யாருக்கும் வெட்கமில்லை
ஆபரேஷன்
தியேட்டர் வெளியே கும்பல் காத்திருந்தது,
அக்கதவுகளுக்கு பொட்டு போல் ஒளிர்ந்து
கொண்டு இருந்த சிவப்பு விளக்கு
அணைந்தது, கும்பல் ஆர்வத்துடன் கதவை
பார்த்து கொண்டுயிருந்தார்கள். கதவை திறந்து ஸ்டாப்
நர்ஸ் வெளியே வந்தாள், பின்னாடியே
டாக்டர் தென்றல் பூவாலையில் சுற்றிய
குழந்தையை கொண்டு வந்தாள்.
கும்பலை
பார்த்து புன்னகைத்த டாக்டர், அதில் இருந்த இளைஞனை
நோக்கி "வாங்க ராஜ் உங்க
மகளை வாங்கிக்குங்க" ஆர்வத்துடன் குழந்தை வாங்கியவன் உச்சி
முகர்ந்தான், பின்னர் டாக்டரை நோக்கி
"என் மனைவி எப்படி இருக்காங்க?"
"நல்லார்க்காங்க, நார்மல் டெலிவரி தான்,
இப்ப மயக்கம் தெளிஞ்சிடும்" சொல்லும்
போதே ஸ்ட்ரக்சரில் அப்பெண்னை கூட்டி கொண்டு வந்தார்கள்,
பிரசவித்த களைப்பில் அந்த பெண் புன்னகைத்தாள்,
அப்பெண்னின் அம்மா போல் இருந்தவர்
“உங்குழந்தையை பாரும்மா தேவதை மாதிரியிருக்கா, சுகபிரசவம்
தான், இதுக்கு போய் பயந்துகிட்டு,
அபார்ஷன் அது, இதுனு ஆர்பாட்டம்
பண்ணிட்டியே, டாக்டர் மட்டும் உனக்கு
சரியான ஆலோசனை சொல்லலைனா, இப்ப
இந்த சந்தோஷ்ம் கிடைச்சிருக்குமா".
அப்பெண்
டாக்டரை பார்த்து "ரொம்ப நன்றி டாக்டர்
என்றாள்" டாக்டர் தென்றல் புன்னகைத்தபடியே
"உடம்பு நல்லா பார்த்துக்கோ, ஸ்டாப்
நர்ஸ் எப்படி குழந்தைக்கு பால்
குடுக்கிறதுனு சொல்வாங்க, நான் சாயந்தரம் வந்து
பார்க்கிறேன்".
அசதியுடன்
ரூமில் நுழைந்து முகத்தை துடைத்துவிட்டு ரிவல்லீங்
சேரில் அமர்ந்தாள், மேஜையில் இருந்த குறிப்பை படித்தாள்
"மதர் காண்டாக்டட் த்தீரி டைம்ஸ்".
உடனே இண்டர்காமில் ரிசப்ஷனை தொடர்பு கொண்டாள் "டாக்டர் உங்க அம்மா
மூணு தடவை கூப்பிட்டாங்க, என்ன
விசயம்னு சொல்லலை, நீங்க ஆபரேஷன் முடிஞ்சி
வந்தவுடனே கூப்பிட சொன்னாங்க, ஏதாவது
¦†øò பிரச்சனையானு கேட்டேன், அதெல்லாம் இல்லைனுட்டாங்க". "சரி தாங்க்ஸ், நா
பேசிக்கிறேன்".
அனைத்து
வைத்திருந்த தொலைபேசியை ஆன் பண்ணி அம்மாவை
அழைத்தேன்.
"அம்மா!
நாந்தான் பேசறேன்"
"சொல்லு
தென்றல் ஆபரேஷன் எல்லாம் நல்லபடியா
முடிஞ்சிதா?"
"முடிஞ்சுதுமா!
என்ன விசயமுனு சொல்லுமா மூணு தடவ கூப்பிட்டுயிருக்க,
ஏதாவது பிரச்சனையா?"
"ஆமா!
போன்ல பேச வேண்டாம், நேரிலே
வா, மத்தியானமா சாப்பிட வீட்டிற்கு போகும்
போது இங்க வாரியா?"
"உங்க
பேத்தி காதல் பத்தி விசயம்னா
சொல்லுங்க நான் வரலை, ஏற்கனவே
உங்க மாப்பிள்ளை ரொம்ப கோவமாயிருக்கார், அப்பா
வேற நீங்க குடுக்கிற செல்லத்தில
தான் அவ காதலில் உறுதியாகயிருக்கிறா
அப்பிடினு சொல்லி ஏத்திவிட்டுயிருக்கிறார்".
"இப்ப
நா கூப்பிட்டது அதுக்காகயில்ல, இது வேற விசயம்,
நீ நேரில வா சொல்றேன்"
"சரி
வர்ரேன்"
தென்றல்
அம்மா வீட்டிற்குள் நுழையும் போது சரியாக மணி
பணிரண்டு, வழக்கமாக கதவை திறக்கும் அப்பாவை
காணவில்லை, அம்மாதான் கதவை திற்ந்தார்.
"ஏம்மா
கஷ்டபட்டு வந்து கதவ திறக்குற,
உனக்குதான் மூட்டு வலி இருக்குல்ல,
அப்பா எங்கே?"
"அவர்
உள்ளே படுத்திருக்கிறார், நீ வரேனு சொன்னதுனால
கீழே உட்கார்ந்திருந்தேன், அதான் நானே திறந்தேன்".
"அப்பா
இல்லனா பங்கஜம் வந்து கதவை
திறக்கலாமே, இல்ல சமையல் முடிச்சுட்டு
வீட்டிற்க்கு போயிட்டாளா"
"அவளும்
உள்ளேதான் இருக்கா" அம்மா சொல்லி கொண்டு
இருக்கும் போதே உள்ளறையிலிருந்து பங்கஜமும்,
அவளின் மகளும் வெளியே வந்தார்கள்,
இருவரின் கண்களும் கலங்கியிருந்தது. பங்கஜத்தின் மகளுக்கும், தென்றலின் மகளுக்கும் ஒரு சில மாதங்களே
வித்தியாசம்.
தென்றல்
திரும்பி அம்மாவை பார்த்தார், அவர்
ஏதோ சொல்ல பரிதவிப்பு தெரிந்தது.
பங்கஜம்
அவ்வீட்டில் பதினைந்து வருடமாக அம்மா வீட்டில்
சமையலை கவனித்து கொண்டுயிருக்கிறார், கல்யாணமான இரண்டே வருடத்தில் அவரின்
கனவர் கைக்குழந்தைவுடன் விட்டுவிட்டு வேறு பெண்ணுடன் ஓடிவிட்டார்,
அதிலிருந்தே கஷ்ட ஜீவணம்தான், இங்கு
முதலில் வீட்டு மேற்வேலை செய்யவே
வந்தார், அப்புறம் அம்மாவிற்கு மூட்டு வலி அதிகமாகவே,
அவரால் படியிறங்கி வந்து சமைக்க, சரியாக
கவனிக்க முடியல, அப்பாவிற்கு எல்லாம்
சுடசுட சுவையா நேரத்திற்கு வேண்டியிருக்கும்,
அதனால பங்கஜமே சமையலை கவனித்து
கொண்டார், ஆரம்பத்தில் அம்மாவிற்க்கு வேறொருவர் தன் சமையலறையில் நுழைவது
பிடிக்கவில்லை, பின்பு அப்பாவின் தேவையை
கருதி அமைதியாகிவிட்டார்.
ஆரம்பத்தில்
அரை மனதோடு சம்மதித்த அம்மா
அப்புறம் பங்கஜத்தின் கைபக்குவத்தில் அடிமையாகிவிட்டாள். பங்கஜமும் மற்றவர்களை போல் அதிக சம்பளத்திற்கு
ஆசைபடாமல் குடுத்ததை வாங்கி கொண்டாள். அம்மாவும்
சம்பளத்திற்கு மேல் பங்கஜத்தின் மகளின்
ஸ்கூல் பீஸ், காலேஜ் பீஸ்
எல்லாத்திற்க்கும் பணம் தருவார். தென்றலின்
பழைய சேலை, கட்டாத சேலை
எல்லாம் பங்கஜத்திற்கு தான், பழைய சேலை
என்றால் சில முறை கட்டப்பட்டதே,
சில சேலைகள் அம்மா வீட்டிற்கு
வந்தால் இங்கையே தங்கி விட்டால்
மறு நாள் கட்டுவதற்க்கு என்று
சில சேலை இங்க வைத்திருப்பார்.
அம்மா அதையும் எடுத்து கொடுத்து
விடுவார், இது பற்றி எதுவும்
கேட்டால், "பாவம், அவளும் வெளியே
போகும் போது கொஞ்சம் பளிஸ்
இருக்க வேணாமா" என்பார், தென்ற்ல் அமைதியாக சென்று விடுவார், ஆனால்
அம்மாவிடம் போன பிறந்த நாளைக்கு
அப்பா எடுத்து கொடுத்த பச்சை
புடவை மட்டும் எக்காரணத்தை கொண்டும்
கொடுக்க வேண்டாம் என்று சொல்லியிருந்தேன். டாக்டர்
தென்ற்ல் யோசித்தபடியே மறுபடியும் பங்கஜத்தை பார்த்தார், அழுதழுது கண்கள் வீங்கி போயிறுந்தது.
அம்மா
"பங்கஜம் உன் மகளை கூட்டிட்டு
உள்ளே போ, நா தென்றலிடம்
விசயத்தை சொல்லிட்டு அப்புறம் கூப்பிடுறேன்". தலையை குனிந்தபடியே உள்ளே
சென்றாள் பங்கஜத்தின் மகள், அவளை பின்
தொடர்ந்தாள் பங்கஜம்.
"சொல்லுமா!
என்ன ஒரே புதிரா இருக்கு,
எதுக்கு பங்கஜம் மகள் இங்கேயிருக்கா?
ஏன் ரெண்டு பேரும் அழுதுகிட்டுயிருக்காங்க"
"இன்னைக்கு
காலைல பங்கஜம் வேலைக்கு வரல,
உங்க அப்பாவ போய் பார்த்துட்டு
வாங்கனா, அது எல்லாம் போக
மாட்டேன், வேணும்னா அவளே வரட்டும்,இல்லைனா
வேற ஆள பார்த்துக்களாம், நீ
ரொம்பயிடம் கொடுத்திட்ட, அதான் அடிக்கடி சொல்லாமா
லீவ் போடுறா அப்பிடினு கத்துரார்,
அப்புறம் கடைசி வீட்டு பையனை
போய் பார்த்துட்டு வர சொன்னேன்" அம்மா
நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்தாள்.
"என்னம்மா
ரொம்ப பீடிகை போடுற!சீக்கிறம்
சொல்லு, நான் சாப்பிட்டு ஹாஸ்பிட்டல்
போகனும், கண்டிப்பா பங்கஜம் இன்னைக்கு வராதது
பத்தி கம்பிளையிண்ட் , இல்ல வேற ஆளை
பார்க்கவோ என்னை கூப்பிடல".
"இல்ல
இவன் போன போது பங்கஜத்தின்
வீட்டிற்க்கு முன்னே ஒரே கூட்டமா,
என்னனு பார்த்தா இரண்டு பேரும் தற்கொலைக்கு
முயற்சி பண்ணியிருக்காங்க அக்கம் பக்கத்துலே பார்த்து
காப்பாத்தியிருக்காங்க, இவன் அக்கம் பக்கத்துல
பேசி இங்க கூட்டிட்டு வந்துட்டான்"
சொல்லும் போதே அழுதுவிட்டார்.
அம்மா இப்படிதான் மற்றவர் சோகத்தை கேட்கும்
போதோ, பார்க்கும் போதோ, சொல்லும் போதோ
அழுதுவிடுவாள்.
தென்றல்
திரும்பி பங்கஜத்தை கூப்பிட்டார், மகளுடன் வெளிவந்தவுடன் தெரிந்துவிட்டது
இது ஏதோ காதல் விவகாரம்,
இக்கால பெண்கள் எல்லாரும் பெற்றோருக்கு
கொடுக்கும் பெரிய தலைவலி இதுதான்,
ஏற்கனவே மகளின் காதல் பிரச்சனையில்
கோவமாக இருந்த தென்றல் இப்போது
பங்கஜத்தின் மகளை வெறுப்புடன் பார்த்தார்.
"பங்கஜம்
பாரு எவ்வளவு பிரச்சனையானலும் தற்கொலை
ஒரு முடிவு கிடையாது, எதுனாலும்
அம்மாகிட்ட சொல்லலாம்ல, உன்னை மக மாதிரி
தானே நினைக்கிறாங்க, அப்படித்தான் நடத்துறாங்க" பங்கஜம் பதில் பேசாமா
தலையிலடித்தபடியே உள்ளே சென்று விட்டார்.
அவரின் மகள் மட்டும் நின்றாள்.
தென்றல்
அவளை நோக்கி "என்ன லவ் மேட்டரா?"
என்று கேட்டார்.
அவள் பேசாம நின்றாள், அம்மாதான்
"எல்லாத்தையும் தாண்டிய ஸ்டேஜ்"
புரியாமல்
அம்மாவை பார்த்தார், "என்னாமா சொல்லுற ஒண்ணும்
புரியல"
"அவ
கர்பமா இருக்காடி"
தென்றல்
அதிர்ச்சியுடன் பார்த்தார்.
அம்மா தொடர்ந்து "வெளியே தெரிஞ்சா அவமானனு
நினைச்சு தற்கொலை பண்ணிக்க பார்த்திருக்காங்க, இங்க தான் உன்
உதவி தேவபடுது, எப்படியாவது அபார்ஷன் பண்ணனும்".
"அம்மா
நீங்க நினைக்கிறது மாதிரி அபார்ஷன் பண்றது
ஒண்ணும் ஈசி கிடையாது, அதுவும்
நான் அபார்ஷன் பண்றது இல்ல உங்களுக்கு
நல்லாவே தெரியும், இத ஒரு கொள்கையாகவே
வச்சிருக்கேன், எதுக்காகவும் அத மாத்திக்க மாட்டேன்"
"அது
தெரியும், இருந்தாலும் இப்ப பிரச்சனையிலிருந்து தப்பிக்கறத்துக்கு
அது தான் ஒரே வழி"
"ஏன்
அதான் ஒரே வழி, இதுக்கு
யார் காரணமோ அவன பிடிச்சு
கல்யாணம் பண்ணி வச்சிடுங்க, இவங்களாம்
காலேஜ் படிக்க போகலை, காதல்
பண்ணதான் போறாங்க, பெத்தவங்க நல்லது ஏதாவது சொன்னா
உடனே எதிர்த்து பேசறது, கண்டவன நம்பி
ஏமாந்து இப்ப அழுவறது" அவளிடம்
திரும்பி "நீ சொல்லு யார்
அந்த பையன்? என்ன பண்றான்?"
"தெரியாதுமா" என்றாள் பயத்துடன்.
"ஓ!
யாருனு தெரியாமலே கர்பமா? பேஷ்! பேஷ்!
சூப்பர்" மகளின் மேலிருந்த கோவத்தை
அவளிடம் காட்டினார்.
அம்மா
"தென்றல் கொஞ்சம் அமைதியாக இரு" என்றார்.
"ஏம்மா,
கர்ப்பமாயிருக்க காரணம் யாருனு கேட்டா
தெரியலைனு சொல்றா, கேட்கவே நாராசமாயிருக்கு, எப்படி
அமைதியாக பேச சொல்ற".
"விவரம்
தெரியாம பேசாத! கர்ப்பம் இவயில்ல
பங்கஜம்" அம்மா சொன்ன செய்தியின்
தீவிரம் புரிந்து அதிர்ச்சியில் அமைதியானர் தென்றல்.
பங்கஜம்
இப்பொழுது அறை ஓரத்தில் நின்றுயிருந்தார்,
அவளை பார்த்த தென்றல் பார்வையில்
வெறுப்புயிருந்தது. தீடீரென்று பங்கஜம் கட்டிய புடவை
பார்த்த தென்றல் மனதில் இந்த
புடவைய பார்த்தா நம்ப பிறந்த நாள்
பச்ச புடவை மாதிரி தெரியுது,
அம்மாவிடம் கொடுக்காதேனு சொல்லியும் எப்படி போச்சு, இல்லையே
போன தடவை இங்க வந்துட்டு
போகும் போது அந்த பச்ச
புடவைதானே கட்டிகிட்டு போனேன், அது அங்கயில்ல இருக்கு
அப்ப இது?. வேறொன்றும் ஓடியது
"பிறந்த நாள் புடவை பார்த்த
கணவர் " இத நான் போன
வாரம் கடைக்கு போன போது
பார்த்தேன், ஆனா "கோம்போ பேக்" அப்படினு சொல்லி இரண்டு சேலை
ஒரே டிசைன்ல வரும், ஆனா
ஒன்ன மட்டும் தனியா தர
முடியாதுனு சொன்னான், எதுக்கு ஒரே டிசைன்ல
இரண்டு சேலைனு வாங்காம வந்துட்டேன்.
பரவாயில்ல உங்கப்பா பேரம் பேசி ஒன்ன
மட்டும் வாங்கிட்டாரு போல"
தென்றல்
உடனே நிமிர்ந்து மாடியை பார்த்தார், இவள்
பார்ப்பதை பார்த்தவுடன் வேகமாக அறைக்குள் சென்றார்,
திரும்பி பங்கஜத்தை பார்த்தார், மாடியை பார்த்துக் கொண்டிருந்த
அவள் சட்டென்று தலைகுனிந்து வேறெங்கோ பார்த்தாள்.
தென்றல்
அம்மாவிடம் "நாளைக்கு வெறும் வயித்தோடு ஹாஸ்பிட்டல்
வர சொல்லுங்க, அபார்ஷன் பண்ணிறலாம், நான் வரேன்" வேகமாக
வீட்டில் இருந்து வெளியேறினார்.
No comments:
Post a Comment