ஆச்சி
“அய்யோ
ஏன் என் உசிர வாங்கறே”
ஆச்சியின் குரல் கேட்டு திடுக்கிட்டு
விழித்தேன். கடிகாரம் ஏழு மணியை காட்டியது.
தினமும் என்னை எழுப்பும் அலாரம்
பக்கத்து வீட்டு ஆச்சியின் குரல்தான்,
அதுவும் அது தாத்தாவை திட்டும்
உயர்ந்த குரலாகத்தான் இருக்கும். இது தினமும் தொடரும்
இம்சை.
எங்கள்
வீட்டிற்க்கும், ஆச்சியின் வீட்டிற்க்கும் ஒரே தடுப்பு சுவர்தான்.
அதனால இங்க பேசுறது அங்க
கேட்கும், அங்க பேசுறது இங்க
கேட்கும். புதுசா கேட்கிற எல்லாரும்
பாட்டிக்கு தான் ஏதாவது பிரச்சனைன்னு
நினைப்பாங்க, ஆனா அது பெரும்பாலும்
தாத்தாவை திட்டும் வசவாகத்தான் இருக்கும்.
தாத்தாவுக்கு
என்பது வயசுக்கு மேல இருக்கும். ஆச்சிக்கு
எழுபது வயசுக்கு மேல இருக்கும். தாத்தாவுக்கு
வயசானதால எல்லா வியாதியும் உண்டு.அதனால பெரும்பாலும் கட்டிலோடுதான்
இருப்பாரு. கூடவே பாட்டியோட திட்டோடையும்
இருப்பாரு.
அவங்களுக்கு
ஒரே ஒரு பையன். இதே
ஊரிலே தனித்தனியா நல்ல வசதியோட இருக்காங்க.
ஆச்சியோட வாயிற்க்கு பயந்த்து தான் அவங்க மருமக
தனியா போய்ட்டதா ஊரிலே பேசிப்பாங்க்க. பாட்டிய
பார்க்கும் போது எல்லாம் அது
சரிதானு தோனும்.
எங்க அம்மா எப்பயாவது பலகாரம்
செஞ்சா என்ன போய் குடுத்திட்டு
வர சொல்லுவாங்க. அப்ப போனா, ஆச்சி
“என்னடா ஒழுங்கா படிக்கிறியா வேறு
என்ன?” ஒருவித சிடுசிடுப்புடன் கேட்பாங்க. இல்ல “அம்மா குடுத்துவிட்டாங்க”
என்று சொல்லும் போது தாத்தா “என்ன
பலகாரம்”? கேட்டா “அதானே சரியா
மூக்கிலே வாசனை வ்ந்திருமே”சொல்லிக்கிட்டு டக்குனு
தட்டை உள்ளே கொண்டு போயிருவாங்க.
தாத்தா ஏக்கதோட பார்ப்பார். இப்படிதானே யார் எது கொடுத்தாலும்
அது தாத்தாவுக்கு தரவே மாட்டாங்க. அவரும்
வெளியே எதுவும் சொல்ல மாட்டாரு,
ஆனா கண்லே ஏக்கதோட பார்ப்பாரு.
பெரும்பாலும்
சாயங்காலம் வாசல்லே உட்காந்துட்டு ஆச்சி
எங்க அம்மாவோட பேசிக்கிட்டு இருபபாங்க. தாத்தாவுக்கு சார்க்கரை வியாதி இருப்பதாலே அவருக்கு
ஏழு மணிக்கு பசிக்கும். மெதுவா
லட்சுமினு கூப்பிடுவார். கூடவே ஆச்சி “அதானே
பார்த்தேன் எங்க இன்னும் கூப்படலேனு
எப்ப பார்த்தாலும் எதாவது வேலை உனக்கு
செஞ்சுகிட்டே இருக்குனுமா. ஒரு பத்து நிமிஷம்
நிம்மதியா இருக்க விட மாட்டியே,
இரு வரேன், வந்து வடிச்சு
கொட்றேன்”திட்டிகிட்டே
போவாங்க.
இப்படி
எப்ப பார்த்தாலும் சிடுசிடுன்னு இருக்க, ஆச்சி எங்க
மாமா வந்தா மட்டும் அவருடன்
மரியாதையா பேசுவாங்க. காரணம் அவரு இவங்களுக்கு
பங்காளி வீட்டு அண்ணன் முறை.
ஆச்சியோட கூட பொறந்த அண்ணனோட
பேச்சு வார்தை இல்லாததால எங்க
தாத்தா மேல மரியாதை. எங்க
தாத்தாவும் அவங்க மேல பாசமா
இருப்பாரு.
வருஷம்
ஒரு முறை வரும் மாமா
இன்னைக்கு வந்தவுடனே முடிவு பண்ணேன். இந்த
முறை மாமாகிட்ட சொல்லி ஆச்சிய கண்டிக்க
சொல்லனும்.
மாமாக்கிட்ட
“தாத்தாவை பார்க்க வேற பாவமா
இருக்கு நீங்க ஆச்சிகிட்டே சொல்லி
அவர ரொம்ப திட்ட வேணாம்னு
சொல்லுங்க”.
மாமா கேட்டுக்கிட்டு அமைதியா இருந்தாரு.
“அவ மாதிரி ஒரு தெய்வத்தை
நீ எங்கயேயும் பார்க்க முடியாதடா இன்னைக்கு
அடங்கி கிடக்கிறானே உங்க தாத்தா அவன்
ஒரு காலத்துலே எப்படி ஆடினவன் தெரியுமா
அவன் செஞ்ச பாவத்துக்கு என்
தங்கச்சி இப்ப அவன வீட்டோட
இருக்க விட்டதே பெரிசு. கல்யாணமான
கையோட அவ தங்கசங்கிலிய எடுத்துகிட்டு
போய் குடிச்சு அழிச்சுட்டாண்டா. அத கேட்டதுக்கு அவள
போட்டு அடிச்சு, பொறந்த வீட்டுக்கு அனுப்பிட்டான்.
பின்ன நாங்கெல்லாம் சமாதானம் பண்ணி திரும்ப அனுப்பினோம்.
திரும்ப சங்கிலி திரும்ப குடி
திரும்ப அடி திரும்ப சமாதானம்,
இப்படியா மூணு வருஷம் போச்சு,
அவ குழந்தை உண்டான, பிரசவத்திற்கும்
அவள ஊருக்கு அனுப்பி விட்டு
இங்க வேற ஒருத்தியோட குடும்பம்
நடத்த ஆரம்பிச்சுட்டான்.
அவன் அத பிரச்சனை பண்ணி
அவ அண்ணன் வீட்டோடு தொடர்பு
இல்லைன்னா சேர்ந்து வாழறேன்னு சொன்னான். சரினு சொல்லி அவ
மறுபடியும் வாழ வந்தாள். ஆனா
அவன் அந்த பெண்ணோடு ஓடிட்டான்.
அவ திரும்ப அண்ணன் வீட்டோட
போகாம பையன வளர்த்து ஆளாக்கினாள்.
அவ பையனும் நல்ல தங்கமான
பையன். நல்ல பொருப்பா வளர்த்தாள்.
அவனுக்கு நல்ல இடதுல கல்யாணம்
முடிச்சு ஒரு தடவ குடும்பத்தோட
ராமேஸ்வரம் போகும் போது இவன்
கோயில் வாசலே பிச்சகாரன பார்த்தா
ரத்தம் சுருங்க இவன் கூட
போனவ விட்டு போயிட்டா, இவ
மறுபடியும்
கூட்டிக்கிட்டது மவனுக்கு பிடிக்கலா ஆனாலும் அவன் ஒண்ணும்
சொல்லல, ஆனா இவ தான்
பிடிவாதம் கட்டிகிட்டதுக்கு நான் தான் கஷ்டபடனும்.
எதுக்கு என் மவன், மருமவ,
பேத்தி எல்லாம் கஷ்டபடனும் தனியா
இந்த வீட்டுக்கு வந்திட்டா.
ஆனாலும்
அவன பார்க்கும் போது எல்லாம் பழசுயெல்லாம்
மனசுல வந்து போக அவ
அத இப்படி தீர்த்துகிறா அவளும்
மனுசிதானே!!!”
மறு நாள் காலை ஏழு
மணிக்கு ஆச்சியின் குரல் இம்சையாக தோணவில்லை.
No comments:
Post a Comment