முத்தம்
“இரயில் நிலையத்தில் அவசர
அவசரமாய் கொடுக்கப்பட்ட முத்தங்கள்
அவை.” முத்தம்
எனக்கு புதிது இல்லை என்றாலும்
அவள் அவனுக்கு கொடுத்த முத்தங்கள் என்னை வியக்க
வைத்தன. அப்பா உடல் நிலை
சரி இல்லாத போது பார்க்க
வந்த அத்தை
தலையை வருடி நெத்தியில்
இட்ட முத்தத்தை பத்து வயதில்
கூச்சத்துடன் பெற்று கொண்டவன். சிறு
வயதில் எவ்வளவோ
முத்தங்களை பாட்டி,அம்மாவிடம் இருந்து
பெற்று இருப்பேன். அவைகள் நினைவில் பதியாமலும் இருக்கலாம்.
அன்பின் வெளிப்பாடான முத்ததை இப்போது எல்லாம்
அறிவியல் ஆராய்சிக்கு
உட்படுத்துகின்றேன். எல்லாம் படிக்கும் படிப்பின் கோளாறு தான்.
-----சை
மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு
படிக்கும் நான் ,உலகத்தின் தலை சிறந்த அறிவு களஞசியமாக நினைத்துக்
கொண்டேன்.ஒரு சிகரேட் பிடிக்கும் போது
எவ்வளவு கலோரி இழப்பு ஏற்படுகிறது
? காதலன் ,காதலிக்கும் இடும் முத்ததின் உடல்
கூறு இயல் விளைவுகள்
என்ன ? என்று எல்லாம் நண்பர்களுடன் விவாதிப்பேன்.
எனக்கு என்றே சிறப்பான
ஒரு நண்பர் கூட்டம். ஒவ்ஒருவரும் எங்கள்
படிப்பு தொடர்பான
எதோ ஒரு
துறையில் தனிச்சிறப்பு வாய்ந்தவர்களாகவே இருந்தோம்.
என் அறை நண்பன் பிணங்களை கூறுபோடும் “போஸ்ட்மாட” கலையில் கை தேர்ந்தவன்.
பிண உடலை நளினமாக வெட்டி உறுப்புகளை
எடுத்து திரவ குடுவையில் போட்டு விளக்கம் கொடுபதில்
எங்கள் பேராசிரிகளுக்கே சவால் விடுவான். போஸ்ட்மாடம் முடித்து விடுதி
அறைக்கு வருபவன்,உடல் கூறு இயல் புத்தகத்தை எடுத்துகொண்டு
அன்று செய்த ஆய்வை
சரிபார்த்துக் கொள்வான்.
காலையில் எழுந்த உடன் புகைக்கும்
"போஸ்ட் மாட" நண்பன் ,இரவே தீர்ந்த சிகரேட்டை நினைத்து எரிச்சல் அடைவான். நாங்கள்
காலையில் அவசர
கதியில் கிளம்ப
வேண்டியுள்ளதால் நண்பனின் காலை தேவைக்காக இரவில்
"ஸ்டாக்" வைக்க தொடங்கினேன்.
அறையை சுத்தம் செய்ய, புத்தகங்களை பிரதி எடுக்க
என்று எல்லாவற்றுக்கும் என்னை சார்ந்து
இருக்க தொடக்கினான்.
அன்று மாலை அறைக்கு வந்தவன் பதட்டத்துடன் இருந்தான்.
எதோ பிரச்சனை என்று புரிந்தது. அவனே சொல்லட்டும்
என இருதேன். சிரிது நேரத்தில்
மவுனத்தை கலைத்தவன்
அன்று இரவு அவன்
தோழியை சந்திக்கப்போவதை
கூறினான். இரவு நேர
சந்திப்பு ;அதுவும் போஸ்ட்மாட அறையை
அடுத்து இருந்த பழைய பயன்படுத்தாத அறையில்..... இரவு இரண்டு மணிக்கு சந்திப்பதாக திட்டம்
... விடுதி காவலர்களை சரிகட்டி
விட்டதாக கூறினான். எங்கள் கல்லூரியில் இத்தகைய சந்திப்புகள் புதிது இல்லை என்றாலும்,
நண்பனின் நடு
இரவு விளையாட்டு எனக்கு
கவலை அளித்தது.அடுத்த நாள் காலை வழக்கத்தை விட நீண்ட
நேரம் தூங்கி இருந்தேன்.
"முத்தம் கூட கொடுக்க முடியல
...... முடியல
..." என்று தூக்கத்தில் நண்பன் உளறிக்கொண்டு இருந்தான். என்
மனதத்துவ மூளை
விழித்துக்கொண்டது .உறக்கத்தின் தொடக்கத்தில் அல்லது விழிக்கும் போது வரும்
கனவுகளின் வெளிபாட்டு தான் இந்த
பிதற்றல்.நான் எப்போதும் மனித
மனங்களை உற்று
நோக்குவதையே பழக்கமாக கொண்டவன்.
மேற்கொண்டு மனநோய் சார்ந்த படிப்பை படிக்க முடிவு செய்து
இருந்தேன். தனி மனித ஆளுமை பற்றி பேராசிரியர் நடத்தும் பாடங்களை,
நூலகம் சென்று மேலும்
கற்று , ஆய்வு கட்டுரைகள் எழதும் அளவிற்கு சென்றுவிட்டேன். மனதத்துவ
இயலை அனுபவத்தின் மூலம் நன்கு அறிய
முடியும் என நான்
உணர்ந்து கொண்ட பின்,
என் சக மனிதர்களின் அசைவுகள் யாவும் காரண
கரியங்களை விளக்கியது.
எனக்கு இதுவே இப்போது பெரும் பிரச்சனை ஆகிவிட்டது.
நண்பனை எழுப்பாமல் கல்லூரிக்கு சென்றவன்
,காலை நேர இடைவேலையில் மேசை
மீது தலை கவிழ்ந்தேன்.
எனக்கு பின்னால் இருந்து மெல்லிய
குரலில் இரு
பெண்களின் உரையாடல் கேட்டது.
"நேத்து என்ன ஆசிடா
?"
"அட நீவேர
... டிசம்பர் மாத குளிரில் நடுங்கிட்டான்
....போஸ்ட்மாடம் செயத்தான் முடியும்
அவனால "
உடனே திரும்பி யார் என பார்க்க
ஆசை தான். கட்டுப்படுத்திகொண்டேன். என் பொய் தூக்கத்தை அடுத்த வகுப்பிற்கான மணி ஓசை கலைத்தது.
என் உள் உணர்வு நண்பனை உடனே பார்க்க
உந்தியது. மதிய உணவு இடைவேலையில்
விடுதி அறைக்கு சென்றவன்
அதிர்தேன். நண்பன் வாந்தி எடுத்து தரையில் அலங்கோலமாக கிடந்தான்.
அன்று மாலையே என் "போஸ்ட்
மாட " நண்பனுக்கு போஸ்ட்மாடம் நடந்தது. தற்கொலை என்று உறுதியானது. நண்பனின் உடலை
அவன் அண்ணனுடன்
சென்னைக்கு அனுப்பி வைத்த உடன் என் அறையில் தங்க பிடிக்காமல் பேராசிரியரிடம் வாய் மொழியாக அனுமதிப்பெற்று என் ஊருக்கு புறப்பட்டேன்.
இரவு நேர இரயில் பயணம் மிகுந்த சலிப்பை ஏற்படுத்தியது.
உறங்க இடம் இருந்தும் உறங்காமல் விழித்து இருந்தேன்
. இரயில் சிதம்பரத்தை அடைந்த போது மணி இரண்டு இருக்கும்
. இரயில் வண்டியின் வாசல் அருகே வந்து நின்ற
என்னை குளிர்
தக்கியது. "டீ" கிடைக்குமா என கண்கள் அலைந்தன.கீழே இருவர் நின்று இருந்தனர்.
எளிய உடை
;மெலிந்த தேகம். கணவன் ,மனைவியா
? காதலன் , காதலியா ? என்று நான் ஆராயவில்லை. டீ அருந்தி
விட்டு திரும்பிய நான்............................ அவள்
, அவனுக்கு அவசர அவசரமாய் இரயில் புறப்படும் நேரத்தில்
இட்ட முத்தங்களை கண்டேன். அவன் புறங்கையில் ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு முத்தங்களை இட்டுக்கொண்டு இருந்தாள். இரயில் நகர தொடங்கியது.
அவனும், அவனுக்கு பின் நானும் ஏறிக்கொண்டோம். பாத்திரங்கள்
வைக்கும் மேல் அடுக்கில்
ஏறி படுத்தவன் உடனே தூங்கிப் போனான்.
எனக்கு ஏனோ அவள்
, அவனுக்கு இட்ட முத்தங்களை
இன்னும் மறக்க முடியவில்லை.
No comments:
Post a Comment