பொம்மைக்காரி
‘ம்ம்..ஹலோ சொல்லுடி’
‘ம்ம்..
என்ன பன்னிட்டு இருக்கியாமா?’
‘நான் என்னடி பன்றேன்,சும்மா
அப்படியே உட்காந்து மானிட்டர்ல யார் யார் என்ன
என்ன பன்னிட்டு இருக்காங்கனு பாத்துட்டு இருக்கேன்’.
‘ஆனா..
உன் ஹாஸ்பிட்டல் ஒவ்னர் சரியான லூசா
இருப்பான் போல?.
‘யேய்..ஏன்டி அந்த மனுசன
இழுக்குற,பாவம்’
‘பின்ன..
சும்மா உட்காந்து சிசிடிவில யார் என்ன பன்னிட்டு
இருக்காங்கனு வேவு பாக்கறதுக்கு
ஒரு ஆள்.அதுக்கு 12000 சம்பளம்
வேற.’
‘யேய்..போடி,என்ன மாதிரி
ஒரு ஜினியஸ் வேலைக்கு வெச்சுருக்கறதுக்கு
இந்த ஹாஸ்பிட்டல்க்கு கொடுத்து வெச்சுருக்கனும்டி தெரிஞ்சுக்க.யூ ஸ்மால் லிட்டில்
கேர்ள் போ போ போய்
பொறுப்பா கேன்டி க்ரஸ் வெளாடு’
‘ஆமா..
ஆமா சொன்னங்க. அப்புறம்’
‘ம்ம்..
அப்புறம்’
‘அப்புறம்’
‘ஸ்ஸ்..
போதும் போதும்.என்ன பன்னிட்ருக்கியாமா
சிசிடிவி வாட்ச் பாய்?’.
‘ம்ம்..
ஒரு வார்ட்ல ஏதோ ஆக்சிடென்ட்
கேஸ் போல அதுக்கு பட்டி
டிக்கரிங் பாக்கறாங்க அத வேடிக்க பாத்துட்டு
இருக்கேன்.அப்பறம் வெய்டிங் ஹால்ல
அழகான பொண்ணு ஒன்னு உட்காந்து
இருக்கு அவள சைட் அடிச்சுட்டு
இருக்கேன்’.
‘ம்ம்..
ரொம்ப அழகோ?’.
‘ஆமாடி,ப்ளூ ஜீன் ரெட்
டாப் மங்களகரமா இருக்கா’
‘ஏன் நீயும் அவகூட போய்
உட்காந்துகயேன்’
‘நான் ரெடிதான்டி அவளுக்கு ஆள் இருந்ததுனா?.
‘ம்ம்ம்..மூஞ்சி’.
‘போடி’.
‘ரொம்ப
போர் அடிக்குது எப்பவும் போல அங்க எதாவது
நடக்கறத ரன்னிங் கமன்டரி குடேன்’
‘அப்படியா
இரு, ம்ம்ம் இது ஆகாது,
ம்ம் என்னமோ தெரியல ரெண்டு
மூணு டாக்டர்ஸ் யாரோ ஒரு பொம்பளைய
ஸ்டேட்ச்சர்ல கொண்டு வர்றாங்க அத
சொல்லட்டா?’
‘ம்ம் சொல்லு கேப்போம்’.
‘அந்த பொம்பளைக்கு வயசு ஒரு 35க்கு
மேல இருக்கும்போலடி.அந்த பொம்பள கவுன்
போட்டுருக்கு.வெள்ள கலர்ல சின்ன
புள்ளயாட்டம்.ஆனா அந்த டிரஸ்ல
அங்க இங்கேன்னு ரத்தம்டி,முகத்துல வேற கொஞ்சம் ரத்தம்’
‘ஆக்சிடென்டா?
‘தெரியலடி
இருக்கலாம்.யேய் இரு இரு,அது மனுசங்க போலவே
இல்லடி ஏதோ இந்த துணி
கடைல நிக்கற பொம்ம மாதிரி
இருக்கு’
‘எனக்கு
சின்ன வயசுலேயே காதுல ஹோல்ஸ் போட்டாச்சு
வேற ஏதாது சொல்லு தம்பி’
‘யேய் வேனா ஸ்க்ரீன் ஷாட்
எடுத்து வாட்சப்ல போடறேன் பாக்குறியா, விளையாடாத
நான் சீரியஸா சொல்லிட்டு இருக்கேன்’
‘உண்மையாவா
மனுசங்க மாதிரி இல்லையா?
‘இல்லடி,ஏதோ மெழுகு சிலை
துணி கடைல வெக்குற பொம்மயாட்டோம்
இருக்கு ஆனா வாயில இருந்து
ரத்தம் சிந்துன மாதிரி இருக்கு’
‘நீ மானிட்டர்ல பாக்கறதுக்கு அப்பிடி ஏதும் தெரியுதோ
என்னமோ’
‘இது ஹெச்டி கேம்,டிவில
பாக்கறது மாதிரி தெரியும்.அட
கிளியர சொல்றேன் அது மனுசங்க மாதிரி
இல்ல’
‘அக்சிடென்ட்
நடந்ததுல பயோலாஜிகலா ஏதாது ட்ரான்ஸ்பார்ம் ஆயிருக்குமோ
என்னமோ?.
‘அட அந்த பொம்பளை எந்த
ஒரு எக்ஸ்பிரசனும் காமிக்கமாட்டிக்குதுடி.
செத்துருந்தா
வார்டுக்கும் கொண்டு வர மாட்டாங்க
ஒன்னும் புரியல எனக்கு.
‘என்ன சொல்ற எக்ஸ்பிரசனே இல்லயா?.
‘இல்லடி
பொம்ம மாதிரிதான்டி இருக்கு ஆனா ரத்தம்
வருதுனு சொன்னேன்ல இப்போ அந்த ரத்தம்
நிக்காம பெட் புல்லா ஒரே
ரத்தம்.எந்த ஒரு உணர்ச்சியும்
இல்லை அந்த பொம்பளைக்கு.கை
காலெல்லாம் வெரச்சு போய் இருக்கு
நர்சுங்க ரெண்டுந்தான் கைய மடக்கி படுக்க
வெச்ச்துங்க இப்போ’
‘பொம்பளனு
சொல்ற பொம்மையுனும் சொல்ற கொஞ்சம் கிளியராத்தான்
சொல்லேன்டா’
‘இருடி
இரு என்னமோ பேசுறாங்க, டாக்டர்ஸ்
அத்தொரிட்டீஸ்க்கு இன்பார்ம் பன்ன சொல்லி ஒரு
டாக்டர அனுப்பறாங்க,அவள செடேட் பன்ன
சொல்லி நர்சுக்கு சொல்றான் டாக்டர் ஒருத்தன்,
‘அதான்
அந்த பொம்பள ஏற்கனவே அப்படித்தானா
இருக்குங்கற அப்புறம் எதுக்கு மறுபடியும் செடேசன்
’
‘தெரியல
இப்போ அந்த நர்ஸ் போய்
இன்ஜக்ட் பன்னிட்றுக்கு ஆனா ஒரு அசைவும்
இல்ல.என்னனு தெரில நாலு
பேர் இருக்காங்க ஒருத்தவங்க கூட பேசன்ட் மூஞ்ச
பாத்து பேச மாட்டிக்கராங்க அருவருப்பா
இருக்கும் போல எனக்கே அப்படித்தான்
இருக்கு’
‘கேக்கற
எனக்கே பயமா இருக்கு எக்சஸ்ப்ரசன்
இல்லாம ப்ளட் மட்டும் வருதுனா
என்ன அர்த்தம்?.
‘ம்ம்..
ஆமாடி.. ஹலோ ஹலோ.. ஷிட்
இந்த நேரத்துலதான் சிக்னல் கட் ஆஹும்’.
.
.
.
.
‘ஹலோ சாரி சாரி அம்மா
வந்துட்டாங்க அதுக்குள்ள அதான் கட் பன்ன வேண்டியதா
ஆயிருச்சு’
‘யேய் நீ இல்லாத இந்த
ரெண்டு நிமிஷத்துல என்னவெல்லாம் நடந்தது தெரியுமாடி, ’
‘என்னாச்சு
அப்படி?.
‘சொல்றேன்
இரு,எனக்கே கை காலெல்லாம்
நடுங்குது.நான் ஒரு நர்ஸ்
இன்ஜக்ட் பன்னுச்சுனு சொன்னேன்ல இன்ஜக்ட் போடும்போது அமைதியா இருந்த அது
போட்டு முடிச்சதும் என்ன நெனச்சதோ தெரில
அந்த நர்ஸ புடிச்சு தள்ளி
விட்டிருச்சு அந்த நர்ஸ தள்ளி
விட்டதுதான் மாயம் அப்புறம் மறுபடியும்
பழைய படியே பாரலயிஸ் ஆயி
மறுபடியும் எக்ஸ்ப்ரசன் இல்ல.ஆனா அது
தள்ளி விட்டப்போ அந்த நர்ஸ் அந்த
பொம்பளைட்ட என்ன பார்த்ததோ தெரில
டக்டர பார்த்து எல்லாரும் இங்க இருந்து ஓடிருங்கனு
அலறிட்டே அந்த ரூம விட்டு
பயந்து ஓடிருச்சு.அதுக்கு அப்பறம் இவ்வளவு
நேரம் சும்மா இருந்த பொம்பளைக்கு
இப்போ எப்படி உணர்ச்சி வந்துச்சுன்னு
டாக்டர் டார்ச் எடுத்து அந்த
பொம்பள கண்ணுல அடிச்சு பார்த்தான்.வந்ததுல இருந்து எக்ஸ்ப்ரசன்
இல்லாத இருந்த அந்த பொம்பள
கண்ணுல டார்ச் அடிக்கவும் அந்த
டாக்டர பார்த்து சிரிச்சுச்சு டாக்டருக்கு என்ன பன்றதுன்னு தெரியல
அவனும் சிரிச்சான்.ஒடனே அந்த டாக்டர
அந்த பொம்பள ஏதோ சொல்லனும்னு
பக்கத்துல கூப்பிட்டுச்சு அவரும் போனாரு திடிர்னு
தலய ரெண்டு கையால புடிச்சு
அதோட மடில போட்டு கழுத்துல
கடிக்க ஆரம்பிச்சுருச்சு வேம்பயர் மாதிரி.ஆனா அங்க
இருக்கறவங்க யாரும் கவனிக்கல கடிக்கும்
போது நான் பார்த்தன் அது
பல்லு இல்ல அது சுறா
மீனுக்கு இருக்குற மாதிரி நீட்ட பல்.அந்த பல் எப்படி
அந்த பொம்பளைக்கு இருக்குனு யாருக்கும் தெரியல அது பொம்மையில்ல
அது பேயின்னு அப்பதான் எல்லாருக்கும் தெரிஞ்சது.அந்த டக்டர கடிக்க
ஆரம்பிச்சதும் அத பார்த்து ஒரு
நர்ஸ் அங்கயே மயங்கி விழுந்துருச்சு
இன்னொரு டாக்டர் அங்கிருந்து ஓடி
பயந்து விழுந்து எந்திருச்சு ஓடிட்டான்.அது கடிக்க கடிக்க
வீர் வீர்னு ஒரு சவுண்ட்
அந்த ரூம் முழுசா.அந்த
டாக்டர கடிச்சது
மட்டும் இல்லை அந்த டாக்டரோட
ரத்தத்தையும் குடிச்சது நான் பார்த்தேன்.ஒரே
நிமிஷத்துல அந்த டாக்டரோட மொத்த
ரத்தத்தையும் குடிச்சு கீழ விழுந்து கிடந்த
நர்ஸோட ரத்தத்தையும் குடிச்சுருச்சு.அந்த ஓடி போன
டாக்டர் ரூம் கதவ சாத்திட்டு
ஓடிட்டான்.எனக்கு இப்ப பயமா
இருக்கு’
‘யேய் என்ன சொல்ற பயப்படாதடா
பயப்படாத மொத போலீஸ்க்கு போன்
பன்னிட்டு நீ அங்க இருந்து
கெளம்பு’
‘ஆமா, அதான் பன்ன போறேன்’
‘இப்போ
அந்த பேய் என்ன பன்னுது’
‘கதவு சாத்திருக்கு.அதுக்கு நேர நிக்குது.தலைய விரிச்சு போட்டு
வாயில இருந்து ரத்தம் சொட்டு
சொட்டுனு கீழ டைல்ஸ்ல விழுது.இப்போ கிட்ட வருது
வந்து கதவ இழுத்து பாக்குது
அது வாரமாட்டிங்குது.ரைட் சைடு பாக்குது
சிசிடிவி பக்கம்.கீழ எதையோ
பாக்குது என்னமோ மோந்து பாக்குது,
தேடுது,அப்பிடியே தலைய மேல தூக்குது...ஐயோ சிசிடிவி கேமராவ
பாக்குது,ஐயோ.. என்னது இது
சிசிடிவியவே பாக்குது என்ன பாத்து மொரைக்கர
மாதிரி இருக்கு.. என்ன பாத்து சிரிக்குது..அது என்னதான் பாக்குது
போல ஷிட்...ஐயோ அது
என்னதான் பாக்குது வாய்ல ரத்தம் சிந்த
என்னதான் பாக்குது என்..என்..
‘விர்ர்ர்ர்ர்ர்’
‘ஹலோ..
என்னாச்சுடா உனக்கு ஹலோ ஹலோ.’
No comments:
Post a Comment