Wednesday 9 July 2014

Story 54: 15 நவம்பர் 2012



15 நவம்பர் 2012
         ஒரு பாதி கதவு நீயடி”” ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் அவரே  பாடிய பாடல் ஒன்றை தனது கடைசி அத்தியாயத்தில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் 1990ல் பிரசவித்த கணினி ஒன்று, தன் ஸ்பீக்கரின் உதவியோடு அப்பாடலை காவ்யாவின் அறை முழுவதுமாய் நிரப்பிக்கொண்டிருந்தது.
                    காவ்யாவின் ரூம் பதின்ம வயது பெண்ணிற்க்கே உரித்தான பிங்க் நிறத்திலான பெட்,பெட்ஷீட், டர்ட்டிபியர் பொம்மைகள், விஜயின்  புதுப்பட ஸ்டில்கள் என சுவர்களின் நாலாப்பக்கமும் நிரப்பப்பட்டிருந்தது.
         காவ்யா! இருபதாம் நூற்றாண்டின் இருதய துடிப்பு. ஓவியங்களிலும் இயற்றப்படாத உயிர் ஓவியம். காவ்யாவின் அழகு முகமும் தேகமும் குழந்தை பருவத்தின் இறுதியிலிருந்து அழகிய பெண்ணாய் உருவெடுக்கும் தன்மை நடைமுறையிலிருந்தது.
                   ரூமின் வலது மூலையில் தேக்கு மரத்தின் நிழலாய் வீற்றிருந்த டிரெஸ்ஸிங் டேபிளில், அவளின் தேகம் முழுவதையும் பிரதிபலிக்கும் கண்ணாடியின் முன் நின்று கம்மல் ஒன்றை தனது வலது காதில் பற்றிக் கொண்டிருந்தாள் காவ்யா.
        ஏய்... காவ்யா”? உனக்கு 96 குடுக்கலாண்டி அவுட் ஆப் 100க்கு. கழுத்துக்கு கீழ இருக்குற ஏற்றம் இறக்கம் மட்டும் கொஞ்சம் பெருசா அமைஞ்சிருந்ததுன்னு வெய், நீதாண்டி ட்வெல்குயின். உனக்கு அடுத்துதான் ப்ரீத்தியே. சரி விடு டென்சன் ஆகாத,  செவெண்டீன்தான  ஆகுது, லாங் வே டு ஜட்ஜ். இன்னும் ரெண்டு வருஷம் போட்டும் பாத்துக்கலாம்’” காவ்யா கண்ணாடியில் தன் அழகை கண்டு பெருமை பேசி கொண்டிருந்தாள்.
யேய் 8.15ஆச்சுடி இன்னும் என்னடி பண்ணிட்ருக்க’”,கையில் பிங்க் கலர் வாட்டர் பாட்டிலும், வெள்ளை நிற ஹாட் பாக்சுமாய் காவ்யாவின் ரூமின் முன் நாற்பது வயதிற்க்கேற்ற அக்ஷ்ரங்களுடன் ஒலித்த குரலின் உருவமாய் நின்றிருந்தாள் அமுதா.
அமுதா! கௌதம்மேனன் படங்களில் வரும் ஆஸ்தான வரிகளானஅவ அவ்ளோ அழகு’, என்று ஜெய்நுல் நியாஷ்தீன் தன் கல்லுரி காலத்தில் அமுதாவை பார்த்த கணம் தன் மனதில் நினைத்து கொண்டனாலோ என்னவோ, அமுதாவை மனைவியாக்கிக்கொண்டான். அமுதாவின் இளம்வயது காட்சிப்பிழைதான் காவ்யா என்பது மறுக்கமுடியாத உண்மை.
  முடிஞ்சுமா... முடிஞ்சுமா...’”,தனது அம்மாவை சமதானபடுத்திக்கொண்டு புத்தக பையை தோள்களில் பொருத்திக்கொண்டாள் காவ்யா.
  என்னம்மா இன்னைக்கு’’.
  நூடுல்ஸ்டி, அதான கேட்ட’’.
  உம்மா... என் டார்லிங்னா டார்லிங்தான்’’, அமுதாவின் கன்னத்தை ஈரமடையச்செய்து, வாட்டர் பாட்டிலையும் ஹாட் பாக்சையும் தன் ஸ்கூல்பேக்கில் வைத்து விட அமுதாவிடம் சிக்னல் செய்தாள் காவ்யா. அமுதாவும் வைத்துவிட்டு காவ்யாவின் அறையை நோட்டமிட்டாள்.
  பொண்ணு மாதிரியாடி ரூமை வெச்சுருக்க? போய் உங்க அண்ணன் ரூம பாருடி’’, என்று அமுதா சொல்லி முடித்திருக்கவில்லை ஹாலிலிருந்து,
  ஹா...ஹா..ஹா...’’ எள்ளல் கலவையுடன் ஒரு சிரிப்பு சப்தம் கேட்டது.
  அமுதாவும் காவ்யாவும் காவ்யாவின் அறையை காற்றிடம் ஒப்படைத்து விட்டு ஹாலினுள் நுழைந்தனர்.
சோபாவில் ஜெய்நுல் ஹிந்துவின் எடிட்டோரியலில் மூழ்கி இருக்க, ஷ்யாம்(எனும் ரபீக்) இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கான ஏர்டெல் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டியின் பிட்ச் ரிப்போர்ட்டில் ஐக்கியமாகி இருந்தான்.


காவ்யா அச்சிரிபின் வெறுப்போடு ஷ்யாமை ஏறிட்டு,
உங்களுக்கு காலேஜ் இல்லையாக்கும்?’என்று காவ்யா வினாவினாள்.
யேய் ப்ராஜெக்ட்மா, இந்த செம் முழுசா வீட்லதான்’.’ஷ்யாம் காலரில்லா டி ஷர்டில் காலருண்டாக்கி தூக்கி பெருமை பீத்திக்கொண்டான்.
என்ன ஆறு மாசமா?’’ என்று காவ்யா ஆச்சர்யத்துடன் கேள்வியையும் நண்பனாக்கிகொண்டாள்.
யா... யா..’’.
சத்திய சோதனை’, என காவ்யா கிண்டலடித்தாள்.
ஏண்டி உனக்கு ஏன்’?, ஷ்யாம் காவ்யாவை பகுதி நேரமாய் முறைத்துவிட்டு டிவியினுள் மறுபடியும் ஐக்கியமாக தொடங்கினான்.
அப்பா.. துப்பாக்கி படம் நல்லா இருக்காம்பா. ஷ்யாமன்னா பாத்துட்டு வந்து கடுப்பெத்துறாங்க, சன்டே போலாம்பா நாம’.’ ஜெய்நுலிடம் முறையிட்டாள் காவ்யா.
உனக்கு வேற வேலையில்லையாடி?’’ என்று அமுதா குறுக்கிட்டாள்.
யேய்..சும்மா இரு புள்ள கேக்குறா, சரிமா நாம சன்டே ஈவ்னிங் ஷோ போலாம்’.’ஜெய்நுல் காவ்யாவின் வேண்டுகோளுக்கு இணங்கினான்.
எப்புடி..’’,காவ்யா தன் கோரிக்கை வெற்றியடைந்த துள்ளலில் ஷ்யாமிடம் தன் விரலை கொக்கியாக மாற்றி கொக்கரித்தாள்.  
இருடி, நான்தான புக் பண்ணுவேன், ரெண்டு டிக்கெட் மட்டும் புக் பண்ணிட்டு வர்றேன். அப்பா நீங்க ரெண்டு பேரும் மட்டும் போய்ட்டு வாங்கப்பா, சன்டே இவ சமைக்கட்டும் படிக்கறது விட்டுட்டு படமாமா,’ ஷ்யாம் காவ்யாவை சீண்டினான்.
ஜெய் நித்யானந்தா’’,காவ்யா ஷ்யாமின் கவனம் பட ஏதோ கூறினாள்.
யேய்... சும்மா இரு’.’ஜெய்நுல்,அமுதாவின் பார்வையில் படாமல் உஷ் என தன் வாயில் விரல் வைத்து காவ்யாவை அதட்டி சம்பாஷணையை முடிக்க முயன்றான் ஷ்யாம்.
காவ்யா அதை கண்டுகொள்ளாமல் வராண்டாவிலுருக்கும் தன்  மிதியடியை  காலுக்கு  கவசமாக்க நகர்ந்து கொண்டிருந்தாள்.
நீ வரலியா?’’ ஜெய்நுல் ஷ்யாமிடம் நெற்றியை சுருக்கியபடி கேட்டான்.
      இல்லப்பா.. நீங்க போய்ட்டு வாங்க வேற கமிட்மென்ட் இருக்கு’.’ சொல்லிக்கொண்டே,எழுந்து காவ்யாவை பின் தொடர்ந்தான். 
       யேய் எரும, அம்மா அப்பா இருக்குறப்ப என்ன பேசறதுனு தெரியாதா. உன்கிட்ட நித்யாவ பத்தி சொன்னது தப்பாப்போச்சு’,’ என்று தனது கால்களை ஷாக்சினுள்  நுழைத்துக்கொண்டிருந்த காவ்யாவிடம் மெல்லிய குரலில் ஷ்யாம் சலசலத்து கொண்டான்.
சில் ப்ரோ’. எதுக்கு கொந்தளிக்குற, அவங்களுக்குதான் தெரியும்ல ப்ரீயா விடுனா.’ என நிதானத்துடன் பால்ய குரலில் பெரிய மனுஷி தனத்தோடு பேசிகொண்டிருந்த காவ்யாவின் தலையில் ஷ்யாம் தன் கை பட்டும் படாமல் ஒரு கொட்டு வைத்தான்.
அடிச்சுட்டில கெளம்பு, சரி டைம்  ஆச்சு. ஓகே அன்னா பாய், அம்மா அப்பா பாய் பாய்’,’ என விடை கொடுத்து,கேட்டை விளக்கி இரண்டு நிமிட நடை பயணத்தில் பள்ளி பேருந்தின் நிருத்தமிடம் சென்றாள் காவ்யா.
பஸ் ஸ்டாண்டில் தன் தோழிக்காக காத்திருந்த கிருத்திகா மெண்சிரிப்புடன் காவ்யாவை வரவேற்றாள்.
சாரி... சாரி... ஆம் லிட்டில் பிட் லேட்’.’கிருத்திகாவை சமாதானப்படுத்த முயன்றாள் காவ்யா.கிருத்திகா அதை கண்டு கொள்ளாமல்,
அங்க பாரு ஒரு மஞ்ச லாரியே ஆரவாரமா வருது பாரு’’,என தாங்கள் தினசரி பயணிக்கும் பள்ளி பேருந்தை கிண்டலடித்தாள் கிருத்திகா. மஞ்சள் நிறத்தில் பேருந்து ஒன்று கிருத்திகாவின் பக்கமாய் முன் வந்து நின்றது.
காவ்யா டிரைவர் சீட்டை ஏறிட்டுஎன்ன? முருகண்ணன் உட்காந்திருக்காரூ.அந்த கோவர்ட காணோம்’, என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.

கிருத்திகா பள்ளி வாகனத்தினுள் தன்னை சொருகிக்கொள்ள,காவ்யாவும் கிருத்திகாவை பின்தொடர்ந்தாள்.டிரைவர் சீட்டிற்கு பின்னால் காற்றிடம் உரையாடிக்கொண்டிருந்த காலி இருக்கையில் இருவரும் போய் அமர்ந்தனர்.
      முருகண்ணன் வந்துருக்காரு?ஆறாம் நம்பர்தான இவர். அப்ப ஆறுக்கு அந்த பரதேசி போயிருப்பான்’.’ காவ்யா தனக்குள்ளே கேள்வியும் கேட்டு  பதிலையும் பெற்றுக்கொண்டாள்.பேருந்து வெள்ளையாய் இருமி புகைத்துவிட்டு கிளம்பியது.
முருகன் நெரிசலுக்குள் சாமர்த்தியமாய் ஒட்டிக்கொண்டிருக்க,
அண்ணா’’.
யே..மா’.
என்னன்னா நீங்க இந்த பஸ்? ஆறாம் நம்பர் யாரு ஓட்டுறா?’’.
சையது ஒட்ராப்புலமா.இனி இந்த வண்டிக்கு நான்தான்மா,ஆபிஸ்ல இருந்தே மாத்திவிட்டுடாங்க’.’ காவ்யாவிடம் பதிலை ஒப்படைத்துவிட்டு  முழு கவனத்தையும் ஸ்டியரிங்க்கிள் செலுத்தினார் முருகன்.
ஏன்? என்னாச்சு?, சனியன் தொலஞ்சான்.’ என்று தன் மனதிற்குள் நினைத்துக்கொண்டு காவ்யா தான் சந்திந்த கருப்பு பகல்களை தன்னுள்ளே அசைபோட ஆயத்தமானாள்.
இந்த ஸ்கூல்க்கு பிளஸ்ஒன் ஜாய்ன் பண்றப்ப இந்த பஸ்க்கு நானும் கிருத்திகாவும்தான் புதுசு, மத்தவங்கெல்லாம் சேம் ஸ்கூல். அதனால நானும் க்ரித்தியும் அவங்க டச் வேணாம்னு இந்த டிரைவர் சீட் பின்னாடி காலியா இருந்த பர்ஸ்ட் சீட்டை பிடிச்சோம்.அதுதான் நான் பன்ன பெரிய தப்பு.
                ஒரு நாள் பஸ் ஏற்றப டிரைவர் சீட்ல இருந்த அவன் என்ன பாத்து சிரிச்சான்,நானும் மரியாதைக்கு ஜஸ்ட் ஸ்மைல் பண்ணேன்.அப்போ எனக்கு தெரியாது பின்னாடி இவ்வளோ ஆகும்னு.அப்புறம் டெய்லியும் என்ன பாத்து சிரிக்கிறேன்ற பேர்ல வழிய ஆரம்பிச்சான்.ஒரு நாள் மரியாதைக்கு சிரிச்சு தொலைச்ச பாவத்துக்கு நானும் அத பொறுத்துக்க வேண்டியதா இருந்துச்சு.ஆனா ஏதோ தப்பா போதுனு மட்டும் ஒரு பீல்.அப்புறம்,
                நான் ஸ்டெப்ஸ் ஏறும்போது என் டாப்ஸ் அசையரதை டிரைவர் சீட்ல இருந்து பார்ப்பான்,அப்பெல்லாம் போய் ஒரு அறை அறையனும் போல இருக்கும்.இத தெரிஞ்சதும் அப்புறம் வேற ட்ரெஸ் ஸ்டிச் பன்ன கதை வேற.
                நான் வந்து உட்கார்ரப மட்டும் அவனோட அந்த சைனா மொபைல்ல தேவையில்லாம லவ் சாங் போடறான்னு கன்றாவி பாட்டேல்லாம் போட்டு, அவன நானே மனசுக்குள்ள கெட்டவார்தைல திட்டறதுக்கு அவனே காரணமானான்.
                சைடு மிர்றரை எதுக்கு யூஸ் பண்ணனுமோ அதுக்கு யூஸ் பண்ணாம கண்ணாடிய பர்ஸ்ட் சீட்க்கு திருப்பி வேணும்னே வெச்சுருப்பான்.வண்டி ஸ்பீட் பிரேக்ல ஏறி ஏறங்குதுனா,அவன் கண் என் கழுத்துக்கு கீழ அசைவு இருக்கானு அந்த கண்ணாடி வழி பார்க்கரானு அர்த்தம்.ஒவ்வொரு ஸ்பீட் பிரேக்லயும் என் நெஞ்சுல கை வெச்சு நான் மறைக்கரதுதான் என் வேல.
                அப்புறம் சீட்ல லெட்டர் வெய்க்க ஆரம்பிச்சான்.அப்பதான் ஏன்டா இந்த ஸ்கூல்க்கு வந்து சேர்ந்தோம்ன்னு தோணிச்சு.ஏன் ரூட்க்கு வர்ற ஒரே பஸ் இதுதான்.வேற வழியில்லாம வந்தே ஆகணும்னு ஒரு சூழல்.சரி வேணாம் ஆட்டோ, டவுன் பஸ் அப்டின்னு போறேன்னு வீட்ல சொன்னா?நான் என்ன ரீசன் சொல்றதுன்னு வேற இருக்கு.என்ன சொல்றது?.
இவன் என்ன டார்ச்சர் பண்றான், அதுனாலதானுனா சொல்லுவேன்.சொல்லிருந்தா என்ன நடந்துருக்கும்?. விஷயம் வெளிய தெரிஞ்சு அப்படி இப்படின்னு வீட்டு நேம் ஸ்பாயில் ஆயிருக்கும்.ஷ்யாமன்னா? வீட்ல ஒரு அதட்டல் இருந்ததில்ல, எதிர்த்து பேசுனதில்ல சொன்ன பேச்ச கேட்டு நடக்குற  பையன்.
ஆனா.., போன மாசம் ஒரு நாள் ஈவ்னிங் ப்ளவர் ஷோக்கு அழைச்சுட்டு போறதுக்காக வந்த ஷ்யாம் அண்ணா, என் பிரன்ட் மைக்கல் அவன் பர்த்டே சாக்லேட் மார்னிங் எனக்கு தரலேன்னு கோபமா இருந்த எனக்கு சாக்லேட் குடுக்க வந்தவன வாங்காம பிகு பண்ணிட்டிருந்தேன். அவன் என் பேக்ல வலுக்கட்டாயாமா சாக்லேட் திணிக்க முயற்சி பண்ணிட்டிருந்தான். ஷ்யாமன்னா அத எதேர்ச்சியா பாக்க, என்ன எதுன்னு கேக்காம பக்கத்துல வந்து வண்டிய நிறுத்தியும் நிறுத்தாம மைக்கல பளார்னு கன்னத்துல அடிச்சு அப்புறம் நான் விஷயத்த சொல்ல ஷ்யாம் அண்ணா அவன்கிட்ட சாரி கேட்டு..அப்பப்பா... நல்ல வேல பெரிய ப்ராப்ளம் ஆகல.
                சின்ன விஷயத்துக்கே இப்படி ரியாக்ட் பண்ற ஷ்யாமன்னா, இதுனாலதான் பஸ் மாத்துறேன்னு வீட்ல சொல்லிருந்தா என்ன நடந்துருகும்னு கெஸ் பண்ணவே முடியல.இதனாலேயே நான் எத்தனை நாள் தூங்காம முழிச்சு யோசிச்சிருப்பேன். எது சரி எது தப்புன்னு.க்ரித்திகாகிட்ட சொல்லி ரிலாக்ஸ்  பண்ணலாம்னா அவ அவனுக்குதான் சப்போர்ட் பண்ணுவா.ஏன்னா கிருத்தி வீட்ல அவ லவ்க்கு பிரச்சன வந்தப்ப இவன் போன் மூலியமாத்தான் பேசிக்கிட்டாங்க. அதனால இவகிட்ட அவனபத்தி என்ன சொன்னாலும் அவாய்ட் பண்ணுடி”, இது ஒண்ணுதான் அவ வாய்ல இருந்து வரும். இத மனசுல வெச்சுகிட்டே ரெண்டு மூணுதரம் பேசாம இருந்துருக்கேன்.இதனாலத்தான் நான் சரியா அந்தந்த சமயத்துல பேசரதில்லன்னு அவளுக்கு இன்னைக்கு வரத்தெரியாது.
எப்பிடியோ இனி அவன் இந்த பஸ்க்கு வரமாட்டான்.சந்தோஷம்.இனி ஸ்டெப்ஸ் ஏறும்போது அட்ஜஸ்ட் பன்ன வேண்டியதில்ல,லெட்டர் டார்ச்சர் இல்ல,காலைல எத பத்தியும் யோசிக்காம ஸ்கூல் போலாம்.
 டெய்லியும் பஸ்ல சந்திக்கற ஒரு மணி நேர நரக மனசு போராட்டம் தீர்ந்துச்சு.’லவ் யு காட்’.இன்னைக்கு கண்டிப்பா அம்மாட்ட கோயில் கூட்டிட்டு போக சொல்லணும். ம்ம்ம்ம்”.”மனதுக்குள் அரங்கேற்றம் கண்டிருந்த காவ்யாவின் உரையாடல் முடிவு பெற்றது.
காவ்யாவின் உரையாடல் முற்றுப்பெற்றதில் பள்ளியின் காம்பவுன்ட் கேட் துவங்கிஇருந்தது.க்ராஹாம் ஸ்டெய்ன்ஸ் எனும் பச்சை நிற போர்டுடன் வரவேற்க காத்திருந்த  கரு நிற கேட்டுக்குள் பேருந்து பிரவேசித்தது.
சரி அவன் என்னாச்சுனு கேக்கலாம்’.’ காவ்யா மனதில் நினைத்து கொண்டே,
அண்ணா...’ ராமன வேற பஸ் ஏதும் மாத்திடாங்களா?’.
என்னம்மா உனக்கு ஏதும் தெரியாதா? ஊரே அவன பத்தித்தான் பேசிட்டியிருக்கு’.’ முருகன் ஆச்சர்யத்தில் கேள்வியை உதிர்த்தார்.
புரியலனா?.. ஏன்.. என்னாச்சு?’’ காவ்யா காதுக்களுக்கு இறையாக்க முருகனின் பதிலை எதிர்நோக்கி தயாராகியிருந்தாள்.
தீபாவளி அன்னைக்கு ராமனும் அவன் பிரன்டும் குடிச்சிட்டு பைக்ல கோவை குற்றாலம் போயிருக்காணுகமா, அங்க போற வழில வண்டிய நிப்பாட்டிட்டு போற வர்ற பொண்ணுங்க,ஜோடிய பாத்து திட்டிட்டு அசிங்கமா பேசிட்டு இருந்துருக்கானுங்க.அந்த வழியா போன ஒருத்தர் ஏன்டா இப்படி குடிச்சிட்டு திட்டிட்டு இருகிங்கனு கேட்டதுக்கு அப்புறம் ஏதோ பிரச்சனையாய் அந்த ஆள போட்டு அடிச்சே கொன்னுடானுக’’.
என்னம்மா உனக்கு தெரியாதா டிவி பேப்பர்னு எல்லாத்லயும் வந்துச்சேமா. நீ ஏதும் பாக்கலியா? கேக்கலியா?’’. கேள்விகளை அடுக்கிக்கொண்டே சாமர்த்தியமாய் பஸ் பார்கிங்கில் வண்டியை சொருகினார் முருகன்.
நான்  கவனிக்கலனா’’ என்று காவ்யா சொன்னாள்.
அது இவனுகதான்மா’’ என்று சொல்லிக்கொண்டே முருகன் இன்ஜினை மௌனமாக்கினார்.
இப்போ என்னாச்சுனா?’’ காவ்யா முருகனிடம் வினாவி, பள்ளி வந்ததரியாமல் தூங்கி கொண்டிருந்த கிருத்திகாவை உசுப்பினால்.
அவன அன்னைக்கே போலிஸ் புடிச்சுடாங்கமா,இது மேனஜ்மென்ட்க்கு தெரிஞ்சு வேற டிரைவரை ரெடி பண்ணிடாங்க.’’என்று சொல்லி முடிக்காமலே சாவியை உருவிக்கொண்டு பேருந்திலிரிருந்து இறங்கிகொண்டிருந்தார் முருகன்.
..சரினா.., ஈவ்னிங் இதபத்தி பேசலாம்’.’ என்று சொல்லி தன் நிம்மதி கணத்தின் மூச்சை பெரும்மூச்சு காற்றாய் மாற்றி கீழிறக்கினாள் காவ்யா.
இறுதி இருக்கையில் அமர்ந்தவர்கள்கூட இறங்கி முடிக்க போவதை அறிந்தும். தன் நாழிகளை ஆசுவாசமாய் செலவளித்தாள் காவ்யா. பின்வரும் சந்தோஷ நாட்களையும் நிம்மதியாய் கழிக்கப்போகும் பொழுதுகளை நினைத்து கொண்டிருந்தாள் போலும், உதட்டில் உதிர்ந்த புன்னகையை சிதறவில்லை காவ்யா.
கீழிறங்கிய கிருத்திகாவை காவ்யா பின் தொடர ஆரம்பிக்குபோது அவளின் கைக்கடிகாரத்தில் 9 .17 என முட்கள் அவதானித்திருந்ததை  பார்த்தாள்.
இன்னைலிருந்து உனக்கு இந்த நாளும் ஒரு புது பிறந்த நாள்தான்டி”.’ என்று மனதில் ஒப்புவித்துக்கொண்டு, கிருத்திகா கீழிறங்க காவ்யாவும் தனது புதிய பிறந்தநாளின் முதல்  மணித்துளியை புன்சிரிப்புடன் பிரவேசிக்க ஆரம்பித்திருக்கிறாள்.                           

No comments:

Post a Comment