Monday 7 July 2014

Story 50: ஒழுக்கம்



ஒழுக்கம்


என் பெயர் கமலா எனக்கு கல்யாணம் ஆகி  பதினைந்து ஆண்டுகள் ஆகப்போகிறது.  நகரத்தில் பிறந்த என்னை எங்களின் குடும்ப வறுமை காரணமாக கிராமத்தில்  வாழும் படிக்காத என் கணவருக்கு கட்டி கொடுத்தார்கள்.  எந்த பொருத்தமும் இல்லாத கல்யாணத்தில் இருந்து தப்பிக்க எனக்கு வேறு வாய்ப்புகள் கிடையாது. அதனால் வேறு வழி இல்லாமல் எனக்கு பிடிக்காத வாழ்க்கையை வாழ வேண்டி இருந்தது.

அது கிராமம் கூட கிடயாது பக்கதில் இருக்கும் கிராமத்திற்க்கு போக வேண்டும் என்றாலும் 3 மைல் போக வேண்டும் வரிசையாக விவசாய காடுகள் அமைந்திருக்கும் ஒருவர் காடு முடிந்ததும் அடுத்தவர் காடும் வீடும் இணைந்திருக்கும் பெரும்பாலும் கூட்டுகுடும்பங்கள் அந்த காட்டிலும் கூட என கணவருக்கு என்மேல்  சந்தேகம்தான்  நான் மிக அழகாக இருப்பதால் யார் கூடவாது போய் விடுவேனோ என்று பயம்.. அதனால் எனக்கு பல கட்டுபாடுகள் விதித்தார்,  என் பிறந்த வீட்டிற்க்கு கூட தனியாக செல்ல கூடாது அப்படி சென்றாலும் இரவு தங்க கூடாது அவரும் என்னை விட்டு வெளியே தனியாக செல்வதில்லை.
நான்  பக்கத்து காட்டு ஆண்களுடன் தற்செயலாக பேசினால் கூட எனக்கு பயங்கர அடி விழும் அடினா காட்டடி அடிவாங்கினதுக்கு அப்புறம் ஒரு வாரத்திற்க்கு என்னால் எழுந்திருக்க முடியாது

குழந்தைகள்  பிறந்து விட்டதால் அப்புடியே வாழ்க்கைய ஒட்டினேன் எனது கணவர் மிக கடுமையானவராக காட்டி கொண்டார். எங்கள் குடும்பத்தினர் அவருக்கு மிக மரியாதை தர வேண்டும் என எதிர்பார்த்தார்.  எப்படியும் வருடத்திற்க்கு இரண்டு அல்லது முன்று முறை அவரிடம் அடிவாங்குவேன் அவரிடம் மாட்டிகொள்ளும்போது மட்டும்,   நான் ஒதுங்கி போனாலும் நான் எப்பொழுது தனியாக வருவேன் என்னிடம் பேசலாம் என திட்டமிட்டு ஆண்கள் காத்திருக்கும் போது நான் அடிவாங்கமால் என்ன செய்ய முடியும்.

சில வருடங்களுக்கு பிறகு விவசாயம் பொய்த்ததால் நகரத்திற்க்கு இடம் பெயர்ந்தோம்.  அவருக்கு இப்பொழுது மரம் வெட்டும் வேலை. குடும்பம் நன்றாக போய்கொண்டிருந்தது
குழந்தைகள் வளர்ந்து கொண்டு இருந்தார்கள். நான் தையல் கற்றுகொண்டு  ஒரு தையல் கடை வைத்துக்கொண்டேன்
அதனால் எனது வருமானம் எனது கணவரின் வருமானத்தை
விட அதிகாமாகிவிட்டது.  பணம் வருவதால் என்னை என் கணவரால் அதிகம் கட்டுப்படுத்த முடியவில்லை.

நான் பகலில் வீட்டில் இருப்பது சுத்தமாக குறைந்துவிட்டது
ஒரு நாள்  மாலை கடையை மூடி விட்டு நான் வீட்டுக்கு வரும்போது  என் பக்கத்து விட்டு பெண் ராணி என்னிடம் ஒரு முக்கியமான் விசயம் பேச வெண்டும் என கூறினாள். அவளிற்க்கு வயது பதினெழுதான் அவளுக்கு அவள் வீட்டில் கல்யாணத்திற்க்கு வரன் பார்த்து கொண்டு இருந்தார்கள்

நான் ராணியிடம் என்ன விசயம் என கேட்டேன் அதற்க்கு அவள் தயங்கி தயங்கி வந்து வந்து என இழுத்தாள் அதற்க்கு நான் அவளிடம் சிக்கிரம் சொல்லுடி எனக்கு நேரம் அகுது நான் போய்தான் சமைக்க வேண்டும் என கூறினேன்.

அபோது ராணி என்னிடம்  உங்க வீட்டுக்கார் என்னை கெடுத்துட்டார் இப்ப நான் முன்று மாதம் கர்ப்பம் என கூறிவிட்டு
அழுதுகொண்டே வேகவேகமாக ஒடிவிட்டாள்.

நான் குழம்பி போய் வீட்டிற்க்கு வந்தேன் குழந்தைகள் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர் நான் அவர்களிடம் அப்பா எங்கே என கேட்டேன் அதற்க்கு அவர்கள்  அப்பா வீட்டில் படுத்து இருக்கிறார் என கூறினார்கள்.


வீட்டின் உள்ளே சென்று ராணியை என்ன செய்திர்கள் என்று என் கணவரிடம் கேட்டேன் அதற்கு அவர் தலை குனிந்து கொண்டார்  பசங்க இவ்வளவு பெருசாயிட்டாங்க உனக்கு அறிவில்லையா என கேட்டேன்


என் கணவர் பட்டேன என் காலில் விழுந்தார் கமலா தெரியாம பண்ணிடேன் என்னை மன்னிச்சுடுமா, இந்த பிரச்ச்னைல இருந்து என்னை எப்புடியாவது  காப்பாத்திவுடுமா என அழுதுகொண்டே கூறினார். ராணியின் குடும்பம் பெரிய சண்டைக்கார குடும்பம் அவங்க வீட்டுக்கு தெரிந்தால் பெரிய அடிதடி சண்டை நடக்கும் என் கணவருக்கு நாற்பது வயது ஆகிறது ராணிக்கு பதினேழு வயதுதான் இருவருக்கும் கல்யாணம் பண்ற திட்டமேல்லாம் கிடையாது மதியான நேரத்துல எங்க விட்லையும் யாரும் கிடயாது, ராணி விட்டிலும் யாரும் கிடையாது எப்புடியோ  இரண்டும்  சேர்ந்து இப்படி ஒரு காரியத்தை செய்து வச்சிடுச்சுங்க.

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை ராணி வீட்டுல சொன்னா அடியோடு  சேத்து   எங்களின் மொத்த சொத்துக்களையும் அபாரதமாக  எழுதி வாங்கிக் கொள்ள வாய்ப்புண்டு அது மட்டுமில்லாமல் ராணியோட  எதிர்காலமும் கண்டிப்பாக பாதிக்கபடும் என்ன செய்வது என நிதானமாக யோசித்தேன்.

என் கணவரிடம் இந்த பிரச்சனைய நான் பார்த்துகொள்கிறேன் என கூறிவிட்டு, இதைப்பற்றி யாருடனும் கூறவேண்டாம் என சொல்லிவிட்டு, என் பையனை அழைத்து ராணியை அழைத்து வரும்படி கூறினேன்.நான் ராணியை தனியாக அழைத்து சென்று இது பத்தி யார்கிட்டவும் சொல்ல வேண்டாம் என்னுடன்  ஊருக்கு வருவதாக சொல்லி உங்கள் விட்டில் சொல்லிட்டு வா. வெளியுர்க்கு  போய் உன் கர்ப்பத்தை கலைச்சிட்டு வந்துடுவோம் பிறகு இதனால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வாராது, நீயும் உங்க விட்ல பாக்குற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கோ என்று கூறினேன் அவளும் அதற்க்கு ஒப்புகொண்டாள்.


மறுநாள் அவளை வெளியுர்க்கு கூட்டி சென்று மருத்துவமைனையில் கர்பத்தை கலைத்தேன், அதன் பிறகு அவளுக்கு ஒரு வருடம் கழித்து கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் ஆகிடிச்சு  விசயத்தை அப்புடியே எப்படியோ கஸ்டப்பட்டு அமுக்கிடேன்.

என் வீட்டுக்காரரை வேற வழி இல்லாமல் மன்னிச்சு விட்டுட்டேன் அப்புறம் குழந்தைகளுக்கு அப்பா வேணும் இல்லையா?

                 ***************

No comments:

Post a Comment