ஜாதி ஒழிந்தது
பாரதியும்
அவன் தந்தையும் முதல் முறையாக அக்கல்லுரி
வளாகத்தினுள் நுழைகிறார்கள்.
பாரதிக்கு
எல்லாமே புதியதாக இருக்கிறது, முதல் தலைமுறையாக படிக்க
வந்துள்ளான்.
பாரதியிடம்
அவன் தந்தை "தம்பி நல்ல படிச்சு
அப்பா பேர காப்பத்தனும், தப்பு
தண்டா எதுக்கும் போக கூடாது"
உடனே பாரதி, "ஆமா மண்ணாகட்டினு உங்க
பேர காப்பதிட்டாலும் போங்கப்பா" என கிண்டல் பண்ணினான்.
அவனும்
அவன் தந்தையும் மிக நெருங்கிய நண்பர்கள்
போல எப்போதும் பேசுவார்கள்.
பிறகு அவனே "அப்பா நான் நல்ல
படிச்சு நல்ல வரேன் பா"
என் சொல்லி முடித்தான்.
அன்று சான்றிதழ்களை சரிபார்த்து கல்லூரியில் சேர வேண்டும்
எல்லா சான்றிதழ்களையும் சரிபார்த்த அலுவலர் கடைசியாக ஜாதி
சான்றிதழில் குறிபிட்டுள்ள ஜாதியும்
பள்ளி சான்றிதழில் குறிப்பிட்டுள்ள ஜாதியும் ஒத்து போக வில்லை
என கூறினார்.
பாரதியின்
தந்தை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பாரதிக்கு
ஒன்றுமே புரியவில்லை ஏனெனில் அவர்களுக்கு தினப்படி
சாப்பாடே பெரிய விஷயம் இதில்
ஜாதியை
எங்க இருந்து அவன் தெரிந்து
கொள்ள.....
கடைசியில்
அரசாங்க விதிமுறை அது இது என
சொல்லி பாரதியின் தந்தையின் வாயை அடைத்து விட்டார்கள்.
பாரதிக்கும்
அவன் தந்தைக்கும் என்ன செய்வது என
தெரியவில்லை....
கல்லூரி
அலுவலரிடம் சென்று சார், "ஜாதியை
குறிப்பிடாமல் சேர்த்து கொள்ள முடியாதா" என
கேட்டார்...
முடியந்துங்க
எங்க விதிமுறையில் இடம் இல்லை... நீங்க
சீக்கிரம் போய் தாசில்தார் ஆபீஸ்ல
இருந்து
வேற சேர்டிபிகட் வாங்கிட்டு வாங்க.... என்றார்.
சார்,"அரசாங்க வேலை சீக்கிரத்துல
முடியுற வேலையா"....... என்றார்
நாங்க என்னங்க பண்ண முடியும்....
சரியான
சேர்டிபிகட் வாங்கிட்டு வாங்க உங்க புள்ளைய
சேதுகுறோம் என்றார்கள்.
பாரதியும்
அவனின் தந்தையும் தாசில்தார் அலுவலகத்திற்கு ஓடினார்கள்...
அங்கு இருந்த அலுவலர், "இந்த
பிரச்சினைய பக்குறவர் மூணு நாள் லீவ்...
நீங்க போய்ட்டு மூணு நாள் கழிச்சு
வாங்க என்றார்கள்"......
பாரதியின்
தந்தை,"அய்யா என் பையன
காலேஜ்ல சேக்கணும் அவர் வரலான என்னக....
வேற யாரும் அவர் வேலையா
பக்க கூடாத.... என தனக்கு பட்ட
நியாயத்தை கேட்டார்...
யோவ் மூணு நாள் கழிச்சு
வர முடிஞ்சா வந்து வாங்கிக்க என
பதில் வந்தது.....
"அப்பா
நாம இவ்ளோ கஷ்ட படும்போது
இந்த ஜாதி அடையாளம் நமக்கு
ஒன்னுமே பன்லையே, நமக்கு எதுக்குப்பா இந்த
அடையாளம்..." என கேட்டான் பாரதி....
"என்ன
தம்பி செய்றது நம்ம நாட்டுல
எல்லாம் பணம் இருகறவனுக்குதான் கிடைக்கும்...."
வா மூணு நாள் கழிச்சு
வருவோம்.......
மூணு நாள் பிறகு சென்று
குறிப்பிட்ட அதிகாரியை பார்த்தார்கள்.....
"ம்ம்ம்
சரி போய் உங்க VAO கிட்ட
போய் கடிதாசி வாங்கிட்டு வாங்க
செஞ்சுடலாம்"
பாரதியின்
தந்தை,"ஐயா நாங்க புள்ள
படிப்புக்காக இங்க பொழைக்க வந்தவங்க
அப்டியே தங்கிட்டோம், எங்களுக்கும் யாரையும் தெரியாது.... உதவி பண்ணுக ஐயா"
என கெஞ்சினார்...
உடனே அலுவலர் அப்டியா ரூபாய்
2000 கொடுங்க முடிச்சுடலாம்....
ஐயோ ஐயா என் மாச
சம்பளமே அவ்ளோதாங்க என்றார் பாரதியின் தந்தை...
முடிஞ்சா
கொடுங்க இல்லன போங்க என்றார்
அரசாங்க மக்கள் ஊழியர்...
தன் மனைவியின் தாலியை அடமானம் வைத்து
லஞ்சம் கொடுத்து சான்றிதழை வாங்கினார்... பாரதியின் தந்தை...
ஜாதி சான்றிதழை வங்கி வெளியில் வரும்போது
சுவற்றில் இருந்த பதாகையை பார்த்தான்
பாரதி
அதில்,
"சாதிகள்
இரண்டொழிய வேறில்லை...
குல தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்...." என
வரிகள் அச்சிட பட்டு இருந்தது....
பாரதி அதை பார்த்து கோவம்
பொங்க கிழித்து எறிந்தான்......
காவலர்கள்
அவனை பிடிக்க ஓடினார்கள்... சிக்கவில்லை
அவன்.....
பதினைந்து
வருடங்களுக்கு பிறகு....................
இன்று பாரதி படித்து முடித்து
விட்டு....
ஜாதி வாரி மக்கள் தொகை
கணக்கெடுப்பின் முதன்மை அதிகாரியாக பணிபுரிந்து
கொண்டு இருக்கிறான்............................
No comments:
Post a Comment