சாம்பல்
ஒரே இருட்டு ஒன்றை
ஒன்று இடித்துக் கொண்டு நிற்க, ஒரு
பெட்டியில் அடைத்து வைத்தது போன்ற
ஒரு உணர்வு, அது தான்
உண்மை. அப்போது என்னோடு இணைந்து
இருக்கும் என் காதலியிடம் நான்
பேச ஆரம்பித்தேன், ”ஏய்…ஏய்…”, “ச்…என்ன?”, “நா பேசுறது கேட்குதா?”,
“பக்கத்துல தான இருக்க கேட்குது”,
“இல்ல இருட்ட இருக்கேன்னு கேட்டே…”,
“என்ன சொல்லு?”, “உ கிட்ட என்ன
சொல்லபோற…’உன்ன காதலிக்கிறேன்’, நீ
எங்கிட்ட சொல்லுன்னு சொல்வேன்”, “நா முடியதுன்னு தான்
சொல்னேன்”, ஏ…நம்ம சேந்து,
Sorry ஒன்னா இருந்த இந்த 34 நாள்ள
ஒரு தடவ கூட என்ன
உனக்கு பிடிக்கல, காதலிக்கனுன்னு தோனல…?”, “உ பாதுகாப்புல இருக்கன்றதுக்காக
நீ பேசுறதெல்லா கேட்கனுன்றது ஏ விதி…கொஞ்சம்
சும்மா அந்த…” அந்த இடத்தில்
மீண்டும் அந்த சத்தம் உணரப்பட்டது.
“என்னடா சத்தம் அது”, “ம்……அடுத்து நம்ம தா…”
பெட்டி திறக்கப்பட்டதில் வெளிச்சம்
உள்ளே பரவியது. “நம்மல தூக்கப்போது”, அந்த
இரண்டு விரல்கள் எங்கள் இடபக்கம் இருந்த
மற்றொரு சிகரெட்டை தூக்கியது. பின் பெட்டி சற்று
வெளிச்சம் வரும்படி முடப்பட்டு, ஒரு சமமட்டமான இடத்தில்
வைக்கப்பட்டது. நாங்கள் அந்த பெட்டியின்
இரண்டில், ஒரு வரிசையின் இடப்ப்க்கம்
கடைசியில் இருக்கிறோம். எங்களோடு இப்பொது 10ல் 9தான் இருக்கிறோம்.
அப்போது ஒரு குரலின் ஒலி
கேட்டது, அது ‘டென்சன்னா ஒரு
சிகரெட் அடிச்சாதான் Free இருக்கு(அது எந்த
ஒரு மொழியாகவும் இருக்கலாம்)’ அவர்களுக்கு(மனிதர்களுக்கு) டென்சன் என்றால் நாங்கள்
எதற்காக எரிக்கப்பட வேண்டும். நாங்கள் எதற்காக எரிக்கப்படப்போகிறோம்
என்று இப்போது தெரிகிறது. நாங்கள்
என்றால், எங்கள் பெயர் “சிகரெட்”.
உலகத்தில் அதிமாக விற்பனையாகும் பொருட்களில்
ஒன்று. நாங்கள் சிலவைகளால் சேர்ந்து
ஒரு உருவமாக இருக்கிறோம். சில
சிகரெட்டில் பேப்பர், புகையிலை, பஞ்சு என மூன்று
இருககும். எங்களில் இரன்டு மட்டும்தான்
இரண்டு நான் பேப்பர்
மற்றோன்று, என் காதலி டொபாக்கோ.
டொபாக்கோவை முழுபெயரிட்டுதான் கூப்பிடுவேன். டொபாக்கோ என்னை ‘காகி’ன்னு
கூப்பிடுவாள். டொபாக்கோவும், நானும் சேர்ந்து 34 நாட்கள்
ஆகிவிட்டது. டொபாக்கோவை எனக்கு காரணம் இல்லாமல்
பிடித்துவிட்டது. அதை டொபாக்கோவிடம் “உன்னை
காதலிக்கிறேன்” என்று சொன்னேன்,ஆனா,
டொபாக்கோ என்னை பிடிச்சும், பிடிக்கவில்லை
என்று சொன்னாள். பின் டோபாக்கோ என்னிடம்
பேசவில்லை.
என்னை நான் ஆணாக
முடிவு செய்து கொண்டேன். டோபாக்கோவுக்கு
நான் பாதுகாப்பாக இருக்கிறேன், அதனாலும், மேலும், அவளுக்குள் ஒருசில
போதையும் இருக்கு, அதனாலும், அவளை பெண் என்ற
முடிவோடு நான் காதலித்தேன்.
எனது ஊர் உலகத்தில்
பெரிய நகரங்களின் ஒன்றான ஷாங்காய். நான்
கொஞ்சம் அறிவாளி. ஏனென்றால், நான் பேப்பர்; என்னில்
பல கவிஞர்களும், அறிஞர்களும். பல படித்தவர்களும் அவர்களை
உயர்ந்தவர்களாக்கி கொள்ளவும், ஒவியர்கள் எங்களை அழுக்காக்கி, பின்
அழகாக்கி அவர்களை சிறந்தவர்களாக்கிக்கொள்கிறார்கள். ஆனால் என் இனத்தில்
நான் பாவப்பட்டவன், அதே அறிஞர்களும், கவிஞர்களும்,
ஒவியர்களும் தங்கள் வாழ்க்கையை சிதைத்து
கொள்ள என்னை, அதாவது எங்களை
புகைத்து, எரித்துவிடுகிறார்கள்.இதை நினைத்து வருந்துவதில்
புரியோசனம் இல்லை.
டொபாக்கோவை நான் பார்த்து 28 நாட்கள்
பேசவேயில்லை. 29வது நாள் பேசினோம்.
அவளை பற்றி கேட்டேன். அவள்
ஒரு செடியிலிருந்து வந்தவளாம். மற்றவை பற்றி அவளுக்கு
ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அவள் ஒன்று
சொன்னால்,” எல்லா செடிகளையும் நன்மைக்கு
இந்த உலகம், என்னை மட்டும்
தீமைக்கு உபயோகித்து விஷச்செடியாக மாற்றிவிட்டார்கள்” என்றாள். அவளிடம் நான் “நீயும்,
நானும் இந்த உலகத்தில் பாவத்திற்காக
பிறந்திருக்கிறோம்” என்று சொன்னேன்.
31வது நாள் அவளிடம்
“உன்னை நான் நேசிக்கிறேன்” என்று
சொன்னேன். அவளுக்கு நான் சொன்னது பிடித்தும்
மறுத்துவிட்டாள். நீயும் நானும் ஒன்று
சேர முடியாது என்றாள். நீ வேறு, நான்
வேறு நாம் சேருவது சாத்தியமில்லை
என்றும் சொன்னாள். 32,33 நாட்களிலும் மீண்டும் என் காதலை சொன்னேன்.
அவள் மறுத்துவிட்டாள்.
இன்று 34வது நாள்,
எங்களை எப்போது வேண்டுமானாலும் எரிக்கலாம்.
அவளிடம் பேசிக்கொண்டே இருக்கிறேன். மீண்டும் சத்தம்; மீண்டும் அதே
விரல்; 10:8; பேசினேன்; மறுத்தாள்; மீண்டும் அதே விரல்; மீண்டும்
சத்தம்; 10:7; பேசினேன்; மறுத்தாள்; மீண்டும் சத்தம்; இம்முறை வேறு
விரல்; இந்த முறை நாங்கள்,
அந்த விரலின் சொந்தக்காரன் உதடுகளில்
சொருகப்பட்டோம். “நம்மல எரிக்கப்போறாங்க, இப்பயாவது
சொல்லு என்னை பிடிச்சிருக்கா? இல்லையா?”
எங்களுக்கு முன் நெருப்பு எரிகிறது.
“இப்பவாது சொல்லு?.” நெருப்பு எங்களிடம் நெருங்குகிறது. அவள் தயங்குகிறாள். “சொல்லு”,
“உன்ன எனக்கு பிடிக்கும் காகி,
ஆனா நம்ம சேர முடியாது”,
“நாம கண்டிப்பா சேருவோம் பார்.”
நெருப்பு எங்களை எரிக்க ஆரம்பித்தது.
உதடுகளின் இருக்கும் எங்கள் பின் பக்கம்,
எங்களை பின்னால் இழுப்பது போன்ற ஒரு உணர்வோடு,
சில வினாடிக்கு அந்த உதடுகளின் வழியே
நடுவில் சிரு சிவந்த சவ்வு,
ஒரு ஆழ்குழியில் நுழைந்து, பின் ஒரு தண்டில்
இரண்டு பெரிய அறை மாங்காயை
போன்ற பரவி, இளுக்கப்பட்டதை விட
மிக வேகமாக மேல்நோக்கி மீண்டும்
வெளியில் தள்ளப்பட்டோம்.
மீண்டும் அந்த உதடை அடைந்து
வெளியில் தள்ளப்பட்டதும், சில வினாடிகள் குழப்பம்……
மேலே போவதுபோல் ஒரு உணர்வு……எங்கள்
முன் கீழே ஒரு உருவம்,
எங்களை, அவன் உதடுகளின் நடுவில்
வைத்து காற்றினை சேர்த்து இழுத்து வெளியே புகையாகவிடுகிறது.
எங்களின் உடல் எறிக்கப்பட்ட சடலம்போல
கறுகிய சாம்பலாக மாறியது.
“காகி நீ சொன்னது
சரிதான் நம்ம ஒன்னா சேந்துடோம்.”
“ம்… மனிதர்கள் நம்மை எரிக்க எரிக்க,
நம்மல யாரும் பிரிக்க முடியாது.
நம்ம வாழ்வோம். ஆனா மனிதர்கள்……”
“சரி அத விடு
இப்ப சொல்லு ஒன்னா சேர்ந்துடோம்,
எந்த நாட்டுக்கு போகலாம்”. “ம்… நீயே சொல்லு”,
“ம்… ஃபிரான்ஸ் போகலாம், காதலை சரியாக புரிந்த,
தெரிந்தவர்களும் அங்க அதிகமா இருக்காங்க…
போகலாமா?”, “ம்… போகலாம்.”
No comments:
Post a Comment