Wednesday, 30 July 2014

Story 108: கலவி விளக்குகலவி விளக்கு
அம்பத்தூரில் பலர் தங்கள்  உடல்நல  குறைவுகளுக்காக   தேடி செல்லும்  மருத்துவமனை 'அறிவே துணை மருத்துவமனை. அதற்கு முக்கிய  காரணம் டாக்டர்  தமிழ் பூதம் . அம்பத்தூர் மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.  கடவுள் பக்தியை விட தொழில் பக்தியே மேல் என நினைப்பவர்.  தன்னை நாடி வரும் நோயாளிகளிடம் அதிகம் பேச மாட்டார் என்பதே அவர்களுடைய ஒரே குறை.  .
        
       காலை வேளையில் மருத்துவமனைக்கு நோயாளிகள் வர ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்  செய்திதாளில் புதிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பாலியல் கல்விக்கு எதிராக கூறிய கருத்துக்களை படித்து கொண்டிருந்தார். தன்  முதல் நோயாளியாக வந்த 8 வயது சிறுமியின் தந்தையை பார்த்தவுடன் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.  மறக்க கூடிய முகமா அது? 
      சுமார் 20 வருடங்களுக்கு முன், "குடும்ப விளக்கு " மருத்துவமனையில் இளங்கலை மருத்துவ படிப்பு படித்து  முடித்த உடன் பொது மருத்துவராக பணியில் சேர்ந்தார் தமிழ்பூதம். பணிக்கு சேர்ந்த 5வது நாள், 18 வயது நிரம்பிய இளம் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில், கொண்டு வரப்பட்டாள்.கடுகடு வென்ற முகத்தோடு அவளை அழைத்து வந்த கணவனுக்கும் 20 வயது தான் இருக்கும்.  நன்றாக தமிழ் பேசினாலும் வட இந்தியாவை சேர்ந்த சேட் குடும்பம் என்பது தெரிந்தது .
பெண்ணின் பெயர் பூர்ணிமா, கணவன் பெயர் குஷால் சந்த்.  பூர்ணிமா அமிலத்தை தவறுதலாக குடித்து விட்டாள் என உறவினர்கள் தமிழ் பூதத்திடம் கூறினார்கள்.

    மருத்துவமனை  வரவேற்பில் இருந்த மூத்த பணியாளர் அப்பெண்ணை, அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி விடுமாறு தமிழ்பூதத்திடம் வற்புறுத்தினார்.அனைத்து நவீன வசதிகளும் கொண்ட மருத்துவமனையில் இருந்து ஏன் உயிருக்கு மிக ஆபத்தான  நிலையில் இருக்கும் பெண்ணை அனுப்ப வேண்டும் என்று வரவேற்பாளரை திட்டி விட்டு , உடனடியாக அட்மிட் செய்து சிகிச்சையை துவங்கினார்.  குடல் வயிற்று சிறப்பு  மருத்துவரும் அழைக்கபட்டார்.  அவர் பூர்ணிமாவை சோதித்து பார்த்துவிட்டு, பிழைப்பதற்கு  வாய்ப்பில்லை என்பதையும்  தமிழ்பூதம் எடுத்த சிகிச்சையின் நிறை குறைகளையும்  விளக்கி விட்டு சென்றார்.
    குஷால் சந்திடம்  பூர்ணிமாவின் உடல்நிலையை  விளக்கிய பிறகு, என்ன நடந்தது என்று விசாரித்தார்.  அதற்கு அவன், "டாக்டர், எங்களுக்கு

கல்யாணம் ஆகி 3 நாட்கள் தான் ஆகிறது.  பூர்ணிமா என்னை தொடர்ந்து உடலுறவில் ஈடுபட கூறினாள்.  ஆனால் இரண்டாம் முறையின் போதே எனக்கு வேதனை ஆரம்பமாகி விட்டது.வேதனையோடு சில முயற்சிகள் செய்தாலும் ,எனக்கு மிகவும் வலிப்பதாக கூற, அதற்கு அவள் அழ தொடங்கிவிட்டாள்.  எனக்கு ரொம்ப கோவம் வந்து, நீ என்ன நிம்போமேனியக்கா  என்று கேட்டுவிட்டேன்.  அப்படினா என்ன என்று கேட்டாள். 

   பாலுறவில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள்.உடை உடுத்தி கொள்வதே அவர்களுக்கு பிடிக்காது.தொடர்ந்து உறவில் ஈடுபடும் அளவிற்கு அதற்கு அடிமை ஆனவர்கள்,அதற்கு மருத்துவம் செய்து கொள்ளாவிட்டால் மற்றவர்களும் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று வெறுப்புடன் கூறினேன் 

    சிறிது நேரம் கழித்து பார்த்தால் இவள்  அமிலத்தை எடுத்து குடித்து விட்டாள் என்று வெறுப்பு குறையாமல் பதில் உரைத்தான்.

    நள்ளிரவாக இருந்தாலும் தற்கொலை முயற்சி என்பதால்  வரவேற்பு பணியாளர் முதலாளியிடம் இந்நோயாளியை பற்றிய தகவல்களை உடனே தெரிவித்து விட்டார். அவரும் மருத்துவமனைக்கு பறந்தோடி வந்தார்.பல கட்சிகளுக்கு சென்று வந்த செல்வாக்கான பணக்கார மருத்துவர் மருத்துவமனையின் முதலாளி.பாரதிதாசன் ரசிகர்.
சிகிச்சைக்காக  தமிழ் பூதத்தை பாராட்டிய அவர், இது போன்ற பிழைப்பதற்கு வாய்ப்பில்லாத நோயாளிகளை அட்மிட் செய்வதால் வரும் பாதகங்களை விளக்கினார். விசாரணை, வழக்கு, சாட்சி போன்றவற்றை விட நோயாளி இறந்துவிட்டால் மருத்துவமனை ராசி இல்லாதது என்று நோயாளியை அறிந்தவர்கள் அனைவரும் வர தயங்குவார்கள் என்பதை விளக்கினார்.
   பூர்ணிமா மருத்துவரிடம் மிகுந்த சிரமத்தோடு பேசினாள். பேசும் போது, கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. மிகுந்த கடவுள் நம்பிக்கை  கொண்டவள் என்பது அவள் அணிந்திருந்த பல்வேறு ஆபரணங்களில்,பேச்சில்  தெரிந்தது.     

       பொத்தி பொத்தி செல்லமாக வளர்க்கப்பட்ட பெண். தனக்கு சத்தியமாக ஆண் குறி விந்தை வெளியேற்றிய பிறகு மீண்டும் விறைப்புதன்மை அடைய சிறிது நேரம் ஆகும், ஒரே இரவில் மறுபடியும் மறுபடியும்  விறைப்புதன்மை ஏற்படும் போது இன்பம் போய் மிகுந்த வலி கொடுக்கும் என்பது தெரியாது என்று அழுதார்.
பெண்கள் வலிக்கும் என்று பயந்தாலும்,வலித்தாலும் , அதனை பொறுத்து கொண்டு   ஈடுபடுவது போல ஆண்களாலும் முடியும் என்று நினைத்ததாக கூறினார்.
காவல்துறை அதிகாரியிடனும்,  மரண வாக்குமூலத்திலும், தெளிவாக, தான் தெரியாமல் அமிலத்தை குடித்துவிட்டதாக கூறினாள்.கணவனோடு நடந்த வாக்குவாதத்தை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.மருத்துவமனையில் சேர்த்த இரண்டாம் நள்ளிரவே அவர் உயிர் பிரிந்தது.முதலாளி அரசியல்வாதி என்பதால் போலீஸ் விசாரணை  உடனே தொடங்கி சீக்கிரம் முடிந்துவிட்டது
   பூர்ணிமா இறந்த செய்தியை கேட்ட பின்பும் எரிச்சலுடன் வேண்டாவெறுப்பாக இருந்த கணவனை அழைத்த தமிழ் பூதம், பூர்ணிமா தன்னிடம் கூறியதை அவனிடம் விளக்கினார்.  பாலியலை பற்றி எவனுக்கும் முழுதாக தெரியாது.  ஏதோ கொஞ்சம் தெரிந்ததையும், சொல்லி கொடுப்பதையும், பெரும் பாவம் என்று எதிர்க்கும் கூட்டத்திற்கும் குறைவு கிடையாது.  கணவன் நிம்போமேனியாக் என்று சொன்னதால் அமிலத்தை குடித்துவிட்டேன் என்று கூறி இருந்தால், சிறை தண்டனை நிச்சயம் என்பதையும் சுட்டிக் காட்டினார்.  இதை  கேட்ட குஷால், குற்ற உணர்வால் அழதொடங்கிவிட்டான்.
     பழைய நினைவில் இருந்து மீண்ட தமிழ்பூதம், குழந்தைக்கு வைத்தியம் பார்த்துவிட்டு, எப்படி இருக்கிறீர்கள் என்று  குஷாலை பார்த்து கேட்டார்.  ஏதோ இருக்கிறேன் என்று சொன்ன குஷால், தாய் தந்தையரை  இழந்த உறவினர் குழந்தையை வளர்க்கிறேன் டாக்டர், குற்ற உணர்ச்சியால் என்னால் இன்னொரு பெண்ணோடு உறவு கொள்ள முடியும் என்று இன்றுவரை எனக்கு தோன்றவில்லை என்றான்


No comments:

Post a Comment