Thursday 31 July 2014

Story 117: குழந்தை



குழந்தை

        ஆனந்தி  அழுது அழுது மற்றவர்களின்  கவனத்தை ஈர்த்துக்கொண்டு இருந்தாள்.  தலைச்சான்  குழந்தை வயிற்றுள்  நீந்திக் கொண்டு  இருந்தது. அவள்  சினேகிதி வித்யா டீச்சர்  "இப்படி   அழுதா     குழந்தை  கோழையா  பிறகும் " என்றாள். அவள்  அழுகையை  நிறுதாமல்  "எட்டி எட்டி உதைக்குதுடி " என்றாள் .உள்ளே  காற்றோட்டம்  இல்லாமல்  வெளியே  வர துடிக்குதோ என்னவோ ! ஆனந்தி  கணக்குப்படி இது  பத்தாவது  மாதம் .ஆனாலும்  பள்ளிக்கு  வருகிறாள், பாடம்  நடத்துகிறாள்.

                      இன்னிக்கு காலையில்  கூட  அவரோட  சண்டை. அவர்  அம்மா  இங்க இருக்கமாட்டாங்களாம்.  சின்னவங்     கூடவே  போராங்களாம். " புள்ளைய பாத்துக்க தான்  நான்  இருக்கேனா  " என்ற எண்ணம் . பிறப்பது  ஆனா பெண்ணா  என்று கூட  அவளுக்கு  கவலை  இல்லை. எங்க  விட்டுட்டு  வேலைக்கு  போரது!  யார்  பார்துபாக  என்ற  கவலை        தான் . " கல்யாணம்  பண்ணிக்காமா கடைசி வரைக்கும்  உன் கூடவே  இருந்துடரேன் " என்று தன லட்சுமி  ஆயா கிட்ட   எவ்வளவோ  சொல்லிபாத்தா. யாராச்சும்  இவ  பேச்ச  கேட்டா  தானே! இந்த ஒலகத்துல எல்லாருக்கும் நினைக்கிற  வாழ்க்கையா கிடைக்குது ? சாமியார  போகலாமுனு  இருக்கிறவனை  சம்சாரி  ஆக்கிடராங்க.  இதுக்கு  எதிராகவும்   நடப்பது  உண்டு  இல்லையா ?நிறை மாத  பொண்னை  நடக்க  வைக்கிறோமே  என்று  பூமி தாய்க்கு  கொஞ்சம்  கூட  வெட்கம்  இல்லை. பள்ளிகூடத்தை  தண்டினா  பெரிய  மைதானம். காந்தி,நேரு  எல்லாம்   வந்து இருக்காங்க.  ஆனா இவளுக்கு  கலைஞரை தான் ரொம்ப  பிடிக்கும்.அவரால்  தான்  வேலை  நிரந்தரம் ஆச்சாம். எப்ப வேலை  செய்யர  கிருஸ்துவ  பள்ளியில்  கல்யாணம்  ஆனா  வேலை  போயிடுமாம். கலைஞர்  ஆட்சிக்கு  வந்த  உடனே  அந்த சட்டதை மாத்திட்டாராம். அப்புறம்  தான்  கல்யாணமே  பண்ணிக்கிட்டாளாம்.  நடக்க  முடியமா  நடந்து  கலக்டர்  பங்கலாவை  தாண்டிய  உடன்  விருந்தினர்  மாளிகை  வரும். அங்க ஒரு  வயசான  பொம்பளை  மொட்டை  அடித்து  பைதியம்  மாதிரி  சுத்திகிட்டு  இருக்கும். அதை  கண்ட  இவளுக்கு  பயம்.  அப்ப  அப்ப  பாவமுனும்  நினைச்சுக்குவா . தனலட்சுமி  ஆயா  மட்டும்  தன்னை  கொச்சினுல இருந்து குழந்தையில்  தூக்கிட்டு  வரலனா ,தன் நிலமை நாய்  பொழப்பா  ஆகி  இருக்குமுனு  நினைச்சிகிட்டா. ஆயாவை  அம்மானு  தான்  கூப்பிடுவா! ராணி மாதிரி  வளக்காவிட்டலும்,கோழி முட்டையை  அடைக்காக்கிற  மாதிரி தான்  வளத்தாக.

                     ஒரு  வழியா  வீடு  வந்து சேர்ந்துடா.   இவளுக்கு  ஒரு  பாட்டு  ரொம்ப பிடிக்கும்.
"போங்கடா போங்க  யாரை  நம்பி  நான்
பிறந்தேன்  போங்கடா போங்க "
                       என்று  பாடிக் கொண்டே  முகம்  கழுவி  பொட்டு  வைத்து  கொண்டு  இரவு  சமையலுக்கு  தயாரானவளுக்கு  வலி  எடுக்க  தொடங்கியது. நல்ல வேலையா  அவரும்  வந்துவிட்டார்.  என்னதான்  கோபக்காரரா  இருந்தாலும் இவ  மேல  அவருக்கு  ரொம்ப  பாசம். பதறி  போய்ட்டார்.பெரியாஸ்பத்திரியில் இரவு  10.10 க்கு  ஆண்  குழந்தை பிறந்தது. அவர்  எல்லாருக்கும்  சாக்லேட்  கொடுத்தார். ஆனா  இவளுக்கு மனசுல  பெரிய  வேதனை ;பள்ளிக்கூடம் போரப்ப  யாரித பத்துப்பாக  என யோசிச்சா.  ஒரு நாள்  கொழந்தையப்பாக்க  அவரோட  தங்கை  வீட்டுகாரர்  வந்து இருந்தார். " கொழந்தையோட  சாதகம்  ஒன்னும்  சரியில்லை;என்னத்த  சொல்றது ,பள்ளிக்கூடம்  வரைக்கும் தானம் ;வியாபாரம்  செஞ்சா  தான்  வழக்கை " என்றார். சாதகத்த  நெனச்சி  வேற  கவலைபட  ஆரம்பிச்சா !

                   மூன்று  மாதமும்  ஆயிற்று. கொஞசம் நாள்  வித்தியா  டீச்சர் தங்கச்சி  கொழந்தையப்   பார்த்துகிட்டாங்க. ஸ்கூலுக்கு  பக்கமா  அவுக  வீடு ;பால் கொடுக்கவும்  வசதி.  ஒரு  மாதம்  போன பிறகு வித்தியா  டீச்சர் தங்கச்சிக்கு  வேற ஒரு  ஸ்கூல்ல  டீச்சர் வேலைக்கு  சேர்ந்துட்டாங்க.அப்புறமா குழந்தையை  பாத்துக்க இன்னோரு   குழந்தையை வேலைக்கு  வெச்சாங்க. வேலைக்கு  வந்த  பெண்ணுக்கு  பத்து  வயசு  கூட  இருக்காது. பள்ளிக்கூடம்  போகாம  வீட்டை  சுத்திகிட்டு  இருந்தவ  இப்ப  குழந்தையை பத்துகிரா!

                   ஒரு நாள்  வேலை விசயமா  பேங்க்  போய்விட்டு வீட்டுக்கு  வந்தவர்   குழந்தையின்  நெலமையை  பார்த்து  பதபதச்சிட்டார். தூங்கிற   குழந்தையை  பக்கத்து  வீட்டு  நாய்   மொந்து  பார்துக்கிட்டு  இருந்தது. பொண்னு  பக்கத்துல  படுத்து  துங்கிடிச்சி.இவருக்கு  கை ,கால்  எல்லாம்  நடுங்கிடிச்சி. கொழந்தையை  எடுத்து  முத்தம்  கொடுத்தார்.     சத்தம் கேட்டு  குழந்தையும் ,குழந்தையை பார்துக்கும்  குழந்தையும் எழுந்துகிட்டாங்க. மூன்று  மாதத்துக்கு மெடிக்கல்  லீவு  போட்டு  குழந்தையை   பார்துக்க  முடிவு  செய்தார். குழந்தயை  மட்டும்  நாய்  கடித்து  இருந்தால்  , நீங்க இந்த  கதையை  படிக்கவே  முடியாது !

No comments:

Post a Comment