்படித் தப்பிக்குறான்ங்குறது சிம்பிளா முடிச்சுடலாம்.
அதுவும் வேண்டாம்!! (லைஃப் ஆஃப் பை, கடலும் கிழவனும்…….!!!???!!!!).
இப்படியாக,மனம் தனக்குள்ளேயே விவாதித்துக் கொண்டிருந்ததுபடபடவென வார்த்தைகளை டைப் பண்ணுவதும்,அதை அப்படியே அழித்துவிடுவதுமாக இருந்தான்.
சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு,தனது எட்டாம் வகுப்புக் காதல் கதையை, மீனவ பேக்ரவுண்டில் எழுதிவிடலாம் என, புது முயற்சியாக இருக்கும் என (???????????!!!!!!!!!) ………முடிவு எடுத்தான்...மீண்டும் யோசித்தான். மீனவன் கையில் என்ன வைத்திருந்தான்?..
ம்ம்..ஒரு த்ரெட் கெடச்சுடுச்சு,
புத்தகம்.
எதுக்குப் புத்தகம்.???
அதில் காதலை எழுதி,காதலிக்குக் குடுத்துவிடலாம்.மேட்டர் ஓவர்.லவ்வு சக்சஸ்.(ஆம் ,நிஜத்திலும் அவனுக்கு புத்தகப் பரிமாற்றத்தில் தான் காதல் வந்தது.)
           நாயகன்  ஆதவன் சிறுகதைத் தொகுப்பைகையில் பிடித்துக் கொண்டு,கடல் மணலில் சிரமப் பட்டு நடந்து,ஒன்றிரண்டு பிள்ளைகள்-அவர்கள் மணலில் வீடு கட்டுவதில் பிஸி. அவர்களைக் கொஞ்சிக் கொண்டே காதலியிடம் வந்து குடுப்பதாக கதையைத் தீர்மானித்தான்.
அவ்வளவு தான்.அதுவரை தேமேஎன்று அவனைக் கவனித்துக் கொண்டிருந்த நாயகன் ,ரெட் சிப் பொறுத்தப் பட்ட சிட்டி ரோபோவாய்த் திமிறினான்.ஆதவனைப் படித்தவனாயிற்றே.அறிவாளியாகத்தானே இருக்க வேண்டும்? அறிவாளியாகத்தானே செயல் பட வேண்டும்?தன்னைப் பற்றிய கதையின்,கதை டிஸ்கசனில் பங்கு பெற வேண்டுமென ,…….. கோரிக்கையெல்லாம் வைக்கவில்லைஅதிரடியாய் நுழைந்து விட்டான்.
     நுழைந்தவனுக்கு செம பல்பு..மிக மிக மொன்னையான கதையாசிரியனின் எண்ணப் போக்குகளைக் கண்டு அலுத்துப் போனான்.பாரதியைத் தாண்டி அவன் படித்திருக்கவில்லை.மனுஸ்யப்புத்திரனை டி.வியில் மட்டுமே அறிந்திருந்தான். மேலும்கடல் மணலில் ஒருவர் மடியில் ஒருவர் படுத்துக் கொண்டு,சுஜாதா கதைகளைப் படித்தார்கள்!!’என்று சொல்லிஎப்புடி???’ என்று கலாப் பூர்வமாக நாயகனுக்கு விவரித்தான்(??).அது தான் நாயகனை அதிகம் கடுப்படித்திருக்க வேண்டும்!!!).
     கதையாசிரியன் பாரதியைத் தாண்டவில்லை,பின் எப்படி அவன் ஆதவனை அறிந்தான் என்கிறீர்கள்!!!!!அவன் ஃபேஸ்புக்கில் மேம்புல்லாக மேய்ந்ததில் ஆதவனை அறிந்திருந்தான்.
     போடா நீயும் உன் கதையும்!!!!!!!!!!!!!!!’,’ஆள விட்றா சாம்மி!!!!!’ என்று கூறி விட்டு கடலுக்குள் ஓடி மறைந்து விட்டான் நாயகன்.முடிவில்லாத கற்பனைக் கடல்.சூன்ய வெளி.எங்கும் எப்படியும் தப்பிவிடலாம்.கதையாசிரியன் தொலைந்து போன தன் நாயகனை கண்டுபிடிப்பதென்பது முடியவே முடியாத காரியம்.என்ன தான் நாயகனை நல்லவனாகப் படைத்து விட்டாலும்,தன்னை உணர்ந்து கொண்டவனாயிற்றே!!அவனுக்குள் ஒரு வெறுப்பை விதைத்து விட்டோமே!!!!!மேலும் கற்பனை தானே?கற்பனையில் தன்னை ஒரு க்ரேக்க வீரனாகவோ,வெறி பிடித்த ரத்தம் தேடும் புலியாகவோ மாற்றிக் கொண்டு கொன்று விட்டால்??இந்த உயிர்பயம் அவனுக்கு எப்படி வந்ததென்று தெரியவில்லை.வந்துவிட்டது.எப்படியோ,தான் உருவாக்கிய கதாப்பாத்திரமே தன்னை கொன்றுவிடும் என்று பயந்தான்.எனவே ,அவனை தேடுவதை விட்டு விட்டான்.கற்பனைக்குள் கற்பனை வளர்ந்ததில்,அவன் கதை மரணித்து விட்டது.பின் அவன் கதையெழுதுவதைப் பற்றி யோசிக்கவே இல்லை.
இப்படியாக,தான் எழுத இருந்த நாவல், சுருங்கி சுருங்கி சுருங்கி,குறுநாவலாகவோ,சிறுகதையாகவோ,குறுங்கதையாகவோ கூட இல்லை,முற்றிலும் சூன்யமாகி விட்டது.கற்பனை உலகில் பிரவேசித்த நாயகனுக்கு கதையாசிரியன் மேல் எந்தக் கோபமும் இல்லை.பரிதாபமே மிஞ்சியது.இது தெரியாமல் அவன் பயந்து கொண்டிருந்தான்.கற்பனையுலகம் சலித்துப் போன நாளொன்றில்,பொழுது போகாமல் ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் ஆரம்பித்திருக்கிறான்.கதையாசிரியன் இந்தக் கதைக்கு, ‘பிள்ளையாரு பிடிக்க போயி,கொரங்கா மாறிடுச்சே!!!’ங்குற பழமொழியா, ‘கழுத தேஞ்சு தேஞ்சு கட்டெரும்பாயிடுச்சுங்குற பழமொழியா,எது இந்தக் கதைக்கு கரெக்ட்டா பொருந்தும்னு யோசித்துக் கொண்டிருக்கிறான்.

No comments:

Post a Comment