Wednesday 2 July 2014

Story 43: குல தெய்வம்




குல தெய்வம்

சுவர் ஓரம் சாய்த்து வைக்கப்பட்டிருந்த நாடா கட்டிலை பார்த்தபடி நாற்காலியில் வந்து அமர்ந்தேன்.  இப்படி சாவகாசமாக வீட்டில் சாய்ந்து உட்கார்ந்து இரண்டு வருடங்கள் ஆகிறது . டெல்லியில் இரண்டு வருடம் உதவி பேராசிரியராக பணிபுரிந்துவிட்டு இப்போது கட்டாய விடுமுறையில் குல தெய்வம் கோவிலுக்கு செல்வதற்காக  நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். அது சக்தி வாய்ந்த குல தெய்வம் பல தலைமுறைகளாக எங்கள் குடும்பத்தை அந்த சாமிதான் வழிநடத்தி வருகிறதாம். இரண்டு வருடமாக நான்  டெல்லியில் இருந்ததால் அந்த கோவிலுக்கு போக முடியாமல் போனது . அதனால் தெய்வ குத்தம் வந்திடும்னு அம்மா கட்டாயமா வர சொல்லிட்டாங்க. இந்த வருடம் எந்த தடையும் வந்திட கூடாது என்பதில் குடும்பமே உறுதியாக இருந்தது.
தோட்டத்தில் பறித்த பூக்கள் நிரம்பிய மாலையை பவித்ரா பின்வாசலில் இருந்து எடுத்துக்கொண்டு ஓடிவந்துகொண்டிருந்தாள். அம்மாவும் ,சித்தியும் மாவிலக்கு பிசைந்து கொண்டிருந்தார்கள். அக்கா நிஷா தீபாவளிக்கு எடுத்த புது ஆடையை போட்டு கண்ணாடியை பார்த்துக்கொண்டிருந்தது. தம்பி கதிருக்கு மூன்று வயதாகிறது. சித்தப்பா மகன். ரொம்ப சுட்டி . ஊரில் இருந்து வந்த நாட்களாக  கதிரோடுதான் இருக்கிறேன் கதிரும் கோவிலுக்கு ரெடியாகி இருந்தான். அனைவரும் சித்தப்பாவின் ஆட்டோவிற்காகத்தான் காத்திருக்கிறோம். குல தெய்வம் கோவிலுக்கு ஊரிலிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் செல்ல வேண்டும். சித்தப்பா ஒரு ஆட்டோ வைத்திருந்தார். ஆட்டோ என்றால் கடைகளுக்கு சரக்கு ஏற்றி செல்லும் மினி லாரி போன்ற ஆட்டோ. இப்போது சவாரிக்காக பக்கத்து ஊருக்கு சென்றிருக்கிறார் . அவர் வந்தவுடன் புறப்பட வேண்டியதுதான்.
அண்ணே, நீ வாங்கிட்டு வந்த கார் ஒழுங்காவே ஓட மாட்டேங்குது,”என நாற்காலியின் நான்கு கால்களுக்கு இடையில் கார் ஓட்டிக்கொண்டிருந்தான் கதிர்.
அந்த காரில் பேட்டரி தீர்ந்துபோயிருக்க வேண்டும். வாங்கி கொடுத்து இருபது நாட்கள் ஆகிவிட்டதை நினைத்து பார்த்துவிட்டு,
சரி இன்னைக்கி கோவில்ல புது கார் வாங்கி தரேன் ,அண்ணணுக்கு முத்தம் கொடுஎன்றபடி கண்ணத்தை அருகே எடுத்து சென்றேன்..
அதற்குள் சித்தப்பாவின் ஆட்டோ தெரு முக்கத்தில் வரும் சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடினான் கதிர்.அந்த சத்தம் பழைய இளையராஜாவின் பாடலில் வரும் துவக்க ஒலியை போல இருக்கும், அந்த சத்தம் எங்கள் வீட்டில் இருந்த அனைவருக்குமே பழகி இருந்தது. சில சமயங்களில் பக்கத்து தெரு வழியாக ஆட்டோ செல்லும்போது ,தோட்டத்தில் கட்டியிருக்கும் மாடு கூட மாஆஆஆ என சத்தமெழுப்பும், அந்த அளவிற்கு ஆட்டோவின் சத்தம் பரிட்சயம். ஆட்டோ வீட்டின் முன் இருந்த மாமரத்தின் அடியில் வந்து நின்றது.
வாசலில் நின்றிருந்த கதிர் ஆட்டோவில் போய் ஏறிக்கொண்டான். சித்தப்பா இறங்கி ,சீட்டின் பின் பக்கம் இருந்த பழுது பார்க்கும் சாமான்கள் அடங்கிய பெட்டியை எடுத்து ஆட்டோவின் பின் சக்கரத்திற்கு அருகில் வைத்துவிட்டு, ஆரனை சரி பார்த்துக்கொண்டிருந்தார்.
கீங்,கீங் ,கீ,,,,,,,,,,கீங்,கிஷ் ,கிஷ்என ஆரன் விசிலடித்தது.அதிலும் பேட்டரி தீர்ந்து இருந்தது. கூட்டம் அலைபாயும் கோவிலுக்கு செல்லும்போது ஆரன் இல்லையென்றால் அவ்வளவுதான் போய் சேர முடியாது என பழுது பார்க்க ஆரமித்தார். பேட்டரியை தனியே கழற்றிய போது அதிலிருந்த ஆசிட்டுகள் சிதறி வெளியில் தெரித்திருந்தது. ஒயரும் சில இடங்களில் துண்டு பட்டிருந்தது. வண்டி வாங்கியபோது இருந்த பேட்டரி ,இன்னமும் ஆஸிட் மாற்றவில்லை. நான் தோட்டத்திற்கு சென்று நண்பர்கள் கோவிலுக்கு வருகிறார்களா என போனில் விசாரித்துக்கொண்டிருந்தேன். இன்னமும் இருவரும் மாவிலக்கு பிசைந்துமுடிக்கவில்லை. கண்ணாடி பார்த்துக்கொண்டிருந்த நிஷா இப்போதும் அதையேதான் பார்த்துக்கொண்டிருந்தது. பவித்ரா பக்கத்துவீட்டில் விளையாடிக்கொண்டிருந்தாள். சித்தப்பா மலமலவென பேட்டரியை பிரித்தார் ,வீட்டில் வந்து பழைய தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். கதிர் அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கி இருந்தான்.தெருவில் இருந்த தண்ணீர்  குழாயை பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தான்.
ஆட்டோவில் கியருக்கு கீழே இருந்து ஒரு தினத்தந்தி பேப்பர் சுற்றிய ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து வெளியே வைத்தார். அதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. கதிர் ஆட்டோவை சுற்றி வந்துகொண்டிருந்தான்.
தம்பி உள்ள போய் டிவி பாரு இங்க வரக்கூடாது,போ அப்பா கூப்பிடுவேன் அப்பதான் வரனும் போ போஎன செல்லமாக கதிரை விரட்டினார். அவனும் சோட்டா பீம் பார்க்கலாம் என உள்ளே ஓடிவிட்டான்.  அவர் பேட்டரியை ஒரு கிண்ணத்தின் மீது வைத்து தலை கீழாக கவிழ்த்தார். உள்ளே இருந்த பழைய ஆஸிட்டுகள் கிண்ணத்தில் வழிந்தது. கிண்ணத்தில் இருந்த ஆஸிட்டை வீட்டில் இருந்து எடுத்து வந்த தண்ணீர் பாட்டிலில் ஊற்றினார். அது கறிய நிறத்தில் இருந்தது. அழுகிய முட்டையின் வாடை வீசிக்கொண்டிருந்தது. அதை அப்படியே எடுத்து பழைய வீட்டின் ,மரச்சாமான்கள் வைத்திருக்கும் பெட்டியினுள் வைத்துவிட்டு வந்தார்.
உள்ளே அச்சு அசலாக சோட்டா பீமை போல பேசிக்கொண்டிருந்தான் கதிர். “காளியா நாங்க இப்போ கோவிலுக்கு போக போறோம்என பேசிய படியே இருந்தான். உள்ளே இருந்த சித்தியும் அம்மாவும் அதை கேட்டு சிரித்துக்கொண்டிருந்தார்கள். பேப்பர் சுற்றப்பட்ட பாட்டிலை எடுத்தார் சித்தப்பா. பேப்பரை பிரிக்கும் போதுதான் தெரிந்தது ,அதில் இருந்தது சுத்த சல்பியூரிக் ஆஸிட் என்று , அதை பார்த்ததும் நான் சித்தப்பாவிடம் போனேன்.
இது எதுக்கு சித்தப்பா? என்றேன்.
இதாண்டா பேட்டரியில் ஊத்துறதுஎன்றார்.
அப்படியே ஊத்துனா எதுவும் ஆகாதா!கையில் பட்டா ஓட்டை போட்டுடுமே
முண்டம் தண்ணி கலந்துதாண்டா என்றார்.” ஆங்கிலம் படித்த எனக்கு இது தெரியாமல் இருந்தது ஆச்சிரியமாக தெரியவில்லை.
ராஜா அண்ணன் தூரத்தில் வந்துகொண்டிருந்தார். அவரும் கோவிலுக்கு போவதற்காகத்தான் வருகிறார் என்பது எனக்கு தெரியும். அந்த காலத்தில் பங்காளிகள் மாட்டுவண்டி கட்டிக்கொண்டு அந்த கோவிலுக்கு போவார்கள் என அம்மா சொல்லி இருந்தது ஞாபகத்திற்கு வந்தது. மாட்டு வண்டி ஆட்டோவானாலும் அந்த பழக்கம் மாறாமல் இருந்தது ஆச்சிரியமாகத்தான் இருந்தது. ராஜா அண்ணன் பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்தில் அறிவியல் ஆசிரியராக பணி புரிகிறார்.அவரும் கோவிலுக்கு போவதற்காக பள்ளிக்கூடம் அரை நேரம் லீவு போட்டிருக்க வேண்டும்.
சித்தப்பா போலாமாஎன்றார் ராஜா அண்ணன்.
வாத்தியார் என்பதால் சித்தப்பாவும் மரியாதையாகத்தான் பேசினார்.
போலாம் தம்பி ,உள்ள போய் உக்கார் குளிச்சிட்டு வந்துடுரேன்என்ற படி கையில் இருந்த பாட்டிலை கயிற்று கட்டிலின் மீது வைத்துவிட்டு குளிக்க சென்றார்;உள்ளே இருந்த கதிர் வெளியே ஓடி வந்தான். ராஜா அண்ணன் அவன் காரை எடுக்க போவதை பார்த்து திடுதிடு வென ஓடி வந்து காரை எடுத்துக்கொண்டு ஓடினான்.
திருட்டுபயலே ,அப்புறமா வா மொட்டிபுடுறேன், உனக்கு ஐஸ் கிடையாது பவித்ராவுக்குதான் கோயில்ல ஐஸ் வாங்கிகொடுப்பேன்என சிரித்துக்கொண்டிருந்தார்.
மருத்துவர் வந்து கதிரை பார்த்துக்கொண்டிருந்தார். ராஜா அண்ணன் வேதியியல் ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தார். சித்தப்பாவும் சித்தியும் வராந்தாவில் அழுதுகொண்டிருந்தனர். நான் ஓரமாக கைபேசியில் சல்பியூரிக் அமிலம் பற்றி தேடிக்கொண்டிருந்தேன். மருத்துவர் சித்தப்பாவிடம் வந்து
கவல பட வேண்டாம் ,தண்ணி கலந்த ஆஸிட் ,அதுமட்டும் இல்ல ,அவன் ஒரு சொட்டு கூட விழுங்கல, வாயில் பட்டவுடன் எரிஞ்சிருக்கு, உடனே துப்பி இருக்கான் , நாக்கில் மட்டும் லேசாக அரிச்சிடும் கொஞ்ச நாட்களுக்கு பழங்கள் எதுவும் கொடுக்க வேண்டாம்அப்புறம்உங்க குல தெய்வம்தான் அவனை காப்பாற்றி இருக்கனும்”.

No comments:

Post a Comment