கைப்பிடியில் ஒரு
நரகம்
நான் கண் விழித்து
பார்த்த போது முதலாவதாக கண்ணில்
பட்ட்து என் குருதி தான்.
எரிமலை குழம்பை போல விரைவாக
என் உடலில் இருந்து வெளியேறி
கொண்டு இருந்தது. சீட்டாட்ட்த்தில் பணம் பறி கொடுப்பவனின்
மனநிலையில் தான் நானும் இருந்தேன்,
குருதி கட்டுகடங்காத வெள்ளம் போல ஒடும்
போதும், தடுக்க வழியின்றி சாய்ந்து
கிடந்தேன். இந்நிலைமையில் இருப்பது முதல் தடவை அல்ல.
என் நினைவைலைகள் என்னை பின்னோக்கி அந்த
துரதிர்ஷ்டமான நாளை நோக்கி கொண்டு
சென்றன.
திங்கட்கிழமை இதமான காலை நேரம்,
முந்தினம் மழை பெய்த்தால் மெல்லிய
குளிர் நிலவியது. ஃபேன் காற்றின் உதவியுடன்
தூக்கம் என்னை அட்கொண்டு இருந்த்து.
என் நண்பன் தலையைனையை விட்டு
பிரிய மனமின்றி உறங்கி கொண்டு இருந்தேன்.
இதனுடன் அம்மா செய்து கொண்டு
இருந்த இட்லி சம்பார் மனம்
என் நாவி கமலத்தை வருடி
கொண்டு இருந்த்து. இந்த இனிய தருணம்
இப்படியே நிலைத்து விடாத என்று என்
மனம் ஏங்கி கொண்டு இருக்க,”
டேய் ரகு, எருமை மாடு
ஏந்திரி டா! ராத்திரி முழுக்க
செல் ஃபோனையும் கம்புயட்டரையும் நொண்டி கிட்டு இருந்துக்கிட்டு
இப்பொ தூங்கிட்டு இருக்கான் பாரு.” என அம்மா
கத்தினாள். தூக்கத்திற்கு பிரியா விடை கொடுத்து
விட்டு எளுந்து சென்று தயார்
ஆனேன்.
” டேய் ரகு, உங்க
அப்பா அப்ரேஷனுக்கு தேவையான பணத்தை ரெடி
பண்ணிட்டியா?”, என கூறி கொண்டே
இட்லியை அம்மா வைத்தாள். “அம்மா
ஒரெ விஷயத்தை எத்தனை தடவை சொல்லுவே?
நான் என்ன சின்ன கொழந்தையா?
எனக்கு தெரியாதா இது எவ்ளோ முக்கியமான
விஷயம்னு! காலங்காத்தால டென்சன் பண்ணாதே.. இந்த
விட்டில நிம்மதியா சாபிட்ட கூட முடியல
சே!!.” சற்றெ எரிச்சலுடன் நான்
கூறினேன். “ ஆமா டா, உனக்கு
நிம்மதி இல்லாம பண்ண தான்
நான் இருக்கேன்.. நீ வீட்டில இருக்கறவங்களோட
பழகுனா தானெ, எப்போ பார்த்தாலும்
அந்த ஃபோனையே கட்டி புடிச்சுக்கிட்டு
கிட.. அப்படி அந்த சனியன்ல
என்ன தான் இருக்கோ??” என்றாள்
அம்மா. “நாள் பூரா உழைச்சிட்டு
வந்தா இந்த வீட்டுல ஒரு
வாய் சாப்பிட முடியுதா.” என
தட்டை விசிறி விட்டு அலுவலகம்
சென்றென்.
வண்டியில் செல்லும் பொது மனம் முழுதும்
கோபம். வழியில் குருக்கே வந்த
சிறுவர்களை திட்டுவது, வண்டியை வேகமாக ஓட்டுவது
என கோப தீயிற்கு இரை
கொடுக்க, மனம் முழுதும் ரணம்
படர்ந்த்து. “அம்மாவிற்கு என்ன தெரியும் உலகத்தை
பற்றி, இந்த காலத்துல, சொசியல்
நெட்வோர்க்கிங் இல்லாம வாழ முடியுமா,
அவுங்க காலம் மாதிரி உலகம்
தெரியாத முட்டாளா வாழ முடியுமா... எப்போ
பார்த்தாலும் அம்மா விற்கு இதே
வேலையா போச்சு.” “அப்பா அப்ரேஷன் வேர,
இந்த நேரத்துலயா நடக்கணும், கொஞ்சம் கொஞ்சமா செட்டில்
ஆகலாம்னு நினைச்சா எல்லாம் கெட்டு போச்சு.”
என எண்ண குவியல்கள் கோப
விஷத்தை மூளையில் ஏற்றி கொண்டு இருந்த
பொது, கைப்பேசி ஒலித்தது. எடுத்து பார்த்த போது
கஸ்டமர் கார் கார பரதெசி.
ஃபோனை கட் பண்ணி விட்டு
பேண்ட் பாக்கேட்டில் வைக்க போன பொது
எதிரே நாய் ஒன்று குறுக்கெ
வர, வேறென்ன நடக்கும், விபத்து
தான்.
நாய் மேல் எற்றாமல்
இருக்க, வண்டியை ஒரே கையில்
இடதுபுரம் திருப்ப, அங்கெ இருந்த ஓர்
பாழாய் போன தண்ணீர் தொட்டியில்
மோத, தூக்கி எறியப்பட்டென். நான்
போய் விழுந்த இடத்திலா அந்த
லாம்ப் ஃபோஸ்ட் இருக்க வேண்டும்?
மண்டை பிளந்து இரத்தம் வழிந்த்து.
ஒரு சில நிமிடங்கள் என்ன
நடந்தது என்றே தெரியவில்லை, சுதாரித்து
கொண்டு பார்த்த பொது, என்னை
சுற்றி மனித தலைகள். தெருவோரம்
இது போல் கூட்ட்த்தை பார்க்கும்
போது, இதனை பேருக்கு வேறு
வேலையே இல்லயா என கிண்டல்
அடித்த்து நினைவிற்கு வந்தது. இப்பொது அது
போன்ற போது நல விரும்பிகளின்
உதவியுடன் எழுந்து நின்றேன். நான்
நிதானத்திற்கு வந்த உடன் அனைவரும்
பிரிந்து சென்றனர். வண்டியில் எறி உட்கார்ந்த உடன்
தான், அந்த உண்மை சுளிர்
என்று உரைத்தது.” அய்யோ! மொபைல் ஃபோனை
காணலையே!!” என என்னையும் அறியாமல்
அலறினேன்.
எங்கு தெடி பார்த்தும்
காணவில்லை. ஒரு வழியாக வீட்டிற்கு
போய் சேர்ந்தேன். உடனே அம்மா அர்ச்சனையை
தொடங்கினாள், “ ஆமா அந்த பீடையை
நொண்டிக்கிட்டே போய் இருப்பே, அதான்
இப்போ கீழெ விழுந்துட்டு வந்து
இருக்கெ, எற்கனவெ உங்க அப்பாவுக்கு
உடம்பு சரியில்லை, இதுல நீ வேற
இப்போ கை கால உடைச்சிட்டு
வந்திருக்கே “ “ஏம்மா காலங்காத்தால வாழ்த்தி
சுப்ரபாதம் பாடி அனுப்புனா இப்படி
தான் ஆகும்.” என என்
பங்கிற்கு சொல்லி வைத்தேன். உடனே
“ ஆமாண்டா இன்னிக்கு எதாவது நல்லது நடந்து
இருந்தா இதே மாதிரி சொல்லி
இருப்பியா. உதாவக்கரை மாதிரி பேசாதே..” என்றாள்.
கோபம் தலைக்கு எறினாலும் ஏதும்
பதில் பேச முடியவில்லை. மனம்
முழுதும் காணாமல் போன ஃபோன்
மீது தான் இருந்தது. நண்பன்
சமரிடம் ஃபோனை தேட சொல்லி
இருந்தென். அவன் தந்தை போலீஸில்
இருந்தார், கண்டிப்பாக ஒரிரு நாளில் கிடைத்து
விடும் என்று அறுதல் அளித்தான்.
அடுத்த இரண்டு நாட்கள்
வெகு மெதுவாக நகர்ந்தது. கைப்பெசி
இல்லாமல் ஒன்றும் ஒடவில்லை, இதில்
உடற்காயங்களின் வலி வேறு. இது
போதாது என்று மூன்றாம் நாள்
இடி மேல் இடியாக செய்திகள்
என்னை வந்து அடைந்தது. அஃபீஸ்
ஃபைல் ஒன்றை ஃபோனில் பதிவு
செய்து வைத்து இருந்தேன். மானேஜர்
நேரத்திற்கு அது கிடைக்காத்தால், கடுங்கோபத்தில்
இருப்பதாக செய்தி வந்தது. அடுத்தது
அப்ரேஷன் தேதி அடுத்த வாரம்,
பணம் இன்னும் 2 நாட்களில் கட்ட வேண்டும் என
அம்மா சொன்னாள். அவள் முகம் முழுவதும்
கவலை ரேகை, பாவம். எனக்கு
என்னை அரியாமல் பயம் தொற்றி கொண்டது.
அப்பாவை காப்பாற்ற என்னிடம் இருப்பது வெறும் 2 நாட்கள் மட்டும் தான்.
நண்பன் கேசவனிற்கு ஃபோன் செய்தேன், ” ஹாய்
கேசவ், ஈட்ஸ் மீ ரகு.
எப்படி இருக்கே?” “ நல்லா இருக்கேன் டா,
நீ எப்படி இருக்கே?” “ ஜ
அம் ஃபைன். அப்புறம் என்
அப்பா அப்ரேஷனுக்கு 2 இல்ட்சம் பணம் கேட்டேனே. அது
இப்பொ கிடைச்சா நல்லா இருக்கும்.” “ நேத்தெ
நீ சொன்ன அக்கவுண்ட் நம்பர்ல
போட்டுடேன் ரகு.” அதிர்ந்தவனாய், “ எந்த
அக்கவுண்ட் நம்பர் ?” “நேத்து நான் கேட்ட
போது, மெஸெஜ் பண்ணியெ அது
தான்.”
எனக்கு தலை சுற்றுவது
போல் இருந்தது. அந்த அக்கவுண்ட் பற்றிய
தகவல்களை வாங்கி கொண்டு நேராக
சமர் வீடு நோக்கி விரைந்தேன்.
“ உங்க காலத்து பசங்களுக்கு பொறுப்பெ
இல்லை. இப்படி தான் டெக்னாலஜிய
மொத்தமா சார்ந்து இருக்கீங்க. பக்கத்துல இருக்கற மனுசங்களை விட்டுட்டு
யாரோ முகம் தெரியாத நண்பனை
தேடுறீங்க.” என அட்வைஸ் மழை
பொழிந்தார் சமர் அப்பா. வேறு
வழியின்றி கேட்டு கொண்டு இருந்தாலும்
மனதில் ஒரு ஒரமாய் உரைத்தது.
“ஸார் அந்த பணத்தை நம்பி
தான் என் அப்பாவோட உயிர்
இருக்கு. ப்ளீஸ். ” என கெஞ்சியவாறு அக்கவுண்ட்
நம்பரையும் அதன் சம்பந்தமான தகவல்களையும்
கொடுத்தேன். அவரும் “ நான் பார்த்துக்கிறேன் ரகு,
நீயும் எனக்கு பிள்ளை மாதிரி
தான்” என்றார். கொஞ்சம் மன தைரியத்துடன்
வீடு சென்றேன்.
மாலை 4 மணிக்கு சமர்
கூப்பிட்டான், “ மச்சி, நீ கொடுத்த
அக்கவுண்ட் நம்பர் ராகவ் க்ங்கற
திருட்டு ராஸ்கல் ஒடது. அவன்
பணத்த இன்னிக்கு மதியம் 2 மணிக்கு தான் எடுத்து
இருக்கான். இப்போ உன் ஃபோன்
அஃப் ஆயிருக்கு. அவன தேடி பார்த்தும்
கிடைக்கலையாம். இன்னிக்குள்ள கிடைக்கலனா, பணம் கிடைக்கறது கஷ்டம்னு
அப்பா சொன்னாரு. ஸாரி டா.”
பித்து
பிடித்தவன் போல் செய்வதறியாது இருந்தேன்.
கடைசியில் ஒர் குருட்டு யோசனை
தோன்றிற்று. “கேசவ் மீண்டும் 5 இலட்சம்
பணம் தருவதாக ஒரு மெசெஜ்
என் நம்பருக்கு அனுப்பு. கருப்பு பணம் என்பதால்
நேரில் தருவதாக சொல்லு. மெசெஜ்
டெலிவர் ஆன உடனே எனக்கு
தகவல் கொடு.” என்று கேசவனிடம்
சொல்லி விட்டு, கடவுளிடம் வேண்டி
கொண்டேன். “கடவுளே அவன் பேராசை
பிடிச்சவனா இருக்கனும், திருப்பி கூப்பிடனும் “ என வேண்டி கொண்டேன்.
இரவு 10 மணிக்கு ,” ரகு பிளான் சக்ஸஸ்.
நாளைக்கு காலை 4 மணிக்கு இரயில்வே
ஸ்டெஷன் பக்கத்துல உன் மாமா பையன்
ராகவ் வந்து வாங்கிக்குவான்னு மெசெஜ் அனுப்பி
இருக்கான்.” என என் வயிற்றில்
பாலை வார்த்தான் கேசவ்.
உடனே சமரிடம் விஷயம்
சொன்னேன். அடுத்த நாள் காலை
ராகவிற்கு பொறி விரிக்கப்பட்டது. நான்
காலை இரயில் நிலையம் அருகே
ஒரு பெரிய வெற்று பெட்டியுட்ன்
காத்து இருந்தேன். அப்பொது 25 வயது இளைஞ்சன் என்
அருகே வந்து “ஹாய் அர்
யு மிஸ்டர் கேசவ்”, என
கேட்க, நான் ஆம் என்பது
போல் தலை அசைக்க , ”ஜ
அம் ராகவ். ரகுவோட மாமா
பையன்.” என்றவன். “ரகுவுக்கு நீங்க ஏதோ பணம்
கொடுக்கனும் போல, அவன் ஆஸ்பிட்டல
பீசியா இருக்கான், அதான் என்ன வாங்கிட்டு
வர சொன்னான்.” என எதுவும் தெரியாதவன்
போல பேசினான். அவன் அருகே வாட்ட
சாட்டமான ஒர் ஆளும் உடன்
இருந்தான்.” திஸ் இஸ் மை
ஃபிரண்ட் ராம்.” உள்ளே பயம்
ஏட்டி பார்த்தது. ஆனால் அப்பா முகம்
கண் முன்னே வந்து போனது.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அந்த ராகவனை
கட்டிப் பிடித்துக் கொண்டு, “ போலீஸ்!! போலீஸ்!!” என உரக்க கத்தினேன்.
மறைந்து இருந்த காவல் துறையினர்
வந்து அவர்கள் இருவரையும் மடக்கி
பிடித்தனர்.
சிகரம் தொட்டவன் போல்
பெருமிதம் அடைந்த போது தான்,
அடிவயிற்றில் பயங்கர வலியை உணர்ந்தேன்.
அப்போது தான் தெரிந்தது இந்த
களேபரத்தில் என் வயிற்றில் இரண்டு
இடத்தில் அவர்கள் கத்தி பதம்
பார்த்து இருந்தது என்று.அருகில் இருந்த
சுவற்றில் சாய்ந்தேன்.
” ரகு! ரகு!” என்ற
அம்மாவின் குரல் கேட்டு நினைவுலகில்
இருந்து எழுந்து வந்தேன். அம்மா
முகத்தில் ஒர் சந்தோஷத்தை பார்த்தேன்.
காரணம் எதுமின்றி என் கண்களில் நீர்
சொரந்தது. “ ஒன்னுமில்லை மா, எல்லா பிரச்சினையும்
முடிஞ்சு போச்சு.” என நான் கூற,
“ஒன்னுமில்லை டா கண்ணா, நீ
உயிர் பொழைச்சதே போதும்.” என்றாள் அம்மா. அதுவெ
எனக்கு மீண்டும் உயிர் திரும்ப காரணமாக
இருந்தது,
இன்று நான் மருத்துவமனையிலிருந்து
வீடு திரும்பி மூன்று மாதங்கள் ஆகி
விட்டன. அப்பா இருதய அறுவை
சிகிச்சைக்கு பிறகு பூரண குணம்
அடைந்து விட்டார். கேசவிற்கு 50,000 ரூபாய் கொடுத்தாகி விட்டது.
ராகவ்?? கழுதை என்ன கலெக்டர்
வேலையா பார்க்க போகிறான், திருட்டு
பயல் இப்பொது கம்பி தான்
ஏண்ணி கொண்டு இருப்பான். அம்மா
வழக்கம் சுவையாக சமைத்துக் கொண்டு
இருக்கிறாள். எல்லாம் நல்லபடியாக முடிய
இப்பொது என் கை என்
புதிய சாம்சங் ஸ்மார்ட் ஃபோனை
நோக்கி செல்கிறது. என்ன தான் இதனால்
நான் பாடுப்பட்டு இருந்தாலும், மனம் இதை தான்
நாடுகிறது. பாவம்
செய்தால் நரகத்திற்கு போவோம் என தெரிந்தும்
மனிதன் பாவத்தை நாடுவது போல,
இந்த கைப்பிடியில் உள்ள நரகத்தை தான்
என் மனம் நாடுகிறது. என்
தலைமுறை இப்படி தான். நாங்கள்
நல்லவருமில்லை, கெட்டவருமில்லை. வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கிறோம். தவறுகள் செய்தாலும், தகுந்த
படி திருத்தி கொள்வோம். இவ்வாறு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்
அப்டேட் செய்து கொண்டு இருக்கும்
போது, என் அம்மா என்னை
ஆசையுடன் வசை பாடுவது காதில்
கேட்கிறது.
No comments:
Post a Comment