Thursday, 17 July 2014

Story 67: பிணம் பேசுகிறதுபிணம் பேசுகிறது

அருபது வயதான பெண்மணி பர்வதம்மா உயிரற்ற உடலாக நாடு ஹாலில்.....

நான் ஏன் இப்படி கிடத்த பட்டு இருக்கேன் ஏன் என்னால் என் உடலை அசைக்க முடியவில்லை?
ஏன் என் பெண்ணும் அவளின் மகளும் என்னை பார்த்து அழுகிறார்கள்?!!!!
ஐயோ நான் இறந்து விட்டேனா?!!
என்னால் ஏதும் செய்ய முடியாதா..... எனக்கு முன்னமே தெரிந்து இருந்தால் சொத்து தகராறில் பிரிந்த என் மகனிடம்
பேசி இருப்பனே..... என்னிடம் பத்து வருடமாக பேசாத இன்னொரு பெண்ணிடமும் எதேனும் பேசி இருப்பனே....
தினமும் என்னிடம் விளையாடும் பக்கத்துக்கு விட்டு குழந்தை அஜய் என்னை தேடுவானே எப்படி அவனுக்கு புரியும்...

எனக்கு இறுதி சடங்கு செய்ய என் பிள்ளை வருவானா இல்லை நான் அனாதை பிணமாக தான் போகனுமா....
அதோ என் தம்பி வந்து விட்டான்... ஐயோ அழாதடா தம்பி..... ஐயோ என் தம்பி இந்த வயதில் இப்படி அழுகிறானே...

என் தம்பி பேசி என் மகனை வர வைத்து விடுவான்,,, இனி எனக்கு கவலை இல்லை, என் கட்டை வேகும்.

என் தம்பி என் மகனிடம் நான் இறந்த செய்தியை தெரிவிக்கிறான். என்னால் கேக்க முடிகிறது இனி எனக்கு நிம்மதி.

ஏன் தம்பியின் முகம் வாடி இருக்கிறது... என் தம்பி அழுகிறான் என்னிடம் வந்து அக்கா உன் பையன் வரமாட்டேனு சொல்லிட்டான் என சொல்லி அழுகிறான்...

சொத்து தரவில்லையாம் அதனால் என் இறுதி சடங்குக்கு வர மாட்டானாம். அட மூட மகனே எனக்கு பிறகு என் சொத்தை
சரி பங்காக உனக்கு எழுதி வைத்துருகேனடா.
சரி நீயும் என்னதான் செய்வாய் வயதான நானே கெளரவம் பார்த்து உன்னிடம் பேச வில்லை.
என் மகன் ஆயிற்றே நீ.. என் பிடிவாதம் கோபம் எல்லாம் உனக்கும் இருக்கதானே செய்யும்.
தம்பி நீ அழாதடா என் மகன் சார்பில் நீ எனக்கு இறுதி சடங்கு செய்து விடு.

விடிய ஆரம்பம் ஆகா ஆகா ஒரு ஒரு சொந்தமாக தங்கள் இறுதி கடமை செய்ய வருகிறார்கள்... யார் வந்தாலும் நான் சாப்பிடாமல் அனுப்ப மாட்டனே இன்று இவர்களை யார் சாப்பிட சொல்வது..

அதோ என் பெண் வருகிறாள். அடி பைத்தியகாரி நான் உயிருடன் இருக்கும்போது ஒரு முறை கூட பேசவேண்டும் என தோணவில்லையே உனக்கு. நான் இருந்த பிறகு வந்து அழுது என்ன புண்ணியம் நான் எழுந்தா வர போகிறேன்.

என் இறந்த உடலில் போட்டு இருக்கும் நகைகளின் தன்மையை ஆராய்கிறாள் என் கடைசி தங்கை, நல்லா இருப்பாய் என் தங்கையே...

பிணத்தை எப்போது எடுக்கலாம் என பேசி கொள்கிறார்கள், நாளை பிணமாக போகிறவர்கள்.

பெரியவர்கள் ஒரு குழுவாக சென்று என் மகனிடம் சமாதனம் பேச செல்கிறார்கள்...

நேரம் ஆகா ஆகா எல்லோருக்கும் களைப்பாகவும் பசியும் வருகிறது...
ஆண்கள் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் சென்று சாப்பிட்டு விட்டு வந்து விடுகிறார்கள்.
இழவு வீட்டில் பெண்களின் நிலை தான் பாவம், பிணம் வெளியே போகும் வரை யாரும் சாப்பிட மாட்டார்கள்.

இந்த வீட்டில் இருந்து என்னை வெளியே எடுத்து செல்லும்போது, என் நிறைவேறாத ஆசைகள் எங்கு செல்லும்??!!


கடைசியில் வந்து விட்டான் என் மகன்...
வாட என் மகனே எனக்கு கடைசி காரியங்களை செய்து விட்டு போ...
என் ரத்தமடா நீ... உன்னிடம் நான் விரோதம் பாராட்டியது தவறடா...
உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ஆனால் காலம் கடந்து விட்டதே என்ன செய்வேன் நான்...

என்னை தூக்கி செல்கிறார்கள் சுடுகாட்டிற்கு....
பிணத்தை (என்னை) கிடத்தி வைத்து விட்டு ஏகப்பட்ட சடங்குகளை செய்கிறார்கள்..
செத்த பிறகு என்னைய இப்படி எல்லாம் செய்து கொள்கிறீர்கள். சிக்கிரம் தீயை வைத்து விட்டு
போங்கயா....


முடித்து விட்டார்கள்... நான் காற்றில் கரைகிறேன்...
என்னால் சொல்ல படவேண்டியது நிறைய இருக்கிறது
ஆனால் கேட்கதான் ஆள் இல்லை....

No comments:

Post a Comment