Saturday 26 July 2014

Story 85: பைத்தியம்



பைத்தியம்


காலையிலேயே வந்து விட்டதால் சேட்டின் கடைக்கு செல்லாமல் அவரின் வீட்டிற்க்கு சென்று, என் வியாபாரத்தை முடித்தேன்,வந்த வேலை  எதிர்பார்த்தை விட விரைவாக முடிந்து விட்டது,  உடனே பஸ் பிடித்தால் இரவு ஒன்பது மணிக்குள் வீடு போய் சேர்ந்து விடலாம், குழந்தைகளுக்கு எதாவது திண்பண்டம் வாங்கி செல்ல வேண்டும்   அதனால் பலகார கடையை தேடி சாலையோரம் நடந்தேன்.  பலகார கடைக்கு போகும் வழியில் சாலையில் ஒருவன் பயங்கரமாக கத்திக்கொண்டு வந்தான், பெரிய கற்க்களை எடுத்து  வேகமாக தரையில் அடித்துக் கொண்டிருந்தான். மக்கள் அச்சத்துடன் விலகி சென்றுகொண்டிருந்தனர், அவன் கோவில் வாசலுக்கு சென்று கோவில்   மீது  பெரிய கற்க்களை எறிந்து கொண்டே  கடவுளை பயங்கரமாக கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டிருந்தான்.

அவனை சற்று அருகில்  சென்று பார்த்தபோது தெரிந்த முகம் போல இருந்தது இதோ, அவன் யாரேன விளங்கிவிட்டது அவன் எங்கள் தெருவில் வசித்த சுந்தரம்தான் அவன்.சுந்தரம் காணாமல் போய் பல வருடங்களாகிறது, சுந்தரம் எல்லாவற்றிலும் கெட்டிக்காரனாக இருப்பான் எங்கள் ஊரிலெயே பத்தாம் வகுப்பிலும் பன்னிரெண்டாம் வகுப்பிலும் முதல் மதிப்பெண் எடுத்தான்,  எப்போதும் சுத்தமான உடைகளையே அணிவான் நல்ல வேலையை  சீக்கிரமாக தேடிக்கொண்டான்  எந்த கெட்ட பழக்கமும் அவனிடம் கிடையாது டீ கூட குடிக்க மாட்டான் எல்லோரிடமும் மரியாதையாக நடந்துக் கொள்வான். எல்லோருக்கும் உதவிகள் செய்வான். அவனுக்கு பெண் தர ஊரில்  பலத்த போட்டி இருந்தது ஆனால் அவன் வீட்டில் அவனுக்கு வெளியுரில் பெண் பார்த்தார்கள்,விரைவிலேயே அவனுக்குஅவர்கள் வீட்டில் அவனுக்கு கல்யாணம்  செய்து வைத்தார்கள் கல்யாணம் முடிந்து ஒரு  மாதம் கழித்துதான் அந்த பெண்ணுக்கு அவனை பிடிக்கவில்லை என்பதும் அந்த பெண்ணுக்கு துளிக்கூட இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை  என்பதும்  எங்களுக்கு தெரிய வந்தது, பெண் வீட்டில் அதை மறைத்து கல்யாணம் செய்து வைத்திருகிறார்கள்,  அந்த  பெண்ணுக்கு கல்யாணத்திற்க்கு முன்பு ஒரு காதல் இருந்ததும் தெரியவந்தது அந்த பெண் எதற்க்கும் இரங்கி வரவில்லை  கல்யாணமாகி முன்று மாதத்தில் அந்த பெண் அவள் காதலனுடன் ஓடிபோய்விட்டாள்  சுந்தரம் ஆளே மாறி போய்விட்டான் பேயறைந்தது போல ஆகிவிட்டான் புகையும் மதுவும் பழகிகொண்டான். சில வருடங்கள் கழித்து  வேலைக்கு போன இடத்தில் ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டான். வாழ்க்கை ஒரளவுக்கு நன்றாக போனது ஆண்ணொன்றும்  பெண்ணொன்றுமாய் இரண்டு குழந்தைகள் பிறந்தன, சுந்தரமும் படிபடியாக இயல்பு நிலைக்கு திரும்பினான், எல்லாம் நல்லபடியாக போய்கொண்டு இருந்த நேரத்தில் ஒருநாள் வீட்டுக்கு வந்த சுந்தரம்  படுக்கையில் அவன் மனைவியும் வேறு ஒருவனையும் கண்டுவிட்டான்  அவனும் சுந்தரமும் மோதிக்கொண்ட சத்தத்தில் தெருவே அதிர்ந்து எழுந்து கொணடது.

விடிந்தபிறகு சுந்தரத்தை காணவில்லை அதன் பிறகு சில வருடங்களுக்கு பிறகு சுந்தரத்தின் மனைவி வேறு ஒருவனை சேர்த்துக் கொண்டு எங்கள் ஊரிலேயே வாழ்ந்து வறுகின்றாள்
ஆனால் சுந்தரத்தின் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து வருகிறாள்  சுந்தரம் ஏல்லா மனிதர்களையும் போல ஒரு குடும்பத்தை அமைக்க முயற்ச்சி செய்தான், எனோ அவன் கெட்ட நேரம் அது கைகூட வில்லை அதன் பிறகு சுந்தரத்தை இப்போதுதான் பார்க்கிறேன் அவமான உணர்ச்சி மனிதர்களை எப்படி புரட்டி போட்டு விடுகிறது பாருங்கள்.

                              ******

No comments:

Post a Comment