பின் தொடரும்
ஒருவன்
எட்டாம்
வகுப்பெல்லாம் வீட்டுக்கு போகலாமுன்னு டீச்சர் சொன்னவுடன் அனைவரும்
வெளியே வந்தோம், காயத்ரி நில்லுடி, என
கூறிக்கொண்டே மாலதி ஒடி வந்தாள்.
மாலதியும் நானும் பக்கத்து பக்கத்து
வீட்டில் வசிப்பதால் இருவரும் பள்ளிக்கும் டியுசனுக்கும் ஒன்றாகவே வருவோம் ஒன்றாகவே வீட்டுக்கு
போவோம். இருவரும்
பேசிக்கொண்டே வந்தோம், கோவில் தெரு முனையில் அவன்
நின்றிருந்தான் இபோழுதெல்லாம் அவன் தினமும் அங்கு
நின்று என்னைப் பார்க்கிறான். சில
சமயம் சிரிக்கின்றான் என்ன செய்வதென்று தெரியாமல்
தலையை குனிந்தபடி நடந்தேன்.
இப்பொழுதெல்லாம்
நான் துப்பட்டா இல்லாமல் வெளியே
போனால் அம்மா பயங்கரமாக திட்டுகிறாள்.
இப்போது நான் செல்லும் பல
இடங்களுக்கு என்னை பல பையன்கள்
பின் தொடர்கிறார்கள் பேச முயற்ச்சிக்கிறார்கள் என்ன செயவது
என்று தெரியவில்லை அப்பாவிடம் சொல்ல பயமாக இருக்கிறது.
வீட்டிற்க்கு
வந்தால் ஊரில் இருந்து சித்தி
வந்து இருந்தாள் அம்மாவின் தங்கை அவளை எனக்கு
ரொம்ப பிடிக்கும் அவள் ஊரில்
இருந்து வந்தாள் என்றால் அன்று இரவு கண்டிப்பாக
குடும்பத்துடன் சினிமாவிற்க்கு செல்வோம். நான் சித்தியிடம் என்ன திடிர்னு
வந்து இருக்கிங்க என்று கேட்டேன் அதற்கு
அவள் உங்க அப்பா அலுவலக
வேலையா அவசரமா
ஊருக்கு போறதால என்னை உங்களின்
துணைக்கு வர சொன்னார் என்று
கூறினாள்
சித்தி
வாங்கிவந்த இனிப்புகளை உண்டு எல்லோரும் ஜாலியாக
பேசிக்கொண்டு இருந்தோம், இரண்டு தெரு தள்ளி
இருக்கும் திரையரங்கிற்க்கு சென்று இரவு
காட்சி சினிமா பார்க்க சித்தியும்
அம்மாவும் முடிவு
செய்தார்கள், அம்மா
என்னிடம் நாம் தனியாக சினிமாவுக்கு
செல்வது அப்பாவுக்கு தெரிந்தால் நம்மை அவர் திட்டுவார்
எனவே நீ அப்பாவிடம் கண்டிப்பாக
சொல்லக்கூடாது என அம்மா கூறினார்கள்.
தூறல் போட்டுக் கொண்டிருந்த்தால் குடை எடுத்துச் சென்றோம்
டிக்கேட் வாங்க
நின்றுகொண்டிருந்த போது ஒரு
ஆள் வந்து என்னிடம் பேச்சு
குடுத்தான், அவன்
ஆள் கருப்பாகவும் தோற்றத்தில்
பெரிய செல்வந்தர்
போலவும் காட்சியளித்தான். நான் அவனை முறைத்துவிட்டு
வேறுபக்கம் திரும்பி நின்றுகொண்டேன். இடைவேளையின்போது
வேளியே செல்லும்போது அவன் எங்களின் இருக்கையின்
பின் இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான்.
படம் இரவு 12:30 க்கு விட்டது நாங்கள்
வீட்டுக்கு வந்து கொண்டிருந்தோம் நான்
தற்ச்செயலாக திரும்பி பார்த்தபோது அந்த ஆள் எங்களின்
பின்னால் பத்தடி தூரத்தில் எங்களை
தொடர்ந்து வந்துகொண்டிருந்தான். எனக்கு பயம் எடுத்துவிட்டது
அப்பா இல்லாமல் தனியாக வந்தது தப்போ
என நினைத்தேன், அவன் எங்களிடம் வம்பு
செய்தால் குடையின் கூர்முனையால் அவன் வயிற்றில் குத்திவிட
திட்டமிட்டேன். அம்மாவும் சித்தியும் இது பற்றி அறியாமல்
வேகமாக சென்று கொண்டு இருந்தனர்.
நாங்கள்
வீட்டுக்கு அருகில் வந்து விட்டடோம் அவனோ
தொடர்ந்து வந்து விட்டான், எனக்கு பதட்டம் அதிகமாகிவிட்டது தெருவே
அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தது, வீட்டின் கதவை திறந்த என்
அம்மா என்னிடம் சிக்கிரம் பாத்ரூம் போய்ட்டு வந்து தூங்குடி, என
கண்டிப்புடன் கூறினாள் பாத்ரூம்
சென்று வந்த என்னை அம்மா
கட்டிலில் தள்ளி இரவு விளக்கை
போட்டு விட்டு என் முகத்தை
மறைத்தவாரு, இருக்கமாக என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு
படுத்துக் கொண்டாள் கிடைத்த சிறு வெளிச்சத்த்தில்
பார்த்தபோது அந்த ஆள் என்
வீட்டிற்க்கு உள்ளே வந்தான் சித்தி
அவன் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு சமையறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டாள்.
நான் அப்புடியே அதிர்ச்சியில் வேறுவழி இல்லாமல் தூங்கிவிட்டேன்.
காலையில் சமையலறையில் போய் பார்த்த போது
அங்கு யாரும் இல்லை அதற்க்கு
பிறகு எனக்கு சித்தியை பிடிப்பதில்லை.
No comments:
Post a Comment