தற்கொலை
ஸ்வேதா
நல்ல பெயர் தான் ஆனால்
அவளுக்கு இறைவன்(?!) நல்ல வாழ்கையை கொடுக்கவில்லை.
ஆம் அவளை பொறுத்தவரை இறைவன்
இருக்கிறானா இல்லையா என்பதே சந்தேகம்.
இதோ வந்து விட்டாள் ரயில்வே
தண்டவாளத்திற்கு தன் வாழ்கையை முடித்து
கொள்ள.....
தன்னுடன்
தன் வயிற்றில் வளரும் 7 மாத சிசுவையும் சேர்த்து
கொல்ல துணிந்து விட்டாள்.
ஸ்வேதா,
நல்ல பெயர் வைக்க தெரிந்த
இவள் பெற்றோருக்கு சரியாக போலியோ
சொட்டு மருந்து கொடுக்க தவறிவிட்டார்கள்.
அதனால் ஏதோ சதவிதத்தில் சொல்வார்களே
அதில் 80% உடல் ஊனத்தை கொடுத்து
விட்டார்கள் இவள் பெற்றோர்கள். உடல்
எப்படி இருந்தால் என்ன எல்லோரையும் போல
நன்றாக படித்து பட்டம் பெற்றாள்.
வீட்டில்
மாப்பிள்ளை பார்த்தார்கள். இவள் ஊனத்தை கரணம்
காட்டி அதிக வரதட்சணை வாங்கி
கொண்டு படிக்காத ஒருவனுக்கு திருமணம் நடத்தி வைத்தார்கள்
எல்லா பெண்களையும் போல பல வண்ண
கனவுகளுடன் சென்றாள். திருமண வாழ்கை தொடங்க
ஆனால் நடந்ததோவேறு.... கணவன் வீட்டார் பணத்திற்காக
விருப்பம் இல்லாத தன் மகனுக்கு
இவளை கட்டி வைத்து விட்டார்கள்.....
இவள் கணவன் இவளை பல
கொடுமைகளுக்கு ஆளாக்கினான். உச்சகட்டமாக தாம்பத்திய வாழ்கையில் இடுபடாமலே கொடுமைக்கு ஆளாக்கினான். ஒரு நாள் குடித்து
விட்டு இவளுடன் குடும்பம் நடத்தி
விட்டான் அதனாலேயே இப்போது அவள் ஏழு
மாதம். தற்போது அவள் கருவை
கலைக்கும்படியும் விவாகரத்து கேட்டும் கொடுமை செய்கிறான். இவளின்
வீட்டின் வறுமை சூழ்நிலையால் எதையும்
அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
அதனால் இதோ சாகும் முடிவுடன்
வந்து விட்டாள்.
சாவதற்கு
முன் தன் நண்பன் பாரதியுடன்
பேச நினைத்து அலைபேசியை அழைத்தாள்.
எதிர் முனையில் பாரதி.பாரதி அதீத
அன்புடன் பழகுபவன் எப்போதும் பேசிகொண்டே அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தி விடுவான்
இவளுக்கும்
அவனுக்கும் நல்ல நட்பு மட்டுமே
உள்ளது.
பாரதி அலைபேசியை உயிர்பித்து,"சொல்லு ஸ்வேதா நாம
பேசி பல மாசம் ஆச்சே
என்ன இந்த நேரத்தில, எப்டி
இருக்க ஏதும் விசேசம் உண்டா...
என கேட்டு கொண்டே போனான்.
..............
என்ன பேச மாற்ற பேசாம
இருக்க எதுக்கு போன் பண்ண....
சொல்லு ஏதும் பிரசினையா
............ அழுகை
சத்தம் மட்டுமே கேட்டது
ஏன் அழுற குடும்பத்துல ஏதும்
பிரச்சினையா.... கேட்டான் பாரதி
நான் சாக போறேன் டா,,,,,,,
சொன்னாள்
என்ன டீ குடிக்க போற
மாறி சொல்ற சாக போறனு.....
ஆமா என்னால இப்டி வாழ
முடில...... மீண்டும் அழுதாள்
சரி கடைசியா உன்கிட்ட பேசலாம்னு
போன் பண்ணேன்டா......
................
என்னடா
ஒன்னும் பேச மாற்ற.....
சாக போறவ அமைதியா போலாம்ல
எனக்கு போன் பண்ணிட்டு சாக
வேண்டியது
கடைசியா
யாருக்கு போன் பண்ணேன்னு போலீஸ்
என்னால புடிக்கும் ஏதோ தப்பு பண்ணிட்டு
அடிவாங்குன கூட பரவாலா
என்னலடி
ஜட்டியோட உக்காரவச்சு அடிப்பாங்க.....
கவலை மறந்து சிரித்தே விட்டாள்.....
பேசி கொண்டே அவள் இருக்கும்
இடம் தேடி வந்து விட்டான்
பாரதி...............
அவளை சமாதான படுத்தி ஒரு
காப்பகத்தில் சேர்த்து விட்டான்......
இப்போது
குழந்தையோடு தன் சொந்த காலில்(?!)
நிற்கிறாள் ஸ்வேதா
No comments:
Post a Comment